கந்தாடை பாலகோபால்

கந்தாடை பாலகோபால்: அஞ்சலிக் குறிப்பு

பாலகோபாலின் மறைவினை அறிந்து வருத்தமுற்றேன். பல ஆண்டுகளாக அவர் எழுதியதை தொடர்ந்து வாசித்து வருகிறேன், அவர் செயல்பாடுகளையும் கவனித்து வருகிறேன்.மனித உரிமைகள் குறித்து அவர் எழுதியிருப்பதும், செய்திருப்பதும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக விளங்கும். இன்றைய இந்தியாவிற்கு ஒரு பாலகோபால் போதாது. ஒரு சிக்கலான காலகட்டத்தில் இந்தியா இருக்கிறது. 1980கள், 1990களில் மனித உரிமை இயக்கங்கள் சந்தித்த பல சவால்கள் இன்றும் இருந்தாலும், பல புதிய சவால்கள், சிக்கலான கேள்விகள் அவற்றின் முன் இப்போது உள்ளன. வன்முறை குறித்து அவர் எழுதியதையும், மனித உரிமைகள் குறித்த அவரது புரிதலும், தெளிவும் இனி வரும் காலங்களிலும் நமக்கு வழி காட்டட்டும். கடந்த வாரம் பயணத்தில் இருந்தத்தால் அவர் மறைவு குறித்து அறிந்தவுடன் எழுத இயலவில்லை. பின்னர் எழுத நினைத்த போது எழுத முடியவில்லை. பாலகோபாலை நான் சந்தித்ததில்லை. இருப்பினும் 1980களில் அவர் APCLC ல் இருந்த
காலத்திலிருந்தே அவரது பணிகளையும், பின் அவர் எழுதியவற்றையும் கவனித்து வந்துள்ளேன். அவரது சில கருத்துகளை, குறிப்பாக இட ஒதுக்கீடு குறித்தவற்றை, நான் ஏற்கவில்லை. அதே சமயம் அவரது வாதத்தில் இருந்த நேர்மையை உணர்ந்திருக்கிறேன். தடா குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு,என்கவுண்டர் கொலைகள் குறித்தெல்லாம் அவர் எழுதியதும், செய்தததும் மிக முக்கியமானவை என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. சிலரை நாம் சந்திக்காத போதும், ஒரு முறை கூட அவர்கள் குரலைக் கேட்டிராத போதும் அவர்களின் எழுத்துக்கள், செயல்பாடுகள் மூலம் அவர்கள் நம்மை சிந்திக்கத் தூண்டுவர், நம் அனுமானங்களை மறுபரீசிலனை செய்ய உதவுவர்.பாலகோபால் அத்தகையவர்களில் ஒருவர்.

அவரது நண்பர்கள் அமைத்துள்ள இணைய தளம் இது http://balagopal.org/

Labels: , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு