என்ன எழுத, என்ன சொல்ல ?

என்ன எழுத, என்ன சொல்ல ?

கடந்த வாரம் மும்பையில் நடந்த கோரத் தாக்குதல், வி.பி.சிங்கின் மரணம் உட்பட சிலவற்றை வலைப்பதிவில் பற்றி எழுத நினைத்தாலும் எழுதும் மன நிலையில் இல்லை.சில முக்கியமான, காலத்தே செய்ய வேண்டிய வேலைகள் இருந்தன. ஆண்டின் கடைசி மாதம், முடிக்க வேண்டிய வேலைகள், துவக்க வேண்டிய வேலைகள் கொண்ட பட்டியல் இருக்கிறது. அவற்றைச் செய்து விட்டாலே போதும் என்ற நிலையில் இருக்கிறேன். எனவே ஆண்டு இறுதிவரை வலைப்பதிவில் இடுகைகள் இடுவதை தவிர்க்க விரும்புகிறேன். மேய்ச்சல் என்ற தலைப்பில் சில இடுகைகள் இடப்படலாம். மற்றப்படி விவாதங்களில் ஈடுபட விருப்பமும் இல்லை,நேரமும் இல்லை. அண்மையில் தமிழில் படித்த பல இடுகைகள், ஞாநியின் தமிழ்,
ஆங்கில கட்டுரைகள் எரிச்சல் தந்தன என்பதை மட்டும் இங்கு பதிவு செய்து விடுகிறேன்.
பின்னூட்டங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம்.

மேய்ச்சல்

பண்ணோடு பிறந்தது தாளம்

http://laboratoryplanet.org/

ஸ்டாலினும் சோவியத் அறிவியலும் குறித்த நூல் அண்மையில் வெளியாகியுள்ளது.நான் இதை உடனே படிக்க வாய்ப்பில்லை. இருப்பினும் தமிழ்ச் சூழலில் யாராவது அறிமுகப்படுத்தினால் நல்லது.

சற்றே நீண்ட கட்டுரை, இது போன்றவற்றை தமிழில் தலித் அமைப்புகள், தலித் முரசு போன்றவை அறிமுகம் செய்ய வேண்டும்.ஆனால் தமிழ் நாட்டில் கள ஆய்வு செய்து தலித் அரசியல் குறித்து எழுதப்பட்ட நூலே இங்கு அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.


மன்திலி ரிவ்யு நவம்பர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை. நேரமின்மையால் இந்தக் கட்டுரைகள் குறித்து விரிவாக எழுத முடியவில்லை.

ரிச்சர் லெவொண்டினுடனான ஒரு பேட்டியை இங்கு படிக்கலாம்.

Labels: ,

1 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

---மன்திலி ரிவ்யு நவம்பர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை. நேரமின்மையால் இந்தக் கட்டுரைகள் குறித்து விரிவாக எழுத முடியவில்லை. ---

கொஞ்சம் ஒதுக்கி, எந்தக் கட்டுரை அச்சாக்கலாம் என்றாவது பரிந்துரைக்க கோருகிறேன்.

மேற்சென்று, சுருக்கமாக takeaways போட்டால், இன்னும் வசதி.

3:01 PM  

Post a Comment

<< முகப்பு