2008ம் ஆண்டின் கடைசி இடுகை ?!

2008ம் ஆண்டின் கடைசி இடுகை ?!

26/11 குறித்து ஞாநி,அருந்ததி ராய் உட்பட வேறு சிலர் எழுதியிருந்ததை விமர்சிக்கும் விதமாக ஒரு கட்டுரையை எழுதத் துவங்கினேன். (*). அது முற்றுப்பெறவில்லை. ஞாநி, அ.ராய் முன்வைக்கும் கருத்துக்களை குறிப்பாக ஞாநியின் கருத்துக்களை நான் ஏற்கவில்லை. கடுமையான விமர்சனம் அவை குறித்து உள்ளது. அதே போல் தமிழவன் உயிரோசையில் எழுதிவருவதைக் குறித்தும் ஒரு விமர்சனக் கட்டுரை எழுத
துவங்கி அத்துடன் நிற்கிறது. தமிழவன் பிராமண வெறுப்பு, ஹிந்து நாளிதழ் மீதான வெறுப்பு, இந்து மதம் மீதான அர்த்தமற்ற விமர்சனத்தை முன்வைக்க இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுகிறார். அதை நியாயப்படுத்தவே கோட்பாட்டு பூச்சுகள், பெயர் உதிர்ப்புகள் இன்ன பிற இடம் பெறுகின்றன. எம்.எஸ்.பிராபகரா என்ற காமரூபி EPW ஆசிரியராக இருந்ததே இல்லை. அவர் ஹிந்துவில் எழுதி, தமிழவன் சுட்டும் கட்டுரைக்கு ஹிந்துவில் விமர்சனங்கள் வந்தன, ஒரு ஆங்கில வலைப்பதிவில் இடம் பெற்ற விமர்சனங்களையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமிழவன் முன்னிறுத்துவது தமிழ் ‘பாசிச' மனோபாவம். அடிப்படையில் அவர் முன் வைப்பது சாராம்சவாதம்.இப்படியாக தமிழவன் எழுதியதை விமர்சித்து ஒரு நீண்ட கட்டுரைக்கான முயற்சியை துவங்கினேன். இப்போது இருக்கும் நிலையில் செய்யவேண்டியவை ஏராளமாக இருப்பதால் அந்த இரு கட்டுரைகளையும் எழுதி ஆண்டிறுதிக்குள் வலையில் இட முடியாது.

இன்னும் இரண்டு/மூன்று வாரங்களுக்கு இணையத்தில் அதிக நேரம் செலவிடவோ, தமிழில் எழுதவோ இயலாது. 31 திசம்பருக்குள் செய்ய வேண்டியவை, ஜனவரி 09ல் செய்ய நினைப்பவை கனவிலும் பயமுறுத்துகின்றன :). தலைக்கு மேல் தொங்கும் கத்திகளைக் கண்டு இப்போதெல்லாம் பகலில் பயப்படுவதில்லை என்பதால் அவை கனவில் படையெடுத்து பயமுறுத்துகின்றன :).

ஜனவரி 09 இரண்டாம் வாரத்தில் இது வரை நான் போயிராத ஒரு மாநகருக்கு
போகிறேன், ஒரு கருத்தரங்கிற்காக. அக்கருத்தரங்கின் அமைப்பாளர் ஒருவருக்கு வியப்பு, இதுவரை அங்கே போனதில்லையா என்று. ஆம் நிறைய விஷயங்கள் வாழ்க்கையில் எத்தனை அருகில் ஆயினும் எத்தனை தொலைவில் என்றுதான் இருக்கின்றன என்றேன்.

இதுதான் இந்த ஆண்டில் இந்த வலைப்பதிவில் இடம் பெறும் கடைசி இடுகையாக இருக்கும் என்று கொள்ளலாம்.இந்த ஆண்டு(ம்) என்னை சகித்துக் கொண்டு, நான் எழுதியதை படித்து, பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்.

