பெரியார் பதிப்புரிமை வழக்கு - ஒரு குறிப்பு

பெரியார் பதிப்புரிமை வழக்கு - ஒரு குறிப்பு

பெரியாரின் படைப்புகள் மீதான பதிப்புரிமை குறித்த வழக்கில் நீதிபதி திரு.சந்துருவின் தீர்ப்பினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இப்போதுள்ள நிலை நீடிக்கும் எனவும், நீதிபதி சந்துருவின் தீர்ப்பினை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச உத்தரவிட்டுள்ளது. வீரமணி தரப்பு மேல்முறையீடு செய்யும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதுபோல் அவர்கள் இப்போதுள்ள நிலை
தொடரவேண்டும் எனக் கோருவர் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதுதான். அது போல் இடைக்கால தடை கிடைக்கவும் வாய்ப்புண்டு என்றே நான் யூகித்தேன். அதனால்தான் அவசரப்பட்டு எதுவும் எழுதவில்லை.

ஆனால் நீதிபதி சந்துருவின் தீர்ப்பினால் பெரியாருக்கு ‘விடுதலை' கிடைத்தது போல் சிலர் எழுதினார்கள். இவ்வழக்கு உச்சநீதிமன்றம் வரை செல்லும் என்று தோன்றுகிறது. ஆகவே உடனே தீர்ப்பு வந்துவிடும், பெரியாருக்கு ‘விடுதலை' கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க
வேண்டாம். இந்தப் பிரச்சினையில் பெரியார் படைப்புகளை நாட்டுடமையாக்கக் கூடாது, பெரியாரின் எழுத்துக்கள் தொகுதிகளாக தொகுக்கப்பட்டு கொண்டுவரப் பட வேண்டும் என்று நான் எழுதியிருக்கிறேன். இப்போதும் என் கருத்து அதுதான். பெரியார் எழுத்துக்களை யார்
வேண்டுமானாலும் தடையின்றி வெளியிடலாம் என்ற நிலை வருமானால் பெரியார் எழுதியவை என்று பல வெளியாகும். அதில் அசல் எது, போலி எது என்று கண்டுபிடிப்பது கடினம்.ஏனெனில் பெரியாரின் எழுத்துக்கள் காலவாரியாக திரட்டப்பட்டு தொகுக்கப்படாதபோது அவர் என்ன எழுதினார், இப்போது என்ன வெளியாகியுள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பது இயலாது. இந்தப் பிரச்சினை இருப்பதை உணராதவர்கள் பெரியாருக்கு விடுதலை வேண்டும் என்றெல்லாம் எழுதுகிறார்கள். நீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கிய பின், யாருக்கு பதிப்புரிமை இருக்கிறது என்பது தெளிவான பின் நாட்டுடமை குறித்து அரசு முடிவெடுப்பதே பொருத்தமாக இருக்கும்.

பெரியாருக்குப் பின் மணியம்மை, அதன் பின் வீரமணி என்று தலைமை பொறுப்பு தொடர்ந்துள்ளது.பதிப்புரிமை யாரிடம் உள்ளது என்பதற்கு ஆதாரமாக வெளியிடப்பட்ட நூல்களையே எடுத்துக் கொள்ளலாம்.பல தொகுதிகளாக பல தலைப்புகள் பெரியாரின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. வேறு யாரும் நாங்களும் தொகுப்பு நூல்களை கொண்டுவருவோம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு பதிப்புரிமை இல்லை என்று வழக்குத் தொடர்ந்து அவற்றின் வெளியீட்டை சர்சிக்கவில்லை. எனவே வீரமணி தரப்பிற்கு அனுபவ பாத்தியதை இருக்கிறது, இதை வைத்து அவர்களுக்கு
பதிப்புரிமை இருக்கிறது என்று முடிவு செய்யப்பட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன். பெரியார் தி.கவினர் ஒரு காலத்தில் தி.கவில் இருந்தவர்கள். அப்போதும் பெரியார் எழுத்துக்களை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்தான் வெளியிட்டது. அதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.பதிப்புரிமை இல்லை என்று கூறவில்லை. இப்போது தனி இயக்கமாக இருப்பதால் பதிப்புரிமையை கேள்விக்குட்படுத்துகிறார்கள். பெரியார் மறைவிற்குப் பின் கிட்டதட்ட 20 ஆண்டுகள் அவர்கள் திகவில்தான் இருந்தார்கள். ஆனைமுத்து தொகுத்த பெரியார் சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு வரவில்லை. பெரியார் கொடுத்த அனுமதியுடன் அது வெளியானது. 1973ல் அவர் மறைவிற்குப் பின் அதன் அடுத்த பதிப்பு வெளிவரவில்லை. ஆனைமுத்து ஏன் கொண்டுவரவில்லை. பெரியார் கொடுத்த அனுமதி ஒரு தொகுப்பு நூலிற்கு. அதன் இரண்டாம் பதிப்பினை கொண்டுவர முயன்று, அப்போதே வழக்கு தொடரப்பட்டிருந்தால் 1970களிலேயே பதிப்புரிமை யார் வசம் என்பது தெளிவாகியிருக்கும். 30 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கேள்வி எழ வேண்டிய தேவை இருந்திராது.

இந்த பிரச்சினையை உணர்ச்சிவசப்பட்டு அணுகுவதை விட சட்டரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் அணுகுவதே மேல். இது தொடர்பான என் கருத்துக்களை இங்கு வாசிக்கலாம்.

Labels: , ,

மேய்ச்சல் 29 ஜூலை 2009

மேய்ச்சல் 29 ஜூலை 2009

மேற்கு வங்கத்தில் சிபிஎம் மின் நிலை அசோக் மித்ரா கட்டுரை

பாதுகாக்கும் உரிமை (R2P) குறித்த விவாதம்

மத்திய அமைச்சர் ராஜா, ஜுனியர் விகடன் வெளியீட்டாளர் மீது தொடுத்த வழக்கின் தீர்ப்பு

இலங்கையில் இனி செய்ய வேண்டியது என்ன? ரோஹிணி ஹென்ஸ்மேன் கட்டுரை

தட்பவெப்ப நிலை மாற்றம் - வளர்முக நாட்டின் நோக்கில்

Labels:

சுயபுராணம் அல்லது 32 கேள்வி பதில்

சுய புராணம்-புலம்பல்-அலம்பல் அல்லது 32 கேள்வி பதில்

பழி: பாஸ்டன் பாலா(ஜி) பாவம்: படிக்கும் உங்களுக்கு புண்ணியம்: எனக்குத்தான், அதை அடகு வைத்துவிட்டேன் :)

நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

1.மதி கந்தசாமி நிறைய வாசிப்பவர்,

2.சன்னாசி – படிக்க வேண்டிய பதிவர். புதிராக இருக்கும் இவர் என்ன பதில்கள் சொல்கிறார் என்பதை அறியும் ஆவல்

3. கனடா வெங்கட்- பல்துறை அறிவு,ஆர்வம், . இப்படியாவது அவரை எழுத வைக்கலாம் என்ற எண்ணம் :)

4. அருள் செல்வன் -அதிகம் வலைப்பதிவில் எழுதாத, அதிகம் படிக்கும் பதிவர். அவர் தன்னைப் பற்றி என்னதான் சொல்கிறார் என்பதை அறியும் ஆவல்

5.பெயரிலி பெயரிலியைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

32 கேள்வி - பதில்

1 உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் கடவுள் மாதிரி பாபா இணையத்தில் எங்கெல்லாம் பதிவு வைத்திருக்கிறார், என்ன எழுதுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் :).Snap Judgment ல் பதிவுகளுடன் தகவல்கள்,இணைய முகவரிகள் இருக்கும்.
வாரத்திற்கு ஒரிரு முறை பார்த்துவிடுவேன். பிடித்த பதிவு என்று எதைத் சொல்வது :).

2 நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
மாட்டேன், நட்பாகத்தான் இருப்பேன் :). முன்பு இணையம் மூலம் பல நண்பர்கள்/நண்பிகள் கிடைத்தார்கள்.பல நன்மைகள்,சில பிரச்சினைகள் ஏற்பட்டன.. VSNLல் பலரின் அக்கவுண்ட் ஹாக் செய்யப்படதில் நானும் பாதிக்கப்பட்டேன். இப்போது பேஸ்புக், ஹய்5 போன்றவற்றில் சேருமாறு நண்பர்கள் வற்புறுத்தினாலும் சேர்வதில்லை. நேரமின்மை முக்கிய காரணம்.

