ஞாநிக்கு என் திட்டும், கேள்வியும்

ஞாநிக்கு என் திட்டும், கேள்வியும்

”இந்த வாரத் திட்டு:

எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற முற்போக்கான திட்டத்தின் கீழ் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளித்து இதுவரை 205 இளைஞர்களை
அர்ச்சகர் தகுதிக்குரியவர்களாக்கிய தமிழக அரசு அதில் 3 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதற்காக இ.வா. தி.”

உச்சநீதிமன்றம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வகைசெய்வதற்கு எதிராக தடை உத்தரவு கொடுத்தது 2006ல்.ஆனாலும் அரசு பயிற்சி அளிக்க பள்ளிகளைத் திறந்தது.வழக்கு முடியாத நிலையில், தீர்ப்பு வராத நிலையில் தடை உத்தரவு காரணமாக அவர்களுக்கு பயிற்சி அளித்தாலும் பணிக்கான ஆணை தர முடியாத நிலை உள்ளது.உச்சநீதி மன்றம் பள்ளிகளை துவங்க இடைக்காலத் தடை விதிக்கவில்லை. ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திருத்தத்தினை அமுல் செய்ய தடை விதித்தது.எனவே அரசு பள்ளிகளை துவக்கி பயிற்சி அளித்தும் கதை அறுவைசிகிச்சை வெற்றி, நோயாளி மரணம் என்றாகிவிட்டது.

அரசு தீர்ப்பு வரும் வரை பொறுத்திருந்து தீர்ப்பு சாதகமாக இருந்தால் பின் இந்தப் பள்ளிகளை துவக்கியிருக்கலாம்.அதைச் செய்யவில்லை. பள்ளிகளை துவக்கியவுடன் வீரமணி ஆ ஊ என்று குதித்தார், பெரியார் திடலில் இந்த ‘சாதனை’யை பாராட்டி கல்வெட்டு திறந்தார், பாராட்டுக் கூட்டம் நடத்தினார்.பின் கூட்டங்களில் அந்தக் கோயிலில் பார்பனரர் அல்லோதோர் அர்ச்சனை செய்வார்கள், இந்தக் கோயிலில் பார்பனரர் அல்லோதோர் அர்ச்சனை செய்வார்கள் என்றெல்லாம் பேசினார். நடைமுறையில் 2006ல் விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்னும் 2009லும் தொடர்கிறது. பயிற்சியில் சேர்ந்த மாணவர்களுக்கு இதனால் இழப்பு.வீரமணிக்கோ,
பிற ‘முற்போக்கு’ களுக்கோ அல்ல. இவர்களின் முட்டாள்த்தனமான ‘முற்போக்கு’ கேலிக்கூத்துகளுகளால் யார் கடைசியில் பாதிக்கப்படுகிறார்கள்?.

ஞாநிக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அரசை திட்டியிருக்க வேண்டும், அவசரப்பட்டு இந்தப் பள்ளிகளை திறந்து, பயிற்சியளிததத்ற்காக. அதை விடுத்து அரசு
ஏதோ வேண்டுமென்றே வேலை தரவில்லை என்று எழுதியதற்காகவும், உண்மையை முழுமையாக எழுதாமல் விட்டதற்காகவும் ஞாநிக்கு என் திட்டு. ஞாநியைப் பொறுத்தவரை இந்த திட்டம் முற்போக்கானது. நான் அவ்வாறு கருதவில்லை.

"இந்த வாரக் கேள்வி:

வெறும் 4 ஆயிரம் சமபளம் வாங்கும் சத்துணவு, அங்கன்வாடி, பால்வாடி ஊழியர்களுக்கு மேலும் வெறும் 500 ரூபாய் கூட ஊதிய உயர்வு தருவதற்குப் பிடிவாதமாக
மறுத்து வரும் தமிழக அரசு, ஏற்கனவே பத்தாயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வரும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு மேலும் 6 ஆயிரம் முதல்
21 ஆயிரம் வரை அள்ளிக் கொடுப்பதன் ரகசியம் என்ன ?"

இதில் ரகசியம் இல்லை என்றும் மத்திய அரசு ஊழியர் ஊதிய பரிந்துரை கமிஷன், மாநில அரசின் ஊழியர் ஊதிய பரிந்துரை கமிஷன் அறிக்கைகளின்படி இந்த உயர்வும்
கொடுக்கப்படுகிறது என்று அறிகிறேன்.

