உலக தட்பவெப்ப நிலைமாற்றம், இந்திய அரசின் நிலைப்பாடு(கள்)

உலக தட்பவெப்ப நிலைமாற்றம், இந்திய அரசின் நிலைப்பாடு(கள்)

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன (உ-ம் அண்மையில் பெர்லினில்). இந்த ஆண்டு இறுதியில் கோபன்ஹேகனின் நடைபெற உள்ள மாநாட்டில் அனைத்து நாடுகளும் ஏற்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம். இதில்
இந்திய அரசின் நிலைப்பாடுகளை ஒரு சிறு நூலாக இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். இதைப் படித்தால் இந்தியா பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறிப்பிட்ட காலகெடுவிற்குள் குறைக்க ஒப்புக் கொள்ள விரும்புகிறதா/ஒப்புக்கொண்டுள்ளதா, இல்லையா என்பது தெளிவாகும்.

Labels: , ,

சில மணிநேரங்களும் ~300 மின்னஞ்சல்களும்

சில மணிநேரங்களும் ~300 மின்னஞ்சல்களும்

நேற்று நான் ஒரு இணைய மின்னஞ்சல்குழுவில் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ள பதிவு செய்தேன்.சில மணி நேரம் கழித்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் கிட்டதட்ட 300 மின்னஞ்சல்கள். செய்தி கிடைத்த பலர் விடுமுறையில் இருப்பவர்கள் என்பதால் தானியங்கி பதிலிகள் கொடுத்திருந்த பதில்கள் கிட்டதட்ட 300 மின்னஞ்சல்களாக என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பிவிட்டன. இப்படி குவிந்ததில் முக்கியமான மின்னஞ்சல் எதையாவது படிக்க தவறிவிடக்கூடும் என்பதால் மின்னஞ்சல் பெட்டியில் உள்ள மின்னஞ்சல்க்ளை கொஞ்சம் பொறுமையாகப் பார்த்தேன்.

இப்படி நடக்கும் என்று ஒரளவு எதிர்ப்பார்த்தேன்.ஆனால் இப்படி ஒரேயடியாக தேனீக்கூட்டிலிருந்து நூற்றுக்கணக்கான தேனீக்கள் கிளம்பியது போல் ஏககாலத்தில் இத்தனை பதில்களை எதிர்பார்க்கவில்லை :(. அப்படி என்ன முக்கியமான செய்தியை பதிவு செய்தேன்
என்று கேட்கிறீர்களா, வேறொன்றுமில்லை கொஞ்சம் சுய விளம்பரம்தான் :). இதே போல் இன்னும் ஒரிரு மின்னஞ்சல் குழுக்களில் அதே செய்தியை இன்றோ அடுத்த வாரமோ பதிவு செய்வேன்.(பின்)விளைவுகளை எதிர்ப்பார்த்து செய்கிற கடமைகள் இவை :).

இதெல்லாம் இன்றைய இணைய வாழ்வில் தவிர்க்க முடியாதவை என்பதே யதார்த்தம்.எந்த தமிழ் மின்னஞ்சல்/மின்மடலாற்க் குழு எதிலும் நான் உறுப்பினராக இல்லை என்ற நல்ல செய்தியையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.

ஏதிலார் ஸ்பாம் போல் தன் ஸ்பாம் காண்கிற்பின்
தீதுமுண்டோ மன்னும் உயிர்க்கு :)
(with due apologies to Thiruvalluvar)

Labels: , , ,