சாரு நிவேதிதாவிற்கு ஒரு கடிதம்

[சாரு நிவேதிதாவிற்கு நவம்பர் 27 2009 அன்று satre-முப்பது ஆண்டுகளுக்கு முன் என்ர பொருளில் மின்ஞ்சல் மூலம் அனுப்பபட்ட கடிதம். இன்று வரை பதில்/படித்தேன் என்கிற தகவல் வரவில்லை]

சாரு நிவேதிதாவிற்கு ஒரு கடிதம்

Mr.Charu Nivedita

Ref:முப்பது ஆண்டுகளுக்கு முன்
http://charuonline.com/Nov2009/Muppathu.html

1979ல் அந்நியமாதல் என்ற நூலை எஸ்.வி.ராஜதுரை எழுதினார்.பின்னர் அவர் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்ற நூலையும் எழுதினார்.சார்த் நூற்றாண்டையொட்டி சார்த்
குறித்து ஒரு நூலையும் எழுதினார்.[சார்த்தர்: விடுதலையின் பாதைகள் எஸ்.வி. ராஜதுரை பக்:224, விலை: 120 IRS வெளியீடு: அடையாளம் பதிப்பகம்].சார்த் நூற்றாண்டின் போது நீங்கள் இருத்தலியம்/சார்த் குறித்து எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை, நான் அறிந்தவரையில்.

சுஜாதா சார்த்,இருத்தலியம் குறித்து கற்றதும்,பெற்றதும் பத்தியில் உளறி எழுதியதற்கு மறுப்பாக நான் எழுதிய கடிதத்தினை ஆனந்த விகடன் வெளியிடவில்லை.அதற்கு அடுத்த வாரம் சுஜாதா தான் எழுதியதை நியாயப்படுத்தி சில ‘ஆதாரங்களை’ எழுதினார். நான் அறிந்த வரையில் எந்த தமிழ் எழுத்தாளரும், நீங்கள் உட்பட சுஜாதாவைக் கண்டித்து எழுதவில்லை. சார்த், இருத்தலியம் குறித்து தப்பும்தவறுமாக ஏன் எழுதினீர்கள் என்று அவரிடம் யாரும் கேட்டதாகக் கூட பதிவு செய்யவில்லை. என் வலைப்பதிவில் அந்தக் கடிதத்தினை இட்டேன்.அதையொட்டி விவாதம் நடந்தது. அதை கீழே உள்ள இனைய முகவரியில் படிக்கலாம்
http://ravisrinivas.blogspot.com/2005/07/blog-post_25.html

கடந்த 7/8 ஆண்டுகளில் நீங்கள் எத்தனை முறை உங்களுடைய எழுத்துகளில் சார்த்/இருத்தலியம் குறித்து எழுதியிருக்கிறீர்கள்,அதில் எத்தனை சார்த்/இருத்தலியம் குறித்த புதிய நூல்களை/கட்டுரைகளை அறிமுகம் செய்து எழுதியிருக்கிறீர்கள் அல்லது குறைந்த பட்சம் இவையெல்லாம் வெளியாகியுள்ளன, முடிந்தால் படியுங்கள் என்று வாசகர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறீர்கள்.ராஜதுரையின் நூற்களைப் பற்றி, சார்த் நூற்றாண்டினையொட்டி அவர் எழுதியதை வாசகர்களின் கவனதிற்காவது கொண்டுவந்தீர்களா? நான் அறிந்த வரை இல்லை. இன்றைய தமிழ் வாசகருக்கு, தமிழிலும்,ஆங்கிலத்தில் பரவலாக வாசிக்கத் தெரிந்தவருக்கு தமிழிலும்,ஆங்கிலத்திலும் சார்த்/இருத்தலியம் குறித்து படிக்க நூற்கள், கட்டுரைகள் உள்ளன.ஆங்கிலத்தில் வெளியான SARTRE'S BEING AND NOTHINGNESS: A Reader's Guide-SEBASTIAN GARDNER -London/New York: Continuum -2009 ,
Jonathan Webber, The Existentialism of Jean-Paul Sartre Routledge | 2008
போன்ற நூற்கள் தமிழில் இல்லை. எனினும் இணையத்தில் இன்று கிடைக்கின்ற கட்டுரைகள் போன்றவற்றைக் கொண்டு நிறையவே அறிந்து கொள்ள முடியும். நீங்கள் இன்று
சார்த்/இருத்தலியம் குறித்து தொடர்ந்து படிப்பவராக இருந்தால் இது போல் பலவற்றை தமிழில் அறிமுகம் செய்யலாம். நான் அறிந்த வரையில் நீங்கள் பெயர்களை அதிகம் உதிர்க்கிறீர்கள்.

ஆனால் புனைவற்ற/அபுனைவு நூற்களை குறித்து எழுதுவதாகவோ அல்லது வாசகர் கவனத்திற்கு கொண்டுவருவதாகவோ தெரியவில்லை. பூக்கோவை அப்போது படித்தேன், இன்னாரை அப்போது படித்தேன் என்றெல்லாம் எழுதுகிறீர்கள். பூக்கோவின் இந்தக் கருத்தை (உ-ம் governmentality) பயன்படுத்தி அல்லது ஆராய்ந்து எழுதிய இந்த நூற்களை, கட்டுரைகளை படித்தேன், அல்லது குறைந்த பட்சம் இப்படியெல்லாம் நூற்கள் இருக்கின்றன என்று கூட நீங்கள் எழுதியதில்லை, என் சிற்றவிற்கு எட்டிய வகையில்.

இன்றைய தமிழ் வாசகருக்குத் இதுதான் உங்களுடைய பழைய வாசிப்புகள் குறித்த கதைகளை விட அதிகம் தேவை, பயனுள்ளவை என்று நான் கருதுகிறேன்.தமிழில் பின் நவீனத்துவம்
குறித்து பேசினோம்/எழுதினோம் என்று சொல்பவர்கள் யாரும் இப்படி சமகால விவாதங்களை/கருத்துக்களை/நூற்களை தமிழில் தொட்டுச் செல்வது கூட இல்லை.
[நாகர்ஜுனன் ஒரு விதிவிலக்கு என்று சொல்ல முடியும்.] எனக்கு இவை தேவையில்லை, ஏனெனில் நான் அப்போதும்/இப்போதும் ஆங்கிலத்தில் படித்தே புரிந்து கொள்வதை விரும்புபவன். என்னால் பல காரணங்களால் நூற்களை படிக்க முடியாமல் போனாலும் (அதுதான் உண்மை) குறைந்த பட்சம் என்னென்ன நூற்கள் வெளியாகியுள்ளன,ஜர்னல்களில் கட்டுரைகளில் எவை பேசப்படுகின்றன என்பதை அறிய முயற்சியாவது செய்கிறேன். (அதற்கு உதாரணம் வேண்டுமெனில் இந்தப் இணையமுகவரியில் உள்ள பட்டியலைப் பார்க்கலாம்
http://ravisrinivas.blogspot.com/2009/04/1.html

சுருக்கமாகச் சொன்னால் உங்களைப் போன்றவர்களுக்கு சமகால அறிவுத்துறைகளுடன் (ஒரு பரந்த பொருளில்) வாசகர் என்ற ரீதியில் கூட பரிச்சயம் இருப்பதாகத் தெரியவில்லை.இந்த நிலையில் முப்பதாண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய கட்டுரைகள் மூலம்தான் தமிழ் வாசகர் இன்றும் சார்த்தை அல்லது இருத்தலியத்தை அணுக/புரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருந்தால் அது பொருத்தமானதல்ல என்று நான் கருதுகிறேன். இன்று ஆங்கிலத்தில் வாசிக்க இயலுமெனில் தமிழ் வாசகருக்கு ஆங்கிலத்தில் உள்ள அறிமுக நூற்களையே நான் முதலில்,ராஜதுரையின் நூற்களுடன் படிக்க பரிந்துரைப்பேன்.ஆங்கிலத்தில் அறிமுக நூற்களில் துவங்கி பல தரப்பட்ட நூற்கள் உள்ளன. வாசகர் அவற்றின் மூலம் ஒரு அடிப்படை புரிதலில் துவங்கி மேலும் புரிந்து கொள்ள முடியும். தமிழில் அத்தகைய நூற்களின் பட்டியல் கூட இல்லை. உங்களைப் போன்றவர்கள் ஒரு கட்டத்திற்குப் பின் எதையும் படித்து, விவாதித்து அறிமுகமும் செய்யவில்லை.

ஆனால் பழைய கதைகளை பேசுகிறீர்கள்,தாங்கள் அண்மைக் கால நூற்களைக் கூட வாசகருக்கு சுட்டிக் காட்டவில்லை என்ற உணர்வு கூட இல்லாமல்.

வாசித்தமைக்கு நன்றி
ரவி ஸ்ரீநிவாஸ்

Labels: , , , , ,

2 மறுமொழிகள்:

Anonymous பா. ரெங்கதுரை மொழிந்தது...

குமுதத்தில் அரசு குறிப்பிட்டதைப்போல, சாரு நிவேதிதா ஓர் இலக்கிய விதூஷகரே. வாசகர்களுக்கு நன்றாக கிச்சுகிச்சு மூட்டக்கூடியவர் என்பதே அவருடைய விசேஷத் தன்மை. அவர் உங்களுடைய கடிதங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்.

ஆனாலும், எஸ்.வி. ராஜதுரை போன்ற ஒரு racist-ஐ சார்த் குறித்துத் தமிழில் எழுதிய முன்னோடியாகக் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.

7:55 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் மொழிந்தது...

I dont consider Rajadurai as a racist.He was a pioneer as the book on alienation was published in 1979 followed by the book on existentialism few years later.
With V.Geetha he wrote on Gramsci, Frankfurt School, in Tamil. I disagree with him on many issues. I wont hesitate to acknowledge his contribution.

1:03 PM  

Post a Comment

<< முகப்பு