பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்

பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்

வளர்மதியின் வலைப்பதிவில் எழுதப்பட்ட இரு இடுகைகளைப் படித்தேன்.
http://vinaiaanathogai.blogspot.com/2009/06/ccpi.html

http://vinaiaanathogai.blogspot.com/2009/06/piracy.html

அதிர்ச்சி அடைந்தேன். இடதுசாரிகளே இந்த இழிசெயலில் ஈடுப்பட்டிருப்பதை என்னவென்று சொல்ல.தொடர்புடைய எழுத்தாளர்கள் யாரிடமும் முன் அனுமதி பெறாமல் நூல் வெளியிடுவதும், அதை விற்பதும், பின் பாட நூலான பின் எழுத்தாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், அனுமதி பெறாமல் அதை இரு பதிப்புகள் கொண்டு வருவதும், விற்பதும் சுரண்டலின் பல வடிவங்கள். முதலாளி வர்க்கத்திற்கே இதில் பாடம் நடத்தும் தகுதி இடதுசாரி பதிப்பகத்திற்கும், அதற்கு அனுசரணையாக இருக்கும் தலைமைக்கும் உண்டு. முதலாளித்துவம் பேசும் பதிப்பகங்கள் கூட இப்படி கூச்சமின்றி திருடி செயல்படுமா என்று சந்தேகம் எழுகிறது.

எழுத்தாளர்கள் இந்த திருட்டைப் பற்றி முதலில் அறிந்தவுடன் நீதிமன்றத்தை கூட்டாக/தனியாக அணுகி நூல் வெளியீடு, விற்பனைக்கு தடை உத்தரவு பெற்றிருக்க வேண்டும். முறைப்படி ஒப்பந்தம் போடப்படாத நிலையில் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று விற்பனையாக பிரதிகளை பறிமுதல் செய்யக் கோரியிருக்க வேண்டும். இந்த திருட்டுப் பற்றி தெரிய வந்தவுடன் முதலில் ஒரு இடைக்காலத் தடை உத்தரவினை நீதிமன்றத்தில் கோரியிருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் காலம் கடத்தியதும்,பஞ்சாயத்துப் பேசியதும் சரியல்ல. அப்படி பஞ்சாயத்து பேசியவர்கள், பின் ராயல்டி என்று கொடுக்கப்பட்ட தொகையை வேறு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்கள் சட்டபூர்வமான உரிமைகளை முறையாக நிலை நாட்ட தவறிவிட்டார்கள். இதனால் தங்கள் தரப்பை அவர்களே பலவீனப்படுத்திவிட்டார்கள். நாளை நீதிமன்றத்தினை நாடினால் அவர்கள் பணம் பெற்றதே அவர்கள் எங்கள் செய்கைகளை ஏற்றுக் கொண்டதாகும் என்று பதிப்பகம் வாதிடலாம். மேலும் அப்படி பணம் பெற்றுக் கொள்வதாக இருந்தாலும் முதலில் ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் படி எதற்கு எவ்வளவு பணம் எந்த அடிப்படையில் என்பதை தெளிவாக அதில் குறிப்பிட்டு, அவற்றின் அடிப்படையில் பணம்
தருவதாகவும், பெற்றுக் கொள்வதாகவும், அவ்வாறு பணம் பெற்றுக் கொண்டது தங்கள் உரிமைகளை பாதிக்காத வகையில் அதற்கு வகை செய்யும் ஷரத்துக்களை ஒப்பந்தத்தில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இங்கு எழுத்தாளர்கள் அதைச் செய்யவில்லை. அடிப்படை சட்ட அறிவு கூட இல்லாமல் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

