போபால்: கால் நூற்றாண்டும் விடை தெரியாக் கேள்விகளும்

போபால்: கால் நூற்றாண்டும் விடை தெரியாக் கேள்விகளும்

டிசம்பர் 2 1984ல் போபாலில் (அப்போதிருந்த) யுனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த சயனைட் நச்சுவாயு கசிவு அன்று ஆயிரக்கணக்கானோரைக் கொன்றது.மேலும் பலர் தொடர்ந்த பாதிப்புள்ளாகினார். உலகின் மிக மோசமான தொழில் விபத்து என்று
கருதப்படும் இது சுற்றுச்சூழல், தொழில் மயமாக்கல், தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் பாதுகாப்பு விதிகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியது. விடை காணப்படாத கேள்விகள் இன்றும் தொடர்கின்றன. இன்றும் நீதி கோரி பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர் போராடுகின்றனர். அது குறித்த கட்டுரை இங்கே. போதும் ஒரு போபால் என்று அன்று கோஷம் எழுப்பப்பட்டது.இன்று வேறு பல புதிய சிக்கல்கள்/பிரச்சினைகள் இருக்கின்றன,அன்றையப் பிரச்சினைகள் முற்றிலுமாக தீர்க்கப்பட்டுவிட்டன என்று கூற முடியாது. போபால் ஒரு விபத்து, நட்ட ஈடு குறித்த பிரச்சினையாக மட்டும் கருதப்படலாகாது. அது ஒரு சூழல்நீதி (environmental justice)குறித்த ஒன்று. ஆனால் இரு நாடுகளின் சட்டம்/நீதிஅமைப்புகளின் முன் இந்தப் பிரச்சினை கொண்டு வரப்பட்ட போது சட்டத்தால் தொழில்னுட்ப உலகமயமாக்கத்தின் விளைவுகளை எந்த அளவு சரியாகக் கையாள முடியும் என்ற கேள்வியும் எழுந்தது.ஷீலா ஜஸனாப்பின் இந்தக் கட்டுரை அதை விவரிக்கிறது.

போபால் விபத்திலிருந்து நாம் சரியான பாடங்களை கற்றுவிட்டோமோ?. சூழல் நீதி குறித்த அணுகுமுறைகளில் மாற்றம் தேவையா? உலகமயமாக்கல் சூழல் நீதியை சாத்தியமாக்குகிறதா இல்லை அதற்கான சாத்தியப்பாட்டினை குறைக்கிறதா? இப்படி பல கேள்விகள்.விடை தெரியாக் கேள்விகள்.

Labels: , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு