'மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும்!' - பெரியார்

'மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும்! - பெரியார்

[1954ல், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் முன்னர், தன் பிறந்த நாளில் பெரியார் விட்ட அறிக்கை இது. பெரியாரின் லட்சிய தமிழ்நாட்டில் பார்பனர்களுக்கு இடமில்லை, அவர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே அவரது குறிக்கோள் என்பது இதில் வெளிப்படையாக இருக்கிறது. அது மட்டுமின்றி மலையாளிகள், கன்னடர், ஆந்திரர், மதச்சிறுபான்மையோஎ குறித்து பெரியார் கொண்டிருந்த கருத்துக்களும் (உ-ம் சில கொள்ளைக் கூட்டங்கள் ) வெளிப்படுகின்றன. பெரியார் 1960களில் காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்து வந்த போது, மதச்சிறுபான்மையினர் சிலர் ராஜாஜிக்கு ஆதரவு தந்தனர். அப்போதும் பெரியார் இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அ.மார்க்ஸ் அதற்கு(ம்) ‘நியாயம்' கற்பித்து எழுதியிருக்கிறார். பெரியாரின் அறிக்கையில் காணப்படும் வெறுப்பை தாக்கரேக்கள் மராட்டியர் அல்லாதோர் மீது காட்டும் வெறுப்பு, சிங்களப் பேரினவாதிகள் தமிழர்கள் மீது காட்டும் வெறுப்புடன் ஒப்பிடலாம். ஒருவகையில் பெரியாரை பால் தாக்கரேயின் கருத்தியல் முன்னோடியாகக் காணலாம். இன்று பெரியாரியவாதிகள், இயக்கங்கள் மற்றும் தமிழ்தேசியர்களும் கிட்டதட்ட இதே கண்ணோட்டத்தினை கொண்டிருப்பது தற்செயலானது அல்ல. மாறாக அது பெரியாரிய ‘பகுத்தறிவு' கருத்தியிலின் ஒரு பகுதிதான். இதைத்தான் நான் இந்த இடுகையில் சுட்டிக் காட்டினேன்.]

------------------------------------------------------------------------------------
பெரியார் விடுத்த பிறந்தநாள் அறிக்கை

என்னுடைய 76-வது பிறந்தநாளாகிய இன்று ஒரு அறிக்கை விடவேண்டும் என்று என் தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதை அனுசரித்து இன்றைக்கு முக்கியமான பிரச்சனை என்றும், இனி நாம் அதிகமாக கவலை செலுத்த வேண்டிய பிரச்சனை என்றும் கருதுகிற ஒரு விசயத்தைப்பற்றி பொதுமக்களுக்கு எனது வேண்டுகோளாக தெரிவிக்கலாம் என்று கருதுகிறேன்.

தோழர்களே! தமிழ் நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங்கொள்ளை அடிப்பதோடு தமிழ்நாட்டை பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும் தலையெடுக்க ஒட்டாமல் மட்டந்தட்டிக்கொண்டு வருகிறது. இந்த ஒரு முக்கியமான காரியத்துக்காகவே வடநாட்டான் அரசியலிலும், தமிழ்நாட்டை தனக்கு அடிமைப்படுத்தி தனது காலடியில் வைத்திருக்கிறான். இதற்கு அனுகூலமாக இந்நாட்டு பார்ப்பனர்கள் தங்களுக்கு இனி இந்நாட்டில் ஆதிக்கம்பெறவோ, இதுவரையிலும் வாழ்ந்தது போன்ற ஆதிக்க வாழ்வு வாழ முடியாது என்று கருதி வடநாட்டானுக்கு அவனது அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கு தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு உடந்தையாகவும், உள் ஆளாகவும் இருந்து வருகிறார்கள்.


