மீண்டும்

மீண்டும்

கிட்டதட்ட இரு வார விடுமுறைக்குப் பின் வேலையில். விடுமுறையில் இணையத்தில் நேரத்தினை செலவழிப்பதை, படிப்பதை குறைத்தேன். இப்போது முகத்தில் ஒரு தெளிவு வந்துள்ளதாக எனக்கு மிகவும் வேண்டியவர் சொல்கிறார். அது உண்மை என்று
எனக்கே தெரிகிறது, இருப்பினும் வேதாளம் என்றால் முருங்கை மரம் ஏறித்தானே ஆக வேண்டும். 7ம் தேதி ஒரு விவாதக் கூட்டம், 9,10 மாநாடு , அதில் 9ம் தேதி நான் பவர்பாயிண்ட வேண்டும் என்று ஆண்டின் துவக்கமே ‘சரி'யில்லை. பிப்ரவரி, மார்ச்சில்
இன்னும் சில கருத்தரங்கள், மாநாடுகளில் பவர்பயிண்ட வேண்டிவருமென்று தோன்றுகிறது.

தமிழ் வலைப்பதிவுகளை தவிர்ப்பது நலம், சனி பகவானுக்கு சனி தோறும் எண்ணை விளக்கு ஏற்றவேண்டும் என்று என்னுடைய ராசிக்கு அவள் விகடன், மங்கையர் மலர் & தினத்தந்தி இணைப்புகளில் பரிகாரங்களை துல்லியமாக கணித்து சொல்லியிருக்கிறார்களாம்.
பின்னதை செய்வது இயலாது என்பதால் முன்னதையாவது செய்யலாம் என்று நினைக்கிறேன். இன்னொரு பரிகாரமாக புத்தக கண்காட்சியையொட்டி புத்தகம் வாங்குவதை தவிர்ப்பது எப்படி என்று சிறப்பு இடுகை இடுவதாக எண்ணம். சென்னை புத்தக்கண்காட்சியில் இதை இலவசமாக தர உபயதாரார் கிடைத்தால் அச்சிட்டு விநியோகம் செய்ய முடியும். அரசு கடைக்கண் வைத்தால் பொது நூலகங்கள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் அதை தர முடியும்.

சிலர் போல் புதுவருட தீர்மானம் நிறைவேற்றி அதை பகிரங்கமாக்ச் சொல்லும் ‘தைரியம்' எனக்கு இல்லை. ஆண்டின் இறுதியில் நான் செய்ததையே அந்த ஆண்டுக்கான தீர்மானங்கள் என்று அறிவித்து விடலாம்தான், சின்ன சிக்கல் என்னவெனில் செய்தது என்று பார்த்தால் ஒன்றுமே தேராது, நான் அதை சொல்வது, வராத வட்டியை வரவாக காட்டிய வங்கியின் வரவு-செலவு அறிக்கை போல் ஆகிவிடும் என்பதால் செய்ததைக் கூட பகிரங்கப்படுத்துவதில்லை. அதை தன்னடக்கம் என்றும், தன்னடக்கம் நல்ல குணம்
என்றும் நேற்று வரை சொல்லிவந்தேன். இப்போதிலிருந்து அப்படி சொல்ல முடியுமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

தன்னடக்கம் தமிழரின் ஜீன்களின் இருந்ததில்லை, இருப்பினும் வைதீகம் அதை புகுத்திவிட்டதால் தமிழர் தன்னடக்கம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்டார்கள் என்று மாற்றுப் பாதை என்ற ஆராய்ச்சி இதழின் சிறப்பாரிசியர் அடுத்த இதழில் எழுதப் போவதாக
பூச்சிகள் சொல்கின்றன. இந்த ஜீன் அடுக்கை சுரண்டிப் பார்த்தால் மூலத் தமிழ் ஜீன்களை கண்டுபிடித்து, வைதிகம் கட்டமைத்ததை நீக்கலாம், புரட்டிப் போடலாம்.அதுவே சமகால உடல் அரசியலின் முதல் பணி என்று வற்றாத நதியில் கட்டுரை விரைவில் வருகிறதாம். ஜீன் அடுக்குகள் பாலிம்பசெட் போன்றவை, ஒன்றின் அடியில் ஒன்று என்று இருந்தாலும், தமிழரின் மனதில் அசல் ஒரிஜனல் சூப்பர் சுப்ரீம் அல்டிமேட் மூலத்தமிழ் உணர்வு அனைத்திற்கும் அடியில் தாங்கி/தங்கி வருவதால் வைதீகம் புகுத்திய ஜீன் மாற்றங்களை முயன்றால் களைந்துவிடலாம் என்று 21ம் நூற்றாண்டின் தமிழ் நீட்சே-கம்-செகுவரா-கம்-டெல்யுஸ் அருள் வாக்கு சொல்லவிருப்பது நம் உயிரில் ஒசையுடன், உண்ணும் தோசை போல் கலந்து 2009ல் உய்வு பெறுவோமாக.

