சமீபத்திய நிகழ்வுகள்/சர்ச்சைகள் அல்லது நான் கும்பமேளாவிற்கு போகவில்லை

சமீபத்திய நிகழ்வுகள்/சர்ச்சைகள் அல்லது நான் கும்பமேளாவிற்கு போகவில்லை

கிட்டதட்ட ஒரு வார பயணம்/தங்கலிலிருந்து தற்போது திரும்பினேன்.ஒரு நாட்டின் தலை நகரில் நட்சத்திர விடுதியில் தங்கல்.வசதிக்கு குறைவில்லை, வெளியே பனிப்புயல் அடித்தாலும் உள்ளே தட்பவெப்பம் சீராக இருந்தது.இணைய இணைப்பு இருந்தாலும் வழக்கமாக படிக்கும்/பார்க்கும் பல தமிழ்,ஆங்கில இணையதளங்கள்,வலைப்பதிவுகளைப் பார்க்க முடியவில்லை.டிவிட்டருக்கான இணைப்பு இல்லை. கூகுளில் தேடினாலும் பல சமயங்களில் பயனில்லை,ஏனெனில் தேடல் செய்யப்பட்ட வலைப்பக்கம்/தேடல் முடிவுகளை கணிணியில் திரையில் காண முடியவில்லை.மின்னஞ்சல் வசதி இருந்தது, சில தளங்களை, செய்தித்தாட்களை படிக்க முடிந்தது. எனவே திரும்பிய பிறகுதான் என்ன(தான்) நடந்திருக்கிறது, சர்ச்சைகள் என்னென்ன என்பதை ஒரளவு அறிந்து கொள்ள முடிந்தது.சிலவற்றைப் படித்தேன்.எதிர்வினையாற்ற விருப்பம் இருந்தாலும் இப்போது இயலாது.ஏனெனில் உடனடியாகச் செய்ய வேண்டியவை பல(1).மேலும் என் கருத்தை உடனடியாக எழுதி ஒன்றும் ஆகப் போவதில்லை.பேசலாம், மெதுவாக பின்னர் பேசுவோம், அவசரமில்லை என்று நினைக்கிறேன்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது, மக்களையிலும் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.அதை நான் ஆதரிக்கிறேன், உள் ஒதுக்கீடு என்பதை நிராகரிக்கிறேன்.இந்த இட ஒதுக்கீடு இந்திய அரசியலில் சில மாற்றங்களைக் கொண்டு வரும், உடனடியாக இல்லையென்றாலும், காலப்போக்கில். இதன் முக்கியத்துவத்தை இன்று முழுதாக மதிப்பிட முடியாது. இப்போதேனும் இது சாத்தியமாகிறதே என்றுதான் திருப்தி அடைய வேண்டும். உறுதியாக நின்று இதை சாத்தியமாக்கிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, இடதுசாரி மற்றும் பாஜக,ஆதரித்த பிற கட்சிகளை இதற்காக பாராட்ட வேண்டும். நித்தியானந்தர் குறித்த சர்ச்சையை விட இதுதான் அதிக கவனம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் வலைப்பதிவுகளை பார்த்த போது அந்த சர்ச்சைக்கு தரப்பட்ட முக்கியத்துவம் இதற்கு தரப்படவில்லை என்று கருதத் தோன்றுகிறது.

மார்ச்8ஐ ஒட்டி எழுதப்பட்டுள்ள சில இடுகைகளை படித்தேன்.தனி நபர் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும். இன்னொருவர் தன் வாழ்க்கையிலிருந்து அதற்கு நேர் எதிரான புரிதலை நீங்கள் பெற முடியும் என வாதிடக்கூடும். எனவே தனி நபர் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு அதற்கு அப்பாலும் சிந்திக்க வேண்டும்.சில மாற்றங்கள் சில காரணிகளால் ஏற்படும்.அந்த மாற்றங்களின் விளைவுகள் வேறு சிலவறிற்கு காரணிகளாக/உந்து சக்தியாக மாறும்.மேலும் மனிதர்களை,சமூகங்களைப் புரிந்து கொள்ள முயலும் போது மாற்றம் என்பது நாம்
நினைத்ததிற்கு மாறான/எதிர்பாரத விளைவுகளை கொண்டு வரும் என்பதற்கான சாத்தியக்கூறு உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.தாலி அடிமைச்சின்னம்,மதம் பெண்களை ஒடுக்கும்,சோசலிச சமூகமே பெண் விடுதலைக்கான ஒரே தீர்வு போன்ற தட்டையான புரிதல்களுக்கு அப்பாற்பட்டு யோசிக்கும் போதுதான் சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.மனிதர்கள் மரபு, நவீனம்/மாற்றம் என்பதை பலவிதங்களில் அணுகிறார்கள், பல சாத்தியப்பாடுகளை கருத்தில் கொண்டு தங்கள் வாழ்க்கையில் சிலவற்றை அனுமதிக்கிறார்கள், சிலவற்றை ஏற்க மறுக்கிறார்கள்.திருமண நாளில் மடிசார் பாணியில் புடவை அணிந்து,தாலி கட்டிக்கொண்டு, மெட்டிப் போட்டுக் கொள்ளும் பெண்ணே, அடுத்த சில நாட்களில்/வாரங்களில் பிஸினஸ் சூட், கோட், டை அணிந்து நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவராக பயணிப்பதையும்,கூட்டங்களில் பல ஆண்களுக்கிடையே தன் கருத்தை வலியுறுத்திப் பேசுவதையும்,நள்ளிரவில் தனியே வாகனம் ஒட்டி சென்று விமானப் பயணம் செய்து அடுத்த கண்டத்திற்கு பயணிப்பதை எப்படிப் புரிந்து கொள்வது.தாலி அணிந்திருப்பதால் அவள் அடிமை என்றா அல்லது அவள் ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்டாள் என்றா அல்லது அவள் பழைய விழுமியங்களில் ஊறி திளைத்து இன்னும் விடுதலை அடையவில்லை என்றா. குறியீடுகள் மூலமே எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட முடியுமா.பெரியாரிய,மார்க்சிய பெண்ணியம் என்ற பெயர்களில் எழுதப்படுபவைகளில் காணப்படும் தட்டையான புரிதல்களின் அடிப்படை பலவீனமே அவை ஒரு குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்தின் மூலமே புரிந்து கொள்ள முயல்வதுதான்.