இந்த காரணங்களுக்காகவே வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டை விலக்கி சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்க வேண்டும் என்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்து பிழைக்கும் சமுதாயமாகிய பார்ப்பனச் சமுதாயத்தை தமிழ்நாட்டிலிருந்தே வெளியாக்கிவிட வேண்டுமென்றும நான் உறுதியாகக்கருதி என்னாலான முயற்சிகளை திராவிடர்கழகத்தின் மூலம் தொண்டாற்றி வருகிறேன். இது ஒருபுறமிருக்க இந்த சந்தர்பத்தையும், நடப்புக்களையும் ஆதரவாகக் கொண்டு உள்நாட்டிலேயே சில கொள்ளைக்கூட்டங்கள் தோன்றி வசதிபட்ட அளவுக்குக்கூட தமிழனை தலையெடுக்கவொட்டாமல் செய்து வருகின்றன. இங்கு சற்று விவரமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த நாட்டு அரசியலில் வெள்ளையன் இருந்த காலம் முதற்கொண்டே பார்ப்பனர்கள் ஏகபோகம் ஆதிக்கம் பெற்று தமிழர்களுக்கு சிறிதும் நல்வாய்பில்லாமல் தமிழர்கள் அழுத்தப்பட்டு வந்திருப்பதைக் கண்டிக்கும் முறையில் இந்நாட்டு தமிழ் மக்களால் நான் அறிய 1890-ஆம் ஆண்டிலிருந்தே பெருங்கிளர்ச்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது.

உதாரணமாக 1892-லும், 1893-லும் சென்னை மாகானத்தில் கவர்னராயிருந்த லார்டு வென்லக் துரை அவர்களுக்கு இந்நாட்டு தமிழ் (திராவிட) பெருங்குடி மக்களின் பெயரால் கவர்னருக்கு பகிரங்கக்கடிதம் என்பதாக குறிப்பிட்டு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளின் நகல் என் கைவசம் இருக்கின்றன. அக்கடிதங்களில் சமுதாயத்துறையிலும், அரசியல் துறையிலும் பார்ப்பனர் ஆதிக்கத்தையும், கொடுமையையும் ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. மற்றும் அக்கடிதத்தில் அவற்றை அனுசரித்து மெயில் முதலிய பத்திரிக்கைகளின் கருத்துக்களையும் டாக்டர் மில்லர் போன்ற பெரியோர்களின் கருத்துக்களையும் எடுத்துப் போட்டு காட்டப்பட்டிருக்கின்றன.

இதை எதற்காக குறிப்பிட்டேன் என்றால் பார்ப்பன ஆதிக்கமும், கொடுமையும் பற்றி சொல்வது ஜஸ்டிஸ்கட்சி ஏற்பட்ட பிறகோ, அல்லது சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகோ அல்லவென்றும், 1890-லேயே நம்மவர்கள் உணர்ந்து முறையிட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்தக்காட்டுவதற்காகவே. நிற்க, இத்தொல்லைகள் அல்லாமல் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலே மற்றொரு தொல்லை வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது. அது என்னவென்றால் உத்தியோகத்துறையில் - தமிழன்- பார்ப்பனரல்லாதான- என்கிற பெயரால் தனக்குறிய பங்கை வலியுறுத்த ஆரம்பித்த பிறகு பார்ப்பனர் அதை எதிர்த்து ஒடுக்கும் வகையில் தங்களால் ஆனவற்றையெல்லாம் செய்து ஒடுக்கிபின் மீதி- அதாவது பார்ப்பனரல்லாதவருக்கு ஏதாவது சலுகைகாட்டி பதவி கொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலைமை நிர்பந்தம் ஏற்பட்ட சந்தர்பத்தில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக்கொண்டு சில பதவிகளை வெள்ளையனுக்கு கொடுப்பதும், அவனுக்கு கொடுப்பது மக்களுக்கு இஷ்டமில்லை என்றால் வெளி மாகாணக்காரர்களுக்கு கொடுப்பதும், அவர்களுக்கு கொடுப்பதும் சாத்தியப்படாத சந்தர்பங்களில் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஆகியவர்களுக்கு கொடுப்பதும், அது சாத்தியப்படாத சந்தர்ப்பங்களில் ஆந்திரர், மலையாளி, கருநாடகர் ஆகியவர்களுக்கு கொடுப்பதுமாய் சூழ்ச்சி செய்து தமிழர்களுக்கு எவ்வளவு கொடுமையும், குறைபாடும் செய்யவேண்டுமோ அந்த அளவுக்கு செய்து வந்தார்கள்.