முறைப்படி ஒப்பந்தம் இல்லாத போது, ஆசிரியர் அனுமதி இன்றி நூலை வெளியிட்டதை எதிர்த்து நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றிருந்தால் அவர்கள் தரப்பு வலுவானதாக இருந்திருக்கும். பதிப்பகம் செய்தது குற்றம். அதற்கு அவர்களிடமிருந்து தண்ட/அபராத நட்ட ஈடு (punitive damages) கோர எழுத்தாளர்கள் முயற்சி செய்திருக்க வேண்டும். முதலில் அவர்கள் சந்தித்திருக்க வேண்டியது வழக்கறிஞர்களை, அதன் பின் நீதிமன்றம் மூலம்
நியாயம் கோரியிருந்தால் இந்த திருட்டு இன்னும் பரவலாக அறிய வந்திருக்கும். பல்கலைகழகமும் அந்தப் பதிப்பகம், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டிருக்க முடியும். நூலை பாடத்திட்டத்திலிருந்து எடுத்திருக்க முடியும். அதனால் பதிப்பகம் நட்டமடைந்தாலும் பல்கலைகழகத்திடம் நட்ட ஈடு கோர முடியாது. மேலும் இப்படி செயல்பட்ட பதிப்பகம், தொகுப்பாசிரியர்களின் நூற்களை இனி பாடத்திட்டத்தில் சேர்க்க முடியாது என பல்கலைகழகம் முடிவு செய்யலாம். இப்போது அவற்றிற்க்கான சாத்தியபாடுகளை இந்த பஞ்சாயத்துப் பேச்சுவார்த்தைகள், பணம் பெற்றுக் கொண்டது குறைத்து விட்டது. நடந்தது நடந்து விட்டது, பணம் கொடுத்து சரி செய்துவிட்டோம் என்று பதிப்பாளர் தரப்பு பேச இவர்கள் வாய்ப்பு தந்துவிட்டார்கள்.

அந்த நூலில் பதிப்புரிமை குறித்து ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்ததா/ என்ன
குறிப்பிடப்பட்டிருந்தது என்று பிரபஞ்சனும், வளர்மதியும் குறிப்பிடவில்லை. அது மட்டுமின்றி எந்த அடிப்படையில், எந்த நிபந்தனைகளின் பேரில் இந்தத் தொகைகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் தெளிவாக இல்லை.எழுத்தாளர்கள் இப்படி நடந்து கொள்வது அவர்களை சுரண்டுவோருக்கு சாதகமாக உள்ளது. அதைக் கூட அறியாமல் எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ என்ற ஐயமே வளர்மதி எழுதியதையும், பிரபஞ்சன் கட்டுரையையும் படித்த போது எழுந்தது. பதிப்புரிமை சட்டம் குறித்து அறிய பல நூல்கள் உள்ளன.ஒரு இரண்டாயிரம் ரூபாய் செலவழித்து விரிவான விளக்கங்கள் கொண்ட சட்ட நூலை வாங்கி படித்தறியலாம். அதை இதுவரை அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை. இனி வழக்கறிஞரை சந்திக்கப்போவதாக வளர்மதி எழுதியிருப்பது நகைச்சுவை. முதலில் அதையல்லவா செய்திருக்க வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு செல்வதென்றாலும் கூட முறையான ஒரு ஒப்பந்தத்தினை எழுத்தாளர்கள் தம் தரப்பில் முன் வைத்து அதன் பின் வழக்கறிஞர்/களுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்க வேண்டும். இதில் தொகுப்பாளர்களும் கூட்டுக் களவாணிகள்தான். ஐந்து நாடகங்களை தொகுக்க எதற்கு நான்கு பேர் என்று தெரியவில்லை. முறையான அனுமதி
பெறாமல் எழுத்தாளர்களின் படைப்புகளை திருட்டுத்தனமாக பயன்படுத்திக் கொண்ட இவர்கள் மீதும் வழக்குத் தொடர முடியும். பதிப்பகம், தொகுப்பாளர்கள் என இருதரப்பாரையும் இந்த எழுத்தாளர்கள் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திருக்க வேண்டும். அதன் மூலம் நியாயம் கோரியிருக்க வேண்டும். இப்போது பிரச்சினையின் பிற பரிமாணங்கள் பின் தள்ளப்பட்டு பணம் கொடுத்தோம், எல்லாம் சுபம் என்று கூட்டுக் களவாணிகள் வெட்கமின்றி சொல்லித் திரிந்தால் அதில் வியப்பில்லை. இந்த களவாணிகள் தங்களில் யாருக்கும் தண்டனை இல்லாமல் எழுத்தாளர்களுடன் பஞ்சாயத்துப் பேசி பணம் கொடுத்து தீர்க்கும் கலையை வளர்த்தெடுத்து பரப்பினாலும் நான் வியப்படையமாட்டேன்.

எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் இதிலிருந்து சிலவற்றை கற்க வேண்டும். இல்லாவிட்டால் சுரண்டல்களும், ஏமாற்றுதலும் தொடரும்.

பி.கு: நான் அண்மையில் உலகப் புகழ்பெற்ற பல்கலைகழக வெளியிட்டு நிறுவனம் ஒன்றுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். ஒரு கட்டுரைத் தொகுப்பில் நான் எழுதிய கட்டுரை இடம் பெறுகிறது. அது விஷயமாக அவர்கள் அனுப்பிய ஒப்பந்தம் மிகத் தெளிவாக உள்ளது. நான் பதிப்புரிமை மீறல் செய்திருந்தால் நான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். கட்டுரையாசிரியர் என்ற முறையில் என் உரிமைகள் என்ன, பொறுப்புகள் என்ன என்பது அதில் தெளிவாக இருந்தது. அது போல் வெளியீட்டாளர் உரிமைகள், கடமை/பொறுப்புகள் தெளிவாக இருந்தன. இரண்டே பக்கங்கள்தான் ஒப்பந்தம்.

இது போன்ற ஒப்பந்தங்கள்/நிபந்தனைகள் எனக்கு புதிதல்ல. பல ஜர்னல்கள்/பதிப்பாளர்கள் இப்படி ஒப்பந்தம்/வெளியிடுவதற்கான அனுமதி படிவம் ஒன்றை அனுப்பி, நீங்கள் அதை ஏற்ற பின்னர்தான் நீங்கள் எழுதியதை வெளியிட முடியும் என்று தெரிவித்துவிடுகிறார்கள். நூல் மதிப்புரையாக இருப்பினும் அதை வெளியிடுவதற்கென்று சில விதிகளை கடைப்பிடிக்கிறார்கள். ஒப்பந்ததில் நீங்கள் கையெழுத்திட விரும்பவில்லை அல்லது விதிகளை ஏற்க முடியாது என்றால் அவர்களிடம் அதைத் தெரிவித்துவிட வேண்டும். மிக பெரும்பான்மையான சந்தர்ப்பந்தகளில் இந்த ஒப்பந்த விதிகள் ஒரே மாதிரியாக இருக்கும். பல பதிப்பகங்கள் முறையான ஒப்பந்த வடிவுகளை வைத்திருக்கிறார்கள். வெளியிடப்படும் நூலில் தன்மையை (ஒருவர் எழுதியது, இருவர்/அதற்கும் அதிகமானோர் எழுதியது, தொகுப்பு நூல்) பொறுத்து ஒப்பந்தம்/விதிகள் மாறும், பெரும்பாலான விதிகள் எந்த நூலிற்கும் பொருந்தும். பதிப்புரிமையை நீங்கள் அவர்களுக்கு அளிப்பதைக் கூட
சட்டபூர்வமாக சான்றுகளுடன் செய்துவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதனால் இரு தரப்பிற்கும் சட்டபூர்வமாக தங்கள் உரிமைகள்/கடமைகள்/பொறுப்புகள் குறித்து தெளிவான புரிதல் ஏற்படுகிறது. நான் ஒன்று நினைத்தேன், அவர்கள் ஒன்று நினைத்தார்கள் என்ற பிரச்சினை எழுவதில்லை. உதாரணமாக தொகுப்பில் இடம் பெறும் என் கட்டுரையை நான் எதிர்காலத்தில் வேறெங்காவது வெளியிடுவதையும் இந்தப் ஒப்பந்தம் கருத்தில் கொண்டு அதற்கான விதிகளையும் குறிப்பிடுகிறது. எனவே நானோ, பிறரோ அதை மீறி கட்டுரையை வேறு ஒரு வெளியீட்டில் வெளியிட முடியாது.

