12 / 32 : கேள்வி -பதில்

12 / 32 : கேள்வி -பதில்

பாஸ்டன் பாலா விடுத்த அழைப்பின் பேரில், பிற கேள்விகளுக்கு பதில்கள், பின் 32 கேள்விகளுக்கும் பதில்கள் தனித்தனி இடுகைகளாக இடப்படும்.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

நான் பிறந்ததால் எனக்கு இந்த பெயர் வைத்தார்கள், அதனால் பெயர் வந்தது :). பதில் இட்லிவடைத்தனமாக இருக்கிறதா? :).

ஞாயிற்றுக் கிழமை பிறந்ததால் ரவி என்பது பெயரில் இடம் பெற்றது ஒரு காரணம். இன்னொரு காரணத்தினை அறிய என் சுய வரலாறு என்கிற ஒப்புதல் வாக்குமூலங்கள் அல்லது நான் அங்கீகரித்து, பிறர் எழுதிய என் வாழ்க்கை வரலாறு(கள்) வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் :). ரவி ஸ்ரீநிவாசன் என்று வைத்து அது ரவி ஸ்ரீநிவாஸ் ஆக சுருங்கவில்லை. முதலில் வைத்த பெயரே ரவி ஸ்ரீநிவாஸ் என்பதுதான்.

பெயர் அப்படியே இருக்கட்டும், ஆங்கிலத்தில் எழுதும் போது சிறு மாறுதால் செய்து எழுதுங்கள் என்று பெயரை எழுதுவதில் மாற்றம் செய்ய பரிந்துரைத்தார் பிரமிள் (எ) தருமு சிவராம். அதற்காக பணம் கேட்கவில்லை அவர். நான் அதை ஏற்கவில்லை. அப்படி மாற்றியிருந்தால் பெயர் பெயரை படிக்கும் போது பலர் ஸ்ரீநிவாஸ்ஸ்ஸ் என்று பெரு மூச்சிரைத்திருப்பார்கள் அல்லது கூவிவியிருப்பார்கள் :).

2,உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பிடிக்கும். கொஞ்சம் வித்தியாசமான, தனித்துவமான பெயர். ஏகப்பட்ட ஸ்ரீநி/னிவாசன்கள்/சீனிவாசன்கள் உள்ள இடங்களில் வித்தியாசப்படுத்தும் பெயர்.
வட இந்தியர்கள் சிலர் ரவி ஸ்ரீநிவாஸ் என்பதை ரவி ஸ்ரீவாஸ்தவா என்று நினைத்துக் கூப்பிட்டதும் உண்டு.அமெரிக்கப் பெண் ஒருவர் என்னை எப்போதும்
ரவி சங்கர் என்றுதான் அழைப்பார், அதுதான் அவருக்கு பரிச்சயமான இந்தியப் பெயர் என்பதால். என்னை ரவி என்று அழைப்பவர்களும் உண்டு, ஸ்ரீநிவாஸ் என்று அழைப்பவர்களும் உண்டு, ரவி ஸ்ரீநிவாஸ் என்றும் சிலர் விளிக்கிறார்கள். ஆனால் இந்தியரல்லதோர், பெரும்பான்மையும் என்னை என் தந்தையின் பெயரில், அதாவது பெயரின் முதல் எழுத்தை விரித்து அழைக்கிறார்கள்/எழுதும் போது அவ்வாறு எழுதுகிறார்கள். அதை நான் ஆட்சேபிப்பதில்லை.

என் நண்பி ஒருவர் அவர் உறவினர் ஒருவரின் பெயர் என் பெயர் என்றும், அவர் மனைவியின் பெயரும், என் மனைவியின் பெயரும் ஒன்று என்றும் சொன்னார். விசாரித்ததில் பின்னது சரி என்றும், ஆனால் அவர் உறவினர் பெயர் ரவி ஸ்ரீநிவாசன் என்றும் அறிந்த பின் மனம் திருப்தியடைந்தது :). அதற்காக ரவி ஸ்ரீநிவாஸ் (TM)/ ((R)) என்று பெயரை டிரேட் மார்க்/ரிஜிஸ்ட்ர்ட் மார்க் ஆக பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை :).

3,கடைசியாக அழுதது எப்போது?

அடிக்கடி/தினசரி அழ வேண்டிய சீரியல்களில் நடிக்கும் தொழில் செய்வதில்லை என்பதால் பதிலை யோசிக்க வேண்டும்:). அதிக நேரம் சிரிக்கும் போது கண்ணில் நீர் தளும்பும், விழுந்து விழுந்து சிரித்தால் கண்ணில் நீர் வரும். அது அழுகையில் சேருமா?. பிரச்சினை எழுந்தால் அதை சமாளிக்கத்தான் தோன்றும், அழத்தோன்றாது. துக்கமோ அல்லது துயர உணர்வு மேலோங்கினாலும் அது கண்ணீராக கொட்டாது, நெருங்கிய உறவினர் மரணத்தின் போதும் கூட கண்ணீர் விட்டு அழுதத்தில்லை. அதற்காக இயல்பில் கல் நெஞ்சக்காரன் என்று அர்த்தமில்லை. மற்றப்படி கடைசியாக அழுதது எப்போது என்பதெல்லாம் அந்தரங்கமான ஒன்று, பகிர விரும்பவில்லை.

4,உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

எனக்குப் பிடிக்குமா என்பதை விட பிறருக்கு புரியுமா என்பதுதான் கேள்வி :(,. பின் - நவீனத்துவ பிரதி போல் பல்-அர்த்த வாசிப்பை சாத்தியப்படுத்தும் கையெழுத்து :). கணினி இருப்பதால் பிழைத்தேன். இல்லாவிட்டால் என் கதி ? . தமிழில் நான் கையெழுத்தில் ‘மரபு வழிக் கதைகள்' என்று எழுதினால், அது ‘இரவு வழிக் கதைகள்' என்றும், ‘அஷிஸ் நந்தி' என்பது 'ஆசிய நந்தி' என்பதாகவும் உள்ளீடு செய்யப்படும் என்றால் எத்தனை அழகிய
கையெழுத்து என்னுடையது என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்..

5, பிடித்த மதிய உணவு?

நான் சாப்பிடும் உணவு வகையில் எதுவாக இருந்தாலும் சரிதான். வெறும் மோர் சாதம் கிடைத்தாலும் சரிதான். அலுவல் நாட்களில் 4/5 சப்பாத்தி, காய்கறி salad, ஒரு கூட்டு/குழம்பு என்று சாப்பிடுகிறேன். இதைப் பரிந்துரைத்தது கரீனா கபூர் :).

6,கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

கடலை விட அருவியில்

7, இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

பழுப்பு முழுக்கால் சராய், ஒருவித பச்சை அரைக்கை சட்டை.

8, வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
எதுவானாலும்

9,கடைசியாகப் பார்த்த படம்?

80% பார்த்தது - Fashion, 100% பார்த்தது - திரைக்கதா (மலையாளம்).

10,பிடித்த பருவ காலம் எது?

இடத்தையும், வசதியையும் பொறுத்தது. பொதுவாக குளிர் காலம் பிடிக்கும். அதிகம் வேர்க்காத இடங்களில் கோடையும் பிடிக்கும்.


11, உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?


சாத்தான் இருக்கும் அளவிற்கு மனம் முதிர்ச்சி அடையவில்லை :). அதாவது சாத்தான் (கூட) இரா அளவிற்க்கு‘முதிரா மனம்' கொண்டவன் :). பிற பேய்/பிசாசுகளைப் பற்றி கேட்காததால், சொல்லுவதாக இல்லை :). லேட்டஸ்ட் பாஷன் இடாகினி பேய்(கள்) தனக்குள் இருக்கிறது என்று சொல்லிக் கொள்வது என்கிறார்கள் :). ரவி ஸ்ரீநிவாஸாகிய எனக்குள் இடாகினிப் பேய் இருக்கிறதா என்று இடாகினிப் பேயைக் கேட்டுச் சொல்லுங்கள் :).

12, கண்ணாடி அணிபவரா?

இல்லை.

Labels: , ,

2 மறுமொழிகள்:

Blogger ஹரன்பிரசன்னா மொழிந்தது...

எப்படி இருந்தவரு...! ஹ்ம்ம்!

10:47 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

#4 தூள் :) :))

12:29 AM  

Post a Comment

<< முகப்பு