அருள் வாக்கிற்கான உரையைப் புரிந்து கொள்ளும் திறன் எனக்கு இல்லை (அருள் வாக்கு மட்டும் புரிகிறதா என்றெல்லாம் கேடக்க் கூடாது) என்பதால் 2010ன் துவக்கத்தில் வரவிருக்கும் அருள் வாக்கின் உரை விளக்கம் (in 10 volumes) ஐபடித்து யாராவது விளக்கினால் அவர்களுக்கு பிரதியுபகாரமாக என் முனைவர் பட்ட ஆய்வேட்டின் ( தமிழ் உரை மரபும், ஹைடெக்கரும் ) 100 பிரதிகளை இலவசமாக தருகிறேன். மற்றும் ஹைடேக்கருடன் நான் ஒஜோ பலகை மூலம் உரையாடுவதை ஒரு மணி நேரம் காணவும் வாய்ப்பு தருகிறேன். அதை யுடியுபில் ஏற்ற மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். எனவே காமிரா செல்போன்களுக்கு அவருடன் உரையாடும் போது அனுமதியில்லை. எனக்கு ஜெர்மன் தெரியாவிட்டாலும், மொழிப்பாலமாக செயல்படுவதை ISO 2001 தரச் சான்றிதழ் பெற்ற ஆவிக்கு அவுட்சோர்ஸ் செய்து விட்டேன், ஆவி அதற்காக காசு கேட்பதில்லை. (டோண்டு கவனிக்க)

பி.கு: ஆரிய உதடுகள், திராவிட உதடுகள் போல் ஆரிய தன்னடக்கம், திராவிட தன்னடக்கம் என்று இருவகை இருக்கக் கூடாதா என்றெல்லாம் பின்னூட்டம் இட வேண்டாம். எனக்கு ரீமா சென் பிடிக்கும் என்றாலும், இப்போதைய பொலிடிகலி கரெக்ட் சாய்ஸ் நமீதா என்பதால் அத்தகைய பின்னூட்டங்களை அனுமதிப்பதிற்கில்லை.

Labels: , , ,

6 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

புத்தாண்டு வாழ்த்து :)

9:32 AM  
Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) மொழிந்தது...

புத்தாண்டு வாழ்த்துக்களோடு வருக, வருக எனவும் வரவேற்கிறேன்..

உங்களுடைய தளத்தில் பல இடங்களில் லட்டு, லட்டாக எழுத்துக்கள் தெரிகின்றன என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

8:00 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

உண்மைத்தமிழரே, அப்படி லட்டு லட்டாக தெரிவதற்கும் திருமங்கலம்
இடைத்தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.குறிப்பிட்டு இங்கே
தெரிகிறது என்று எழுதினால் சரி செய்ய முயற்சிக்கிறேன்.எனக்கு அப்படித் தெரியவில்லை. நான்
கண்களை கண் மருத்துவரிடம்
சென்று பரிசோதனை செய்து
கொண்டு பல ஆண்டுகள்
ஆகிவிட்டன :).

8:50 AM  
Blogger L. Venkata Subramaniam மொழிந்தது...

Do you have a Special keyboard? How do you manage to type in Tamil so beautifully.

12:09 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//தன்னடக்கம் தமிழரின் ஜீன்களின் இருந்ததில்லை, இருப்பினும் வைதீகம் அதை புகுத்திவிட்டதால் தமிழர் தன்னடக்கம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்டார்கள் என்று மாற்றுப் பாதை என்ற ஆராய்ச்சி இதழின் சிறப்பாரிசியர் அடுத்த இதழில் எழுதப் போவதாக
பூச்சிகள் சொல்கின்றன//

ரவி,

இத்தகைய ஆய்வுகளுக்குத்தான் இப்போது சென்னைப் பல்கலை ஆதரவுடன் ‘மாற்றுவெளி' என்ற ஆய்விதழைக் கொண்டுவந்திருக்கிறார்களே. நீங்கள் பார்க்கவில்லையா?

கால்டுவெல் சிறப்பிதழ் என்ற போர்வையில்ல் நாடார் சமூகத்தை எந்த அளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ அந்த அளவுக்குச் செய்திருக்கிறார்கள்.

- ஸ்வாமி

12:45 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

'Do you have a Special keyboard? How do you manage to type in Tamil so beautifully.'

No, I use NHM writer to type in unicode.
'ரவி,

இத்தகைய ஆய்வுகளுக்குத்தான் இப்போது சென்னைப் பல்கலை ஆதரவுடன் ‘மாற்றுவெளி' என்ற ஆய்விதழைக் கொண்டுவந்திருக்கிறார்களே. நீங்கள் பார்க்கவில்லையா?

கால்டுவெல் சிறப்பிதழ் என்ற போர்வையில்ல் நாடார் சமூகத்தை எந்த அளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ அந்த அளவுக்குச் செய்திருக்கிறார்கள்'

ஸ்வாமி, முழு இதழையும் படிக்கவில்லை.சிறப்பாசிரியரின்
தலையங்கத்தை மட்டும் படித்தேன்.
அதை இந்த இடுகையைப் படித்தால்
புரிந்து கொள்ள முடியும். முடிந்தால்
அரசு எழுதியுள்ளது அபத்தம் என்பதை
விளக்கி பின்னர் எழுதுகிறேன்.

7:24 AM  

Post a Comment

<< முகப்பு