என்ன சொல்ல என்ன எழுத :(

என்ன சொல்ல என்ன எழுத :(

எதையும் தாங்கும் இதயம் தமிழர்களுக்கு, ஒன்றல்ல, பல தேவைப்படும் என்று நினைக்கிறேன். நடக்கின்றவை நம்பிக்கை தருவதாக இல்லை. காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர், cessation of hostilities என்றுதான் சொல்வாராம். அந்தச் சொற்த் தொடரைத்தான் பயன்படுத்துவாராம். ஆர்வெலின் Inside the Whale ல் வரும் ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது. அதில் சொற்றொடர்கள் மூலம் கொடுமையானவைக் கூட
சாதாரணமாக மாற்றப்படுவதை விமர்சித்த்ருப்பார். படையெடுப்பு/ஆக்ரமிப்பு என்று சொல்லாமல் எல்லை சீரமைப்பு என்று சொல்வதைப் போல. ஜெயந்தி நடராஜன் ஆர்வெல்லைப் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒருவேளை ஆர்வெல் எழுதியதிலிருந்து இப்படியும் சொல்லலாம் என்று தோன்றியதோ என்னமோ. 'வேலை நிறுத்தம் இன்று, நாளை மனிதச் சங்கிலி, அப்புறம் தந்தி' என்று அறிவிக்கும் கலைஞர் கருணாநிதி இனி மின்னஞ்சல் அனுப்புங்கள். பாக்ஸ் (fax) அனுப்புங்கள் என்று அறிவிப்பு விடலாம். அதைப் பாராட்டி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி போராட்டம் நடத்துவதில் கலைஞர் உலகிற்கே வழிகாட்டி என்று வீரமணி தலையங்கம் எழுதுவார். இங்கு நண்பர்களைப் போல் நடிப்பவர்கள் மிக அதிகம், உண்மையான நண்பர்கள் மிகக் குறைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் இப்போதாவது புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால் அறிவுஜீவிகள் என்று சொல்லப்படுவர்கள் செய்யும் அரசியல் அதைவிட மோசமாக
உள்ளது. இதில் வலது, இடது, முற்போக்கு, பின் நவீனம் என்ற முத்திரைகளுக்கு அப்பால் பார்த்தால் பலருக்கு அக்கறை இல்லை, அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் பலருக்கு அதை வைத்து தங்களுடைய அரசியலை நடத்துவதே முக்கியமாக இருக்கிறது. யாராவது இந்த அறிவு ஜீவிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியவற்றை தொகுத்துப் படித்து ஆராய்ந்து, அவர்களின் சார்புகள், மெளனங்கள் குறித்து எழுத வேண்டும்.

கீழ்க்கணடவற்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

1)Center Stage for the 21st Century: Power Plays in the Indian Ocean - Robert Kaplan
http://www.foreignaffairs.com/articles/64832/robert-d-kaplan/center-stage-for-the-21st-century
ராபர்ட் காப்லானின் அனைத்துக் கருத்துகளையும் நான் ஏற்கவில்லை. இந்தக் கட்டுரையும், அதையொட்டி நடந்த விவாதமும் சிலவற்றை தெளிவாக்கலாம். தமிழில் இந்தக் கட்டுரை குறித்து எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை,என் சிற்றவிற்கெட்டிய வரையில்.

2) Sri Lanka poses India five challenges-Dr. Rajeswari Pillai Rajagopalan-09 March 2009
http://www.observerindia.com/cms/sites/orfonline/modules/analysis/AnalysisDetail.html?cmaid=15981&mmacmaid=15982

இவற்றை முன்னரே சுட்டி எழுதியிருக்க வேண்டும், பிழை எனதே. இன்றைய சூழலில் யார், யார் மீது,எதன்/ஏவற்றின் மீது நம்பிக்கை வைக்க முடியும் என்று தெரியவில்லை. ‘யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்' என்று சொல்வது மிகையாக இராதோ. இந்தியாவை விமர்சிப்பவர்கள். இந்திய தேசியத்தை விமர்சிப்பவர்கள் வேறு சில தரப்பினரை விமர்சிக்க மாட்டார்கள். இந்திய அரசியல்வாதிகளை திட்டி எழுதும் ம.க.இ.க கோஷ்டி ராஜபக்சேயை வரவேற்ற பிரச்சந்தாவை விமர்சித்து ஒரு வார்த்தை கூட எழுதாது.

தமிழவன் பிராமண எதிர்ப்பு அரசியலுக்கு ‘அறிவார்ந்த' காரணங்களை ‘கண்டுபிடித்து' எழுதுவார். அதற்கு பிறர் துயரமும், அவலமும்தான் கிடைத்ததா என்று கேட்கக் கூடாது. 'பின் நவீனத்துவ' அறம் அதுதான் போலும். இப்படி மெளனங்கள், பக்க சார்புகள் என்பதுதான் மிக அதிகமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் என்ன எழுத, என்ன சொல்ல, எழுதி என்ன பயன் என்று தோன்றுகிறது. உண்மையாகச் சொன்னால் விரிவான எழுத நினைத்தேன். எழுதும் மன நிலையில் இல்லை.

Labels: , , , ,

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

வார்த்தை இதழில் துக்காராம் கோபால்ராவ் எழுதிய சீனா- ஏகாதிபத்திய அணுகல் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன

2:01 PM  
Blogger savuccu மொழிந்தது...

*** கருணாநிதி இனி மின்னஞ்சல் அனுப்புங்கள். பாக்ஸ் (fax) அனுப்புங்கள் என்று அறிவிப்பு விடலாம். அதைப் பாராட்டி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி போராட்டம் நடத்துவதில் கலைஞர் உலகிற்கே வழிகாட்டி என்று வீரமணி தலையங்கம் எழுதுவார்***

உண்மை!
வெட்கக் கேடு!

2:49 PM  

Post a Comment

<< முகப்பு