வெள்ளையன் அரசாங்கமும் இவர்களுக்கு ஆதரவு கொடுத்தே வந்திருக்கிறது. இப்போது வெள்ளையன் ஆட்சி ஒழிந்துவிட்டது. இந்தியன் ஆட்சி என்று ஏற்பட்டுவிட்டது. அதோடு நாடும் பல விதத்திலும் வடநாடு- தென்னாடு என்று பிரிந்துவிட்டது. அது மாத்திரம் அல்லாமல் மொழிவாநாடு என்னும் பேரால் ஆந்திர நாடும் தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்துவிட்டது. இதனால் ஆந்திரர்கள் தொல்லை அரசியலிலும், உத்தியோகங்களிலும் ஒரு அளவிற்கு ஒழிந்து விட்டது என்றாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், கர்நாடகர்கள் என்பவர்களது தொல்லை அரசியல் ஆதிக்கத்திலும் உத்தியோகத்திலும் ஒழிந்தபாடில்லை.

இதை ஏன் சொல்கிறேனென்றால், தமிழ்நாடு மொத்த ஜனசங்கையில் பார்ப்பனர் 100- க்கு இரண்டேமுக்காலும், கிறிஸ்தவர் 100 - க்கு 4-ம், முஸ்லிம்கள் சுமார் 100 - க்கு 5-ம், மலையாளிகள் சுமார் 100- க்கு 8-ம், கர்நாடகர்கள் 100 - க்குக் 5-ம் (இவைகள் உத்தேசமான புள்ளிகள்) இவ்வளவு பேரும் சேர்ந்து, ஜனசங்கியையில் தமிழ்நாட்டார் -தமிழர் அல்லாதவர்கள்,100 -க்கு 25-பேர்களுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தாலும் இந்த கூட்டத்தினர் ஒவ்வொருவரும் நீதி நிர்வாக தலைமை உத்தியோகங்களில் சுமார் 100 - க்கு 60 - பேர்களாகவும், முக்கியமான உயர்ந்த உத்தியோகங்களில் 100 - க்கு 75-பேர்களாகவும் இருக்கிறார்கள்.

இதை ஏன் பிரித்துக் குறிப்பிட்டுக்காட்டுகிறேன் என்றால் தமிழ்நாட்டிலே தமிழர்களைத் தவிர, அதாவது மேற்படி கூட்டத்தினர் தவிர்த்த தமிழர்களைப் பற்றியாவது, தமிழர்களின் பழக்கவழக்க, கலாச்சார குறைபாடுகளைப் பற்றியாவது, சமுதாயத்துறையில் அவர்களுக்குள்ள இழிவைப் பற்றியாவது, அரசியல், கல்வி, பொருளாதாரத் துறையிலாவது, மேலேகாட்டிய இந்தக்கூட்டத்தாருக்கு சிறிதும் கவலையில்லை என்பதோடு, பெரிதும் மாறுபட்டவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.தமிழர்கள் சமுதாயத் துறையில் கீழான சாதியராக - சூத்திரர்களாக இருப்பதைப்பற்றி இவர்கள் யாருக்கும் கவலையில்லை. எப்படியாவது தங்களுக்கு தங்கள் விகிதத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையளவு பதவிகள் கிடைப்பதனால் தமிழன் கதி எக்கேடு கெட்டாலும் இவர்கள் இலட்சியம் செய்பவர்கள் அல்லர்.