* அதன் ஒரு பகுதி கீழே
26/11ம் போலி மதச்சார்பின்மைவாதிகளும்

குமுதத்தில் ஞாநி எழுதியதையும், அவுட்லுக்கில் அருந்ததி ராய் எழுதியதையும் படித்தேன். இந்தியா எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, பாஜகவை குறிப்பாக அத்வானி,மோடியை தீவிரவாத முத்திரை குத்தி அரசியலிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற
‘நல்லெண்ணம்'தான் அவற்றில் தெரிகிறது. ஞாநி இன்னொரு அ.மார்கஸாக மாறிக் கொண்டிருக்கிறார். 1992ல் பாப்ரி மஸ்ஜித்தான் துவக்கம் என்றால் 1980களின்
இறுதியிலிருந்தே ஜிகாதிகள் காஷ்மீரில் செய்ததை என்னவென்று சொல்ல. தலிபான்கள் பாமியானில் புத்தர் சிலைகளை இடித்தனர் என்பதற்காக எங்காவது பெளத்தர்கள் பதிலுக்கு தாக்கினார்களா, இல்லை ஜிகாதிகள் செய்த கொடுமைகளுக்கு பதிலாக 1980களின்
இறுதியில, 1990களின் துவக்கத்தில் இந்துக்கள் இந்தியாவெங்கும் முஸ்லீம்களை தாக்கினார்களா. ஞாநியும், அருந்ததியும் இஸ்லாமியர்களின் வன்முறை எதிர்வினைகளுக்கு எந்த வெட்கமுமின்றி மறைமுக நியாயம் கற்பிக்கிறார்கள்.

இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பாகிஸ்தானில் உள்ள இந்திய,இந்து விரோத சக்திகள், பாகிஸ்தான் அரசினால் இந்தியாவில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படாமல் இருந்தாலும், ஊக்குவிக்கப்பட்டு இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களை செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கும்
என்பதுதான் உண்மை. இஸ்லாமியர்கள் மிகப் பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் வன்முறைத் தாக்குதல்களை செய்யும் போது, இந்தியாவில் அதை செய்திருப்பார்கள், பாஜக இல்லாமலிருந்தாலும்.இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினையை வைத்து பாகிஸ்தான் வன்முறை செயல்களுக்கு ஊக்கம் தந்தது. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை தொடர்ந்து எடுத்து வருவதும், அதை இந்தியா விமர்சிப்பதும் உலகறிந்த உண்மை. எனவே பாஜகை மட்டும் குறை கூறுவது அவரது பாஜக வெறுப்பையே காட்டுகிறது.

இந்தியாவின் ஒற்றுமை,ஒருமைப்பாட்டிற்கு விடப்பட்ட சவலாக 26/11 தாக்குதல்களை கருதி, அதற்கு காரணமான சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் என்று ஒருமித்த குரலில் தேசமே பேசினாலும், இந்த போலி மதச்சார்பின்மைவாதிகள் இதையும் பாஜக விரோத அரசியலுக்கு
பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஞாநி எழுதியுள்ளபடி அத்வானி மன்னிப்புக் கேட்டால் நாளைகே ஜிகாதிகள் மனம் மாறி இந்தியாவை நட்பு நாடாக ஏற்று, வன்முறையை விட்டுவிடுகிறோம் என்று சொல்வார்களா. மாறாக ஞாநி போன்றவர்கள் பாஜக பயங்கரவாத
அமைப்பு, தடை செய் என்று குரல் எழுப்புவார்கள். அத்துடன் ஜிகாதிகள் ஏதாவது கோரினால் அதில் உள்ள 'நியாயங்களை' விளக்குவார்கள். பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, 2002ல் நடந்த குஜராத் கலவரம் போன்றவை இந்தியாவில் காலங்காலமாக நிலவும் மதச்சண்டைகளின்
பகுதி. மோடி பதவி விலக வேண்டும் என்று அன்றும் (2002ல்) கோரப்பட்டது. இந்தியாவின் மிக மோசமான மதக்கலவரங்களில் ஒன்று, வி.பி.சிங் உ.பி. முதல்வராக இருந்த போது 19?? ?????ல் நடந்தது. வி.பி.சிங் பதவி விலகவில்லை. அதைச் செய்தவர்கள் PAC
எனும் காவல் பிரிவினர். ஞாநிக்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும். னெனில் ,மோடி முதல்வராகும் முன்னும், காங்கிரஸ் குஜராத்தில் ஆட்சி செய்த போதும் மோசமான மதக்கலவரங்கள் அங்கு நடந்துள்ளன. அதற்கான எத்தனை முதல்வர்கள் பதவி விலகினர்.

அதே போல் இந்து மகாசபை உருவாகும் முன்னரே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் மதக்கலவரங்கள் நடந்துள்ளன. எனவே இந்தப் பிரச்சினையில் வேர் எங்கிருந்து துவங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த்துவாவை விமர்சிப்பதும்,
நிராகரிப்பதும் சரிதான். ஆனால் ஞாநி போன்றவர்களின் மதச்சார்பின்மை அதில் துவங்கி, அத்துடன் முடிவடைகிறது. அருந்த்தியை குறித்து சொல்லவே வேண்டாம். அவரைப் பொருத்தவரை திரும்ப திரும்ப பாஜக, இந்த்துவ எதிர்ப்பு பல்லவியைத்தான் பாடிக்
கொண்டிருப்பார். காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும், அதுதான் தீர்வு என்பார். அப்படி காஷ்மீர் தனி நாடானால் ஜிகாதிகளுக்கு இன்னும் உற்சாகம் பிறக்கும். இந்தியாவை இன்னும் துண்டு துண்டாக சிதறச் செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தாக்குவார்கள். அப்போதும் இந்த ‘மதச்சார்பின்மை'வாதிகள் குஜராத்,பாப்ரி மஸ்ஜித் என்றுதான் பேசிக்கொண்டிருப்பார்கள்.

ராணுவச் செலவு அதிகரித்தால் ஞாநிக்கு ஏன் ஆத்திரம் வருகிறது.100+ கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கு செலவு செய்வதில் என்ன தவறு. ஊழல் நடக்கிறது என்றால் ரோடு போடுவதில் ஊழல் ஆகவே ரோடே வேண்டாம்
என்பாரா ஞாநி.இன்றைய நிலையில் இந்தியா பொறுமைக் காக்கிறது. இதுவே கூடாது என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இஸ்ரேல் உதவியைக் கோரி தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்கிறார்கள். இந்தியாவின் மீது தீவிரவாதிகள் தொடுத்த போர்தான்
26/11. இந்த உணர்வின்றி தங்கள் பாஜக எதிர்ப்பு அரசியலை இங்கும் முன்வைத்து எழுதும் ஞாநி, அருந்ததி போன்றோர் ஒன்றை நினைவில் கொள்வது நல்லது. ஜிகாதிகள் அவர்கள் பாஜகவை வெறுத்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது கருணை காட்டமாட்டார்கள்.

Labels: , , , ,

8 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

சோதனைப் பின்னூட்டம்

6:44 AM  
Blogger ஜ்யோவ்ராம் சுந்தர் மொழிந்தது...

/ஊழல் நடக்கிறது என்றால் ரோடு போடுவதில் ஊழல் ஆகவே ரோடே வேண்டாம்
என்பாரா ஞாநி./

ஆகா, இதே மாதிரிதாங்க சோவும் ஆர்க்யூ செய்வாரு :)

6:50 AM  
Blogger நாகார்ஜுனன் மொழிந்தது...