ஏற்கனவே மத்திய அரசு பல்கலைகழகங்கள்,ஐஐடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஊதியங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன/அமைக்கப்படவுள்ளன எனவும் அறிகிறேன். இது குறித்த செய்திகளை ஊடகங்களில் வெளியாகியுள்ளன (உ-ம் ஊதிய உயர்வு குறித்து சென்னை ஐஐடி ஆசிரியர்கள் அதிருப்தி). அவற்றையெல்லாம் ஞாநி படிப்பதில்லையா. இப்படி தீர விசாரிக்காமல் எழுதுவது எந்த வகையில் நியாயம்?

சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கூட்டக்கூடாது, கல்லூரி ஆசிரியர்களுக்கு கூட்டலாம் என்பததல்ல என் வாதம்.ஞாநி கேட்டிருக்க வேண்டிய கேள்விகள் வேறு?.
எந்த அடிப்படையில் இந்த வேலை(களுக்கு)க்கு இந்த சம்பளம் போதும் என்று தீர்மானிக்கப்படுகிறது?. இதை நிர்யணம் செய்வது யார்?. இப்படி பல கேள்விகள் உள்ளன.

ஆனால் ஞாநி மாறாக ரகசியம் என்ன என்று கேட்கிறார்.இது தவறான அனுமானங்களுக்கும், புரிதல்களுக்கும் வழி வகுக்கும். ஞாநியின் சமூக அக்கறை வேறுவிதமாக
வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

[அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வகை செய்யும் இந்தப் பள்ளிகள், பயிற்சி பெற்றோர், வழக்கின் பிண்ணனி குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் ஊடகங்களில்
எழுதப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சில வாரங்களுக்கு முன் தெகல்காவில் ஒரு கட்டுரை வெளியானது.அதை எழுதியவருக்கு இந்த விஷயத்தில் அடிப்படை புரிதல் கூட
இல்லை. அண்மையில் ஒரு வலைப்பதிவிலும் இதைப் பற்றிய ஒரு இடுகையைப் பார்த்தேன். அதே பிரச்சினை- அடிப்படை புரிதல் இல்லாமல் செய்தித்தாள்களில்
வருவதை அடிப்படையாகக் கொண்டு எழுதுவது.நானே பல முறை இந்த விஷயம் குறித்து எழுதியிருப்பதால் மீண்டும் மீண்டும் அதையே எழுதுவது அயர்ச்சி தருகிறது
என்பதால் அந்த வலைப்பதிவில் பின்னூட்டம் இடவில்லை].

Labels: , , , ,

3 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

---ஞாநியைப் பொறுத்தவரை இந்த திட்டம் முற்போக்கானது. நான் அவ்வாறு கருதவில்லை.---

ஏன்? ஏற்கனவே பல கோவில்களில் அவ்வாறு பார்ப்பனர் அல்லாதவர் இயங்குகிறார் என்பதாலா? அல்லது மற்ற சாதியினரும் நாளடைவில் மெதுவாக வந்தடைவார்கள் (காலத்தின் போக்கில் விட்டுவிடலாம்) என்பதாலா?

அது இருக்கட்டும்... ஞாநியின் கந்தசாமி விமர்சனம்/பதிவர் கருத்து -> பணால் படம் கொண்ட ஓ பக்கம் படித்தீர்களா?

5:50 PM  
Blogger சாலிசம்பர் மொழிந்தது...

//இவர்களின் முட்டாள்த்தனமான ‘முற்போக்கு’ கேலிக்கூத்துகளுகளால் யார் கடைசியில் பாதிக்கப்படுகிறார்கள்?. //

முற்பட்ட வகுப்பினரும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய முட்டாள்தனமான பிற்போக்கர்களால் , கலைஞர் போன்ற இடஒதுக்கீடு போராளிகள் தீவிரமடைகிறார்கள்.விளைவை இந்தச்சுட்டியைப்படித்து தெரிந்துகொள்ளலாம்.
http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=16158

3:08 AM  
Blogger Prabhu Rajadurai மொழிந்தது...

இதில் ரகசியம் இல்லை என்றும் மத்திய அரசு ஊழியர் ஊதிய பரிந்துரை கமிஷன், மாநில அரசின் ஊழியர் ஊதிய பரிந்துரை கமிஷன் அறிக்கைகளின்படி இந்த உயர்வும்
கொடுக்கப்படுகிறது என்று அறிகிறேன்.

The salaries of the College Teachers are determined by the recommendations of the UGC....

11:55 AM  

Post a Comment

<< முகப்பு