அவரவர்கள் தங்கள் தங்கள் சமூகத்துக்கு எப்படி நடந்து பயன்பெறுவது என்பதையே பெரும்பாலும் இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். அப்படியே இருந்தும் வந்திருக்கிறார்கள். அதனால்தான் எந்த விதத்திலும் தங்களைவிட தனிப்பட்ட யோக்கிதை இவர்களுக்கு இல்லாமலிருந்தும் தமிழர்களைவிட இவர்கள் 3 - பங்கு ஆதிக்கத்தில் பதவியில் இருந்துவருகிறார்கள். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும், ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாகவந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் - அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஒரு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

சென்னை அரசாங்க நிர்வாகத்தின் தலைமைப் பீடாதிபதியான, சீப்செக்ரட்டரி: திரு.ராமுண்ணிமேனன், சீப் எஞ்சினியர்: திரு. கே. நம்பியார், சூப்பரின்டெண்டிங் எஞ்சினியர்கள்: 1. திரு.நாயக், 2. திரு.காமத், வைத்திய இலாக்கா: எழும்பூர் பிள்ளைப்பேறு ஆஸ்பத்தரி சூப்பரின்டெண்ட்டு: திரு. ஆர்.கே.கே.தம்பான: அசிஸ்டெண்ட் சூப்பிரின்டெண்ட்: திரு. கிருஷ்ண மேனன்: ஸ்டான்லி ஆஸ்பத்திரி சூப்பரின்டெண்ட், திரு.கே.என்.பிஷரொட்டி: பெண்கள் ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி, சூப்பரின் டெண்ட்: திருமதி. பாருகுட்டிராமன்.கல்வி இலாக்கா:- பிரஸிடென்சி கல்லூரிபிரின்ஸ்பால்: திரு. பாலகிருஷ்ணநாயர், குவீன்மேரீஸ் கல்லூரி:திருமதி.லேடிவெலிங்டன்: திருமதி.வர்கிஸ். சட்டக்கல்லூரி டைரெக்கடர்: திரு.குன்னிராமன். இவை - ஒருசில நிர்வாக அடிப்படைப்பதவிகளிலுள்ள மலையாளிகளை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டப்பட்டன.இனி மாவட்ட (ஜில்லா) தலைமைப் பதவிகளிலுள்ள மலையாளிகள் எண்ணிக்கையைக் காட்டுவதற்கு போலிஸ் இலாக்கா ஒன்றை மாத்திரம் உதாரணமாக எடுத்துக்காட்டுகிறேன்.

இவைகளிலிருந்து மற்ற இலாக்காக்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இதில் 13-ஜில்லாக்களோடு சென்னையைச் சேர்த்தால் 14-ஆகும். இவற்றில், சென்னையில் கமிஷனர்: திரு.பார்த்தசாரதி அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் இருப்பது மாத்திரமல்லாமல் அடுத்த பதவியான டிப்டி கமிஷனர் என்பதில் மூன்றிலும் மூன்று மலையாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் முறையே..

1. திரு. அடிகை (லா அண்டு ஆர்டர்), 2. திரு.தாமோதரன் (கிரைம்),3. திரு.சுகுமாரன் (டிராபிக்). ஆய்ஜிக்கு அசிஸ்டெண்ட்: திரு.வி.பி.நாயர். அசிஸ்டெண்ட் கமிஷனர்கள்: 1. திரு.செதுமாதவமேனன்(லா அண்டு ஆர்டர்), 2. திரு. சேதுமாதவநாயர்: (புரொகிபிஷன்).இனி ஜில்லாக்களில் போலிஸ் சூப்பரின்டெண்ட்டுகள்: திருச்சி: திரு. விஸ்வநாத அய்யர்: மதுரை(வ)திரு. ஏ.சி.நம்மியார்: திருநெல்வேலி:திரு. மாப்ளா அப்துல்லா. வடஆர்க்காடு திரு. ஷெனாய், சேலம்: திரு.பாலக்கிருஷ்ணமேனன், நீலகிரி: மாப்ளாரூக்கி இவைதவிர மற்ற ஜில்லாக்களிலும் அய்யர், அய்யங்கார்கள்.

அதாவது மதுரை(தெ)திரு.கிருஷ்ணசாமி அய்யர்: இராமநாதபுரம்: திரு. நரசிம்ம அய்யங்கார், மலபார்: திரு. இராமானுஜ அய்யங்கார், தென்கன்னடம்: திரு. முத்துசாமி அய்யர். மீதியுள்ள ஜில்லாக்களில் இரண்டில் ஆங்கிலோ கிறிஸ்த்தவர்களும், ஒரே ஒரு ஜில்லாவில், தென்னாற்காட்டுக்கு மட்டும் திரு. பாலக்கிருஷ்ண உடையார் என்ற தமிழரும் இருந்து வருகிறார்கள். இவர் பதவியும் ஆட்டத்தில் இருக்கிறது.இவை தவிர அரசாங்க போலீஸ் இலாக்கா (போர்ட்போலியோ) நிர்வாகத் தலைமையில், செரட்டரி: திரு. ஆர்.ஏ. கோபால்சாமி அய்யங்கார்: டிப்டி செக்ரட்டரி:டி.ஏ. சுப்புசாமி அய்யர் ஆகிய இரண்டு பார்ப்பனர் இருப்பதுபோக மற்றும் இரண்டு டிப்டி செக்ரட்டிரிகள்: 1.திரு.ஒய்.சிவராம மேனன்,2. திரு.சி.ஆர்.பணிக்கர். மற்றும் பப்ளிக் (பொலிடிகல்) என்று கூறப்படும் இரகசிய நிர்வாகத் தலைமையில் செக்ரட்டரி: திரு.டி.என். இலட்சுமிநாராயண அய்யர்: அண்டர்செக்ரட்டரி: திரு. ஆர். பாலசுப்பரமணி அய்யர். அரசாங்கத் தலைமை ஸ்தாபனங்கள் இந்தப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இவை உதாரணங்களாக எடுத்துக்காட்டப்பட்ட ஒரு சிலவேயாகும்.மற்ற இலாக்காக்களிலும் 100- க்கு 90- பேர்களான தமிழர்களைத் தவிர மற்ற சமுதாயக்காரர்களே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.இந்த நிலைமை இதற்கு முன்பே இருந்து வந்தாலும் இவ்வளவு மோசகரமான நிலைமை, அதாவது செக்ரிட்டேரியட், போலிஸ்- முதலியவற்றில் இவ்வளவு மோசகரமான நிலைமை - திரு. ஆச்சாரியார் அவர்கள் காலத்தில் ஏற்பட்டதாகவே தெரிகிறது. இங்கே பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்-தமிழனுக்கு ஆட்சியில் இடமெங்கே? தமிழன் வாழ்வில் ஆட்சியின் உதவி தேடுவதற்கு வழி எங்கே? தமிழனை பழிவாங்கும் தன்மையிலே இந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத்தவிர வேறு காரணம் ஒன்றும் காணோம். ஆகையால், ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு ஜில்லாக்காரர்களும் பிரிந்து மொழிவாரி மாகாண நாடு பெறும் வரையில் பதவிகள் ஜில்லா விகிதமாவது அந்தந்த ஜில்லா அடையும்படி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

சமீபகாலத்தில் திருவாங்கூர் - கொச்சி இராஜ்ஜியத்தில் தமிழர் உரிமை கேட்டதற்காக, தமிழர்களை அந்தநாட்டு மலையாளிகள் நடத்திய விதத்தைப் பார்த்தால், குறைந்தளவு நாம் நமது உரிமைக்காவது பாடுபடக்கூடாதா என்று தோன்றுகிறது. இந்த உணர்ச்சியின் பெயரால்தான் இந்த எண்ணங்கள் நமக்குத்தோன்றுகின்றன. ஆகவே தமிழர் இவற்றைப்பற்றி நல்ல வண்ணம் யோசித்து, கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெறவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே என்னுடைய பிறந்தநாள் விழா வேண்டுகோள்.


