எழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்

எழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்

கடந்த ஆண்டு ஒரு அறிவிப்பினை வெளியிட்டேன். இது வரையில் கொடுத்த வாக்கினை காப்பாற்றி விட்டேன் என்று நான் கூறிக் கொள்ள முடியும். கடந்த ஒராண்டாக வலைப்பதிவில் அதிகம் எழுதவில்லை.டிவிட்டரில் அவ்வப்போது கீச்சிட்டாலும் இணைய இதழ்களில் எதையும் எழுதவில்லை, விவாதக்கட்டுரை என்று நீண்ட கட்டுரை எழுதவில்லை, ஜெமோவின் கருத்துக்களை விமர்சித்தோ, சாருவை கிண்டல் செய்தோ கட்டுரை எழுதவில்லை.இந்தச் சேவைக்காக எனக்கு அடுத்த ஆண்டு (ஆடுகளம் புகழ் தப்சிக்கு தரும் போது) கலைமாமணி விருது தந்தால் பெற்றுக்கொள்வதில் தயக்கம் இல்லை :).சொல்ல வந்த செய்தி யாதெனில் இன்னும் சில மாதங்களுக்காவது இப்போதுள்ள நிலையே அதாவது அந்த இடுகையில் குறிப்பிட்டதே தொடரும், அதாவது ’தமிழில் விரிவான கட்டுரைகள்,விவாதங்களில் பங்கேற்ற்ப்பு,எதிர்வினைகள் போன்றவற்றை என்னிடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம்’

ஒரு கட்டுரை எழுதும் எண்ணம் இருக்கிறது. உடனே அதை எழுதாவிட்டாலும் ஒரிரு வாரங்களுக்குள் எழுதிட முயல்வேன், அது எழுதப்படாமலும் போகலாம்.

Labels: , ,