வன்முறையை நான் ஆதரிக்கவில்லை

வன்முறையை நான் ஆதரிக்கவில்லை

சட்டக்கல்லூரி மோதலில், தலித் மாணவர்கள் பதிலுக்கு வன்முறையில் ஈடுப்பட்டதை ஆதரித்து/நியாயப்படுத்தி சில வலைப்பதிவுகளில் எழுதப்பட்டுள்ளது. அதை நான் ஆதரிக்கவில்லை. மாறாக வன்முறை பொருத்தமான தீர்வே அல்ல. அது நீண்டகாலப் போக்கில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதுகிறேன். சென்னை நகரில்,தமிழ்நாட்டில் உள்ள தலித் ஆதரவு சக்திகளை, சிவில் சமூக அமைப்புகளை பயன்படுத்தி தலித் மாணவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை, கோரிக்கைகளை அரசின், பொதுமக்களின், ஊடகங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். அதன் மூலம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். அதனால் தீர்வுகள் உருவாக வாய்ப்பிருந்திருக்கும்.

இப்போது இது அரசியலாக்கப்பட்டுவிட்டது. தலித் மாணவர்களின் பால் பொதுமக்களின் ஆதரவு,அனுதாபம் கிடைப்பதற்கு இந்த வன்முறை தடையாகிவிட்டது. மேல்விபரங்கள் தெரியவந்த பின் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

Labels: , , ,

1 மறுமொழிகள்:

Blogger agraharathil kazuthai மொழிந்தது...

//தலித் மாணவர்களின் பால் பொதுமக்களின் ஆதரவு,அனுதாபம் கிடைப்பதற்கு இந்த வன்முறை தடையாகிவிட்டது//

இல்லை. இது போன்ற பதிவுகள் தான் கிடைக்கிற கொஞ்ச நஞ்ச அனுதாபத்தையும் தடை செய்வதாக இருக்கிறது.

இந்த வன்முறை, சில நாட்களுக்கு முன்பு நடந்த வன்முறை ( தேவர் குருபூசையில் இருந்தே, தலித் மாணவர்களை தேர்வுகளை எழுத விடா வண்ணம் அச்சுறுத்தல் இருந்தது. வெடித்த பின்பு, ஒரு தலித் மாணவர் தாக்கப்பட்டு, அவர் காது அறுந்தது. அவர் இன்னமும் சிகிச்சையில் இருக்கிறார்) யின் எதிர்வினை என்று உங்களுக்குப் புரியவே புரியாதா? எதுவாக இருந்தாலும் வன்முறை தப்பு என்று நீங்கள் சொல்வது, ' நீங்கள் நேரடியாகப் பார்க்கும் வன்முறைக்கு மட்டுந்தானா?

இன்றைக்கு ஒரு தலித் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், தென்மாவட்டங்களில், ஆதிக்க சாதியினர், தலித் மாணவர்கள் மீது கட்டவிழ்க்கும் வன்முறையும், அதற்கு தூண்டு கோலாக இருக்கும் சாதி சங்கங்கனின் ஆதரவு பற்றியும் என்ன தெரியும்? ஆதிக்க சாதியினர் நிறைந்த இடங்களில், ஒரு தலித் மாணவனின் நிலைமை கொடுமையானது. சலூன் கடைக்குள் போய்விட்டு வந்தால், தலைக்குக் குளித்து விட்டு வரவேண்டும் என்பதும், நம் வீட்டு கக்கூஸ் கழுவ வருபவர் புழக்கடை வழியாக வரவேண்டும் என்பது நமக்கு எப்படி இயல்பானதோ, அதே போலத்தான் இந்த அடக்குமுறையின் இயல்பானது. ஆகையால் இது பலருக்கும் உறைப்பதில்லை. தலித் மாணவர்களின் வன்முறை, இபிகோவின் படி குற்றம். ஆகையால், அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதிலே எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், இந்த வன்முறைக்குக் காரணமாக் இருந்த ப்ரொவொகேஷனை என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுங்கள்.

10:39 AM  

Post a Comment

<< முகப்பு