(தந்தை பெரியார் விடுதலை அறிக்கை 17.09.1954)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_596.html

Labels: , , ,

12 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

This is a reactive writing by Periyar after Tamizhans were insulted by Malayalees..so dont try to post a different picture .
"சமீபகாலத்தில் திருவாங்கூர் - கொச்சி இராஜ்ஜியத்தில் தமிழர் உரிமை கேட்டதற்காக, தமிழர்களை அந்தநாட்டு மலையாளிகள் நடத்திய விதத்தைப் பார்த்தால், குறைந்தளவு நாம் நமது உரிமைக்காவது பாடுபடக்கூடாதா என்று தோன்றுகிறது. இந்த உணர்ச்சியின் பெயரால்தான் இந்த எண்ணங்கள் நமக்குத்தோன்றுகின்றன. ஆகவே தமிழர் இவற்றைப்பற்றி நல்ல வண்ணம் யோசித்து, கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெறவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே என்னுடைய பிறந்தநாள் விழா வேண்டுகோள்.
"

6:12 AM  
Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

ரவி,
சிங்களர்களுக்கு இருக்கும் இனவெறியை உங்களிடமும் காண்கிறேன். உங்களது இனவெறிக் கொட்டம் அடங்கும்வரை தமிழர்களின் இன எழுச்சி ஓயாது! உங்களைப் போன்றவர்களின் இனவெறிக்கு எதிராக இனவெழுச்சி எப்போதும் தேவையாயிருக்கிறது, குறிப்பாகத் தமிழர்களுக்கு. அதைப் பெரியாரும் சொல்லலாம், சீமானும் சொல்லலாம். இப்படியெல்லாம் திரிப்பதற்கும், பிழையைப் புகுத்துவதற்கும், ஒரு மனிதரின் நோக்கத்தைப் பற்றிப் பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும் சத்தியத்தைக் கண்டிப்பாக நீங்கள் விற்றுவிட்டுத்தான் வந்திருக்கவேண்டும், ஹிந்து இராமையும், சோவையும் போல. அவர்களைப் போல சூதும் பாவமும் செய்யாதீர்கள்!

6:26 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

yes, i agree. Now Malayalai M.K. Narayanan, Menon are help to kill Tamils in Sri lankaa.

7:39 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

'This is a reactive writing by Periyar after Tamizhans were insulted by Malayalees..so dont try to post a different picture'

அப்படியானால் அதில் ஆந்திரர்,கன்னடர் குறித்து பெரியார் எழுதியுள்ளதையும்,பிறவற்றையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் யார் இருக்கக் கூடாது
என்று அறிக்கையில் தெரிவிக்கிறாரே
அதற்கு என்ன பொருள்.

7:56 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

சுந்தரவடிவேல், இந்த அறிக்கையை விட்டவர் பெரியார். அதற்கான இணைய இணைப்பும் இடுகையில்
இருக்கிறது. நான் என்றும் சிங்கள
பேரினவாதத்தினை ஆதரித்து எழுதியதில்லை. போர் நிறுத்தம்தான்
இன்றைய உடனடித் தேவை, போர்
மூலம் தீர்வு காணமுடியாது என்றுதான்
வலியுறுத்துகிறேன். இலங்கையை விட்டு தமிழர்களை விரட்டுவோம் அவர்களுக்கு இங்கு இடமில்லை என்று
சொல்வது பேரினவாதம்.அது போன்ற எந்த ஒரு வாதத்தினையும் அது எந்தப் பெயரில் வந்தாலும் நான் ஆதரித்ததில்லை. பெரியார் தன்
அறிக்கையில் தமிழ்நாட்டிலிருந்து
யாரை வெளியேற்ற வேண்டும்
என்று குறிப்பிடுகிறார். மதச் சிறுபான்மையினர்,கன்னடர் குறித்து
அவர் அறிக்கையில் எத்தகைய
பார்வை இருக்கிறது.

இந்த அறிக்கையை இன்று மீள் பிரசுரம் செய்யக் காரணத்தினை
இதற்கு முந்தைய இடுகையை
படித்தால் புரிந்து கொள்ள முடியும்.

சோவை விமர்சித்து நான் எழுதியிருக்கிறேன்.ஹிந்து ராமின்
இலங்கை குறித்த கருத்துக்கள் சரி
என்று நான் வாதிட்டதில்லை.

யாரிடம் வெறியும், வெறுப்பும்
இருக்கிறது என்பதை உங்கள்
மறுமொழி காட்டுகிறது.

8:06 AM  
Blogger குறும்பன் மொழிந்தது...

