அண்ணா போற்றிய ஹிட்லர்

அண்ணா போற்றிய ஹிட்லர்

(இந்த்துவ அமைப்புகள் பாசிசத்தை புகழ்ந்தன, ஹிட்லரை ஆதரித்தன என குற்றச்சாட்டு பல முறை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திராவிட இயக்கம்/சுயமரியாதை இயக்கம் ஹிட்லரை ஆதரித்ததை அல்லது பாசிசத்தை புகழ்ந்ததாக நான் படித்த அளவில் தெரியவில்லை. கீழே உள்ள கட்டுரை ஹிட்லர், யூதர் குறித்து அண்ணா 1937ல் எழுதியது. இதிலிருந்து ஹிட்லருக்கு ஆதரவாக சுயமரியாதை/திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் எழுதியுள்ளார்
என்று தெரிகிறது.

நான் அறிந்த அளவில் ராஜதுரை, கீதா, பாண்டியன்,அ.மார்க்ஸ் போன்றோர் சுயமரியாதை இயக்கம்/பெரியார் ஹிட்லரை ஆதரித்ததாக எழுதவில்லை. குடியரசில் இந்தக் கட்டுரை வெளியான ஆண்டு 1937. இது பெரியார் ஒப்புதல் இல்லாமல் அல்லது அவருக்குத் தெரியாமல் குடியரசில் வந்திருக்க முடியாது. இன்னும் தேடினால் சுயமரியாதை இயக்கத்தினர் வேறெங்காவது ஹிட்லரை ஆதரித்து எழுதியுள்ளனரா என்பது தெரிய வரலாம். ஆனால் ஹிட்லரை அவர்கள் ஆதரித்து எழுதியிருந்தாலும் அதை ஏற்று ஒரு விமர்சனைத்தை மேற்கூறியவர்கள் வைப்பார்களா என்பது சந்தேகமே. அவர்கள் இதற்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டலாம். அண்ணா எழுதியதைப் படித்தால் அவர் பார்பனரையும், யூதரையும் ஒப்பிடுவதையும், ஹிட்லர் மீது விமர்சனமின்றி ஆதரித்து எழுதியிருப்பதையும் அறியலாம்.)


பார்ப்பனர்களும் - யூதர்களும்விஞ்ஞான வளர்ச்சி தேவையென நாம் கூறினால் மின்சாரத்தில் ஆண்டவன் ஜோதி தரிசனம் காணலாம் என்றார் ஆச்சாரியார். புதுக்கருத்துக்களைக் கற்றுணர் என நாம் போதித்தோம். துளசிதாசரின் இராமாயணத்தைப் படித்து ரசிக்கச் சொல்கிறார்கள். பகுத்தறிவிற்காக நாம் பாடுபடுகிறோம். கட்டளைகளை மீறாதே, அலசாதே, வாய் பொத்தி, கை கட்டி, நின்று பணியாற்று என்கிறார் - காங்கிரஸ் சூத்திரதாரி. ஜாதி வித்தியாசத்தைத் தவிடு பொடியாக்க வேண்டுமென நாம் கூறுகிறோம். சேரிக்கு ஒரு நாள் சென்று எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு புதிய அடிமைப்பட்டம் சூட்டினால் போதுமே என்கிறார்கள்.

பண்டைப் பெருமைகளை எடுத்துக்காட்டி எளிய வாழ்க்கையே மேலென உபதேசம் செய்து மக்களை வறுமையிலேயே விட்டு விடுகிறார்கள். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நாம் முன்னேற்றம் வேண்டுகின்றோம். அவர் ஆதி காலத்துக்கு நம்மை அழைக்கிறார். சாதாரணமாக அழைக்கவில்லை, ஒரு மகாத்மாவின் பெயரைக் கூறுகிறார்கள். ஒரு தேசிய இயக்கத்தின் பெயரால் அழைக்கிறார்கள்.

எவ்வெவ்வைகளை நாம் மூடத்தனமென விளக்கிக் காட்டிக் குப்பையில் வீசி எறிந்தோமோ அவைகள் எல்லாம் புதிய மெருகிடப்பட்டு விலையாகின்றன. இதனை நாம் தடுக்காவிடில் பலனைத் தமிழர் இழந்துவிடுவர்.

ஆகவே நாம் அரசியலின் பேரால் ஏற்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தையும், மூட நம்பிக்கையையும் எதிர்த்து முன்னிலும் அதிக பலமாகக் கட்டுப்பாடாக முறையுடன் வீரத்துடன் உண்மைத் தமிழன் என்ற உணர்ச்சியுடன் போரிட வேண்டியது மிக அவசியம்.
இனி நமது எதிர்காலப் போராட்டத்தின் அவசியத்திலே யாருக்கும் அய்யம் ஏற்படாதென்றே நான் நம்புகிறேன். நமது போராட்டத்தின் காரணத்தையும் விளக்கியுள்ளேன். அதனை உணரும் தோழர்களுக்கு நாம் எங்கிருந்து போர் புரிய வேண்டும் என்பதை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுகிறேன்.

மனுவைக் கொண்டு நம்மை அடக்கிய பார்ப்பனர் மகாத்மாவின் காங்கிரசைக் கொண்டு இன்று அடக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆகவே அந்தக் காங்கிரசிடமோ, அதனுடைய நிழலில் பதுங்கி ஒதுங்கி நின்று கட்டியங் கூறி வாழும் வேறு கோஷ்டியிடமோ நாம் சேர எத்தகைய நியாயமும் கிடையாது என்றே எண்ணுகிறேன்.
தேர்தல் தோல்வி கண்டு தலைவர்கள் திடுக்கிட்டுப் போய்விடக்கூடும். போலிகள் மருண்டு விடக்கூடும். சமய சஞ்சீவிகள் கூடுவிட்டுக் கூடு பாயக்கூடும். புகழ் மாலை வேண்டுவோர் புதிய தேவதைகளைப் பூசிக்கத் தொடங்குவர். ஆதாயம் கிடைக்கப் பெறாதவர் வேறு நாயகனை அண்டிப் பிழைக்க எண்ணுவர்.

ஆனால் இயக்கத்தில் இரண்டறக் கலந்தவர் வேறு இடம் நாடார். வேறு இடங்களிலிருந்து கொடுமைகளைக் கண்டு சகியாது குமுறிக் கொண்டிருக்கும் பலரை இங்கு இழுக்கவே முற்படுவர். நாம் ஒழிக்க விரும்பும் ஆதிக்கம் சாமான்யமானது அல்ல. அந்த வகுப்பார் தமது நிலைமையைப் பாது காத்துக் கொள்ள சமூகத்தின் ஜீவநாடிகள் அவ்வளவையும் பிடித்துக் கொண்டே நம்மை ஆட்டி வைக்கின்றனர்.

ஜெர்மன் அதிகாரியான ஹெர் இட்லர் ஜெர்மனி தேசத்தில் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததை தம் சுயசரிதையில் விளக்கி இருப்பதைப் படிப்போர் தென்னாட்டிலே பார்ப்பனர் ஆதிக்கம் இருந்து வருவதனால் விளையும் சமூகக் கேட்டையும் நன்கு உணர்வர்.
பெரிய தொழிற்சாலைகளெல்லாம் யூதர்களிடமே இருந்தன. சர்வகலாசாலைகளில் யூதர்களே கலா மண்டபங்கள். அவர்கள் கரங்களிலே புலவர்கள் யூதர்களே. பத்திரிகைத் தொழில் அவர்களுடையதே. மந்திரி சபை அவர்கள் கைப்பாவை. விஞ்ஞானம் அவர்கள் சொத்து. சமதர்மம் அவர்களுடையது.

செல்வம் அவர்களிடம், வறுமை ஜெர்மனியரிடம், ஆதிக்கம் அவர்களிடம், அடிமைத்தனம் ஜெர்மனியரிடம். ஆனந்தம் அவர்களிடம், சோர்வு ஜெர்மனியரிடம்.

ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அரசியல் அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தமது சுயசரிதையில் எழுதினார்; எழுதியபடி செய்தும் முடித்தார். எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் ஏதாவதொரு வகுப்பு சமூகத்தின் ஜீவநாடிகளைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு மற்றைய வகுப்பினரை அடிமைப்படுத்தி சமூகத்திலே பிரிவுகளை வளர்த்து வருகிறதோ, அந்த வகுப்பின் ஆதிக்கத்தை ஒழிக்க மற்றைய வகுப்பினர் ஒன்று கூடிப் புரட்சி செய்வது சரித்திரம் சாற்றும் உண்மை.


அறிஞர்அண்ணா - "குடி அரசு" - 29-8-1937
http://thamizhoviya.blogspot.com/2008/11/blog-post_7610.html

Labels: , , , ,

10 மறுமொழிகள்:

Blogger கோவி.கண்ணன் மொழிந்தது...

//எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் ஏதாவதொரு வகுப்பு சமூகத்தின் ஜீவநாடிகளைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு மற்றைய வகுப்பினரை அடிமைப்படுத்தி சமூகத்திலே பிரிவுகளை வளர்த்து வருகிறதோ, அந்த வகுப்பின் ஆதிக்கத்தை ஒழிக்க மற்றைய வகுப்பினர் ஒன்று கூடிப் புரட்சி செய்வது சரித்திரம் சாற்றும் உண்மை.
//

இது தான் ஹை லைட் !

ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் தமிழரும் இந்துமதமும் என்ற அண்ணாவின் நூலில் இருந்து படித்தேன்.

:)

8:26 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

ஹிட்லர் செய்தது சரி என்கிறீர்களா
கோவி.கண்ணன். ஹிட்லர் கூறியது
போல் யூதர்கள் மேலாண்மை செலுத்தினார்கள் ஆகவே அவர்களை
பூண்டோடு அழிப்பது சரி என்று
சொல்கிறீர்களா?.ஜெர்மனியில் நடந்தது புரட்சி, ஆகவே இன அழிப்பு
சரி என்று வாதிடுகிறீர்களா?

8:54 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

இது அண்ணா சொன்னதாக நீங்கள் சொன்னது -

//னக்கு அரசியல் அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தமது சுயசரிதையில் எழுதினார்; எழுதியபடி செய்தும் முடித்தார்//

இது உங்கள் திரிப்பு -

//. ஹிட்லர் கூறியது
போல் யூதர்கள் மேலாண்மை செலுத்தினார்கள் ஆகவே அவர்களை
பூண்டோடு அழிப்பது சரி என்று
சொல்கிறீர்களா?//

அண்ணா, ஹிட்லர் யூதர்களின் மேலாண்மையை(இதை அண்டர்லைன் பண்ணுங்கோ ஸ்வாமி) ஒழித்தார் எனவே அது சரி என்று பாராட்டுகிறார் - எந்த வருடத்தில்??? 1937ல்.. அதாவது ஹோலோகோஸ்ட் வெளியே தெரியும் முன்னே! நீங்கள் சொல்வது ஏதோ அண்ணா யூதர்களையே ஒழித்துக்கட்டியதற்காக ஹிட்லரைப் பாராட்டியிருப்பதைப் போல் இருக்கிறது..

அதெப்படி பூணூல் மாட்டிக் கொண்டால் இப்படி குயுக்தியாய் யோசிக்கத் தோணுமா?

சரி... அண்ணா ஹிட்லரை ( ஹோலோகோஸ்ட் பற்றிய செய்திகள் வெளியாகும் முன்) பாராட்டியது யூத மேலாண்மையை ஒழித்ததற்காக. அவருக்கு ஹிட்லரின் ஒரிஜினல் நோக்கம் தெரிந்திருக்காது - உலகத்திற்கே கொஞ்சம் லேட்டாகத்தான் தெரிந்தது..

ஆனால்,, உங்கள் மூஞ்சே முசோசிலினியை சந்தித்து.. அவருடைய பாசிஸ்ட் பயிற்சிக் கல்லூரியின் மாடலை ஒத்து இங்கே ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வடிமைக்க உதவினார்...

இங்கே அண்ணாவின் நோக்கம் அவர் சொன்ன வார்த்தைகளிலேயே தெளிவாக இருக்கிறது (அதாவது ஆதிக்கம் செய்யும் சமூகத்தின் மேலாண்மையை ஒழிப்பு)- உங்கள் குடுமிகளின் நோக்கம் உங்கள் முந்தைய தலைவர்களின் செயல்களிலிருந்து விளங்குகிறது ( பாஸிஸ்ட் இயக்க வடிவத்தோடு ஒரு இயக்கத்தையே ஆரம்பிப்பது).

-முகம்மத் பிலால்

10:04 AM  
Blogger அரவிந்தன் நீலகண்டன் மொழிந்தது...

ரவி இதில் முக்கியமாக ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். 1940களின் முதல் ஐந்தாண்டுகளில்தான் ஹிட்லரின் வதை முகாம்கள் அவனது இன அழிப்பின் கொடூரங்கள் வெளிவர ஆரம்பித்தன. அதற்கு முன்னால் ஏறக்குறைய எல்லா தலைவர்களும் (சர்ச்சில் உட்பட, கென்னடி உள்ளாக) ஒன்றிரண்டு வார்த்தைகள் ஹிட்லரை ஆதரித்து அல்லது ஜெர்மனியை ஆதரித்து பேசியிருப்பார்கள். அதற்கு முன்னால் ஹிட்லரின் ஜெர்மனி செய்து வந்த வெளிப்படையாக தெரிந்த காரியம் ஒருவித இன்றைய இந்திய ரிசர்வேஷன் டைப்பில் யூதர்களை அரசு வேலைகள் கல்வி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து ஒழித்துக்கட்டியதே ஆகும். (பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை மாற்றாமல் இருப்பதற்கான காரணமே ஆரிய இனவாத கதையாடல் என்பது நாஸி யூத வெறுப்பு நடவடிக்கைகளையும் இந்திய அரசின் இட ஒதுக்கீடு நடவடிக்கையையும் 180 டிகிரி சுற்றுக்களில் இணைக்கும் ஒரு விஷயமாகும்) ஆகவே அண்ணாவின் இந்த வார்த்தைகளின் மூலம் நம்மால் கட்டமுடிந்த ஒரே விஷயம் அண்ணாவின்/திராவிட இயக்கத்தின் பிராம்மண துவேஷமானது நாஸிகளின் யூத துவேஷத்தை பிரதி எடுத்த சமாச்சாரமே ஆகும். ஈவெரா நாஸி ஜெர்மனிக்கு போய் அந்த சமுதாயத்தை வியந்திருக்கிறார். ஈவெரா ஒரு நிர்வாண முகாம் ஒன்றில் நிற்கும் படம் இருக்கிறது. ஈவெரா ஒரு கலகக்காரர் என காட்ட இது பயன்படுகிறது. இந்த உடல் நிர்வாணத்தை போற்றும் body culture நாஸி குழுக்களால் போற்றப்பட்டதாகும். (ஹிட்லரே பல நிர்வாணப்படங்களை வரைந்திருக்கிறார்.) எனவே நாஸிகளிடம் ஈவெராவுக்கும் பிடிப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. 1950களில் நாஸிகளின் அனைத்து அக்கிரமங்களும் வெளியான பின்னர் அண்ணா ஹிட்லர் யூதர்களை ஒழித்தது போல பிராம்மணர்களை ஒழிக்க முடியாதபடி தமிழ்நாட்டின் சமூக யதார்த்த நிலை தடுக்கிறதே என விசனப்பட்டிருக்கிறார். (இங்கு இன அழிப்பை அண்ணா தார்மீக அடிப்படையில் ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை.)

