வீழ்ச்சிகள்,சிதைவுகள்

வீழ்ச்சிகள்,சிதைவுகள்

வீழ்ச்சிகளும், சிதைவுகளும் எதிர்பார்த்ததை விட வேகமாக, அதிகமாக நிகழும் காலம் இது. நேற்றைய வாய்ச் சொல் வீரர்கள் இன்று எதை எதிர்த்தார்களோ அதன் முன்னர் அது ஒன்று சொல்லிச் சிரிக்கும் போது வாய் மூடி நிற்கும் நிலை. இட்லர் அழைத்தாலும் இன்முகத்துடன்
செல்வோம் என்று அறிவிக்காத குறைதான். சிலரின் நேற்றைய நம்பிக்கைகள் இன்று சிதறி உடைகின்றன.

சூரியன் உடையாது, அதற்காக சூரியன் பெயர் எழுதிய மண்சட்டியும் உடையாது என்று சொல்ல முடியுமா. வார்த்தைகளை,வீராவேச செவ்விகளில் சொல்லப்பட்டவற்றை, இன்னபிற பொலிடிகலி கரெக்ட் நிலைப்பாடுகளை நம்பி ஏமாந்தவர்களுக்கு என் அனுதாபங்கள்.

எனக்கு அத்தகைய எதிர்பார்ப்புகள் இருந்ததில்லை, நம்பிக்கைகளும் இருந்ததில்லை. முகமூடிகள் களையபட்ட இன்னும் சிறிது காலம் ஆகும் என நினைத்தேன்.அது தவறு என்று இப்போது தெரிந்து விட்டது. இது race to bottom ஆக இல்லை race to abyss ஆக இருக்கிறது. இதை விட மோசமாகாது என இந்த வீழ்ச்சி,சிதைவுகளைப் பற்றி நம்பத்தேவையில்லை. இதைவிட மோசமான வீழ்ச்சிகளை,சிதைவுகளை எதிர்பார்த்து அது நடக்காத போது ’ஆறுதல்’ அடைய வேண்டியதுதான். வேறென்ன சொல்ல முடியும்.

Labels: , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு