‘புத்தம் புதிய’ புத்தகமே – பட்டியல்-1

‘புத்தம் புதிய’ புத்தகமே – பட்டியல்-1

தொடர்புடைய இடுகை http://ravisrinivas.blogspot.com/2009/04/blog-post.html

இந்த புத்தகங்களில் எவற்றிற்கு முன்னுரிமை தருவேன் என்பதையும் குறிப்பிட்டே இந்த பட்டியலை தருகிறேன்.

1)Acting in an Uncertain World An Essay on Technical Democracy- Michel Callon, Pierre Lascoumes Yannick Barthe-translated by Graham Burchell – MIT Press-2009
Michel Callon Actor-Network-Theory என்ற கோட்பாட்டை உருவாக்கியவர்களுள் ஒருவர். இவர் அண்மையில் எழுதி வெளியான கட்டுரை படிக்கபடாமல் கிடப்பில் இருகிறது :(. முதலில் அதைப் படிக்க வேண்டும்.

2) Altering Nature Vol 2 Edited By B. Andrew Lustig Baruch A. Brody Gerald P. McKenny - Springer 2008
சில கட்டுரைகளை முதலில், பிற தேவையைப் பொருத்து.

3)Alternative Pathways in Science and Industry Activism, Innovation, and the Environment in an Era of Globalization -David J. Hess- MIT Press-2007
பின்னர். ஹெஸ் எழுதிய சில கட்டுரைகளை படித்திருக்கிறேன்.

4)Atmospheric Justice A Political Theory of Climate Change-Steve Vanderheiden- Oxford University Press-2008
விரைவில் படிக்க வேண்டும், முக்கியமான நூல்

5)Žižek Beyond Foucault-Fabio Vighi and Heiko Feldner- Palgrave 2008
படித்தேன் என்று பயங்காட்ட பயன்படும்  பின்னர்தான். வன்முறை குறித்து ஜைஸக் எழுதிய நூல் 2008ல் வெளியானது, அதை முதலில் படிக்கலாம் என நினைக்கிறேன். ஜைஸக் என்று துவங்கும் தமிழ்த் திரைப்பாடல் இருக்கிறதா, இல்லாவிட்டால் எழுதிவிட வேண்டியதுதான்.

6)Food for the Few Neoliberal Globalism and Biotechnology in Latin America Edited by Gerardo Otero- University of Texas Press -2008
முக்கியமானது, படிக்க வேண்டும்

7)The Regulatory Challenge of Biotechnology Human Genetics, Food and Patents- Edited by Han Somsen- Edward Elgar-2007
முக்கியமானது, சில கட்டுரைகள் முதலில்

8)BODIES, COMMODITIES, AND BIOTECHNOLOGIES-LESLEY A. SHARP- Columbia University Press -2007
சிறிய நூல், நேரம் கிடைப்பதை பொறுத்து,

9)Commerce in Culture: States and Markets in the World Film Trade- Andrew J. Flibbert-Palgrave-2007
உடனடியாக இல்லை, ஆனால் தேவையான நூல்.

10)On the Internet- HUBERT L. DREYFUS-Routledge-2009
முன்னுரிமை இல்லை என்ன எழுதியிருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது .

11)Courting Social Justice JUDICIAL ENFORCEMENT OF SOCIAL AND ECONOMIC RIGHTS IN THE DEVELOPING WORLD Edited by Varun Gauri ,Daniel M. Brinks – Cambridge University Press-2008
சில கட்டுரைகள் முதலில், பிற தேவையைப் பொருத்து

12)Critical Theorists and International Relations Edited by Jenny Edkins and Nick Vaughan-Williams-Routledge-2009
உடனடியாக முடியாது, பின்னர் நிதானமாக.

13)Cultural Heritage and Human Rights-Edited By Helaine Silverman, D. Fairchild Ruggles-Springer-2007
சில கட்டுரைகள் முதலில்.

14)ENDS IN SIGHT Marx/Fukuyama/Hobsbawm/Anderson-Gregory Elliott- Pluto Press-2008
முன்னுரிமை இல்லை. லியோதார்த்தையும், பூகுயாமாமாவையும் போட்டு குழப்பி அடிக்கும் தமிழவனுக்கு இதைப் பரிந்துரைக்கலாமா?.

15) Achieving Human Rights-Richard Falk- Routledge 2009
பால்க்கின் எழுத்துக்களுடன் பரிச்சயம் உண்டு. பின்னர்.

16)Genetic Democracy Philosophical Perspectives-Edited by VEIKKO LAUNIS ,JUHA RÄIKKÄ - Springer -2008
படிக்க வேண்டும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்

17)Insatiable Curiosity Innovation in a Fragile Future-Helga Nowotny -Translated by Mitch Cohen-MIT Press-2008
படித்தாகிவிட்டது

18)Metaphors of Globalization-Mirrors, Magicians and Mutinies Edited by Markus Kornprobst, Vincent Pouliot, Nisha Shah, Ruuben Zaiotti – Palgrave-2008
சில கட்டுரைகள் முதலில்

19)Global Science and National Sovereignty -Edited by Grégoire Mallard, Catherine Paradeise and Ashveen Peerbaye-Routledge-2009
ஒரிரு கட்டுரைகள் முதலில்.

20)Human Genes and Neoliberal Governance A Foucauldian Critique -Antoinette Rouvroy-Routledge-2008
பின்னர், இத்துடன் சேர்த்து படிக்க வேண்டிய நூல்களும் உண்டு.
நிதானமாக படிக்க வேண்டும். பூக்கோவிற்கு இப்போது முன்னுரிமை தர இயலாது . அடுத்தப் பிறவில் தமிழனாகப் பிறந்தால் பூக்கோ தாசன் என்ற புனை பெயரில் வெண்பா புனையலாம் :).

