என் உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது

என் உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது

இனிய கடன் பிறப்புகளே, கொலஸ்ட்ராலின் கொலாஸ்ட்ரால்களே, என்னை வாழவைக்கும் தாய்குலமே, பெரியோர்களே, ஆன்றோர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் மேற்கொண்ட உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது. உண்ணாவிரத்த்தினை கைவிடக் கோரி, கனவில் வந்த ஒபாமா மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்கும், என் சார்பில் பேச வேண்டியவர்களுடன் பேசி அரசு அறிவிப்பினை உடனே வெளியிடச் செய்தவர்களுக்கும், இன்னும் பல அன்புள்ளங்களுக்கும் நன்றி. கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட உடன் மருத்துவர் அறிவுரைப்படி தலையை பூமியில் சாய்த்து உண்ணாவிரதத்தினை தொடர்ந்தேன். கண் இமைகள் மூடியிருந்தாலும் உள்ளத்தில் 24x 7 ஒடிக் கொண்டிருக்கும் தமிழ் இனம் குறித்த அக்கறைக்கு ஒய்வேது, ஒழிச்சல் ஏது. இவ்வாறாக நேற்றுக் இரவு 11 மணிக்கு துவங்கிய என் காலவரையற்ற உண்ணாவிரதம் கோரிக்கை நிறைவேறியதால் இன்று காலை 6 மணிக்கு முடிவிற்கு வந்தது. ஏமாற்றுவது யாராக இருந்தாலும், ஏமாற்றப்படுவது தமிழினமே என்று நினைத்து ஏமாற்றும் தமிழினத் துரோகிகளுக்கு பதிலடியாக இந்த உண்ணாவிரதம் அமைந்தது என்றே உலகெங்கும் உள்ள தமிழின உணர்வாளர்களும்,பற்றாளர்களும் கருதுகிறார்கள்.

Labels: , ,

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

அதுசரிங்க. உங்க டேக் இதுல என்ன? கருணாநிதியை டேக் பண்ணரது மட்டுமா? :-)

8:43 AM  

Post a Comment

<< முகப்பு