Labels: , , , ,

8 மறுமொழிகள்:

Anonymous பா. ரெங்கதுரை மொழிந்தது...

//இடதுசாரிகளே இந்த இழிசெயலில் ஈடுப்பட்டிருப்பதை என்னவென்று சொல்ல.//

இந்த நக்கல்தானே வேண்டாமென்பது.

இடதுசாரிகள், குறிப்பாகக் கட்சி அரசியல் நடத்தும் இடதுகள் ஈடுபடாத இழிசெயல்களே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. இத்தனை நாள் இதில் மட்டும் மூக்கை நுழைக்காததுதான் ஆச்சரியம்.

சோவியத் யூனியன், செஞ்சீனம் போன்ற நாடுகளில் தங்களுக்கு எதிரான கருத்துகளை எழுதுபவர்களைக்கூடத் தண்டித்தவர்கள் இடதுகள். சில ஆண்டுகளுக்குமுன் மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் தாஜா செய்ய தஸ்லிமா நஸ்ரினின் புத்தகத்துக்குத் தடைவிதித்தவர்கள் இந்தப் புண்ணியவான்கள். (இவர்கள் நடத்தும் பதிப்பகத்திற்கு அந்தப் புத்தகத்தைத் தரவில்லை என்ற ஆத்திரமே தடைக்குக் காரணமாக இருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது.) ஏதோ அனுமதி வாங்காமல் பதிப்பித்ததற்குப் போய் இப்படிக் கூச்சல் போடுகிறீர்களே. நல்ல வேடிக்கைதான்.

8:33 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

A invite for a meme: Vital Statistics: 32 Personal Questions « Snap Judgment

Thanks in advance :)

12:34 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பாபா, இதென்ன சோதனை :). 32 கேள்வியா, சாய்ஸ் இல்லையா :).
மொத்தமாக 140 எழுத்துக்களில் பதிலை டிவிட்டிடவா :)

9:15 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

சின்னபுள்ளத்தனமாத்தான் இருக்கும்... இருந்தாலும் ஏதாவது கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்பில் இருக்கிறேன் :)

ஒவ்வொரு கேள்விக்கும், பதிலாக 1 ட்விட் போடுங்களேன்...

9:30 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

I will answer all the 32 in one go next week. That will suit me as well as you.

8:22 AM  
Blogger ஹரன்பிரசன்னா மொழிந்தது...

நீங்க 32 கேள்விகளுக்கும் பதில் சொன்னதும், அடுத்த தவணையா 320 கேள்விகள் கேட்கப்போவதாக பாஸ்டன் பாலாஜி சொன்னார்.

8:59 PM  
Anonymous நறுமுகய் மொழிந்தது...

நண்பரே நலமா? நான் நறுமுகய் . எனது பணி தமிழ் மாற்று இலக்கிய எழுத்தாளர்களை இணையத்தில் ஊக்கப்படுத்தும் முகமாக அவர்களது வலைப்பூக்களை தொகுத்து வலையிதழாக காட்சிக்கு வைப்பது. இது மற்ற திரட்டிகள் போல உங்கள் பதிவுகளை ஒரு சில நிமிடங்கள் அல்லது மணித்துளிகள் முன்னிறுத்திவிட்டு பின்பு மறையும் "நட்சத்திர" தி(வி)ரட்டி அல்ல... 365 நாட்கள், 56 வாரங்கள், 12 மாதங்கள், 4 பருவகாலங்கள் உங்களின் கடைசி பதிவை தன் அகத்தில் தாங்கி வளர்க்கும் தாய் போன்றது! இதன் இணைப்பை நீங்கள் உங்கள் உங்கள் வலைப்பூவில் இணைத்தால் மிகவும் மகிழ்வேன்!கட்டாயம் ஏதுமில்லை!

அன்புடன்..
"நறுமுகய்"
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்மானம் வலைச்சிற்றிதழ்

5:52 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

நான் என்ன சு சுவாமியா ;) தினசரி 20 கேள்வி போட :))

10:28 AM  

Post a Comment

<< முகப்பு