3 ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முகத்தை, தெரிந்தவர் என்றால் கை குலுக்க முயல்வேன். சிலவற்றை கவனித்தாலும் வெளியே சொல்வதில்லை :).

4 உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
தன்னம்பிக்கை, அதற்குப்பின் உள்ள (நான் இருப்பதாக நினைக்கும்) அறிவாற்றல்.பிடிக்காது சிறிது சோம்பேறியாய் இருப்பது,இன்னும் படித்தபின் எழுதலாம் என்று தள்ளிப்போடுவது. தன்னம்பிக்கை காரணமாக துணிந்து எடுத்த முடிவுகள் சரியா,தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

5 உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?
சரி பாதி பற்றி எதுவும் சொல்வதாக இல்லை.

6 மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
கேள்வி புரியவில்லை :).

7 இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
முந்தைய தலைமுறையில், அதற்கு முந்தைய தலைமுறையில் பல உறவினர்களை, நண்பர்களை இழந்திருக்கிறேன்.அவர்கள் பக்கத்தில் இல்லாவிட்டாலும் உலகில் இருந்திருந்தால் போதும்.

8 என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
கணினியின் திரையைப் பார்த்துக் கொண்டு என் அறையில் இருக்கிறேன். எதையும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.

9 பிடித்த மணம்?

சந்தனம், நெய், மல்லிகை,காபி.. நெய்யை உருக்கும் போது வரும் மணம் பிடிக்கும்.சிறுவயதில் நாங்கள் இருந்த ஊரில் பக்கத்து கிராமங்களிலிருந்து வெண்ணை கொண்டுவந்து காய்ச்சித் தருவார்கள். அதற்கென்று பாத்திரம் இருக்கும்.
வெண்ணையை காய்ச்சும் போது எழும் மணம், காய்ச்சிய வெண்ணை நெய்யாக உருகி வரும் மணம், அது பின்னர் கெட்டியான பின் தரும் மணம்- மூன்றும் பிடிக்கும். காய்ச்சும் போது அதில் கறிவேப்பில்லை கிள்ளிப் போடுவார்கள். பின்னர் நெய்யை ஒரு பாத்திரத்தில் விடுவார்கள். காய்ச்சிய பாத்திரத்தில் அடியில் தங்கும் கசண்டை வழிப்பார்கள்.
அதன் ருசியும்,மணமும் ஆஹா !. அந்தக் காலமெல்லாம் நினைவில்தான் இனி :(.

புது புத்தகத்திலிருந்து வரும் மணமும் பிடிக்கும். இந்தியாவில் இருந்த போது வான் அஞ்சல்/தரைவழி அஞ்சல் மூலம் வெளிநாட்டிலிருந்து நூல்கள் வரும் -மதிப்புரைக்கு, அன்பளிப்பாக என்று. அந்தப் புத்தம் புதிய நூல்களிலிருந்து, (அவை பல சமயங்களில் hot off the press ஆக எனக்கு வரும்) வரும் மணம் மிகவும் பிடிக்கும்.

10 பிடித்த விளையாட்டு?
முன்பு சில விளையாட்டுகளில் ஆர்வம் இருந்தது. இப்போது இல்லை. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து பார்க்கும் பொறுமை இல்லை. இணையம்/செய்தித்தாட்கள் மூலம் தெரிந்து கொள்வேன்.

11எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சில படங்களை ஜாலியாகப் பார்ப்பேன், சிலவற்றை சில காட்சிகளுக்கு, பாடல்களுக்கென்று. பலவகைத் திரைப்படமும் பிடிக்கும். 'உலக சினிமா'வும் பார்ப்பேன், எம்ஜிஆர் படமும் பார்ப்பேன், திரையரங்கில் பார்த்து பாதியில் ஒடி வந்த படங்களும் உண்டு.

12 என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இந்தக் கேள்விக்கு பதில் தரக்கூடாது என்று பாஸ்டன் அருகே உள்ள ஊரிலிருந்து ஒருவர் கூறியிருக்கிறார் :). என் சரிபாதி நூற்களாக வாங்கிக் தள்ளுகிறார், கவுண்டி (county) நூலகத்தில் பாதியை வீட்டில் வைத்திருக்கிறார், இதைப் படிக்கிறேன் என்றால் அதையும் வாங்கிவிடுவார் அல்லது நூலகத்தில் தூழவுவார், அதற்கு நானும் உடந்தையாகக் கூடாது என்று சொல்லிவிட்டார் :). எனவே இந்தக் கேள்விக்கு பதில் பொதுவில் தரப்படமாட்டாது :)

13 உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மாற்றுவதேயில்லை. மடிக்கணினி, அலுவலகக் கணினி, வீட்டுக் கணினி என மூன்றில் ஒரே படம்தான். ஆனால் அந்த படத்தில் இருப்பவரின் கணினிகளில் டெஸ்க்டாப்பில் படமே இருக்காது.

14 பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
காதிற்கு எரிச்சலுட்டாத எந்த சத்தமும் பிடிக்கும். ஒலிகளில் உள்ள பன்வகைத்தன்மையை ரசிப்பேன் நான்.

15 வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
உலகமே வீடு என்றாகிவிட்ட நாடோடி நான். சந்திரனுக்கோ, சனிக்கோ, செவ்வாய்க்கோ போக வாய்ப்பில்லை.முதன் முதலில் தனியே பயணம் செய்தது 8/9 வயதில் கிட்டதட்ட 2.5 மணி நேர பேருந்துப் பயணம். இந்த ஊரில் ஏற்றிவிடுவார்கள். ஒரு பையில் கொறிக்க
ஏதாவது, புத்தகம்/புத்தகங்கள், மற்றும் பணம். ஒட்டுனர், நடத்துனரிடம் எங்கே இறக்கி விட வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள். ஒட்டுனர் மறந்தாலும் நான் சரியான நிறுத்ததில் நிறுத்தச் சொல்லி இறங்கி தனியே நடந்து போய்விடுவேன். அப்போது பயம் இல்லாமல் நான் வசித்த ஊர்களில் தனியாக நிறைய சுற்றியிருக்கிறேன். கால்களுக்கு தெரியும் அவ்வூர்களின் சந்து பொந்துகளை.இந்தியா வீடு என்றால் தைபி, பீஜிங், ஆஸ்தேரலியா, கனடா என்பவற்றை அதிக பட்சத் தொலைவுகளாகக் கொள்ளலாம்.

16 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நான் ஜீனியஸ் -cum- பைத்தியக்காரன் என்றால் உலகம் நான் பைத்தியக்காரன் என்று நிரூபித்துவிடும் ; பைத்தியக்காரன் என்றால் அதுதான் தெரியுமே என்று சொல்லிவிடும்; ஜீனியஸ் நான் என்றால் கண்டு கொள்ளாது :). தனித்திறமை இருக்கிறது
என்பதை உலகம் ஒப்புக் கொள்வதில்தான் பிரச்சினை :). சில சம்பவங்களை இங்கே பகிர்கிறேன்.

1)நெருங்கிய உறவினர் ஒருவருக்கு திருமணத்திற்காக பெண் தேடினார்கள். நான் அப்போது அரை டிராயர் போடுகிற பையன். ஒரு நாள் இரவு சாப்பிட்ட பின் அவர் பெற்றோர், தங்கை, அவர், நான் அனைவரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தோம். எந்தப் பெண்ணை தெரிவு செய்வது என்று பேசி முடிவு செய்ய வேண்டும். என் உறவினர் தன் தெரிவினை, நீண்ட விளக்கத்துடன் கூறினார். அப்போது மணி கிட்டதட்ட 12. அவர் சொல்லி முடித்த அடுத்த வினாடி நான் சொன்னேன் - Freedom lost at midnight. அவர் என்னை விட கிட்டதட்ட 20 வயது பெரியவர். வயது வித்தியாசம் பாராமல் கிண்டல் செய்வது, வாதிடுவது
என்று வளர்ந்த காலம் அது. அந்த நேரத்தில் Freedom lost at midnight என்று சட்டென்று சொல்ல எத்தனை பேருக்குத் தோன்றும்.

