2010: முத்தான தீர்மானங்கள் பத்து

2010: முத்தான தீர்மானங்கள் 10
[525வது இடுகை]

2101ம் ஆண்டில் யான் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஆற்றிட வேண்டிட நினைக்கும் செயல்களை கீழே தந்துள்ளேன்.புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் மேலான ஒத்துழைப்புடன் அவற்றை செய்து முடித்திட விழைகிறேன்.

1) தினம் 10 டெம்பிளேட் கவிதை எழுதி அதை இணையத்தில் பரப்பி டெம்பிளேட் கவிதையை தமிழை விட்டுத்துரத்துவது.டெம்பிளேட் கவிஞர்கள் இருக்கட்டும், டெம்பிளேட் கவிதை வேண்டாம் என்ற முழக்கத்தை முன் வைத்து டெம்பிளேட் கவிதை எதிர்ப்பு இயக்கத்தை பிரபஞ்ச அளவில் நடத்துவது
2) தமிங்கலத்தை தடை செய்யக் கோரி சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தல்
3) மலேகானில் தயாரான,நாலிவுட்,வனாட்டு மற்றும் தெற்கு பசிபிக் பகுதியில் தயாராகும் படங்களை குறித்து எழுதி மாற்று உலக சினிமாவை தமிழுக்கு அறிமுகம் செய்தல்.
4) பூக்கோவின் சிந்தனையில் ஐயன் திருவள்ளுவர் மற்றும் வள்ளுவத்தின் தாக்கம் என்ற பெயரில் கட்டுரை எழுதி வாசிப்பது.அதை ஒரு சிறப்பு முன்னுரை, முன்று அணிந்துரை, நான்கு அறிமுக உரை களுடன் மூன்று மொழிகளில் நூலாக வெளியிடுவது
5) 30,000 பக்கம் கொண்ட பிரபஞ்சத்தின் முதல் கலை-தத்துவ-சமூகவியல்-வரலாற்று-பண்பாட்டு நாவலை எழுதத் துவங்குவதற்காக விழா எடுப்பது.300 பேர் வாழ்த்தி உரையாற்ற, அதன் துவக்க விழாவை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடத்துவது
6) அன்றாட வாழ்வில் சிலவற்றை செய்ய திணறும் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு அவற்றை திறம்பட செய்வதில் பயிற்சியளிப்பது
7) 2010ம் ஆண்டில் 3000 மற்றும் அதற்கு மேலும் தமிழில் டிவிட்டுபவர்களுக்கு டிவிட் மாமணி பட்டம் வழங்குவது
8) இணையத்தமிழை வளர்க்க அமைச்சகம அமைத்திடக் கோரி இந்திய மத்திய அரசை வலியுறுத்துவது
9) ஒபாமா தலைமையில் தமிழ் பண்பாடு குறித்த பட்டிமன்றம், கவியரங்கம் நடத்தி மதுரையில் ஒபாமாவிற்கு பாராட்டு விழா எடுப்பது
10) சந்திரனில் தமிழ் இலக்கியங்கள் அடங்கிய பேழையை புதைப்பது, அங்கு தமிழன்னைக்கு கோயில் எழுப்புவது

இதற்கான நிதி, பொருள் உதவி உங்களிடமிருந்து வரும் என்று எனக்குத் தெரியும். உங்கள் ஆதரவை நிதிக்கொடையாக செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு மற்றும் பேபால் கணக்கு விபரங்கள் ஜனவரி 1, 2010 அன்று அறிவிக்கப்படும்.

Labels: , , , , ,

2 மறுமொழிகள்:

Blogger கோவி.கண்ணன் மொழிந்தது...

snap judge கண்ணுல படும்னு நினைக்கிறேன்.

:)

9:05 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

ஏழுக்கு என்னைப் பரிந்துரைக்கிறேன்.

2:03 PM  

Post a Comment

<< முகப்பு