எம்.எஸ்.சுவாமிநாதன்,பசுமைப்புரட்சி- கட்டுரை- எதிர்வினை

எம்.எஸ்.சுவாமிநாதன், பசுமைப்புரட்சி- கட்டுரை - எதிர்வினை

கீற்று இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்படிருந்த 'எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா' என்ற கட்டுரைக்கு நான் அங்கு இட்டு, வெளியிடப்பட்ட எதிர்வினை இங்கு தகவலுக்கும், ஆவணப்படுத்தவும் இடப்படுகிறது

இணையத்தில் http://keetru.com/literature/essays/sudar.php

பொய்களை தொடர்ந்து எழுதுவதால் அவை உண்மைகளாகிவிடா.உண்மைகளைச் சொன்னாலும், அதை தங்கள் வலைப்பதிவு/தளங்களில் வெளியிடாமல் மீண்டும் மீண்டும் பொய்களை எழுதும் ஒரு கும்பல்தான் இது போன்ற கட்டுரைகளை இணையத்தில் எழுதி வருகிறது.அந்த கும்பல் மக்கள் சட்டம்,தமிழரங்கம் போன்றவற்றில் பொய்களை பரப்புவதை தொழிலாகவே கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரை,சுந்தர்ராஜன் எழுதி கீற்றில் வெளியான கட்டுரை,கடந்த ஆண்டு கீற்றில் வெளியான வெற்றிச்செல்வனின் கட்டுரை - மூன்றும் இத்தகயவை. சுவாமிநாதன் குறித்து கூட இவர்களால் உண்மைகளை எழுத முடியவில்லை. அவர் முனைவர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜ் பல்கலையில். இந்தக் கட்டுரையில் தகவல் பிழைகளில் துவங்கி, முழுப் பொய்கள் வரை ஏராளமான திரிபு வேலைகளை காணலாம். சுவாமிநாதனை விமர்சிக்கலாம்.ஆனால் விமர்சனம் என்ற பெயரில் பொய்களை எழுதக் கூடாது.

பிடி பருத்திக்கும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கும் ஒரு நம்பகமான ஆய்வினை இவர்கள் சுட்டிக்காட்டட்டும்.இந்தியாவில் பிடி பருத்தி வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மை.பசுமைப் புரட்சி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. அதை வெறும் சதியாக சித்தரிப்பது அபத்தம்.உலகம் இந்த பொய்யர்களை பொருட்படுத்துவதில்லை.விவ்சாயி பிடி பருத்தியால் விளைச்சல் அதிகரித்து, லாபம் வரும் என்பதால் அதை தெரிவு செய்கிறார். அதனால் பிடி பருத்தி பயிரப்படும் நிலத்தின் பரப்பளவு ஆண்டுதோறும் இந்தியாவில், உலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இந்தப் பொய்யர்கள் எதையாவது இரவல் பெற்று அரைவேக்காட்டுத்தனமாக எழுதிக் கொண்டேயிருப்பார்கள்.

சுவாமிநாதன் அமெரிக்க கைக்கூலி என்பவர்கள் பசுமைப்புரட்சியை தமிழ் நாட்டில் பரப்பிய ஆட்சியாளர்களையும் அவ்வாறே எழுதுவார்களா? பசுமைப்புரட்சிக்கு எதிர்ப்பு வந்த போது அதை வலியுறுத்தி ஆதரித்தவர் அன்றைக்கு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அவரும் அமெரிக்க கைக்கூலியா.பசுமைப்புரட்சி பரவ விதைகளை விநியோகிப்பதில் வேளாண் பல்கலைகழகங்கள் பெரும் பங்காற்றின. அவை புதிய வகை பயிர்களையும் பசுமைப்புரட்சியின் கீழ் அறிமுகம் செய்தன. அவற்றின் மீது அறிவுசார் சொத்துரிமை எதுவும் கிடையாது. விதை நெல்லுக்கு இந்தியா அமெரிக்கா உட்பட எந்த நாட்டிடமும் கையேந்தும் நிலை ஏற்படவில்லை. மாறாக பசுமைப்புரட்சிக்கு முன் உணவு உற்பத்தி குறைவாக இருந்ததால் அரிசி, கோதுமையை இறக்குமதி செய்யும் நிலையில் இருந்தது.IRRI என்ற சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எந்த அரசின் நிர்வாகத்திலும் இல்லை. அது CGIAR என்ற குழுவின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்று. அந்தக் குழுவில் இந்தியா உட்பட பல நாடுகள் உறுப்பினர்கள். IRRIலிருந்து விதைக்களை உருவாக்க தேவையான germplasm த்தை வேளாண் பல்கலைகள் பெற்றுள்ளன. அதற்கு தடையில்லை. இன்னும் சொன்னால் CGIAR கீழ் உள்ள ஆய்வு நிறுவனங்களில் உள்ள germplasm எந்த ஒரு அரசு/தனியார் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல. மாவோவின் சீனாவும் விளைச்சலை அதிகரிக்க செயற்கை உரங்கள், புதிய வகை விதைகள் கொண்ட பசுமைப் புரட்சி தொழில்னுட்பத்தை பயன்படுத்தியது. சோவியத் யுனியனும் நவீன வேளாண்மையைத்தான் பயன்படுத்தியது. 1960களில் பசுமைப் புரட்சி நவீனமயமாக்கல்,முன்னேற்றம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியர்கள் அதற்கு முன்பே இந்தியாவில் எத்தகைய வேளாண்மை வேண்டும் என்பதை எழுதியிருந்தனர். குமரப்பா என்ன எழுதினார் என்பது இந்தப் பொய்யர்களுக்கு தெரியுமா. புஜ/புக என்றைக்காவது குமரப்பா முன்வைத்த விமர்சனங்களை அலசி எழுதியுதண்டா, அல்லது குறைந்தபட்சம் அதை அறிமுகமாவது செய்தது உண்டா. தகவல்களை இரவல் வாங்கி பொய்களை கலந்து எழுதும் கும்பலுக்கு பசுமைப் புரட்சியின் வரலாறும் தெரியாது, அதன் விமர்சனத்தின் வரலாறும் தெரியாது.
பெரியார் பசுமைப் புரட்சியை எதிர்த்தார் அல்லது அவரது ஆதரவு பெற்ற திமுக ஆட்சிகள் பசுமைப்புரட்சியை எதிர்த்தன என்பதற்கு ஆதாரம் உண்டா.பெரியார் என்றைக்காவது பாரம்பரிய வேளாண்மையை ஆதரித்து எழுதியுள்ளாரா, ஆதாரம் காட்ட முடியுமா.இன்று காலச்சுவட்டில் சங்கீதா ஸ்ரீராம் ஒரு தொடர்கட்டுரை எழுதுகிறார். இது போல் எத்தனை கட்டுரைகளை புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம் வெளியிட்டுள்ளது.