அவர் திருமணம் முடிந்த பின் அன்று இரவு அவரை யாரோ தேடினார்கள், நானும் சில நண்பர்கள், உறவினர்கள் உட்கார்ந்திருந்தோம். எங்களிடம் வந்து கேட்டார்கள். அவர், மனைவி கூப்பிட்டார் என்பதற்காக அவரிடன் பேசப் போயிருந்தார். நான் சட்டென்று கேட்டவரிடம் He is entertaining the Dragon என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சொன்னேன். ஒரு கணம் அவருக்கும், பிறருக்கும் புரியவில்லை. புரிந்த பின் ஒரே சிரிப்பலைதான். அதை அவரிடமும் பின் சொல்லிச் சிரித்தார்கள். (அப்போது Enter the Dragon ஒடிக் கொண்டிருந்தது).அரை டிராயர் போடுகிற வயசில் இது போல் நிறையக் கிண்டல், கேலி செய்திருக்கிறேன், கேலி செய்யப்பட்டாலும் பதிலுக்கு கிண்டல் செய்திருக்கிறேன்.

2) அவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், சட்ட நிபுணர், நிறைய எழுதியிருக்கிறார். நானும் அவரும் ஒரு குழுவில் உறுப்பினர்களாக இருந்தோம். அது விஷயமாக அவரை வீடு-cum-அலுவலகத்தில் சந்த்திதேன். போன உடன், ரவி, இப்போது இந்த மாநிலத்திலிருந்து
இன்னார் பேசினார், அவர்கள் இது விஷயமாக சட்டம் கொண்டு வர விரும்புகிறார்கள், என் உதவியைக் கேட்கிறார்கள் என்றார். சொல்லி முடித்தவுடன் அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றேன். ஏன் என்றார், அரசியல் சட்ட விதிகளைக் கொண்டு விளக்கினேன். உதவியார் ஒருவரை அரசியல் சாசன நூலைக் கொண்டுவரச் சொன்னார். புரட்டிப் படித்தார். கிட்டதட்ட 30 நிமிடம் விவாதம். நான் விரிவாக அரசியல் சட்ட பிரிவுகள், நீதிமன்ற தீர்ப்புகள், அதிகார பகிர்வு என்று பலவற்றை ஆதாரம் காட்டிப் பேசினேன். இறுதியில் நான் சொன்னது சரியான வாதம் என்று ஒப்புக் கொண்டார். அவர் அப்படி ஒரு
கேள்வியை எழுப்புவார் என்று எனக்குத் தெரியாது, அந்தக் கேள்வி பற்றி முன்பு யோசித்ததும் இல்லை. அவர் சொல்லி முடித்து வாய் மூடியவுடன் நான் என் வாதத்தினை துவக்கி விட்டேன். மூத்த வழக்கறிஞர் உங்களுக்குத் தெரியாததா என்று மழுப்பல் பதில் தரவில்லை. அந்த மூத்த வழக்கறிஞர் பின்னர் சிலவற்றில் நீ எனக்கு என்ன படிக்க வேண்டும் என்று சொல்லு, என் அறிவை update செய்து கொள்கிறேன் என்றார். நானும் படிக்க பலவற்றை பரிந்துரைத்து சிலவற்றை அனுப்பியும் வைத்தேன்.

3)என்னுடன் பணியாற்றிய பெண் என்னை கன்புஷியஸ் என்பார் விளையாட்டாக. நாங்கள் நல்ல நண்பர்கள்.ஏன் கன்பூஷியஸ் என்றால் நீ நினைத்தால் பிறரை பேசியே குழப்பிவிடுவாய் என்பார். நீ ஒன்று சொன்னால் பல சமயங்களில் அதற்கு மூன்று/நான்கு அர்த்தம் இருக்கும் அது பிறருக்கு சட்டென்று பிடிபடாது என்பார். அது உண்மைதான். ஏனென்றால் சாமர்த்தியமாக கிண்டல் செய்வது, வார்த்தைகளை வைத்து விளையாடுவது போன்றவற்றில் நான் ஈடுபடுவதுண்டு. சிலருக்கு நுண்ணிய நகைச்சுவை புரியாது, அதனால் நான் கிண்டல் செய்கிறேன் என்பதே புரியாது, ஆனால் வேறு சிலருக்கு புரியும், அவர்கள் என் பேச்சில் உள்ள விஷமத்தை புரிந்து கொண்டு விடுவார்கள்.

பல தருணங்களில் முன் தயாரிப்பின்றி, குறிப்பு இன்றி பேசியிருக்கிறேன், திட்டிருக்கிறேன். எதையாவது கேட்டால், அதைப் பற்றி முன்பு யோசித்திருக்க மாட்டேன், ஆனால் கேட்ட மாத்திரத்தில் பதில் உடனே வந்துவிடும். கிண்டல் என்றால் பதில் கிண்டலும் உடனே வந்துவிடும்.

17 உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நிறம்,பிறப்பு, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது, நடத்துவது, அதை நியாயப்படுத்துவது.

18 உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஸ்விட்சர்லாந்து. பொதுவாக மலையும், மலைசார்ந்த இடங்கள், காடுகள்.

19 எப்படி இருக்கணும்னு ஆசை?
இன்னும் productive ஆக. பணம் உட்பட பிற வசதிகள் இன்னும் அதிகமாக இருந்தால் சிலவற்றைச் செய்ய முடியும். அதற்காக அவற்றை எப்படியும் அடைய விரும்பும் ஆசை இல்லை.

20 வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
Just Live it !.

21) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

நான் பிறந்ததால் எனக்கு இந்த பெயர் வைத்தார்கள், அதனால் பெயர் வந்தது :). பதில் இட்லிவடைத்தனமாக இருக்கிறதா? :).ஞாயிற்றுக் கிழமை பிறந்ததால் ரவி என்பது பெயரில் இடம் பெற்றது ஒரு காரணம். இன்னொரு காரணத்தினை அறிய என் சுய வரலாறு என்கிற ஒப்புதல் வாக்குமூலங்கள் அல்லது நான் அங்கீகரித்து, பிறர் எழுதிய என் வாழ்க்கை வரலாறு(கள்) வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் :). ரவி ஸ்ரீநிவாசன் என்று வைத்து அது ரவி ஸ்ரீநிவாஸ் ஆக சுருங்கவில்லை. முதலில் வைத்த பெயரே ரவி ஸ்ரீநிவாஸ் என்பதுதான்.
பெயர் அப்படியே இருக்கட்டும், ஆங்கிலத்தில் எழுதும் போது சிறு மாறுதால் செய்து எழுதுங்கள் என்று பெயரை எழுதுவதில் மாற்றம் செய்ய பரிந்துரைத்தார் பிரமிள் (எ) தருமு சிவராம். அதற்காக பணம் கேட்கவில்லை அவர். நான் அதை ஏற்கவில்லை. அப்படி மாற்றியிருந்தால் பெயர் பெயரை படிக்கும் போது பலர் ஸ்ரீநிவாஸ்ஸ்ஸ் என்று பெரு மூச்சிரைத்திருப்பார்கள் அல்லது கூவிவியிருப்பார்கள் :).

22,உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
பிடிக்கும். கொஞ்சம் வித்தியாசமான, தனித்துவமான பெயர். ஏகப்பட்ட ஸ்ரீநி/னிவாசன்கள்/சீனிவாசன்கள் உள்ள இடங்களில் வித்தியாசப்படுத்தும் பெயர்.
வட இந்தியர்கள் சிலர் ரவி ஸ்ரீநிவாஸ் என்பதை ரவி ஸ்ரீவாஸ்தவா என்று நினைத்துக் கூப்பிட்டதும் உண்டு.அமெரிக்கப் பெண் ஒருவர் என்னை எப்போதும் ரவி சங்கர் என்றுதான் அழைப்பார், அதுதான் அவருக்கு பரிச்சயமான இந்தியப் பெயர் என்பதால். என்னை ரவி என்று அழைப்பவர்களும் உண்டு, ஸ்ரீநிவாஸ் என்று அழைப்பவர்களும் உண்டு, ரவி ஸ்ரீநிவாஸ் என்றும் சிலர் விளிக்கிறார்கள். ஆனால் இந்தியரல்லதோர், பெரும்பான்மையும் என்னை என் தந்தையின் பெயரில், அதாவது பெயரின் முதல் எழுத்தை விரித்து அழைக்கிறார்கள்/எழுதும் போது அவ்வாறு எழுதுகிறார்கள். அதை நான் ஆட்சேபிப்பதில்லை.