என் சிற்றிவிற்கு எட்டியவரை அவர் அறிக்கையில் தமிழர்களுக்கு உயர் பதவி கிடைக்க வேண்டும் என்கிறார். அது தான் சாரம். இதில் என்ன தவறு உள்ளது?

11:38 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ரவி அவர்களுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். தமிழினத் தந்தை பெரியாரைப் பற்றி சில தமிழ்மொழிப் பற்றாளர்கள் வைக்கும் விமர்சனம் ஒன்று உண்டு. அதாவது - "தந்தை பெரியார் நாயிடு வகுப்பைச் சேர்ந்த கன்னடர். எனவேதான் அவர் நீதிக்கட்சி பெயரை மாற்றி தமிழர் கழகம் என வைக்காமல் திராவிடர் கழகம் என வைத்தார். தனித்தமிழ்நாடு கோரிக்கை வைக்காமல் "திராவிட நாடு" வேண்டும் எனக்கேட்டார். "தமிழ் நாடு" மாநிலத்துக்கு அப்பால் "திராவிடம்" என்பது எந்த தென்மாநிலத்துக்காரர்களும் அதிகம் பொருட்படுத்தாதபோது - தமிழர்கள்தான் தமது முக்கிய கட்சிகள் அனைத்திலும் (திமுக, அதிமுக, மதிமுக, தேதிமுக)"திராவிட" என்ற பெயர் வைத்து மாரடிக்கிறார்கள்" என்பதே அந்த விமர்சனம். இன்னும் சிலர் சொல்லுவது - "திமுக தலைவர் ஒரு ஆதி ஆந்திரர் வகுப்பைச் சேர்ந்த தெலுங்கர், அதிமுக தலைவர் ஒரு கன்னடர். மதிமுக, தேதிமுக தலைவர்கள் தெலுங்கர்கள். இத்தனைக்கும் மூல காரணம் பெரியார் ஆரம்பித்து வைத்த "திராவிடர் கழகம்" என்ற கோட்பாடுதான்".

ரவி அவர்களே, இது போன்ற விமர்சனங்களைக்கேட்டு சற்று குழம்பி இருக்கும் தமிழர்களை உங்களின் இடுகையும், நீங்கள் இணைத்திருந்த தந்தை பெரியாரின் பிறந்த நாள் பேச்சும் மிகத் தெளிவு படுத்தியிருக்கும். ஈ.வே.ராமசாமி அவர்கள் தமிழினத்தின் தந்தை பெரியார் என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை என்பதனை நிச்சயம் புரிந்திருப்பார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வர்ணாசிரம தர்மக்கொடுமைகளாலும் சாமி மூடநம்பிக்கைகளாலும் முடக்கிப்போடப்பட்ட ஒரு இன மீட்சிக்குப் பாடுபட்ட ஒரு தலைவரின் வாழ்நாளில் பேசிய பல்லாயிரக்கணக்கான பேச்சுக்கள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வைக்குமளவுக்கு குறைகள் காணமுடியும். தந்தை பெரியாரைப்பற்றி ஓரளவு படித்தவன் என்ற முறையில் நான் அறிந்தது - தமிழினம் அடிமை விலங்கொடித்து முன்னேறவேண்டும் என்று பாடுபட்டவர் தந்தை பெரியார். தமிழரைப் பிற இனத்தவர் சுரண்டுகிறார்களே என்ற மனவேதனையின் வெளிப்பாடே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெரியாரின் பேச்சின் சாரமாக நான் கொள்கிறேன்.

பகுத்தறிவும், மனித நேயமும், மனித முன்னேறமுமே அவரது கொள்கை கோட்பாடுகளின் அடி ஆதாரங்கள்.

