நீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று சொன்னதும்

நீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று சொன்னதும்

கனிமொழியின் பிணை மனுக் கோரிக்கையை நீதிபதி அஜித் ப்ஹாரிகோக் நிராகரித்துவிட்டார்.அவர் கூறியுள்ள காரணங்கள் முக்கியமானவை
“Considering the political and financial clout of the accused, the possibility of them tampering with evidence and influencing witnesses, the magnitude of the offence they've been charged with, their bail pleas are dismissed," . அத்துடன் "There's prima facie evidence to suggest they were beneficiaries and received illegal gratification." என்றும் கூறியுள்ளார்.

இவரது முந்தைய தீர்ப்புகளைப் பற்றி அறிந்தோருக்கு அவர் பிணை மனுவை தள்ளுபடி செய்தது வியப்பளித்திருக்காது.சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக,சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ள அஜித் ப்ஹாரிகோக் ஜார்கண்ட் முக்தி மோர்சசாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒட்டுப் போட் லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவிற்கும்,முன்னாள் அமைசார் பூட்டா சிங்கிற்கும் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தவர்.2000ம் ஆண்டு அவர் அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

அதில் அவர் அன்று சொன்னதை இன்றும் நினைவு கூற வேண்டும்.தீர்ப்பில் அவர் எழுதியது
“The best way to discourage corruption in the public life particularly in high places is to award exemplary punishment to the high ranking public servants in order to send a message to the society that corruption... is really a high-risk business''

ஊழல் செய்தால் என்ன செய்வார்கள், மிஞ்சிப் போனால் வழக்குத் தொடருவார்கள்,கைது செய்தால் பிணையில் வெளிவந்துவிடலாம், பின் வழக்கு ஆமை வேகத்தில் நகராவிட்டால் சட்டத்தின் இடுக்குகளில் புகுந்து தடை உத்தரவுகள் பெறலாம், விசாரணையை தாமதிக்க சட்ட ரீதியாக முயன்று வழக்கை இழுத்தடிக்கலாம் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் பிணை கிடைப்பது ஒரு பெரிய பிரச்சினை இல்லை,அது கிடைத்தால் பாதி வெற்றி, வெளியே இருந்து கொண்டு வழக்கை சமாளித்துவிடலாம் என்று நினைப்பார்கள். 2G வழக்கில் பிணை வழங்கப்படாதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இது போன்ற ஊழல் வழக்குகளில் பிணை என்பது விதி, சிறையில் இருப்பதுதான் விதிவிலக்கு என்ற கருத்தினை, இந்த வழக்கில் பலருக்கு பிணை தராப்படாததும், அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதி பிணை தர மறுத்திருப்பதும், கேள்விக்குள்ளாக்குகிறது. கனிமொழிக்கு ஏன் பிணை தர முடியாது என்பதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் சரியானவை. இவை ஒரு சிலரையேனும் யோசிக்க வைக்கும் என நம்புகிறேன்.

Labels: , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு