வீழ்ச்சிகள்,சிதைவுகள்

வீழ்ச்சிகள்,சிதைவுகள்

வீழ்ச்சிகளும், சிதைவுகளும் எதிர்பார்த்ததை விட வேகமாக, அதிகமாக நிகழும் காலம் இது. நேற்றைய வாய்ச் சொல் வீரர்கள் இன்று எதை எதிர்த்தார்களோ அதன் முன்னர் அது ஒன்று சொல்லிச் சிரிக்கும் போது வாய் மூடி நிற்கும் நிலை. இட்லர் அழைத்தாலும் இன்முகத்துடன்
செல்வோம் என்று அறிவிக்காத குறைதான். சிலரின் நேற்றைய நம்பிக்கைகள் இன்று சிதறி உடைகின்றன.

சூரியன் உடையாது, அதற்காக சூரியன் பெயர் எழுதிய மண்சட்டியும் உடையாது என்று சொல்ல முடியுமா. வார்த்தைகளை,வீராவேச செவ்விகளில் சொல்லப்பட்டவற்றை, இன்னபிற பொலிடிகலி கரெக்ட் நிலைப்பாடுகளை நம்பி ஏமாந்தவர்களுக்கு என் அனுதாபங்கள்.

எனக்கு அத்தகைய எதிர்பார்ப்புகள் இருந்ததில்லை, நம்பிக்கைகளும் இருந்ததில்லை. முகமூடிகள் களையபட்ட இன்னும் சிறிது காலம் ஆகும் என நினைத்தேன்.அது தவறு என்று இப்போது தெரிந்து விட்டது. இது race to bottom ஆக இல்லை race to abyss ஆக இருக்கிறது. இதை விட மோசமாகாது என இந்த வீழ்ச்சி,சிதைவுகளைப் பற்றி நம்பத்தேவையில்லை. இதைவிட மோசமான வீழ்ச்சிகளை,சிதைவுகளை எதிர்பார்த்து அது நடக்காத போது ’ஆறுதல்’ அடைய வேண்டியதுதான். வேறென்ன சொல்ல முடியும்.

Labels: , ,

அறிவிப்பு (அ) நல்ல செய்தி :)

அறிவிப்பு (அ) நல்ல செய்தி :)

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு இதோ, இங்கே :).

பயணங்கள், மற்றும் வேறு பல வேலைகள் காரணமாக அடுத்த ஆண்டு துவக்கம் வரை இந்த வலைப்பதிவில் புதிய இடுகைகளை இடுவது கிட்டதட்ட தவிர்க்கப்பட்டுவிடும் அல்லது புதிய இடுகைகள் இராது.

ஒரு கட்டுரை (கேள்வி-பதில் வடிவில்) தயாரிப்பில் இருக்கிறது. அது அனேகமாக இந்த வாரத்தில் இடப்படும். அதுவே ஆண்டின் கடைசி இடுகையாக இருக்கக் கூடும்.

Labels: , ,

கந்தாடை பாலகோபால்

கந்தாடை பாலகோபால்: அஞ்சலிக் குறிப்பு

பாலகோபாலின் மறைவினை அறிந்து வருத்தமுற்றேன். பல ஆண்டுகளாக அவர் எழுதியதை தொடர்ந்து வாசித்து வருகிறேன், அவர் செயல்பாடுகளையும் கவனித்து வருகிறேன்.மனித உரிமைகள் குறித்து அவர் எழுதியிருப்பதும், செய்திருப்பதும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக விளங்கும். இன்றைய இந்தியாவிற்கு ஒரு பாலகோபால் போதாது. ஒரு சிக்கலான காலகட்டத்தில் இந்தியா இருக்கிறது. 1980கள், 1990களில் மனித உரிமை இயக்கங்கள் சந்தித்த பல சவால்கள் இன்றும் இருந்தாலும், பல புதிய சவால்கள், சிக்கலான கேள்விகள் அவற்றின் முன் இப்போது உள்ளன. வன்முறை குறித்து அவர் எழுதியதையும், மனித உரிமைகள் குறித்த அவரது புரிதலும், தெளிவும் இனி வரும் காலங்களிலும் நமக்கு வழி காட்டட்டும். கடந்த வாரம் பயணத்தில் இருந்தத்தால் அவர் மறைவு குறித்து அறிந்தவுடன் எழுத இயலவில்லை. பின்னர் எழுத நினைத்த போது எழுத முடியவில்லை. பாலகோபாலை நான் சந்தித்ததில்லை. இருப்பினும் 1980களில் அவர் APCLC ல் இருந்த
காலத்திலிருந்தே அவரது பணிகளையும், பின் அவர் எழுதியவற்றையும் கவனித்து வந்துள்ளேன். அவரது சில கருத்துகளை, குறிப்பாக இட ஒதுக்கீடு குறித்தவற்றை, நான் ஏற்கவில்லை. அதே சமயம் அவரது வாதத்தில் இருந்த நேர்மையை உணர்ந்திருக்கிறேன். தடா குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு,என்கவுண்டர் கொலைகள் குறித்தெல்லாம் அவர் எழுதியதும், செய்தததும் மிக முக்கியமானவை என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. சிலரை நாம் சந்திக்காத போதும், ஒரு முறை கூட அவர்கள் குரலைக் கேட்டிராத போதும் அவர்களின் எழுத்துக்கள், செயல்பாடுகள் மூலம் அவர்கள் நம்மை சிந்திக்கத் தூண்டுவர், நம் அனுமானங்களை மறுபரீசிலனை செய்ய உதவுவர்.பாலகோபால் அத்தகையவர்களில் ஒருவர்.

அவரது நண்பர்கள் அமைத்துள்ள இணைய தளம் இது http://balagopal.org/

Labels: , ,

மேய்ச்சல் - அக்டோபர் 1 2009

மேய்ச்சல் - அக்டோபர் 1 2009

அருண் ஷோரி - அன்றும்,இன்றும்
http://www.tehelka.com/dotnet/onestory.asp?id=79

எம்.ஆர்.எப் தொழிலாளர் போராட்டமும், ஒரு தீர்ப்பும்
http://kafila.org/2009/09/24/mrf-united-workers%e2%80%99-union-case-ramapriya-gopalakrishnan/

டெமாக்கரடிக் செண்ட்ரலிஸம் குறித்த கட்டுரை
http://epw.in/epw/uploads/articles/13939.pdf

இந்தியா : வல்லரசாகும் கனவுகளும்....
http://www.indiatogether.org/2009/sep/rgh-super.htm

Labels: , , ,