என் நண்பி ஒருவர் அவர் உறவினர் ஒருவரின் பெயர் என் பெயர் என்றும், அவர் மனைவியின் பெயரும், என் மனைவியின் பெயரும் ஒன்று என்றும் சொன்னார். விசாரித்ததில் பின்னது சரி என்றும், ஆனால் அவர் உறவினர் பெயர் ரவி ஸ்ரீநிவாசன் என்றும் அறிந்த பின் மனம் திருப்தியடைந்தது :).

அதற்காக ரவி ஸ்ரீநிவாஸ் (TM)/ ((R)) என்று பெயரை டிரேட் மார்க்/ரிஜிஸ்ட்ர்ட் மார்க் ஆக பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை :).

23,கடைசியாக அழுதது எப்போது?
அடிக்கடி/தினசரி அழ வேண்டிய சீரியல்களில் நடிக்கும் தொழில் செய்வதில்லை என்பதால் பதிலை யோசிக்க வேண்டும்:). அதிக நேரம் சிரிக்கும் போது கண்ணில் நீர் தளும்பும், விழுந்து விழுந்து சிரித்தால் கண்ணில் நீர் வரும். அது அழுகையில் சேருமா?. பிரச்சினை எழுந்தால் அதை சமாளிக்கத்தான் தோன்றும், அழத்தோன்றாது. துக்கமோ அல்லது துயர உணர்வு மேலோங்கினாலும் அது கண்ணீராக கொட்டாது, நெருங்கிய உறவினர் மரணத்தின் போதும் கூட கண்ணீர் விட்டு அழுதத்தில்லை. அதற்காக இயல்பில் கல் நெஞ்சக்காரன் என்று அர்த்தமில்லைமற்றப்படி கடைசியாக அழுதது எப்போது என்பதெல்லாம் அந்தரங்கமான ஒன்று, பகிர விரும்பவில்லை..

24,உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
எனக்குப் பிடிக்குமா என்பதை விட பிறருக்கு புரியுமா என்பதுதான் கேள்வி :(,. பின் - நவீனத்துவ பிரதி போல் பல்-அர்த்த வாசிப்பை சாத்தியப்படுத்தும் கையெழுத்து :). கணினி இருப்பதால் பிழைத்தேன். இல்லாவிட்டால் என் கதி ? . தமிழில் நான் கையெழுத்தில் ‘மரபு வழிக் கதைகள்' என்று எழுதினால், அது ‘இரவு வழிக் கதைகள்' என்றும், ‘அஷிஸ் நந்தி' என்பது 'ஆசிய நந்தி' என்பதாகவும் உள்ளீடு செய்யப்படும் என்றால் எத்தனை அழகிய
கையெழுத்து என்னுடையது என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்..

25, பிடித்த மதிய உணவு?
நான் சாப்பிடும் உணவு வகையில் எதுவாக இருந்தாலும் சரிதான். வெறும் மோர் சாதம் கிடைத்தாலும் சரிதான். அலுவல் நாட்களில் 4/5 சப்பாத்தி, காய்கறி salad, ஒரு கூட்டு/குழம்பு என்று சாப்பிடுகிறேன். இதைப் பரிந்துரைத்தது கரீனா கபூர் :).

26,கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
கடலை விட அருவியில்

27, இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
பழுப்பு முழுக்கால் சராய், ஒருவித பச்சை அரைக்கை சட்டை.

28, வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
எதுவானாலும்

29,கடைசியாகப் பார்த்த படம்?
80% பார்த்தது - Fashion, 100% பார்த்தது - திரைக்கதா (மலையாளம்).

30,பிடித்த பருவ காலம் எது?
இடத்தையும், வசதியையும் பொறுத்தது. பொதுவாக குளிர் காலம் பிடிக்கும். அதிகம் வேர்க்காத இடங்களில் கோடையும் பிடிக்கும்.

31, உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தான் இருக்கும் அளவிற்கு மனம் முதிர்ச்சி அடையவில்லை :). அதாவது சாத்தான் (கூட) இரா அளவிற்க்கு‘முதிரா மனம்' கொண்டவன் :). பிற பேய்/பிசாசுகளைப் பற்றி கேட்காததால், சொல்லுவதாக இல்லை :). லேட்டஸ்ட் பாஷன் இடாகினி பேய்(கள்) தனக்குள் இருக்கிறது என்று சொல்லிக் கொள்வது என்கிறார்கள் :). ரவி ஸ்ரீநிவாஸாகிய எனக்குள் இடாகினிப் பேய் இருக்கிறதா என்று இடாகினிப் பேயைக் கேட்டுச் சொல்லுங்கள் :).

32, கண்ணாடி அணிபவரா?
இல்லை.

அவ்வளவுதான்

Labels: ,

20/32 கேள்வி -பதில்

20/32 கேள்வி பதில்

1 உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் கடவுள் மாதிரி பாபா இணையத்தில் எங்கெல்லாம் பதிவு வைத்திருக்கிறார், என்ன எழுதுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் :).Snap Judgment ல் பதிவுகளுடன் தகவல்கள்,இணைய முகவரிகள் இருக்கும்.
வாரத்திற்கு ஒரிரு முறை பார்த்துவிடுவேன். பிடித்த பதிவு என்று எதைத் சொல்வது :).

2 நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?மாட்டேன், நட்பாகத்தான் இருப்பேன் :). முன்பு இணையம் மூலம் பல நண்பர்கள்/நண்பிகள் கிடைத்தார்கள்.பல நன்மைகள், சில பிரச்சினைகள் ஏற்பட்டன.. VSNLல் பலரின் அக்கவுண்ட் ஹாக் செய்யப்படதில் நானும் பாதிக்கப்பட்டேன். இப்போது பேஸ்புக், ஹய்5 போன்றவற்றில் சேருமாறு நண்பர்கள் வற்புறுத்தினாலும் சேர்வதில்லை. நேரமின்மை முக்கிய காரணம்.

3 ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முகத்தை, தெரிந்தவர் என்றால் கை குலுக்க முயல்வேன். சிலவற்றை கவனித்தாலும் வெளியே சொல்வதில்லை :).

4 உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?தன்னம்பிக்கை, அதற்குப்பின் உள்ள (நான் இருப்பதாக நினைக்கும்) அறிவாற்றல்.பிடிக்காது சிறிது சோம்பேறியாய் இருப்பது,இன்னும் படித்தபின் எழுதலாம் என்று தள்ளிப்போடுவது. தன்னம்பிக்கை காரணமாக துணிந்து எடுத்த முடிவுகள் சரியா, தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

5 உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?சரி பாதி பற்றி எதுவும் சொல்வதாக இல்லை.

6 மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
கேள்வி புரியவில்லை :).

7 இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
முந்தைய தலைமுறையில், அதற்கு முந்தைய தலைமுறையில் பல உறவினர்களை, நண்பர்களை இழந்திருக்கிறேன். அவர்கள் பக்கத்தில் இல்லாவிட்டாலும் உலகில் இருந்திருந்தால் போதும்.

8 என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
கணினியின் திரையைப் பார்த்துக் கொண்டு என் அறையில் இருக்கிறேன். எதையும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.

9 பிடித்த மணம்?

சந்தனம், நெய், மல்லிகை,காபி.. நெய்யை உருக்கும் போது வரும் மணம் பிடிக்கும்.சிறுவயதில் நாங்கள் இருந்த ஊரில் பக்கத்து கிராமங்களிலிருந்து வெண்ணை கொண்டுவந்து காய்ச்சித் தருவார்கள். அதற்கென்று பாத்திரம் இருக்கும்.
வெண்ணையை காய்ச்சும் போது எழும் மணம், காய்ச்சிய வெண்ணை நெய்யாக உருகி வரும் மணம், அது பின்னர் கெட்டியான பின் தரும் மணம்- மூன்றும் பிடிக்கும். காய்ச்சும் போது அதில் கறிவேப்பில்லை கிள்ளிப் போடுவார்கள். பின்னர் நெய்யை ஒரு பாத்திரத்தில் விடுவார்கள். காய்ச்சிய பாத்திரத்தில் அடியில் தங்கும் கசண்டை வழிப்பார்கள்.
அதன் ருசியும்,மணமும் ஆஹா !. அந்தக் காலமெல்லாம் நினைவில்தான் இனி :(.

