‘புத்தம் புதிய’ புத்தகமே

‘புத்தம் புதிய’ புத்தகமே

கடந்த 2/3 ஆண்டுகளில் மற்றும் 2009ல் வெளியாகியுள்ள நூற்களிலிருந்து எதையெல்லாம் படிக்கலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்துள்ளேன். இதில் புனைவு (கதை,கவிதை, நாடகம், அறிபுனை), handbook/reader/short introduction போன்ற வகைகளில் வெளியான நூற்களை சேர்க்கவில்லை. அவையும் முக்கியமானவைதான். அதைப் பட்டியலிட்டால் நீண்டுவிடும் என்பதால் பட்டியலிடவில்லை.

இந்தியாவில் வெளியான நூற்களையும், தமிழில் வெளியான நூற்களையும் இதில் சேர்க்கவில்லை. அவற்றை தனியாக பட்டியலிட வேண்டும். இந்தத் தெரிவு என் ரசனை/தேவையின் அடிப்படையில் அமைந்தது. நிச்சயமாக இதில் உள்ள அனைத்து நூற்களையும் நான படிக்கப் போவதில்லை, அது சாத்தியமுமில்லை. இதில் உள்ளவற்றில் 10% நூற்களையாவது இந்த ஆண்டின் இறுதிக்குள் படித்துவிட நினைக்கிறேன்/விரும்புகிறேன். தொழில்ரீதியாக நான் படிக்கவேண்டியதையும் இங்கு தரவில்லை. ஆனால் நடைமுறையில் படிக்க கிடைப்பதில் மிகப் பெரும்பான்மையான நேரத்தினை அவற்றை படிக்க மட்டுமே ஒதுக்க வேண்டியுள்ளது.

Bioethics ல் எனக்கு ஆர்வமுண்டு. இருப்பினும் அதில் விவாதிக்கப்படும் அனைத்து கேள்விகள், பிரச்சினைகள் மீது எனக்கு ஒரே மாதிரியான அக்கறை இல்லை. ஆகையால் bioethics பிரிவில் பல நூற்களை நான் இதில் பட்டியலிடவில்லை. இது போல் பல துறைகளில் பல முக்கியமான நூற்கள் இதில் இடம் பெறவில்லை. ஒருவகையில் பார்த்தால் விடுபட்டவைகளின் பட்டியல் மிக நீளமானது. அதை வேறு யாராவது பட்டியலிடலாம் :).

பொதுவாக எனக்கு அறிமுகமான எழுத்தாளர்களின் (ஒரு பரந்த பொருளில்) நூற்களை நான் தேடிப் படிப்பதுண்டு. அந்த வகையில் Helga Nowotny, Donna Haraway, A.Escobar போன்றோரின் நூற்களை இங்கு சேர்த்திருப்பது பொருத்தமானதுதான். Harawayன் எழுத்துக்கள் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளவை என்பதால் அவர் முக்கியமானவர். அவரின் அனைத்து நூற்களையும் ஒரு சேர வாசிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் உண்டு.

ஒரு நூலைப் பற்றிய மதிப்புரைகளின் அடிப்படையிலும் நான் அதைப் படிப்பதைப் பற்றி முடிவு செய்கிறேன். சிலரின் எழுத்துகள் மீது எனக்கு தொடர்ந்து அக்கறை இருப்பதால் அவர்கள் என்ன எழுதுகிறார்கள், புதிதாக எழுதியுள்ள நூல், தொகுப்பாசிரியராக வெளிவந்துள்ள நூல் எது/வை என ஒரு கண் வைத்துக் கொள்வதுண்டு. அதன் அடிப்படையிலும் நூற்களை தெரிவு செய்வதுண்டு.

பல நூற்களை கட்டுரைகளில்/ பிற நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதன் அடிப்படையில் தகவல்களை அறிந்து படிப்பது குறித்து முடிவு செய்கிறேன். பல நூல்களை நான் அறிந்து கொள்வது இப்படித்தான். பல சமயங்களில் நூலைப் பற்றி அறிவதற்கும் அதை படிப்பதற்கும் இடையே உள்ள இடைவெளி பல ஆண்டுகள் ஆகிவிடுகிறது. இருப்பினும் மனதில் ஒரு மூலையில் அப்படி படிக்க வேண்டியவை குறித்த உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.. இப்படி பழைய ‘பாக்கிகள்’ நிறைய உள்ளன.

மதிப்புரைக்கு கிடைக்கும் நூற்களின் பட்டியல்களிலிருந்தும் என் தெரிவினை தொகுத்துக் கொள்கிறேன். இப்படி பல தரவுகளிலிருந்து தெரிவு செய்துதான் இதையெல்லாம் படிக்கலாம் என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது. வெளியாகும் நூற்களின் எண்ணிக்கையும், வகைகளும் அதிகரித்துக் கொண்டே போகின்ற போது குறைபாடுகள் இருப்பினும் இப்படிப் பட்ட ஒரு தெரிவினை செய்ய வேண்டியுள்ளது.

சில நூற்களில் ஒரிரு கட்டுரைகள் மட்டுமே எனக்குப் புரியும், அல்லது எனக்கு தேவையானதாக இருக்கும், உதாரணமாக 21ம் நூற்றாண்டில் பல துறைகளில் ஐன்ஸ்டினின் தாக்கம்/பொருத்தப்பாடு குறித்த நூலில் ஒரிரு கட்டுரைகளே எனக்குப் புரியும் அல்லது எனக்கு தேவையானதாக இருக்கும். சில நூல்களில் உடனடியாக ஒரிரு கட்டுரகளை மட்டும் படித்துவிட்டு பிறவற்றை பின்னர் படிக்க ஒதுக்கிவிடுவேன். அத்தகைய நூற்களையும் இந்தப் பட்டியலில் தந்துள்ளேன். சிலருக்கு அவை ஆர்வமுட்டக் கூடியதாக இருக்கும் என்பதால்.

Obsessive Book buying disorderக்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக, நூற்கள் வாங்குவதை கிட்டதட்ட நிறுத்திவிட்டேன் :) [இதைச் சொல்வதையும் நிறுத்தி விட வேண்டியதுதான் :)]காபி குடிக்க, பொம்மை வாங்கக்கூட புத்தக கடைகளுக்குள் போவதில்லை :).

நூலகங்கள், நண்பர்கள் மூலம் மற்றும் மதிப்புரைக்கு கிடைக்கும் நூற்களை படிக்க நேரமில்லாத போது நூற்களை வாங்கி குவிப்பதில் விருப்பமில்லை. மேலும் கட்டுரைகள், அறிக்கைகள் மற்றும் முதுநிலைப்பட்ட, முனைவர் பட்ட ஆய்வேடுகள் என பல்வேறு வகைகளில் கிடைப்பதை நேரம் இருப்பதில்லை. எனவே நூற்களையும், இவற்றையும் படிக்க முயலும் போது தேவை, பொருத்தப்பாடு உட்பட பலவற்றையும் கருத்தில் கொண்டே எதைப் படிப்பது என்று தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்தப் பட்டியல் பகுதிகளாக வெளியாகும். முதல் பகுதி இன்று. இதன் மூலம் பல நூல்களை வாசகர்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நீங்களும் இதைப் படிக்கலாம் என்று பரிந்துரைக்கும் நூல்களை பின்னூட்டத்தில் இடலாம்.

Labels: , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு