சு.சி அல்லது 'பாஸ்ட் புட்' இடுகை :)

சு.சி அல்லது 'பாஸ்ட் புட்' இடுகை :)

1) சட்டக்கல்லூரி வன்முறை குறித்து உண்மை அறியும் குழுவின் அறிக்கை,மற்றும் தொடர்புடைய ஒரு கட்டுரை இங்கே

வன்முறை நடந்த தினத்தன்று உண்மையில் என்னதான் நடந்தது, அதற்கு முந்தைய மூன்று வாரங்களில் என்னென்ன நிகழ்ந்தன என்பதை யாராவது எங்காவது காலவரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார்களா?

2) இந்தியாவிற்கு ஒரு முஸ்லீம் பிரதம மந்திரி, தமிழ்நாட்டிற்கு ஒரு தலித் முதலமைச்சர் என்பது போன்ற அடையாள அரசியல் விருப்பங்களை நான் ஆதரிக்கவில்லை.அப்படிக் குறிக்கோள்கள் வைத்துக் கொண்டு அரசியல் செய்வதையும் ஆதரிக்கவில்லை.
அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்-வெள்ளையர் என்ற பாகுபாடு போல் இந்தியாவில் இல்லை. மன்மோகன் சிங் இங்கு பிரதமாகிறார், சோனியா காந்தி பிரதமராகவும் வாய்ப்பிருந்தது, யாரும் எதிர்பாரதவகையில் தேவ கெளடா பிரதமரானர். வி.பி.சிங் பிரதமராவார் என்று யாராவது 1985ல் எதிர்பார்த்தார்களா. 1996ல் ஜோதிபாசு பிரதமர் ஆகவும் வாய்ப்பிருந்தது. 1991ல் நரசிம்மராவ் பிரதமரானது முற்றிலும் எதிர்பாராத ஒன்று.அந்துலே மகாராஷ்டிர முதல்வராக இருந்தார். மாயாவதி ஒரு முறைக்கு மேலும் உ.பியில் முதல்வராக முடிகிறது. இந்திய அரசியலின் இயங்கு முறை வேறு, அமெரிக்க அரசியலின்
இயங்கு முறை வேறு. தேவையான ஆதரவு கிடைத்து, சாதகமான சூழலும் ஏற்படுமானால் ஒரு தலித் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராகலாம். ஆனால் தலித்தைத்தான் பிரதமராக்குவோம் என்று பிரச்சாரம் செய்து, ஆதரவு திரட்டுவது கடினம். அது மக்களிடம் எடுபடாது.

3)கெயில் ஒம்வேத் எழுதிய Seeking Begumpura: The Social Vision of Anticaste Intellectuals என்ற நூல் அண்மையில் வெளியாகியுள்ளது/யாகயுள்ளது என்று அறிகிறேன். நான் படித்து எழுத வாய்ப்பில்லை. வலைப்பதிவர்களில் யார் இதைப் படித்து
விமர்சனம் எழுதப் போகிறார்கள்?.

4) கிட்டதட்ட 10 அல்லது 9 ஆண்டுகளுக்கு முன் தமிழில் தேசியம்,தேசியவாதம் குறித்த தொகுப்பு நூல் ஒன்று கொண்டுவர வேண்டும் என ஒருவரும், நானும் பேசினோம், எங்களுக்குள் விவாதித்தோம்.அந்த யோசனையை முதலில் சொன்னவர் அவர்தான்.
நான் கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுப்பது, அவர் சிலவற்றை தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்தோம். அப்போது நான் பெண்ணியம், தேசியம், குடியுரிமை குறித்து படித்துக் கொண்டிருந்தேன், அது தொடர்பான சில கட்டுரைகளும் கைவசமிருந்தன. அதில் ஆய்வு
செய்த ஒருவருடன் தொடர்பிருந்தது. தேசியம்,தேசியவாதம் குறித்த ஒரு விமர்சன அணுகுமுறையை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டிய தேவையையும், தேசியம் குறித்த புதிய பார்வைகளை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் அப்போது
உணர்ந்திருந்தேன். ஆனால் அவப்பேறாக அந்த முயற்சி முழுமையடையவில்லை. அப்போது அந்த தொகுப்பு நூல் குறித்து நான் யாரிடம் விவாதித்தேன் என்பதை யூகிக்க முடிகிறதா?. பின்னூட்டத்தில் இடலாம். சரியான விடைக்கு பரிசெல்லாம் கிடையாது.

சு.சி என்றால் சுந்தர்.சி அல்ல, சுருக்கமாக சில என்று பொருள் :).

அம்புட்டுத்தான், இந்த இடுகை முடிஞ்சது, எருமை மாடு கனைச்சுது :). 450வது இடுகை இது.

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/0089d1f6fbf9b7e8/545646f08622c874?#545646f08622c874

Labels: , ,

4 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

அப்போது அந்த தொகுப்பு நூல் குறித்து நான் யாரிடம் விவாதித்தேன் என்பதை யூகிக்க முடிகிறதா?

வேறு யாரிடம்? கண்ணாடிக்கு முன்னர்தான்!

10:57 AM  
Blogger உமையணன் மொழிந்தது...

5. ஞாநி?

2:50 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஜெயமோகன் - ஞானி கடிதங்கள்
http://jeyamohan.in/?p=728
உங்கள் கருத்து?

8:29 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

'வேறு யாரிடம்? கண்ணாடிக்கு முன்னர்தான்!'
கண்ணாடிகளை நான் அப்படியெல்லாம்
பயமுறுத்துவதில்லை :)
. ஞாநி?- இல்லை

ஜெயமோகன் - ஞானி கடிதங்கள்.
தோமையார் விவகாரம்-என்னவென்று
தெரியாது.ஞானியின் எழுத்துக்களைப்
படித்து பல ஆண்டுகளாகிவிட்டன.
தொடர்பு இல்லை.ஆகவே கருத்து
சொல்வதாகயில்லை.

6:59 AM  

Post a Comment

<< முகப்பு