கிழிந்ததும், கிழியாததும், புரிந்ததும், புரியாததும்

கிழிந்ததும், கிழியாததும், புரிந்ததும், புரியாததும்

1, ஆதவன் தீட்சண்யா மனு விரோதி என்பதை தன் பெயருக்கு முன், சிலர் சன் டிவி புகழ், சினிமா புகழ் என்று போட்டுக் கொள்வது போல் போட்டுக் கொள்ளலாம். முடிந்தால் அதை வணிக முத்திரை (trade mark) ஆக பதிந்து கொள்ளலாம். பிறருக்கு ஆதவன் தீட்சண்யாவால் அங்கீகரிக்கப்பட்ட மனு விரோதி என்று சான்றிதழ் வழங்கலாம். அல்லது ISO தரச்சான்றிதழ் போல் எதையாவது வழங்கலாம். இதற்கெல்லாம் ஆதரவு தர ஒரு கூட்டம் தமிழ் நாட்டில் நிச்சயம் இருக்கும்.

2,தலித் முரசில் ராம் புன்னியானி எழுதியதை தமிழாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பல பிழைகள் (கருத்து, தகவல் இத்தியாதி). படிப்பதற்கு கோர்வையாக இல்லை. பிரச்சினை மூலத்திலா அல்லது மொழிபெயர்ப்பிலா அல்லது இரண்டிலுமா என்று தெரியவில்லை. மூலம் ஆங்கிலத்தில் இணையத்தில் கிடைப்பதாகத் தெரியவில்லை.புன்னியானியின் எழுத்துக்கள் மீது எனக்கு மரியாதை இல்லை. ஏனெனில் இந்த்துவ விரோதம் என்ற பெயரில் அவர் தவறான கருத்துக்களைப் பரப்புகிறார். அப்சல் குரு விவகாரத்தில் அவர் எழுதியதைப் படித்தபின் அவர் இன்னொரு போலி மதச்சார்பின்மைவாதி என்பது தெளிவாகப் புரிந்தது.புன்னியானி, புரபுல் பித்வாய் போன்றோர் என்னைப் பொறுத்தவரை போலி மதச்சார்பின்மைவாதிகள்தான். ஹிந்த்துவ எதிர்ப்பு என்பதற்காக இவர்களை ஆதரிக்க முடியாது. .

3, அமெரிக்காவின் டவுசர் கிழிந்ததோ இல்லையோ நிதிச் சிக்கல் பற்றி தமிழில் எழுதுபவர்கள் நம் மூளையை குழப்பிவிடுவார்கள் போலிருக்கிறது.போகிற போக்கில் எதையாவது உளறுவதற்கு இந்த நெருக்கடி பலருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறது. சர்வதேச பொருளாதாரம், குறிப்பாக நிதிப் பொருளாதாரமும், சந்தைகளும் புரிந்து கொள்ள எளியவையல்ல. அதற்காக படிப்பவர்கள் எதை எழுதினாலும் நம்பிவிடுவார்களா?. இந்திரா பார்த்தசாரதி மார்க்ஸ் அன்றைக்கே சொன்னார் என்று எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. பொதுவாக இன்றைக்கு பரபரப்பான அலசல்கள், மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்கள், ஹிரோ-வில்லன் கதையாடல்கள் போதும் என்று நினைப்பவர்களுக்கு நிறையவே தமிழில் இருக்கிறது. மன்மோகன் சிங், கலாம், மோடி, புஷ் என்று சிலரை எப்போதும் எதற்கு வேண்டுமானாலும் திட்டலாம். உணவு மிகுதியால் ஏற்படுவது சர்க்கரை நோய் போன்று எதை வேண்டுமானாலும் உளறலாம்.அது வெளியான அடுத்த வாரம் இந்தத் தகவல் தவறு என்று பிழை திருத்தம் வரும் என்றெல்லாம் தமிழ் வாசகர் எதிர்பார்க்கக் கூடாது.


அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, அதன் சர்வதேச தாக்கங்கள் பற்றி ஜல்லியடிக்கும் போது எதை எழுதினாலும் பிரசுரமாகும் என்றே தோன்றுகிறது. பார்பனியமும், முதலீட்டியமும் சேர்ந்து அமெரிக்கவை திவாலாக்கின, அதற்கு அத்வானியும், மன்மோகன் சிங்கும் ஆலோசனை சொன்னார்கள் என புதிய ஜனநாயக/புதிய கலாச்சார ‘மாமேதைகள்' எழுதக்கூடும், ஜமாலன் சதிவாதம்+கட்டமைப்பு வாதம்+சாராம்சவாதம் என்று மூன்றையும் கலந்து கட்டி இதே பொருளில் கட்டுரை(கள்) எழுத வாய்ப்புள்ளது.

என்னைப் போன்ற எதுவும் தெரியாத ஏகாம்பரங்கள், மற்றும் ‘பொலிடிகலி இன்கரெக்ட்' பொன்னம்மாக்கள் இருக்கிற சிற்றவினைக் கொண்டு எதையாவது படித்து, தட்டுதடவி தடுமாறி புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டியதுதான், வேறு வழியில்லை. உளறினாலும்,பொலிடிக்கலி கரெக்டாக உளறவேண்டும் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் :). போன ஆண்டே படிக்காமல் கிடப்பில் போட்டிருந்த ஒரு நூலையும்,
வேறு சில கட்டுரைகளையும் இப்போது படிப்பதற்கான வரிசையில் வைத்திருக்கிறேன்.


எழுதப்பட்டது 24/10/2008 வலையேற்றம் 3/11/2008

Labels: ,

2 மறுமொழிகள்:

Blogger Sridhar Narayanan மொழிந்தது...

//அமெரிக்காவின் டவுசர் கிழிந்ததோ இல்லையோ //

பழைய கதை ஒன்று சொல்வார்கள். John vomitted crow என்று. அந்த மாதிரி அமெரிக்காவில் யாருக்காவது நகச்சுத்தி, ஹைட்ரோஸில் இருந்தால் கூட 'முதலாளித்துவ பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற அமெரிக்கர்கள்' என்று கண்டிப்பாக அடைமொழி கொடுக்க வேண்டும்.

லீமென் பிரதர்ஸ் வீழ்ந்ததுக்கு ஏகப்பட்ட விளக்கங்கள் கொடுத்தவர்கள் 150 வருட காலம் அது வாழ்ந்ததற்கு ஒரு விளக்கமும் கொடுக்க மாட்டார்கள். இவர்கள் எழுதுவதோ 100 நாட்கள் கூட தங்காது என்பது வேறு விசயம்.

பொருளாதார வீழ்ச்சி என்பது தவிர்க்க முடியாத சுழற்சியின் ஒரு பகுதிதானே. Sine curve போன்ற ஏற்றமும், வீழ்ச்சியும் இணைந்ததுதானே எந்தவொரு ப்ராசஸும்.

//பொலிட்டிக்கலி இன்கரெக்ட் பொன்னம்மாக்கள்//

:-)) நல்லா இருந்தது இந்த வார்த்தை பிரயோகம்.

10:49 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

:) nanri

11:31 AM  

Post a Comment

<< முகப்பு