அஞ்சலிக் குறிப்பு: ஸ்மிது கோத்தாரி

அஞ்சலிக் குறிப்பு: ஸ்மிது கோத்தாரி

ஸ்மிது கோத்தாரி, தன்னுடைய 59வது வயதில் இன்று காலை தில்லியில் மாரடைப்பினால் காலமானார். பேராசிரியர் ரஜ்னி கோத்தாரியின் மகன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள், பழங்குடியினர் இயக்கங்கள், உலக வங்கிக்கு எதிரான இயக்கங்கள் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்த ஸ்மிது அணு ஆயுத எதிர்ப்பில் ஈடுப்பட்டிருந்தார். நர்மதைப் பாதுக்காப்பு இயக்கத்தின் (NBA) தீவிர ஆதரவாளராக இருந்தார். சர்வதேச அளவில் நர்மதை
நதிப் பள்ளதாக்கு திட்டங்களுக்கு வலுவான எதிர்ப்பு உருவாக அவர் பாடுபட்டார். உலகெங்கும் உள்ள பல இயக்கங்களுடன், குறிப்பாக பெரும் அணைக்கட்டுகளை எதிர்க்கும் இயக்கங்கள், உலக வங்கியினை எதிர்க்கும் இயக்கங்கள் அவருக்கு நெருங்கிய தொடர்பிருந்தது.

1980களில் லோகாயன் என்ற அமைப்பினை ஸ்மிது ஒருங்கிணைத்தார். லோகாயன் 1980களில் மாற்றுக் குரல்களுக்கும், இயக்கங்களுக்கும் ஆதரவு அளித்தது. அது சோசலிஸ்ட்கள், இடதுசாரிகள், காந்தியவாதிகள், மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினரும் உரையாட களங்கள் அமைத்தது. பல ஆய்வுகளை நடத்தியது/நடத்த உதவியது. அது துடிப்புடன் செயல் பட்ட காலத்தில் ஸ்மிது அகில இந்திய அளவில் அதன் செயல்பாட்டை விரிவாக்கினார். தமிழ் நாட்டில் எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி உட்பட பலர் லோகயனுடன் சேர்ந்து பணியாற்றினர். லோகாயன் புல்லட்டின் மூலம் பல விவாதங்களுக்கும் வழிவகுக்கப்பட்டது. பின்னர் லோகாயன் செயல்பாட்டில் தேக்கம் ஏற்பட்டது. ஸ்மிது தொடர்ந்து தீவிரமாக இயங்கினார். லோகயான் ஏற்படுத்தியிருந்த வலைப்பின்னல் வலுக் குன்றிய போதும், 1990களில் பல புதிய இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றினார். பல நூல்களை பதிப்பிருக்கிறார். பிரிண்டன், கார்னல் பல்கலைகழகங்களில் வருகைப் பேராசிரியராக இருந்தார்.

அகமாதபாத்தில் உள்ள National Institute of Designல் படித்த அவர் நினைத்திருந்தால் கற்ற தொழிற்கல்வியைக் கொண்டு ஏராளமாக பணம் ஈட்டியிருக்க முடியும், வெளிநாட்டில் குடியேறியிருக்க முடியும். அவரது கவனம் வளர்ச்சி திட்டங்களால் பாதிக்கப்படுவோர்பால் இருந்தது. உலக வங்கி குறித்த பொது விசாரணை உட்பட பலவற்றில் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.

நான் அவரை நன்கு அறிவேன்.தில்லியில் லோகாயன் அலுவலகத்தில் சந்த்திருக்கிறேன். தில்லிச் செல்லும் போது அவர் ஊரில் இருந்தால் கட்டாயம் சந்திப்போம். இடையில் சில ஆண்டுகள் கழித்து 2002ல் அமெரிக்காவில் சந்தித்தோம். எங்களுக்குள் பொதுவான அக்கறைகள் இருந்தன. பொதுவான நண்பர்கள் இருந்தனர். ஸ்மிது Inter-Cultural Resources என்ற அமைப்பினை நிறுவினார். சுற்றுச்சூழல், மனித உரிமைகள், மாற்று வளர்ச்சிப் பாதைகள் போன்றவற்றில் அக்கறையுடன் செயல்படும் அமைப்பு அது.

இந்த ஆண்டு நான் அவரை சந்திக்க எண்ணியிருந்தேன். அவரை தொடர்பு கொண்டு எப்போது எங்கு சந்திக்க முடியும் என்பதை கேட்க நினைத்தேன். எப்படியோ அது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. நான் தொடர்பு கொண்ட போதெல்லாம் அவர் பயணங்களில் இருந்தார். இறுதியில் சந்திக்க முடியாமலே போய்விட்டது. அந்த வருத்தம் இனி எப்போதும் இருக்கும்.