பசுமைப்புரட்சியை தமிழ்நாட்டில் மார்க்சிய வட்டாரங்களில் முதலில் விமர்சித்தது எஸ்.என்.நாகராஜன். இந்த விவாதங்கள் 1980களில் பரவலாக துவங்கின, அதிகம் வெளியே தெரிய வந்தன.அதில் முக்கிய பங்கு வகித்தது PPST குழு. நாகராஜன் பார்பனர், PPST குழுவிலும் பலர் பார்பனர்கள். அவர்கள் பசுமைப்புரட்சியை கேள்விக்குள்ளாகியவர்கள். 1983ல் கிளாட் ஆல்வரிஸ் இந்த விவாதங்களை அப்போதிருந்த இல்லஸ்டேரட் வீக்லியில் எழுதிய கட்டுரை மூலம் பலர் அறியச் செய்தார். நம்மாழ்வாரை பற்றி எழுதியதுடன், இயற்கை வேளாண்மை குறித்து நூல் வெளியிட்டது நிகழ். கோவை ஞானி அதை செய்ய முக்கிய காரணி நாகராஜன். அப்போது புதிய ஜனநாயகம் எத்தனை கட்டுரைகளை இயற்கை வேளாண்மை குறித்து வெளியிட்டது என்பதை சுடர் எழுதுவாரா?

Labels: , , , ,

3 மறுமொழிகள்:

Anonymous ஸ்வாமி மொழிந்தது...

//புதிய ஜனநாயகம் எத்தனை கட்டுரைகளை இயற்கை வேளாண்மை குறித்து வெளியிட்டது என்பதை சுடர் எழுதுவாரா?//

நல்லவேளை. புதிய ஜனநாயகம் மாஃபியா கும்பல் இயற்கை விவசாயம் பற்றி அப்போது எதுவும் எழுதாமல் விட்டார்கள். அப்படி ஏதும் எழுதியிருந்தால், ”இயற்கை விவசாயம் என்பதே பிராமணிய மேலாண்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு தந்திரம்” என்றெல்லாம் வழக்கம்போல உளறிக் கொட்டியிருப்பார்கள்.

9:01 PM  
Blogger Vajra மொழிந்தது...

கம்யூனிஸ்டுகள், ம.க.இ.க முட்டாள்களுக்கு, உலகத்தில் எல்லா பிரச்சனைக்கும் காரணம், அமேரிக்கா, அதன் ஏகாதிபத்தியம், அதை விட்டால் இந்தியாவில் உள்ள பிரச்சனைகளுக்கு பார்ப்பானர்கள்.

இதைத் தவிற அவர்கள் காமாலைக்கண்ணுக்கு வேறேதும் தெரியாது. ஆகவே, உங்கள் பொன்னான நேரத்தை இந்த முட்டாள்களுடன் விவாதம் செய்து வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

7:34 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

உண்மை தான் விதற்பாவில் தினமும் ஏதாவது ஒரு விவசாயி குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது.
குஜராதத்ிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொக்கிறார்கள். நமது அண்டை மாநிலம் ஆந்திரவிலும்
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பாவம் இது அவர்கள் பொழுது போக்கு.

10:57 PM  

Post a Comment

<< முகப்பு