(1)சில வாரங்கள் முன்பு தென் ஆப்ரிக்கவிலிருந்து ஒரு ஆய்வாளரும்,ரோமிலிருந்து ஒரு ஆய்வாளரும் கூட்டாக வந்து என்னை சந்தித்து உரையாடினர்.அதற்கு முன்பு அவர்களுடன் மின்னஞ்சல் தொடர்பு மூலம் கருத்து பரிமாற்றம் இருந்தது.கிட்டதட்ட 2 மணி நேரம் உரையாடினோம்.அவர்களும், வேறு சிலரும் சில கருத்துக்களை/முன்மாதிரிகளை முன்வைத்துள்ளனர். அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் பேசினோம்.உரையாடலுக்குப் பின் இரு தரப்பிலும் மகிழ்ச்சி.அவர்களுடன் நான் கூட்டாக சிலவற்றை செய்யக் கூடும். ஒரு மாநாட்டில் panel ஒன்றிற்காக திட்டம் உட்பட சிலவற்றை உடனே செய்வது என்று முடிவு செய்தோம். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒரு மாநாட்டிற்காக கட்டுரை எழுத வேண்டும், மே மாதம் நடைபெறவுள்ள இன்னொரு மாநாட்டிற்காக கட்டுரை எழுத வேண்டும்.ஏப்ரலில் நடக்கும் மாநாட்டில் நான் பங்கேற்ப போவதில்லை.மே மாதம் நடைபெறயுள்ளதில் பங்கேற்பது பயணத்திற்கான செலவினை, பிற
செலவுகளை மாநாட்டு அமைப்பாளர்கள் ஏற்பதைப் பொறுத்தது. இப்படி அடுத்தடுத்து எழுத வேண்டிய வேலைகள் உட்பட பல வேலைகள் இருப்பதால் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து எழுதுவதற்கு மற்றும் வேறு பலவறிற்கு நேரமே இல்லை.

Labels: , , ,

2 மறுமொழிகள்:

Blogger தங்கவேல் மொழிந்தது...

//திருமண நாளில் மடிசார் பாணியில் புடவை அணிந்து,தாலி கட்டிக்கொண்டு, மெட்டிப் போட்டுக் கொள்ளும் பெண்ணே, அடுத்த சில நாட்களில்/வாரங்களில் பிஸினஸ் சூட், கோட், டை அணிந்து நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவராக பயணிப்பதையும்,கூட்டங்களில் பல ஆண்களுக்கிடையே தன் கருத்தை வலியுறுத்திப் பேசுவதையும்,நள்ளிரவில் தனியே வாகனம் ஒட்டி சென்று விமானப் பயணம் செய்து அடுத்த கண்டத்திற்கு பயணிப்பதை எப்படிப் புரிந்து கொள்வது.தாலி அணிந்திருப்பதால் அவள் அடிமை என்றா அல்லது அவள் ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்டாள் என்றா அல்லது அவள் பழைய விழுமியங்களில் ஊறி திளைத்து இன்னும் விடுதலை அடையவில்லை என்றா. குறியீடுகள் மூலமே எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட முடியுமா.பெரியாரிய,மார்க்சிய பெண்ணியம் என்ற பெயர்களில் எழுதப்படுபவைகளில் காணப்படும் தட்டையான புரிதல்களின் அடிப்படை பலவீனமே அவை ஒரு குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்தின் மூலமே புரிந்து கொள்ள முயல்வதுதான்.//

அருமையான வரிகள். உடனடியாகப் புத்தியில் உரைக்கக் கூடிய வரிகள்.

12:55 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஜெயமோகனின் பேர் / அல்லது சம்பந்தப் பட்ட விசயம் இல்லாமல் நீங்கள் எதுவும் எழுத மாட்டீர்கள் என கேள்விப்பட்டேன் , மாறிப்போச்சே ?

10:06 AM  

Post a Comment

<< முகப்பு