11:39 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//அண்ணா ஹிட்லர் யூதர்களை ஒழித்தது போல பிராம்மணர்களை ஒழிக்க முடியாதபடி தமிழ்நாட்டின் சமூக யதார்த்த நிலை தடுக்கிறதே என விசனப்பட்டிருக்கிறார்.////ஈவெரா நாஸி ஜெர்மனிக்கு போய் அந்த சமுதாயத்தை வியந்திருக்கிறார்.//


Sweep statements.. Can you prove this?

5:59 AM  
Blogger அரவிந்தன் நீலகண்டன் மொழிந்தது...

முகமது பிலால் கூறுவது தவறு. மூஞ்சே 1922 இல் இத்தாலிக்கு சென்று முஸோலினியை சந்தித்த போது அன்றைக்கு முஸோலினியும் உலக அளவில் பிரபலமான 'ஹீரோ'வாக இருந்தான் வில்லனாக அல்ல. வின்ஸ்டன் சர்ச்சில் முதல் பலர் அவனை பாராட்டினார்கள். நாஸிக்களுக்கும் பாசிஸ்ட்களுக்கும் முக்கியமான வேறுபாடுகள் உண்டு. நாஸிகள் போல ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீதான வெறுப்பினை பாசிஸ்ட்கள் தூபம் போட்டு வளர்க்கவில்லை. ஒரு செல்வாக்குள்ள யூத பாஸிஸ்ட் குழுவே முஸோலினிக்கு ஆதரவாக இயங்கிவந்தது. பாசிஸத்தையும் நாசியிஸத்தையும் இணைப்பவை 1) தனிமனிதனை அழித்து தலைமைக்கு அடிபணிய வைக்கும் தன்மை 2) ஜனநாயக வெறுப்பு 3) மாற்றுக்கருத்துகளை அழிக்க வன்முறையை பயன்படுத்துதல் 4) ஒரு கட்சி ஆட்சி முறை. ஆகியவை. நாசிகளின் தனி 'சிறப்பு' அவர்களின் இனவாத வெறுப்பியல். இதனை முஸோலினி பெரிய அளவில் ஆதரித்தானா என்பது தெரியவில்லை ஆனால் நிச்சயமாக எதிர்த்ததாக தெரியவில்லை. சி.என்.அண்ணாதுரை, ஈவெராமசாமி ஆகியோரது பிராம்மண வெறுப்பு ஹிட்லரின் யூத வெறுப்பினை கோட்பாட்டு ரீதியில் ஏற்றுக்கொள்வதே ஆகும். அதாவது ஒரு குறிப்பிட்ட மக்கள் சமுதாயத்துக்கு என்று 'வில்லத்தன்மைகள்' எனவே அந்த இன மக்களை அழிக்க வேண்டும் அல்லது நசுக்க வேண்டும் என்கிற கோட்பாடு. இந்துத்துவ அமைப்புகளோ இந்த விஷயத்தில் தெள்ளத்தெளிவாக நாஸி அமைப்புகளிலிருந்து வேறுபடுகின்றன. 'எத்தனைதான் நம் சமுதாயத்தோடு இணைந்தது போல காணப்பட்டாலும் யூதன் யூதன் தான்' என்பது நாஸி கோட்பாடு, பாரத கலாச்சாரத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளும் இஸ்லாமியரை பிறப்பால் இந்துவான ஒருவனைக் காட்டிலும் பலமடங்கு போற்றி தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் போக்கு இந்துத்துவ வெளிப்பாடு. ஆக. அண்ணாதுரைக்கும் ஹிட்லருக்கும் இருக்கும் கருத்தொற்றுமைகள் நிச்சயமாக இந்துத்துவவாதிகளுக்கும் நாசிகளுக்கும் கிடையாது.