21)Reading Karl Polanyi for the Twenty-First Century Market Economy as a Political Project-Edited by Ays¸e Bug˘ra ,Kaan Ag˘artan- Palgrave-2007
இதில் படிக்க விரும்பிய இரண்டு கட்டுரைகளை படித்தாகிவிட்டது, பிற பின்னர், அவசரமில்லை

22)When Species Meet- Donna Haraway-University of Minnesota Press-2008
உடனடியாக இல்லை, பின்னர்.

23) Understanding Affirmative Action- J. Edward Kellough- Georgetown University Press- 2006
உடனடியாக படிப்பதாக இல்லை , ஆனால் கட்டாயம் படிக்க வேண்டும்.

24) The Oxford Book of MODERN SCIENCE WRITING- RICHARD DAWKINS-
Oxford University Press-2008- பலர் எழுதிய கட்டுரைகளிலிருந்து பகுதிகள். மெதுவாக பின்னர். 60+ வயதில் படித்துக் கொள்ளலாம் . பத்ரி, அருள் செல்வன், (கனடா) வெங்கட் –இதை படித்திருக்ககூடும்.

25) Rethinking Expertise HAR RY COL L INS, ROBERT EVANS- The University of Chicago Press 2007
உடனடியாக இல்லை, படிக்க வேண்டிய நூல். Expertise குறித்த வேறு சில நூல்களுடன் சேர்த்து படிக்க வேண்டும்.

26)Theories of the Information Society-Third edition-Frank Webster- Routledge , 2007
முந்தைய பதிப்புகளைப் படித்திருப்பதால் உடனே படிக்க தேவையில்லை. வெப்ஸ்டர், கெவின் கெல்லி இருவரும் எழுதியவற்றை ஒரு காலத்தில் ஒரு சேரப் படித்தேன். கணினிமயமாக்கம், தொழில்நுட்பம், கல்விம் தகவல் சமூகம் குறித்த புரிதலுக்கு உதவின.

27) Trouble with Strangers : A Study of Ethics- Terry Eagleton- Wiley-Blackwell-2009
முன்னுரிமை இல்லை.அவரது Meaning of Life என்ற சிறிய அறிமுக நூலை அண்மையில் படித்தேன். ஈகிள்டன் மார்க்சிய இலக்கிய விமர்சக வட்டாரங்களில் பெரிதும் மதிக்கப்படுபவர். 11 வருடங்களில் 8 புத்தகங்கள் என்று எழுதிக் குவிப்பவர்.

28)The Slow Food Story-Geoff Andrews-Pluto Press – 2008
Slow Food கோட்பாடு/இயக்கம் பற்றியது. உடனே படிக்கமுடியாது.
பின்னர். ஸ்லோ புட் பற்றி என்பதற்காக ஸ்லோவாக படிக்க வேண்டியதில்லை :)

29) Representing India Ethnic Diversity and the Governance of Public Institutions-Niraja Gopal Jayal- Palgrave-2006
UNRISDக்காக செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். அவசரமில்லை என்றாலும் ஆண்டிறுதிக்குள் படிக்க வேண்டும்.

30) The Clash Within: Democracy, Religious violence, and India’s future-Martha C. Nussbaum-The Belknap Press of Harvard University Press-2007
வழக்கமான செக்யுலர் பிரச்சாரமாக இருக்குமோ என்ற ஐயம் இருக்கிறது . செக்யுலர், இடதுசாரி,லிபரல்கள் என பலதரப்பாரும் சேர்ந்து இந்த்துவ எதிர்ப்பினை ஒரு academic cottage industry ஆக மாற்றிவிட்டார்கள். எனக்கு இவர்களைக் காட்டிலும் இந்திய மக்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் படித்துப் பார்க்க வேண்டும். விரைவாகப் படித்து விடலாம் என்று நினைக்கிறேன். மார்த்தாவின் இன்னொரு நூலும் (Frontiers of Justice : DISABILITY, NATIONALITY, SPECIES MEMBERSHIP) பட்டியலில் இடம் பெறும். அதை முன்னுரிமை கொடுத்து படிப்பதாக இல்லை.

31)Biotechnologies and International Human Rights (Ed) F. Francioni- Hart Publishing-
2007
இன்னும் படிக்கவில்லை. கையில் இருக்கிறது. முதலில் இதை படிக்க வேண்டும். புத்தகத்திலிருந்து ஒரு கை என் தலையில் குட்டுகிறது :)

32) Torture and the Ticking Bomb- Bob Brecher- Blackwell- 2007
சித்திரவதை சரியா, எத்தகைய தருணங்களில் அதை ஆதரிக்க
முடியும், இல்லை அதை முற்றாக நிராகரிக்க வேண்டுமா என்ற விவாதத்தின் ஒரு பகுதியாக இந்த நூலைப் பார்க்கமுடியும். விசாரணையின் போது சித்திரவதை செய்வதை சட்டபூர்வமாக்கலாம் என்று Alan Dershowitz என்ற புகழ் பெற்ற வழக்கறிஞர், பேராசிரியர் எழுதியதற்கான எதிர்வினை இந்த நூல்.

இன்னும் வரும்

Labels: , , ,

2 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

இதெல்லாம் நிசமாவே வந்திருக்கா? அல்லது 'புனைவு' என்று லேபிள் இடவேண்டியதா... தல... சுத்துது!

4:34 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

boston bala, wait for more lists. these books have been published.have a look through books.google.com as some of them may be available there. you can get almost all of them thro amazon.
some of them may be available in your local library.

1:49 PM  

Post a Comment

<< முகப்பு