Labels: ,

பாலிவுட்-கோலிவுட்: இரண்டு நூல்கள்

பாலிவுட்-கோலிவுட்: இரண்டு நூல்கள்

Global Bollywood: Travels of Hindi Song and Dance (Eds) Sangita Gopal, Sujata Moorti - University Minnesota Press 2008

சுஜாதா மூர்த்தியின் சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். இந்த நூலை இன்னும் படிக்கவில்லை.பாலிவுட் நடனக்காட்சிகள் குறித்த ஒரு ஆய்வேட்டினை தரவிறக்கி வைத்திருக்கிறேன், படிக்கவில்லை. இப்படி படிக்காதவைகளின் பட்டியல் அரசியல் கட்சிகள் நிறைவேற்றாத வாக்குறுதிகள் போல் நீண்டு கொண்டே போகிறது :).

Tamil Cinema: The cultural politics of India’s other film industry
Edited by Selvaraj Velayutham- Routledge 2009

உள்ளடக்கம்

Introduction: the cultural history and politics of South
Indian Tamil cinema 1
SELVARAJ VELAYUTHAM

1 A good woman, a very good woman: Tamil cinema’s women 16
C. S. LAKSHMI

2 The Tamil film heroine: from a passive subject to a pleasurable object 29
SATHIAVATHI CHINNIAH

3 Bringing the Amman into presence in Tamil cinema: cinema spectatorship as sensuous apprehension 44
KALPANA RAM

4 Politics and the film in Tamil Nadu: the stars and the DMK 59
ROBERT L. HARDGRAVE, JR.

5 The nurturing hero: changing images of MGR 77
SARA DICKEY

6 Tamil cinema in the public sphere: the evolving art of banner advertisements in Chennai 95
PREMINDA JACOB

7 Encountering a new art: writers’ response to cinema in Tamil Nadu 111
S. THEODORE BASKARAN

8 Cinema in the countryside: popular Tamil film and the remaking of rural life 124
ANAND PANDIAN

9 Imaginary geographies: the makings of ‘South’ in contemporary Tamil cinema
RAJAN KRISHNAN 139
(ராஜன் கிருஷ்ணன் , ராஜன்குறையின் அதிகாரபூர்வ/அசல் பெயர்.)

10 Encounters with ‘India’: (ethno)-nationalism in Tamil cinema
VIJAY DEVADAS AND SELVARAJ VELAYUTHAM 154

11 The diaspora and the global circulation of Tamil cinema 172
SELVARAJ VELAYUTHAM

தமிழ் சினிமா குறித்த இந்த நூலையும் இன்னும் படிக்கவில்லை.

Labels: , , , , ,

வழக்கறிஞர்கள், காவலர்கள் மோதல்: உண்மை என்ன?

வழக்கறிஞர்கள், காவல்துறை மோதல்: உண்மை என்ன?

1) உச்சநீதி மன்றம் நியமித்த ஒரு நபர் கமிட்டி,உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை
2) வழக்கறிஞர் சத்தியசந்திரனின் கட்டுரை

3) வழக்கறிஞர் வி. கிருஷ்ண அனந்த்தின் கட்டுரை

4) உண்மை அறியும் குழுவின் அறிக்கை

உண்மை அறியும் குழுவின் பொய்கள் என்று கட்டுரை எழுதலாம் என்று தோன்றுகிறது. உண்மையை இந்த அறிக்கை கட்டமைக்கிறது. ஒருவேளை அதுதான் பின் நவீனத்துவ உண்மையோ? சத்தியசந்திரன் கட்டுரையும்,கிருஷ்ண அனந்த்தின் கட்டுரையும் வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் குறித்து சில நியாயமான கேள்விகளை முன் வைக்கின்றன. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை காவல்துறையின் வன்முறையை வண்மையாக கண்டிக்கிற அதே வேளையில் வழக்கறிஞர்களின் செயல்களையும் கண்டிக்கிறது. அது சுப்பிரமண்யம் சுவாமி மீதான முட்டை விச்சிற்கு முன் நடந்தவற்றையும்
குறிப்பிடுகிறது. கிருஷ்ண அனந்த்தின் கட்டுரையும் ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தன் அறிக்கையில்

“My view, albeit prima facie, is that the soft-pedaling policy followed by the Madras High Court Judges has led to the present piquant situation. The lawyers appear to have been encouraged by the wrong 'signals sent out and seemed to think that they could do anything and get away within the Court premises. Regretfully, far from being the upholders of the rule of law, the lawyers seem to have behaved as hooligans and miscreants. The incidents that transpired over a last month o.r so make it clear that the lawyers seemed to be under the impression that, because they are officers of the Court, they are immune from the process of law and that they could get away with any unlawful act without being answerable to the law enforcing agency. It is most unfortunate that the soft policy adopted by the Acting Chief Justice of Madras High Court and its administration sent out clearly a wrong message that encouraged and emboldened the lawyers into becoming law breakers. Undoubtedly, the political crosscurrents, from the Sri Lankan Tamil issues and caste based issues, contributed to and aggravated the situation. It should have been made clear to the lawyers from the beginning, in no uncertain terms, that whatever their political ideologies, the Court premises could not be utilized for airing them. ”

என்று குறிப்பிடுகிறார். இந்த அறிக்கை தமிழில் வெளிவந்தால் நல்லது.

