சோம்ஸ்கியும், இலங்கை பிரச்சினையும்

நோம் சோம்ஸ்கியும், இலங்கை பிரச்சினையும்

நோம் சோம்ஸ்கி இலங்கை இதழான லங்கா கார்டியனுக்கு அளித்த செவ்வி இது. சோம்ஸ்கியின் புரிதலும், அணுகுமுறையும் ஏமாற்றம் தருகிறது. கேள்வி கேட்டிருப்பவர் சாமர்த்தியமாக ஒரு தரப்புவாதங்களை கேள்விகள் மூலம் முன் வைக்கிறார்.சோம்ஸ்கி இதை
முழுதும் புரிந்து கொள்ளவில்லை என்று பேட்டியில் தெளிவாகிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான தண்டனை, விசாரணை என்றால் அதை முதலில் பேரினவாத வன்முறையாளர்களிடமிருந்துதான் துவங்க வேண்டும். புலிகளை மனித உரிமைகளை மீறுபவர்கள், தற்கொலைதாரிகள் என்று முத்திரை குத்திவிட்டு அரசு ஏதோ சாத்வீகமாக, அமைதி வழியில்தான் நடந்து கொண்டது, நடந்து கொள்கிறது என்று பாவ்லா காட்டுவது மோசடி வேலை. போர் எப்படி தீர்வாக முடியும்? என்று கேள்வி கேட்டவரை சோம்ஸ்கி பதில் கேள்விகள் கேட்டிருக்கலாம் அல்லது அவர் கேள்விகளில் தெரியும் ஒருதலைபட்சமான போக்கினையும், அதனடியில் உள்ளவற்றையும் தன் பதிலில் கண்டிருத்திருக்கலாம்.
தொலைபேசிய செவ்வி என்பதால் அதை தவிர்த்து விட்டாரா இல்லை கேள்விகளுக்கு மட்டும் தனக்கு தெரிந்ததை வைத்துக் கொண்டு பதில் சொன்னால் போதும் என்று விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை. முன்பு சில சமயங்களில் சோம்ஸ்கிக்கு மின்னஞ்சல்கள் எழுதியிருக்கிறேன், அவரும் பதில்களை அனுப்பியிருந்தார். இம்முறை ஒரு மின்னஞ்சல் மூலம் ஐயா மதிப்பிற்குரிய பேராசிரியரே, உங்கள் பேட்டி ஏமாற்றமளிக்கிறது என்றும், என்னுடைய பார்வையில் அவருடைய புரிதலில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பதையும் சுருக்கமாக தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன். உடனே முடியாவிட்டாலும் விரைவில் மின்னஞ்சலை எழுதி அனுப்ப முடியும்.

இன்று உலக ஊடகங்களில் இலங்கையில் நடப்பது குறித்து வரும் செய்திகளைக் கூட இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் காண முடிவதில்லை. பிபிசி தரும் செய்திகளைக் கூட இவற்றில் பார்க்க முடிவதில்லை. ஹிந்து, பிரண்ட்லைன் பற்றி சொல்லவே வேண்டாம் :(. EPWவிலும் ஒரிரு கட்டுரைகள், தலையங்கங்களைத்தான் பார்க்க முடிகிறது. அண்மையில் வெளியான எஸ்.வி.ராஜதுரையின்
கடிதம் சிலவற்றை சொல்லுகிறது. அது யாருக்கு எதைச் சொல்கிறதோ இல்லையோ, EPW ஆசிரியர் குழுவினருக்கும் சிலவற்றை சொல்வதாகவே நான் அதைப் புரிந்து கொள்கிறேன். பொதுவாகப் பார்த்தால் இடதுசாரி, முற்போக்கு இணையதளங்களில் இலங்கைப் பிரச்சினை அதிகம் பேசப்படுவதில்லை. காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக எழுப்பபடும் கண்டனங்கள் பெறும் முக்கியத்துவம் இதற்கு தரப்படுவதில்லை. இதற்கான
காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தில்லியில் மாநாடு நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.இதில் சிபிஐ,சிபிஎம் கட்சிகள், அவற்றின் ஆதரவாளர்கள் பங்கேற்கின்றனர். இலங்கைப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவாகவோ அல்லது போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

Labels: , , ,

2 மறுமொழிகள்:

Anonymous பா. ரெங்கதுரை மொழிந்தது...

//இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தில்லியில் மாநாடு நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.இதில் சிபிஐ,சிபிஎம் கட்சிகள், அவற்றின் ஆதரவாளர்கள் பங்கேற்கின்றனர். இலங்கைப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவாகவோ அல்லது போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
//

இலங்கைத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்றால் இந்திய மற்றும் உலக அளவில் பல இடதுசாரிகள் அவர்களை ஆதரிக்கக்கூடும். குறைந்தபட்சம், கனடாவிலும், பிற மேலை நாடுகளிலும் வசிக்கும் ஈழ ஆதரவாளர்களாவது இஸ்லாத்தைத் தழுவி இலங்கைத் தமிழர்களுக்கு இடதுசாரிகளிடம் ஆதரவு திரட்டலாம். சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் தமிழீழப் பகுதிகளின் மறுகட்டுமானப் பணிக்காக பில்லியன் கணக்கில் பணம் கொடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

இத்தகைய ஒரு வழிமுறையை எஸ்.வி.ராஜதுரை போன்ற அறிவுசீவிகள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்பலாம்.

1:11 PM  
Anonymous Response2Chomsky மொழிந்தது...

http://nagarjunan.blogspot.com/2009/02/response-to-noam-chomskys-comments-on.html

12:41 PM  

Post a Comment

<< முகப்பு