தான் பிறந்த தமிழ் மண்ணில் வாழும் தமிழ் மக்கள் முன்னேறவேண்டும் என்ற அவாவில் சில சமயம் கடுமையாகப்பேசியிருப்பாரே தவிர அவரை இனவெறியர் என்பதை அவர் நண்பர் ராசாசிகூட ஒப்புக்கொண்டிருக்கமாட்டார். ஒரு முறை அவர் "எல்லா ஒடுக்கப்பட்ட சாதியினரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறுங்கள்" என்று ஒரு அதிர் வெடியைப் போட்டபோது, அவருடன் இருந்தவர்களே குழம்பிப்போனார்கள். அப்போது அவர் "நான் இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொஞ்சம் உரிமை கொடுக்கிறார்களா என்று பார்க்கிறேன்" என்று அவர்களிடம் சொன்னாராம். "நாடு, மதம், மொழி, இனம் போன்ற பிரிவினைக்களைக்கடந்த பகுத்தறிவை மனித இனம் அடையவேண்டும்" என்பதும் அவர் சொன்னதுதானே. அப்படிப்பட்ட ஒரு தலைவரை பால்தாக்கரேயுடன் நீங்கள் ஒப்பிட்டதுதான் ஏன் என்று புரியவில்லை.

1:05 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

you have come to a conclusion on Periyar based on one article which says about your understanding and your deep held hatred/dislike towards him. Periyar was against anything that was inhuman. To quote a fine example he even once said 'Tamil is a barbaric language' and thats Periyar for you, a man who transcended any identity that prevailed in this world.

11:13 PM  
Blogger தமிழ்ப்பதிவன் மொழிந்தது...

/அப்படிப்பட்ட ஒரு தலைவரை பால்தாக்கரேயுடன் நீங்கள் ஒப்பிட்டதுதான் ஏன் என்று புரியவில்லை./

பெரியாரை இழிவுபடுத்தி தாக்ரேக்களை புனிதப்படுத்துகிற வழக்கமான குயுக்தி

வேறென்ன?

2:11 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//பகுத்தறிவும், மனித நேயமும், மனித முன்னேறமுமே அவரது கொள்கை கோட்பாடுகளின் அடி ஆதாரங்கள்//

வெங்காயம். பேச்சுக்கு பேச்சு ஜாதி பார்த்து, மொழி பார்த்து, மனித துவேஷத்தை வெறியை வளர்த்தவர் மனித நேயத்தை வளர்தவராம். கொஞ்சம் பார்த்து ஜால்ரா தட்டுங்கப்பா!!

6:43 AM  
Anonymous பா. ரெங்கதுரை மொழிந்தது...

ஈ.வே.ரா.வின் மலையாளிகள் மீதான வெறுப்பைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. கன்னடர்களுக்கும் மலையாளிகளுக்கும் உள்ள பகைமை பற்றிய வரலாற்றுப் பின்னணியை விளக்கும் கட்டுரைகள் அல்லது புத்தகங்கள் பற்றிய தகவல்கள் ஏதும் உங்களிடம் இருப்பின் தெரியப்படுத்தவும்

12:28 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

EVR was sharp enough to understand the political forces that were trying to subjugate Linguistic / regional nationalism for the PanIndia Nationalism, and how these forces tried and trying even now to create the rift among the regional populations of the Indian subcontinent. Instead of promoting true federalism and decentralizing powers to establish autonomy and build a stronger united Indian subcontinent, these political forces are relying on a imaginary culturally/linguistically singular India (as Pakistan have tried and miserably failed) which will fail. This problem was envisioned by EVR as far back as 1920s, and reflected in the article you posted. But EVR, Justice Party or DK did not seemed to have towed a policy that will weaken the Indian govt or destroy the unity of the people; all they wanted: autonomy, cultural and linguistic rights, proportional representation, financial powers to decide industrial policies. Whatever, Indian govt. did in the name of promoting Indian Unity seemed to have worked in the opposite direction. Given the sheer poverty observed in the regional states (TN, Bengal, Bihar, Assam for example) during pre-independent and post-independent india, no wonder politicians like EVR saw the role of biased policy of Delhi(central) govts.

Another danger in the recent years: the attitude of Kannadiga politicians appear similar to that of Sinhala govt.

Take issues like, Kaveri dispute, Assam, Golden temple, Nepal, or eelam tamils, what a callous and careless attitude displayed by central and other regional politicians.

Senthil

1:14 AM  

Post a Comment

<< முகப்பு