Labels: , , , ,

கண்ணாடி மனசிலே - திரை விமர்சனம்

கண்ணாடி மனசிலே - திரை விமர்சனம்

முழுக்கதையும் தரப்படவில்லை, spoilers இல்லை, ஆகவே பயப்படாமல் படிக்கலாம் :)

இத்திரைப்படம் ஊடக, வலைப்பதிவர்/வாசகர் கவனத்தினை பெறமால் போய்விடக் கூடுமென்பதால் இதை எழுதுகிறேன். பனியன் கக்கத்தில்தானே கிழிந்திருக்கிறது, வீட்டிற்குள்ளிருக்கும் போது கிழிந்த பனியன் போதும் என்று நினைக்கும் தந்தை, இன்னும்
முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் தாய் கொண்ட ஒரு சிறு குடும்பத்தினை மையமாகக் கொணட திரைப்படம். இதில் கண்ணீர் இருக்கிறது அது வயிற்றெரிச்சலாக மாறுவதில்லை, கோபம் இருக்கிறது, அது சாபமாக உருமாற்றம் பெறுவதில்லை, நகைச்சுவை
இருக்கிறது, அது காமெடி என்ற பெயரில் ஒட்டாமல் இருக்கவில்லை.

அஸ்வினி இளம் பெண், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சாதாரணப் பெண். பேஷியலை பார்த்திராத முகமும், திருத்தம் செய்யப்படாத புருவம்,அதிகபட்ச மேக்கப்பாக பவுடர் பூசி
கொள்ளும்,வேலைக்குப் போகும் பெண்.பீட்சா கலாச்சாரத்தில் ஒட்டாமல், அலுவலக பார்ட்டிக்குப் பின் வீட்டிற்கு வந்து தயிர்சாதமும் ஊறுகாயும் சாப்பிடும் மிடில் கிளாஸ் மீனா.கடன் அட்டை இருந்தும் மால்களில் ஜன்னல் ஷாப்பிங் செய்துவிட்டு அம்மாவுடன் சென்று பேரம் பேசி ரங்கநாதன் தெருவில் துணி வாங்கும் பெண் .இரண்டு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் வாங்க நகைகளை அடகு வைக்கும் குடும்பத்தின் ஒரே பெண். அவளுக்கு ஒரு தம்பி.இன்னொரு மிடில்கிளாஸ் மாதவன்.எம்.எஸ் படித்துவிட்டு அமெரிக்காவிற்கு செல்ல ஆசை இருந்தாலும்,குடும்பத்தை விட்டு இன்னொரு நாடு செல்லத்தான் வேண்டுமா என்று யோசிப்பவன்.

அவள் ஒருவன் மனதை அவளுக்குத் தெரியாமலே ஆக்கிரமிக்கிறாள். அவள் மனதில் அவன் இல்லை, ஏன் காதலன் என்று யாருமே அவள் மனதில் இல்லை.அவன் மனதில் அவள் இருப்பதை அவள் அறிய நேரும் போது அவளால் அதை நம்ப முடியவில்லை,புரிந்து கொள்ளவும் முடியவில்லை,இனம் புரியாத உணர்வுகளுடன் போராடுகிறாள்.யார் அவன்,அந்த ஒருதலைக் காதல் குடும்பத்தில் ஏற்படுத்தும் குழப்பம், மாற்றம் இதுதான் கதையின் கரு.இதை சுவாரசியமாக ஒரு நடுத்தரக் குடும்ப சூழலில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். குடும்பத்துடன் அஸ்வினி ஒரு கல்யாண வரவேற்பிற்கு செல்ல தயாராகுவதுடன் தொடங்கும் படம், அஸ்வினியின் திருமண நிச்சயதார்த்ததுடன் முடிகிறது, மீனம்பாக்கத்தில் ஒரு விமானம் கிளம்புவதாக கடைசி காட்சி இருக்கிறது.

படத்தில் நான்கு பாடல்கள், கதையுடன் பொருந்துகின்றன. மிகையான நடிப்போ, நம்ப முடியாத திருப்பங்களோ இல்லை. ஒரு குறுநாவலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையில் வில்லன்கள் என்று யாரும் இல்லை. ஒருபுறம் பாரம்பரிய உறவுகள், பாரம்பரிய மதிப்பீடுகள், இன்னொருபுறம் விரும்பி வரும் புதிய உறவுகள்,எதிர்பார்த்திராத வாய்ப்புகள் - இவற்றை ஒரு குடும்பம் எதிர்கொள்வதை இயக்குனர் நம்பத்தகுந்தவகையில் படமாக்கியிருக்கிறார்.தியாகம் என்ற பெயரில் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கத்தேவையில்லை என்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.நீதி போதனை என்றும் எதுவும் துருத்திக் கொண்டு இல்லை யாரும் தத்துவ முத்துக்களை உதிர்ப்பதில்லை.முக்கியப் பாத்திரங்களில் மூன்று புது முகங்கள் நடித்துள்ளனர்.

இது உலகத் தரமா இல்லையா என்று எனக்குத் தெரியாது. பார்கலாமா என்று கேட்டால் பார்க்கலாம் என்று பரிந்துரைப்பேன்.

Labels: ,