புது புத்தகத்திலிருந்து வரும் மணமும் பிடிக்கும். இந்தியாவில் இருந்த போது வான் அஞ்சல்/தரைவழி அஞ்சல் மூலம் வெளிநாட்டிலிருந்து நூல்கள் வரும் -மதிப்புரைக்கு, அன்பளிப்பாக என்று. அந்தப் புத்தம் புதிய நூல்களிலிருந்து, (அவை பல சமயங்களில் hot off the press ஆக எனக்கு வரும்) வரும் மணம் மிகவும் பிடிக்கும்.

10 பிடித்த விளையாட்டு?
முன்பு சில விளையாட்டுகளில் ஆர்வம் இருந்தது. இப்போது அவ்வளவு இல்லை. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து பார்க்கும் பொறுமை இல்லை. இணையம்/செய்தித்தாட்கள் மூலம் தெரிந்து கொள்வேன்.

11எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

சில படங்களை ஜாலியாகப் பார்ப்பேன், சிலவற்றை சில காட்சிகளுக்கு, பாடல்களுக்கென்று. பலவகைத் திரைப்படமும் பிடிக்கும். 'உலக சினிமா'வும் பார்ப்பேன், எம்ஜிஆர் படமும் பார்ப்பேன், திரையரங்கில் பார்த்து பாதியில் ஒடி வந்த படங்களும் உண்டு.

12 என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இந்தக் கேள்விக்கு பதில் தரக்கூடாது என்று பாஸ்டன் அருகே உள்ள ஊரிலிருந்து ஒருவர் கூறியிருக்கிறார் :). என் சரிபாதி நூற்களாக வாங்கிக் தள்ளுகிறார், கவுண்டி (county) நூலகத்தில் பாதியை வீட்டில் வைத்திருக்கிறார், இதைப் படிக்கிறேன் என்றால் அதையும் வாங்கிவிடுவார் அல்லது நூலகத்தில் தூழவுவார், அதற்கு நானும் உடந்தையாகக் கூடாது என்று சொல்லிவிட்டார் :). எனவே இந்தக் கேள்விக்கு பதில் பொதுவில் தரப்படமாட்டாது :)

13 உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?மாற்றுவதேயில்லை. மடிக்கணினி, அலுவலகக் கணினி, வீட்டுக் கணினி என மூன்றில் ஒரே படம்தான். ஆனால் அந்த படத்தில் இருப்பவரின் கணினிகளில் டெஸ்க்டாப்பில் படமே இருக்காது.

14 பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?காதிற்கு எரிச்சலுட்டாத எந்த சத்தமும் பிடிக்கும். ஒலிகளில் உள்ள பன்வகைத்தன்மையை ரசிப்பேன் நான்.

15 வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

உலகமே வீடு என்றாகிவிட்ட நாடோடி நான். சந்திரனுக்கோ, சனிக்கோ, செவ்வாய்க்கோ போக வாய்ப்பில்லை.முதன் முதலில் தனியே பயணம் செய்தது 8/9 வயதில் கிட்டதட்ட 2.5 மணி நேர பேருந்துப் பயணம். இந்த ஊரில் ஏற்றிவிடுவார்கள். ஒரு பையில் கொறிக்க
ஏதாவது, புத்தகம்/புத்தகங்கள், மற்றும் பணம். ஒட்டுனர், நடத்துனரிடம் எங்கே இறக்கி விட வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள்.ஒட்டுனர் மறந்தாலும் நான் சரியான நிறுத்ததில் நிறுத்தச் சொல்லி இறங்கி தனியே நடந்து போய்விடுவேன். அப்போது பயம்
இல்லாமல் தனியாக நான் வசித்த ஊர்களில் நிறைய சுற்றியிருக்கிறேன்.

இந்தியா வீடு என்றால் தைபி, பீஜிங், ஆஸ்தேரலியா, கனடா என்பவற்றை அதிக பட்சத் தொலைவுகளாகக் கொள்ளலாம்.

16 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நான் ஜீனியஸ் -cum- பைத்தியக்காரன் என்றால் உலகம் நான் பைத்தியக்காரன் என்று நிரூபித்துவிடும் ; பைத்தியக்காரன் என்றால் அதுதான் தெரியுமே என்று சொல்லிவிடும்; ஜீனியஸ் நான் என்றால் கண்டு கொள்ளாது :). தனித்திறமை இருக்கிறது என்பதை உலகம் ஒப்புக் கொள்வதில்தான் பிரச்சினை :).

சில சம்பவங்களை இங்கே பகிர்கிறேன்.

1)நெருங்கிய உறவினர் ஒருவருக்கு திருமணத்திற்காக பெண் தேடினார்கள். நான் அப்போது அரை டிராயர் போடுகிற பையன். ஒரு நாள் இரவு சாப்பிட்ட பின் அவர் பெற்றோர், தங்கை, அவர், நான் அனைவரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தோம். எந்தப் பெண்ணை தெரிவு செய்வது என்று பேசி முடிவு செய்ய வேண்டும். என் உறவினர் தன் தெரிவினை, நீண்ட விளக்கத்துடன் கூறினார். அப்போது மணி கிட்டதட்ட 12. அவர் சொல்லி முடித்த அடுத்த வினாடி நான் சொன்னேன் - Freedom lost at midnight. அவர் என்னை விட கிட்டதட்ட 20 வயது பெரியவர். வயது வித்தியாசம் பாராமல் கிண்டல் செய்வது, வாதிடுவது என்று வளர்ந்த காலம் அது. அந்த நேரத்தில் Freedom lost at midnight என்று சட்டென்று சொல்ல எத்தனை பேருக்குத் தோன்றும்.

அவர் திருமணம் முடிந்த பின் அன்று இரவு அவரை யாரோ தேடினார்கள், நானும் சில நண்பர்கள், உறவினர்கள் உட்கார்ந்திருந்தோம். எங்களிடம் வந்து கேட்டார்கள். அவர், மனைவி கூப்பிட்டார் என்பதற்காக அவரிடன் பேசப் போயிருந்தார். நான் சட்டென்று கேட்டவரிடம் He is entertaining the Dragon என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சொன்னேன். ஒரு கணம் அவருக்கும், பிறருக்கும் புரியவில்லை. புரிந்த பின் ஒரே சிரிப்பலைதான். அதை அவரிடமும் பின் சொல்லிச் சிரித்தார்கள். (அப்போது Enter the Dragon ஒடிக் கொண்டிருந்தது).அரை டிராயர் போடுகிற வயசில் இது போல் நிறையக் கிண்டல், கேலி செய்திருக்கிறேன், கேலி செய்யப்பட்டாலும் பதிலுக்கு கிண்டல் செய்திருக்கிறேன்.

2) அவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், சட்ட நிபுணர், நிறைய எழுதியிருக்கிறார். நானும் அவரும் ஒரு குழுவில் உறுப்பினர்களாக இருந்தோம். அது விஷயமாக அவரை வீடு-cum-அலுவலகத்தில் சந்த்திதேன். போன உடன், ரவி, இப்போது இந்த மாநிலத்திலிருந்து
இன்னார் பேசினார், அவர்கள் இது விஷயமாக சட்டம் கொண்டு வர விரும்புகிறார்கள், என் உதவியைக் கேட்கிறார்கள், நீ என்ன நினைக்கிறாய் என்றார். சொல்லி முடித்தவுடன் அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றேன். ஏன் என்றார், அரசியல் சட்ட
விதிகளைக் கொண்டு விளக்கினேன். உதவியார் ஒருவரை அரசியல் சாசன நூலைக் கொண்டுவரச் சொன்னார். புரட்டிப் படித்தார். கிட்டதட்ட 30 நிமிடம் விவாதம். நான் விரிவாக அரசியல் சட்ட பிரிவுகள், நீதிமன்ற தீர்ப்புகள், அதிகார பகிர்வு என்று பலவற்றை
ஆதாரம் காட்டிப் பேசினேன். இறுதியில் நான் சொன்னது சரியான வாதம் என்று ஒப்புக் கொண்டார். அவர் அப்படி ஒரு கேள்வியை எழுப்புவார் என்று எனக்குத் தெரியாது, அந்தக் கேள்வி பற்றி முன்பு யோசித்ததும் இல்லை. அவர் சொல்லி முடித்து வாய் மூடியவுடன் நான் என் வாதத்தினை துவக்கி விட்டேன். மூத்த வழக்கறிஞர் உங்களுக்குத் தெரியாததா என்று மழுப்பல் பதில் தரவில்லை. அந்த மூத்த வழக்கறிஞர் பின்னர் சிலவற்றில் நீ எனக்கு என்ன படிக்க வேண்டும் என்று சொல்லு, என் அறிவை update செய்து கொள்கிறேன் என்றார். நானும் படிக்க பலவற்றை பரிந்துரைத்து சிலவற்றை அனுப்பியும் வைத்தேன்.

3)என்னுடன் பணியாற்றிய பெண் என்னை கன்புஷியஸ் என்பார் விளையாட்டாக. நாங்கள் நல்ல நண்பர்கள்.ஏன் கன்பூஷியஸ் என்றால் நீ நினைத்தால் பிறரை பேசியே குழப்பிவிடுவாய் என்பார். நீ ஒன்று சொன்னால் பல சமயங்களில் அதற்கு மூன்று/நான்கு அர்த்தம் இருக்கும் அது பிறருக்கு சட்டென்று பிடிபடாது என்பார். அது உண்மைதான். ஏனென்றால் சாமர்த்தியமாக கிண்டல் செய்வது, வார்த்தைகளை வைத்து விளையாடுவது போன்றவற்றில் நான் ஈடுபடுவதுண்டு. சிலருக்கு நுண்ணிய நகைச்சுவை புரியாது, அதனால் நான் கிண்டல் செய்கிறேன் என்பதே புரியாது, ஆனால் வேறு சிலருக்கு புரியும், அவர்கள் என் பேச்சில் உள்ள விஷமத்தை புரிந்து கொண்டு விடுவார்கள்.

பல தருணங்களில் முன் தயாரிப்பின்றி, குறிப்பு இன்றி வாதிட்டிருக்கிறேன். எதையாவது கேட்டால், அதைப் பற்றி முன்பு யோசித்திருக்க மாட்டேன், ஆனால் கேட்ட மாத்திரத்தில் பதில் உடனே வந்துவிடும். கிண்டல் என்றால் பதில் கிண்டலும் உடனே வந்துவிடும்.

17 உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நிறம்,பிறப்பு, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது, நடத்துவது, அதை நியாயப்படுத்துவது.

18 உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஸ்விட்சர்லாந்து. பொதுவாக மலையும், மலைசார்ந்த இடங்கள், காடுகள்.

19 எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் productive ஆக. பணம் உட்பட பிற வசதிகள் இன்னும் அதிகமாக இருந்தால் சிலவற்றைச் செய்ய முடியும். அதற்காக அவற்றை
எப்படியும் அடைய விரும்பும் ஆசை இல்லை.

20 வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
Just Live it !.

Labels: ,

ஜனதாக் கட்சியில் பாஸ்டன் பாலா(ஜி),பிரபல எழுத்தாளர்,ரவி ஸ்ரீநிவாஸ்!!!

ஜனதாக் கட்சியில் பாஸ்டன் பாலா(ஜி),பிரபல எழுத்தாளர்,ரவி ஸ்ரீநிவாஸ்!!!

நமது சிறப்பு செய்தியாளர், பாஸ்டனிலிருந்து Exclusive ரிப்போர்ட்

தினவதந்தி : நாளைய செய்தியை இன்றே வெளியிடும் உலகின் நம்பர் ஒன் நாளிதழ்

நாக்கு 1 பொய் 275

ஜனதாக் கட்சியில் பாஸ்டன் பாலா(ஜி), பிரபல எழுத்தாளர், ரவி ஸ்ரீநிவாஸ்!!!

நமது சிறப்பு செய்தியாளர், பாஸ்டனிலிருந்து Exclusive ரிப்போர்ட்

ஜுலை 27,2009 பாஸ்டன்: ஜனதாக் கட்சியின் உலகத்தலைவர் டாக்டர் சுப்பிரமண்யன் சுவாமியை சந்தித்து ஜனதா கட்சியில் பாஸ்டன் பாலா(ஜி) உறுப்பினராக சேர்ந்தார். கட்சியின் 20வது உறுப்பினரான அவரை 24 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினராகவும், அகில உலகப் பொதுச்செயலாளராகவும் சு.சுவாமி நியமித்தார்.

ஆண்டுதோறும் ஹார்வார்ட் பல்கலையில் கோடைகாலத்தில் பாடம் நடத்த சுவாமி வருவார். அது தவிர பாஸ்டனில் உள்ள அவரது மகள் கீதாஞ்சலி சுவாமியின் வீட்டிற்கு ஆண்டிற்கு குறைந்தது 4 முறை வருவார். கீதாஞ்சலியின் கணவர் சூரி எம்.ஐ.டியில் பேராசிரியராக இருக்கிறார்.கீதாஞ்சலி ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர், கலிபோர்னியா பல்கலையில் கம்யுட்டர் சயின்ஸில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்த ஆண்டும் ஹார்வர்டில் பாடம் நடத்த அமெரிக்கா வந்துள்ள சு.சுவாமி மகள் வீ ட்டில் தங்கியுள்ளார்.

சில ஆண்டுகள் முன்பு சுவாமியை சந்தித்து அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலர் உரையாடினர். அப்போதே ஜனதாக்கட்சியின் கிளையை அமெரிக்காவில் நிறுவவும், அதில் சேரவும் அவர்களில் ஒரிருவர் விரும்பினர். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொண்டதால் அவ்வாறு செய்ய முடியவில்லை. இதற்கிடையே அறிவாளிகள், இணையத்தில் துடிப்புடன் செயல்படுபவர்கள், இளைஞர்கள் கட்சியில் சேர வேண்டும் என்று விரும்பிய சுவாமி பலருடன் தொடர்பு கொண்டார். சிலர் அவரை சந்தித்து பேசினார்கள். இருப்பினும் அவர்கள் யாரும் சேரவில்லை. இந்த நிலையில் பாஸ்டன் பாலா(ஜி) சேர்ந்திருப்பது ஒரு நல்ல துவக்கம் என்று சுவாமி கருதுவதாக ஜனதாக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சுவாமியை சந்தித்து உரையாடிய ரவி ஸ்ரீநிவாஸும் கட்சியில் சேர்வார் என்று ஜனதாக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கீதாஞ்சலி சுவாமியின் வீட்டில் சு.சுவாமியை நேற்று காலை சந்தித்த பாஸ்டன் பாலா(ஜி) சால்வை அணிவித்து, சுவாமியை வாழ்த்தினார், பின் $10 கட்டி உறுப்பினராக கட்சியில் சேர்ந்தார். அப்போது தமிழக ஜனதாக் கட்சி தலைவர் சந்திரலேகாவும் உடனிருந்தார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெருமளவில் ஜனதாக் கட்சியில் சேர வேண்டும், அப்போதுதான் ஜனதாக் கட்சியின் ஆதரவு பெற்ற அரசை தில்லியில் நிறுவ முடியும் என்று கூறிய சுவாமி, கட்சியின் அமெரிக்கப் பகுதி பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார். அக்டோபரில் நியு ஜெர்சியில் ஜனதாக் கட்சியின் மாநாட்டில் அமெரிக்க கிளை முறைப்படி துவக்கப்படும் என்றார்.

