வார்த்தை வாழ்க்கை விளையாட்டு

வார்த்தை வாழ்க்கை விளையாட்டு

'செய்திகளைப் படித்துவிட்டு அகராதிகளைப் புரட்டாதீர்கள். வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள் அறிக்கைகள் அறிக்கைகள் அறிக்கைகள் . சொல்லும் செயலும் வேறு என்பதை விட செய்யப்படுபவை எல்லாம் சொல்லப்படுவதில்லை, சொல்லப்படாதவையே செய்யப்படும் என்றும் யாரும் சொல்வதில்லை. நடப்பது விளையாட்டு, வார்த்தை விளையாட்டு. வார்த்தைகள் மூலம் வாழ்க்கைகளுடன். அதை யாருடன் யார் விளையாடினால் என்ன நம்முடன் விளையாடாதவரை என்று எண்ண வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு தெரியாமல் உங்களுடன் அந்த விளையாட்டுகளை நடத்திக் கொண்டிருந்ததை தோற்ற பின்தான் அறிவீர்கள்.'

இப்படிச் சொல்லிவிட்டு வசிட்டர் எழுந்தார் சபை கலையட்டும் என்றார். சபை கலைந்தது.

காண்டத்தின் அடுத்த பகுதி எப்போது படிக்கப்படும் என்று கேட்டேன். படிக்கப்படும் போது குறுஞ்செய்தி வரும் என்று ஏடு படிப்பவர் சொல்லி விட்டு அமெரிக்கா செல்ல விசா வாங்க சென்னை விரைந்தார். ஒபாமாவிற்கு ஏடு படிக்கப் போகிறேன் என்றார். G 20ன் அடுத்த
கூட்டதிற்கு முன்பு அவருக்கு ஏடு தேடிப்பிடித்து படிக்க வேண்டும் என்றார்.

என் ஏடு என்னவாயிற்று என்றேன். ஏட்டில் விளைந்த சுரைக்காயுடன் விற்று விட்டேன். வாங்கியவன் ஏட்டை என்ன செய்தான் என்று தெரியாது என்றார். அப்படியானால் நான் எதிர்காலம் எப்படி அறிவது என்றேன். காலம் கலி காலம், இதில் உனக்கென்ன தனியாக எதிர்காலம். ஊருக்குள்ளது உனக்கு, , எல்லோருக்குமுள்ளது உனக்கு என்றார். ஐயகோ, முனிவர் சொன்ன எதிர்கால பலனை எப்படி இனி அறிவது என்றேன். எதிர்கால பலன்களைச் சொல்லி உன்னை பைத்தியமாக்க வேண்டாம் என்பது முனிவரின் அருள்வாக்கு என்றார்.

அறிந்து பைத்தியமாவவதை விட அறியாமல் பைத்தியமாவது மேல், குணமடைவது சீக்கிரமாகும் என்றார். இப்படியாக் புலம்பிக் கொண்டிருந்தவனை நான் நேற்று கனவில் பார்த்த போது கணிணி வைரஸ் தாக்கி பிரதி பாழான பிரதி தான் என்று ஒயாமல் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் முகம் பரிச்சயமான ஒன்றுதான், எங்கேயோ பார்த்த முகமல்ல.
ஆனால் யார் முகம் என்றுதான் தெரியவில்லை. முகத்தினை கணினி உதவியுடன் வரைந்திருக்கிறேன், இங்கே இட்டிருக்கிறேன், பார்க்கவும்.இந்த நபரை உங்களுக்காவது தெரியுமா. தெரிந்தால் தகவல் தர வேண்டிய மின்னஞ்சல் முகவரி, ஒ அதுவும் உங்களுக்குத் தெரியுமா.

Labels: , ,

2 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

மண்ட காயுதே

11:29 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

அண்ணன் பாஸ்டன் பாலா அவர்களே,
இது, 2700+பக்கங்கள் கொண்ட நாவலின் ஒரு சிறு பகுதியின் சிறு பகுதி என்றால் மகிழ்வீர்களா:).

8:26 AM  

Post a Comment

<< முகப்பு