7:40 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

என் கடைசி பின்னூட்டத்தை நீர் வெளியிடாததால்.. அதில் இருக்கும் கருத்து உமக்கு கசக்கும் உண்மையாக இருக்கிறது என்றே எடுத்துக் கொள்கிறேன்.

இனி நீரும் நீலகண்டனுமாக சேர்ந்து கும்மி அடிக்கலாம்

:))


நன்றி
பிலால்

10:24 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

What a surprise the left and right coming together through Mr. Ravi and Aravindhan Neelakantan in criticizing DK and Anna abouth their views on Hitler and Nazism. Mind Mr. Intellectulas, the Nazi party is after all a socialist Party when it came to power. Obviously, it would institute programs as class warfare. Of course, the whole world knows that HItler went in the wrong direction later applying racial theories; but he did not stop there he bloddy attacked every one/state there.

Once again. Germany was one of the non-colonial actors in the entire theater (during the first and second world war); the attitude to revenge arose after the severe punishment imposed on Germany by colonial actors there..

Kumar
skms1990@yahoo.com

10:59 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

To further add to my earlier comment: While refuting a very creative extension of Anna's views into a kind of ProAryan anti jewish political phenomenon, I would like to comment that leaders like Anna wrote about the "Aryamayai" a view HItler took and a notion celebrated by early hindutva pundits that Arvandhan Neelakanan has forgotten about. To refute the Neelakantan's view that it was not Anna or DK would have taken the Pro-HItler anti jewish view, but the hindutava (you know what I mean..) followers.
Read the following comments from HIndu Message (started in Oct 1917); At one of the conferences orgaized by the founders of this group the following resolution was adopted; "vedas and Smiritis had for their sole object the preservation of the Brahmana Race without any admixture of blood, so that the vedas may be preserved by a set of qiaified people and bred up in a purely vaidic atmosphere" Brhamin is the fit leader in the field of Varnashrama Dharma , in the sense that he alone is qualified to show the way to others"

To further cajole the upper caste non-brhamnis, this group went on to argue that even they are "noble aryans"; If you read more into these then you know the state of ignorance of the early vaidika hindutava groups. Of course, we beleive that have changed a lot. However, the point is it was not dravidian, justice party, or Anna would have held such racial views, rather hindutva groups. Neelkantan again would say, term "Aryan" meant wisdom, nobility etc. BUt in the context of political practice in the last 3 centuries before indpendence, it was utter racism. (HItler thotthar Iyya)

ref:
New India, July 25, 1916;
Prize essays o the practical methods of establishing varnashrama dharma (K.KOnam, 1917);

Kumar
skms1990@yahoo.com

12:43 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ரவி, அண்ணாத்துரையின் உரையில் அடுத்த பத்தியைத் தமிழவன் எழுதியிருக்கிறார்.

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=774

அண்ணாத்துரையும் ஹிட்லரும் -
தமிழவன்

“எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் ஏதாவதொரு வகுப்பு சமூகத்தின் ஜீவநாடிகளை பிடித்துக்கொண்டு ஆதிக்கத்தை வளர்த்துக்கொண்டு, மற்றைய வகுப்பினரை அடிமைப்படுத்தி, சமுதாயத்தில் பிரிவுகளை வளர்த்து வருகிறதோ, அந்த வகுப்பின் ஆதிக்கத்தை ஒழிக்க, மற்றைய வகுப்பினர் ஒன்று கூடி புரட்சி செய்வது சரித்திரம் சாற்றும் உண்மை.

அது மிக முரட்டுத்தனமான முறையிலே ஜெர்மனியிலே நடந்தது. அடக்குமுறைகளைக் கொண்டு ஹிட்லர் யூதர் ஆதிக்கத்தை ஒழித்தார். நாம் அறிவு எனும் ஆயுதம் கொண்டு ஆதிக்கத்தை ஒழிப்போம்....”

11:08 AM  

Post a Comment

<< முகப்பு