பாலா(ஜி) சுவாமி தனக்கு சிறு வயது முதலே ஹீரோவாக இருந்துவருகிறார், என்னைப் போல் எல்லோரையும் நிறைய கேள்விகள் கேட்கிறார் என்பதால் அவரை பிடிக்கும் என்றார். அவர் கரத்தை வலுப்படுத்தவும், ஜெயப்பிரகாஷ் நாராயணின் அரசியல்-சமூக கொள்கைகளை பரப்பவும் ஜனதாக் கட்சியில் சேர்ந்தேன் என்றார். பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவர் உட்பட பலர் விரைவில் ஜனதாக் கட்சியில் சேர உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

ஜனதாக் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராகவும் அவரை நியமித்த சு.சுவாமி வரவிருக்கும் தேர்தல்களில் கனக்டிக்கட், நியு ஜெர்சி மாநிலங்களில் ஜனதாக் கட்சி, வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது என்றார். 2024ல் அமெரிக்க குடியரசு தலைவராக அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒரு இந்தியர் வர வாய்ப்புள்ளது என்றார். அதற்காக ஜனதாக் கட்சி பாடுபடும் என்றார். உலக அளவில் கட்சியை விரிவுபடுத்தவும் திட்டங்கள் உள்ளன என்றார்.

பாஸ்டன் பாலா(ஜி) ஜனதாக் கட்சியில் சேர்ந்துள்ளது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டரில் இது பற்றி 108200 டிவிட்கள் சுடசுடப் பரிமாறிக்கொள்ளப்பட்டதால் டிவிட்டர் தளம் இயங்கவில்லை. ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்கள் இதைப் பற்றி வலைப்பதிவுகள் எழுதியதாலும், அவற்றிற்கு லட்சக்கணக்கில் பின்னூட்டங்கள் இடப்பட்டதாலும் பிளாக்கர் திக்குமுக்காடியது. தமிழில் எந்த திரட்டியும் பிரச்சினையின்றி இயங்கமுடியவில்லை. வோர்ட்பிரஸ்சிலும் பிரச்சினை ஏற்பட்டது.

இதற்கிடையில் தீடிரென்று அமெரிக்கா வந்துள்ள பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவர் சு.சுவாமியை இன்று பாஸ்டனில் சந்தித்தார். சுவாமியுடன் இந்திய, உலக அரசியல்,பண்பாடு குறித்து விவாதித்த அவர் ஜனதாக் கட்சியில் விரைவில் சேருவார் என்றும், அவர் நோபல் பரிசு பெற உதவுவதாக சு.சுவாமி வாக்குறுதி தந்துள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா திரும்பிய அவர் மீண்டும் சு.சுவாமியை சென்னையில் சந்திப்பார் என்றும், பின் ஸ்வீடனுக்கு சுவாமியுடன் செல்வார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சுவாமியைச் சந்தித்துப் பேசிய வலைப்பதிவர் ரவி ஸ்ரீநிவாஸ் அது மரியாதை நிமித்தம் நடந்த சந்திப்பு என்றார்.சுவாமிக்கு இனிப்பு பிடிக்கும் என்பதால் தான் உருவாக்கியுள்ள புதிய இனிப்பு வகைகளுக்கான சமையல் குறிப்புகளை அவருக்குக் கொடுத்தேன் என்றார். தான் தன்னை மீள் கண்டுபிடிப்பு செய்து கொண்டிருப்பதாலும், தன்னை புதுப்பித்துக் கொண்டிருப்பதாலும் ஆகஸ்ட் முதல் ஒராண்டு தமிழில் எதையும் எழுத மாட்டேன் என்றார். அந்த ஒராண்டில் சீன மொழி, பாரம்பரிய சீன மருத்துவம் கற்க உள்ளதாகவும், சீன மொழியிலிருந்து தமிழில் எதையும் மொழிபெயர்க்கமாட்டேன் என்றும் கூறினார். ஜனதாக் கட்சியில் சேரும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.

பிறக்கும் போதே Multiple Personality Disorder உடன் பிறந்த அவரை அமெரிக்க மருத்துவர்கள் அண்மையில் முழுமையாகக் குணப்படுத்தினர். ஆனால் அவரால் அந்த disorder இல்லாமல் இயங்குவது சிரமமாக இருக்கிறது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி அவரிடம் கேட்ட போது தான் மீள் கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டது எப்படி ஒற்றை ஆளுமையுடன் தான் உலகில் செயல்படுவதைத்தான் என்றார். Multiple Personality Disorder அவ்வளவு மோசமான நோய் அல்ல, அதைப் பற்றி ஊடகங்கள் பயத்தினை ஊட்டியுள்ளன. உண்மையில் அத்துடன் வாழ்வது தனக்கு ஒரு போதும் சிரமமாக இருந்தது இல்லை என்றார். இப்போது ஒற்றை ஆளுமையுடன் செயல்படுவது கடினமாக இருந்தாலும், காலப்போக்கில் பழகிக் கொள்வேன் என்றார்.

Labels: , , ,

12 / 32 : கேள்வி -பதில்

12 / 32 : கேள்வி -பதில்

பாஸ்டன் பாலா விடுத்த அழைப்பின் பேரில், பிற கேள்விகளுக்கு பதில்கள், பின் 32 கேள்விகளுக்கும் பதில்கள் தனித்தனி இடுகைகளாக இடப்படும்.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

நான் பிறந்ததால் எனக்கு இந்த பெயர் வைத்தார்கள், அதனால் பெயர் வந்தது :). பதில் இட்லிவடைத்தனமாக இருக்கிறதா? :).

ஞாயிற்றுக் கிழமை பிறந்ததால் ரவி என்பது பெயரில் இடம் பெற்றது ஒரு காரணம். இன்னொரு காரணத்தினை அறிய என் சுய வரலாறு என்கிற ஒப்புதல் வாக்குமூலங்கள் அல்லது நான் அங்கீகரித்து, பிறர் எழுதிய என் வாழ்க்கை வரலாறு(கள்) வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் :). ரவி ஸ்ரீநிவாசன் என்று வைத்து அது ரவி ஸ்ரீநிவாஸ் ஆக சுருங்கவில்லை. முதலில் வைத்த பெயரே ரவி ஸ்ரீநிவாஸ் என்பதுதான்.

பெயர் அப்படியே இருக்கட்டும், ஆங்கிலத்தில் எழுதும் போது சிறு மாறுதால் செய்து எழுதுங்கள் என்று பெயரை எழுதுவதில் மாற்றம் செய்ய பரிந்துரைத்தார் பிரமிள் (எ) தருமு சிவராம். அதற்காக பணம் கேட்கவில்லை அவர். நான் அதை ஏற்கவில்லை. அப்படி மாற்றியிருந்தால் பெயர் பெயரை படிக்கும் போது பலர் ஸ்ரீநிவாஸ்ஸ்ஸ் என்று பெரு மூச்சிரைத்திருப்பார்கள் அல்லது கூவிவியிருப்பார்கள் :).

2,உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பிடிக்கும். கொஞ்சம் வித்தியாசமான, தனித்துவமான பெயர். ஏகப்பட்ட ஸ்ரீநி/னிவாசன்கள்/சீனிவாசன்கள் உள்ள இடங்களில் வித்தியாசப்படுத்தும் பெயர்.
வட இந்தியர்கள் சிலர் ரவி ஸ்ரீநிவாஸ் என்பதை ரவி ஸ்ரீவாஸ்தவா என்று நினைத்துக் கூப்பிட்டதும் உண்டு.அமெரிக்கப் பெண் ஒருவர் என்னை எப்போதும்
ரவி சங்கர் என்றுதான் அழைப்பார், அதுதான் அவருக்கு பரிச்சயமான இந்தியப் பெயர் என்பதால். என்னை ரவி என்று அழைப்பவர்களும் உண்டு, ஸ்ரீநிவாஸ் என்று அழைப்பவர்களும் உண்டு, ரவி ஸ்ரீநிவாஸ் என்றும் சிலர் விளிக்கிறார்கள். ஆனால் இந்தியரல்லதோர், பெரும்பான்மையும் என்னை என் தந்தையின் பெயரில், அதாவது பெயரின் முதல் எழுத்தை விரித்து அழைக்கிறார்கள்/எழுதும் போது அவ்வாறு எழுதுகிறார்கள். அதை நான் ஆட்சேபிப்பதில்லை.