ரவி சீனிவாஸ்

தமிழவன் கட்டுரை பற்றி எழுதும்போது எம் எஸ் பிரபாகரா, EPW ஆசிரியராக இருந்ததே இல்லை என்று மேலே எழுதியிருக்கிறீர்கள்.

இவரை EPW ஆசிரியர் என்று ஒருவரை மேற்கோள் காட்டி தமிழவன் குறிப்பிட்டிருக்கிறார் - EPW ஆசிரியர் குழுவில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார் என்பதே சரி. டிசம்பர் 1975 முதல் ஜூன் 1983 வரை ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார். 1982-83 காலகட்டத்தில் நான் மும்பையில் இருந்தபோது இவரைச் சந்தித்துமிருக்கிறேன். EPW ஆசிரியராக இருந்த மறைந்த கிருஷ்ணராஜ் அவர்களின் நெருங்கிய நண்பரும்கூட. இருவரும் சம வயதினர். தொடர்ந்து EPW இதழில் பலகாலமாக எழுதிவருபவர். நான்காண்டு முன்பு கிருஷ்ணராஜ் மறைவின்போது பிரபாகரா எழுதிய கட்டுரையில் இதைக் குறிப்பிட்டும் இருக்கிறார்.

http://www.hinduonnet.com/fline/fl2103/stories/20040213006912500.htm

தமிழவன் பதிவைப் பிரசுரித்தவன் என்ற முறையில் இதை அங்கும் மறுமொழியாக எழுதியிருக்கிறேன்.

நமக்குள் வலுவான கருத்துமாறுபாடுகள் உண்டு என்பது தெரிந்ததே. இங்கு அவற்றை எழுத விரும்பவில்லை. இந்தத்தகவல் பற்றி மாத்திரம்தான் என் மறுமொழி. இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

நாகார்ஜுனன்

11:03 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

*****
/ஊழல் நடக்கிறது என்றால் ரோடு போடுவதில் ஊழல் ஆகவே ரோடே வேண்டாம்
என்பாரா ஞாநி./

ஆகா, இதே மாதிரிதாங்க சோவும் ஆர்க்யூ செய்வாரு :)
*****
ஒரு பாயிண்ட்டை பிடித்துக் கொண்டு தொங்காமல், மற்ற கருத்துக்களுக்கும் பதில் சொல்லலாமே ;-)

ரவி,
பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளத் தக்க கருத்துகளே. ஞாநி கூட பரவாயில்லை. இந்த அருந்ததி ராய் போன்ற ஜந்துக்களை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை :-(

1:54 AM  
Blogger அரவிந்தன் நீலகண்டன் மொழிந்தது...

இதே மாதிரி ஆர்க்யூ பண்ண இடங்கொடுக்கிற ஆர்க்யூமெண்ட்களைதானே மதச்சார்பின்மை வாதிகளும் முன்வைக்கிறாங்க? கீழே இருக்குற வாசகங்களை படியுங்க ஜ்யோவ்ராம் சுந்தர். நிச்சயமா அதனோட நீங்க ஒத்துக்க மாட்டீங்க.
It is not that India was never an independent country. The point is that she once lost the independence she had. Will she lose it second time? It is this thought which makes me most anxious for the future. What perturbs me greatly is the fact that not only India Sind by Mahomamed-bin-Kasim, the military commanders of King Dhar accepted bribes from the agents of Mohommed-Bin-Kasim and refused to fight on the side of their King. It was Jaichand who invited to Mahommed Ghori to invade India and fight against Prithvi Raj and promised him the help of himself and the Solamki kings. When Shivaji was fighting for the liberation of Hindus, the other Maratha nobleman and Rajput Kings were fighting the battle on the side of Mogul Emperors. When the British were trying to destroy the Sikh Rulers, Gulab Singh, their principal commander sat silent and did not help to save the Sikh kingdom. In 1857, when a large part of India had declared a war of independence against the British, the Sikhs stood and watched the event as silent spectator. Will history repeat itself? ஸ that in addition to old enemies in the form of castes and creeds we are going to have many political parties with diverse and opposing political creeds. Will Indians place the country above their creed or will they place creed above country? I do not know. But this much is certain that if the parties place creed above country, our independence will be put in jeopardy a second time and probably be lost for ever. This we must all resolutely guard against. We must be determined to defend our independence with the last drop of our blood...
இன்னைக்கு இந்த பேச்சை போட்டு யாரு பேசுனதுன்னு கேட்டா என்ன சொல்வீங்க? மோடி அல்லது அத்வானி பேசுனது அப்படீம்பீயளா ஜ்யோவ்ராம் சார்? ஆனா இதை சொன்னது யாரு தெரியுமா? அவருக்க பேரு பாபா சாகேப் அம்பேத்கர். உங்க அரசியல் சித்தாந்த சிறுவட்டங்களுக்காக இந்த நாட்டை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு விலை போகாதீங்க. இதை ரவி ஸ்ரீநிவாஸ் இன்னைக்கு சொல்றாரு. இதையேதான் அம்பேத்கர் நம்ம அரசியல் நிர்ணய சட்டத்தை நிறைவேற்றும் போது பாராளுமன்றத்துல சொன்னாரு. அவரு அன்னைக்கு சுட்டிக்காட்டின அதே எதிரிதான் இன்னைக்கும் நம்மளை அடிச்சுகிட்டு இருக்கான்.

5:30 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

EPW had an editor but there was no editorial committee or editorial
collective or editorial board.
So it would be apt to say that M.S.Prabhakara was an assistant editor with EPW.He was a correspondent for Hindu in Africa.
I had read many of his articles
in The Hindu and EPW.
I am amused/amazed by Nagarjunan's eagerness to interpret/explain the articles written by Tamilavan.

7:54 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

'இவரை EPW ஆசிரியர் என்று ஒருவரை மேற்கோள் காட்டி தமிழவன் குறிப்பிட்டிருக்கிறார் - EPW ஆசிரியர் குழுவில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார் என்பதே சரி'

EPW had an editor but there was no editorial committee or editorial
collective or editorial board.
So it would be apt to say that M.S.Prabhakara was an assistant editor with EPW.He was a correspondent for The Hindu in Africa. I had read many of his articles in The Hindu and EPW.
I am amused/amazed by Nagarjunan's eagerness to interpret/explain the articles written by Tamilavan.

7:56 AM  
Blogger ஜடாயு மொழிந்தது...

அருமையான எதிர்வினை ரவி. ஞாநி மற்றும் ராயின் காமாலை செக்யுலர் வாதங்களில் உண்மையில் இழையோடுவது இந்தியாவைக் குட்டிச் சுவராக்க வேண்டும் என்ற எண்ணம் தான் என்பதை தெளிவாகச் சொல்லி விட்டீர்கள்.

//ஒன்றை நினைவில் கொள்வது நல்லது. ஜிகாதிகள் அவர்கள் பாஜகவை வெறுத்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது கருணை காட்டமாட்டார்கள். //

உண்மை. மும்பைத் தாக்குதலுக்கு முன்பு வரை இந்தியாவின் மேட்டிமை வாதிகளும் (elitists) ஜிகாதி தீவிரவாதத்தை பசப்பு வாதங்கள் மூலம் நியாயப் படுத்தி வந்தார்கள், ஆனால் ஜிகாதிகளைப் பொறுத்தவரை தாமரைச் சின்னமும் சரி, தாஜ் ஓட்டலும் சரி எல்லாம் ஒன்று தான் என்பது இப்போது தான் அவர்களுக்கு உறைத்திருக்கிறது..

இந்த செக்யுலர்களூக்கு இன்னும் உறைக்கவில்லை.

வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது தான் ஞாபகம் வருகிறது - An appeaser is one who feeds the crocodiles thinking that he will be the last one to be eaten up.

11:35 AM  

Post a Comment

<< முகப்பு