இரண்டு தொகுப்புகளும்,என் கட்டுரைகளும்

இரண்டு தொகுப்புகளும்,என் கட்டுரைகளும்

1)நிகழில் வெளியான கட்டுரைகள் ஒரு தொகுப்பாக வெளியாகியுள்ளன.அதில் நிகழில் நான் எழுதிய அனைத்து கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.நிகழில் சுமார் 18 கட்டுரைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். என் வசம் அதன் பிரதி இல்லை.காவ்யா வெளியிட்டுள்ள இந்த நூல் தி.நகர் நியு புக்லாண்ட்ஸில் கிடைப்பதாக அறிகிறேன்.

நிகழ் கட்டுரை களஞ்சியம் -தொகுப்பாசிரியர் :(கோவை) ஞானி- பக்கங்கள் 1000(?)
காவ்யா
16,இரண்டாம் குறுக்கு தெரு,
டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம்,
சென்னை-600 024.

2)மன ஒசையில் வெளியான கட்டுரைகளிலிருந்து தெரிவு செய்து ஒரு கட்டுரை தொகுப்பு வெளியாகியுள்ளது.அதில் எனது கட்டுரை ஒன்றும்
உள்ளது.நான் புனைபெயரில் மன ஒசையில் எழுதினேன் என்பதால் ரவி ஸ்ரீநிவாஸ் என்ற பெயர் அதில் இருக்காது.மன ஒசையில் ஐந்து/ஆறு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.சில மொழிபெயர்ப்புகளும் செய்ததாக நினைவு. இதன் பிரதியும் என்னிடம் இல்லை, வெளியீட்டாளர் விபரமும் தெரியவில்லை.இதுவும் தி.நகர் நியு புக்லாண்ட்ஸில் கிடைப்பதாக அறிகிறேன்.

இவையிரண்டும் சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும் என நினைக்கிறேன்.

Labels: , , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு