சிதைவுகள், வீழ்ச்சிகள், மெளனங்கள்

சிதைவுகள், வீழ்ச்சிகள், மெளனங்கள்

இன்றைய காலகட்டத்தில் பல நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. சில புனித பிம்பங்களின் வீழ்ச்சி தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி எப்படி ஒரு அதிர்ச்சியை அதன் ஆதரவாளர்களுக்கு ஏற்படுத்தியதோ அது போன்ற அதிர்ச்சி திமுகவை ஆதரித்த பலருக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. சிலருக்கு இந்திய தேசியம் மீதான அவநம்பிக்கை/கசப்புணர்வு அதிகரித்துள்ளது. ஒரு பேரவலம், துயரம் நம்முடைய அடிப்படைகளை கலைத்துப் போடும். தூக்கமின்றி சிந்திக்க வைக்கும். அவல உணர்வும், கையறு நிலையும், இனி ஒன்றுமில்லையோ என்ற ஐயமும் மாறி மாறி எழும். வார்த்தைகள் மூலம் எல்லாவற்றையும் சொல்லிவிட நினைத்தாலும் முடியாது போகும். ஒரு கட்டத்தில் போதுமடா சாமி என்ற உணர்வும், இன்னொரு கட்டத்தில் கடந்த காலம் தந்த படிப்பினைகளைக் கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும். தனி நபர் நிலைப்பாடுகளில் காணப்படும் மாற்றங்களை, தடுமாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது இன்றைய தேவை. ஏதோ ஒரு கோட்பாடு அல்லது ஏதோ ஒரு சிந்தனையாளர் முன்வைத்ததை வைத்து மட்டும் இந்த காலகட்டத்தில் நடப்பதை விளங்கிக் கொள்ளமுடியும் என நான் கருதவில்லை. சிந்தனையில் தெளிவின்மை, விரக்தி போன்றவற்றை கடந்து செல்ல வேண்டும்.

நிறைய யோசிக்கவும், படிக்கவும், சில அடிப்படை அனுமானங்களை மறு பரீசலனை செய்யவும், குறைவாக எழுத வேண்டிய தருணம் இது என்று தோன்றுகிறது. மே 16க்குப் பின் என்ன(தான்) நடக்கிறது என்று பார்ப்போம்.

Labels: , , , , ,

3 மறுமொழிகள்:

Anonymous ரா.கிரிதரன் மொழிந்தது...

//சிந்தனையில் தெளிவின்மை, விரக்தி போன்றவற்றை கடந்து செல்ல வேண்டும். //

உங்கள் முதல் பத்தியை படிக்கும் போது எந்த காலத்திலும் பொருந்தும் வாக்கியங்களின் கலவையாக இருக்கிறது. உலகப்போர், பனிப்போர் போன்றவை போல.

3:00 AM  
Anonymous பா. ரெங்கதுரை மொழிந்தது...

//சிலருக்கு இந்திய தேசியம் மீதான அவநம்பிக்கை/கசப்புணர்வு அதிகரித்துள்ளது.//

இந்திய தேசியம் குறித்த கசப்புணர்வு அதிகரிக்க (அதிகம் வெளிப்படுத்த) அந்தச் சிலருக்கு நியாயமான காரணங்கள் எதுவுமே தேவையில்லை என்பதே உண்மை. நிகழ்வுகள் தலைகீழாக இருந்திருந்தாலும் அதைக் காரணமாகக் காட்டிக் கசப்புணர்வை அதிகம் வெளிப்படுத்தியிருப்பார்கள். எல்லாம் ‘வேளாள தேசியம்’ செய்யும் வேலை.

8:25 AM  
Blogger பதி மொழிந்தது...

//நிறைய யோசிக்கவும், படிக்கவும், சில அடிப்படை அனுமானங்களை மறு பரீசலனை செய்யவும், குறைவாக எழுத வேண்டிய தருணம் இது என்று தோன்றுகிறது.//

உண்மை....

5:00 PM  

Post a Comment

<< முகப்பு