என் நண்பி ஒருவர் அவர் உறவினர் ஒருவரின் பெயர் என் பெயர் என்றும், அவர் மனைவியின் பெயரும், என் மனைவியின் பெயரும் ஒன்று என்றும் சொன்னார். விசாரித்ததில் பின்னது சரி என்றும், ஆனால் அவர் உறவினர் பெயர் ரவி ஸ்ரீநிவாசன் என்றும் அறிந்த பின் மனம் திருப்தியடைந்தது :). அதற்காக ரவி ஸ்ரீநிவாஸ் (TM)/ ((R)) என்று பெயரை டிரேட் மார்க்/ரிஜிஸ்ட்ர்ட் மார்க் ஆக பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை :).

3,கடைசியாக அழுதது எப்போது?

அடிக்கடி/தினசரி அழ வேண்டிய சீரியல்களில் நடிக்கும் தொழில் செய்வதில்லை என்பதால் பதிலை யோசிக்க வேண்டும்:). அதிக நேரம் சிரிக்கும் போது கண்ணில் நீர் தளும்பும், விழுந்து விழுந்து சிரித்தால் கண்ணில் நீர் வரும். அது அழுகையில் சேருமா?. பிரச்சினை எழுந்தால் அதை சமாளிக்கத்தான் தோன்றும், அழத்தோன்றாது. துக்கமோ அல்லது துயர உணர்வு மேலோங்கினாலும் அது கண்ணீராக கொட்டாது, நெருங்கிய உறவினர் மரணத்தின் போதும் கூட கண்ணீர் விட்டு அழுதத்தில்லை. அதற்காக இயல்பில் கல் நெஞ்சக்காரன் என்று அர்த்தமில்லை. மற்றப்படி கடைசியாக அழுதது எப்போது என்பதெல்லாம் அந்தரங்கமான ஒன்று, பகிர விரும்பவில்லை.

4,உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

எனக்குப் பிடிக்குமா என்பதை விட பிறருக்கு புரியுமா என்பதுதான் கேள்வி :(,. பின் - நவீனத்துவ பிரதி போல் பல்-அர்த்த வாசிப்பை சாத்தியப்படுத்தும் கையெழுத்து :). கணினி இருப்பதால் பிழைத்தேன். இல்லாவிட்டால் என் கதி ? . தமிழில் நான் கையெழுத்தில் ‘மரபு வழிக் கதைகள்' என்று எழுதினால், அது ‘இரவு வழிக் கதைகள்' என்றும், ‘அஷிஸ் நந்தி' என்பது 'ஆசிய நந்தி' என்பதாகவும் உள்ளீடு செய்யப்படும் என்றால் எத்தனை அழகிய
கையெழுத்து என்னுடையது என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்..

5, பிடித்த மதிய உணவு?

நான் சாப்பிடும் உணவு வகையில் எதுவாக இருந்தாலும் சரிதான். வெறும் மோர் சாதம் கிடைத்தாலும் சரிதான். அலுவல் நாட்களில் 4/5 சப்பாத்தி, காய்கறி salad, ஒரு கூட்டு/குழம்பு என்று சாப்பிடுகிறேன். இதைப் பரிந்துரைத்தது கரீனா கபூர் :).

6,கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

கடலை விட அருவியில்

7, இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

பழுப்பு முழுக்கால் சராய், ஒருவித பச்சை அரைக்கை சட்டை.

8, வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
எதுவானாலும்

9,கடைசியாகப் பார்த்த படம்?

80% பார்த்தது - Fashion, 100% பார்த்தது - திரைக்கதா (மலையாளம்).

10,பிடித்த பருவ காலம் எது?

இடத்தையும், வசதியையும் பொறுத்தது. பொதுவாக குளிர் காலம் பிடிக்கும். அதிகம் வேர்க்காத இடங்களில் கோடையும் பிடிக்கும்.

11, உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சாத்தான் இருக்கும் அளவிற்கு மனம் முதிர்ச்சி அடையவில்லை :). அதாவது சாத்தான் (கூட) இரா அளவிற்க்கு‘முதிரா மனம்' கொண்டவன் :). பிற பேய்/பிசாசுகளைப் பற்றி கேட்காததால், சொல்லுவதாக இல்லை :). லேட்டஸ்ட் பாஷன் இடாகினி பேய்(கள்) தனக்குள் இருக்கிறது என்று சொல்லிக் கொள்வது என்கிறார்கள் :). ரவி ஸ்ரீநிவாஸாகிய எனக்குள் இடாகினிப் பேய் இருக்கிறதா என்று இடாகினிப் பேயைக் கேட்டுச் சொல்லுங்கள் :).

12, கண்ணாடி அணிபவரா?

இல்லை.

Labels: , ,

P.B.ஸ்ரீநிவாஸ்: அன்றும், இன்றும்

P.B.ஸ்ரீநிவாஸ்: அன்றும், இன்றும்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் P.B.ஸ்ரீநிவாஸ், பாம்பே ஜெயஸ்ரீ சேர்ந்து பாடியுள்ள பாடல் இடம் பெற்றுள்ளது. இன்றைய சூழலில் இது திரைப்பட பாடல் என்பதையும் தாண்டி பொருள் கொள்ளத்தக்கதாக உள்ளது. சரிகம வெளியிட்ட legends ஒலி நாடா/குறுந்தகடு தொகுப்பில் ஸ்ரீநிவாஸ் தான் எஸ்.பி.சைலாஜாவுடன் பாடியிருப்பதையும் குறிப்பிட்டிருப்பார். சித்ராவுடன் பாடியதில்லை என்பதையும் குறிப்பிட்டிருப்பார். பல பாடகிகளுடன் அவர் பாடியிருந்தாலும் எனக்கு பிடித்தது ஸ்ரீநிவாஸ்-ஈஸ்வரி சேர்ந்து பாடியிருப்பவை. 1970களில் அவருக்கு தமிழில் பாடுவதற்கான வாய்ப்புகள் குறைய துவங்கின.1970களின் மத்தியில் அவை கிட்டதட்ட இல்லாமல் போய்விட்டன எனலாம். ஜெமினி கணேசன் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைந்தது, எஸ்.பி.பாலாசுப்பிரமண்யம், யேசுதாஸ், ஜெயச்சந்திரன்,மலேசியா வாசுதேவன் ஆகியோருக்கு வாய்ப்புகள் அதிகரித்தது போன்றவை அதற்கு காரணங்கள். இருப்பினும் 1970களின் இறுதியில் அவர் பாடி வெளியான இரண்டு பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

கடவுள் அமைத்த மேடையில் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல். ராஜாவின் இசையில் ஸ்ரீநிவாஸ் தமிழில் பாடிய ஒரே பாடல் இதுவென்று
நினைக்கிறேன். அதை இங்கே கேட்கலாம்.

இனிக்கும் இளமை (1979)படத்தில் எஸ்.பி.சைலஜாவுடன் பாடிய பாடல். இசை சங்கர்-கணேஷ்). இது விஜயகாந்த்- ராதிகா நடித்த படம்.விஜயகாந்த் அதில் விஜயராஜ் என்ற பெயரில் அறிமுகமானார்(?). பாடலை இங்கே கேட்கலாம். சங்கர்-கணேஷ் இசையமைப்பில் ஸ்ரீநிவாஸ் சில பாடல்களையே பாடியுள்ளார்.

பின் 1984ல் ஆபாவாணன் இயக்கத்தில் மனோஜ்-கியான் இசையமைப்பில் தோல்வி நிலையென நினைத்தால் என்று துவங்கும் பாடல். 25 ஆண்டுகள் கழித்து ஆயிரத்தில் ஒருவனில் பாம்பே ஜெயஸ்ரீயுடன் பாடிய பாடலின் இறுதியில் தனிக்கு ஒலிக்கும் அவர் குரலில் தொனிக்கும் உருக்கத்தை என்னவென்பது. இனியும் அவருக்கு தமிழில் தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைக்குமா என்று தெரியாது. இந்தப் பாடல் அவர் பாடியவற்றுள் குறிப்பிடதக்க பாடல்களில் ஒன்றாக அமையும்.

தொடர்புடைய பழைய இடுகைகள்

http://ravisrinivas.blogspot.com/2005/03/p_09.html

http://ravisrinivas.blogspot.com/2005/03/p.html

Labels: , , , ,