லூஸ் டாக்

லூஸ் டாக்

லூஸ் டாக் - Ravi Srinivas on couch

நதியா கால்ஷீட் கிடைக்கல, சாரா பாலின்ட்ட கால்ஷீட் கேட்கலாமா, ஒரு பாட்டு,, இரண்டு பைட்டை அலாஸ்கால்ல எடுத்துறலாம்.

அசினுடன் ஒபாமா கால்கேட் விளம்பரத்துல நடிக்கிறாராமே

நானாவதி கமிஷன் ரிப்போர்ட் நெட்டில கிடைக்குதாமே, அதையும், தெஹல்கா, பிரண்ட்லைனை வைச்சு ஒரு புஸ்தகம் ஒரு வாரத்தில எழுதி வெளிய தள்ளிறலாமா

வாஷிங்டன் மியுச்சல்ல பொண்ணு கல்யாணத்துக்கு பணம் போட்டிருந்தேன், பொண்ணு இன்னொரு பொண்ணை இழுத்துட்டு ஒடிப் போய்ட்டா, இப்ப பணமும் கிடைக்குமான்னு தெரியல

அனில் அம்பானி அமெரிக்கால பாங்க்கை டேக் ஒவர் பண்ணறாராமே, அப்ப உங்க சன் இன் லாவுக்கு திரும்ப வேலை கிடைக்குமா

நேத்துதானய்யா ஒரு அறிக்கையில கையெழுத்துப் போட்டேன், இன்னிக்கு காலையில இதுலயா, வரவர எங்கலெல்லாம் கையெழுத்துப் போட்டேன்கிறது மறந்திருது

டெல்லி என்கவுண்டரை வைச்சு அர்ஜூன் படம் எடுக்கிறாராம், அதுல பிரசாந்த் பூஷன், அ.மார்ஸ் கெளரவ வேடத்தில நடிக்கிறாராங்களாம், நானும் ரெண்டு சீன்ல தலை காட்டரேன்.

குளோபல் வார்மிங் பத்தி ஒர்க்‌ஷாப்பா, ஆளை விடுங்கப்பா, நான் இப்போ நானோடெக் ரெகுலேஷன்னல்ல பிசி, அடுத்த ஆறு மாசத்தில் 8 கான்பிரன்ஸ், 10 ஒர்க்‌ஷாப்பிற்கு கமிட் பண்ணியிருக்கேன், பழைய பேப்பரை ரிசைக்கிள் பண்ணி, கொஞ்சம் புதுசா எழுதித்தரேன், ப்ரொஸிடிங்க்ஸில் போட்டிருங்க, உங்க வி.சி சந்தோஷப்படுவார்

பட்நாகர் பிரைஸா, ஐ டோன்ட் கேர், என்னோட டார்கெட் நோபல்தான், நத்திங் லெஸ்தான் நோபல்

த்ரிஷா தமிழ் பேசப்போறாங்களா, நான் பிரெஞ்ச் பேசற மாதிரி இருக்கப் போவுது

தீஸின்னா சும்மாவா, முத டிராப்ட் 600 பக்கம், 20 வைரைஸ், 30 டிரோஜனோட லாப்டாப்பில் இருந்து கைடுக்கு ஈமெயில்ல அனுப்பியாச்சு

வேட்கையின் தாகமா, ஏதோ 11 மணி மலையாள ஆர்ட் பட டைட்டில் மாதிரி இருக்கே

எந்திரன்ல்ல பாப்லா நெருடா பொயட்ரியை ரஜினி படிச்சு ஐஸ்வர்யா ராய்ட்ட விளக்குறாராம், நம்ம சுகுமாரன் ட்ரான்ஸ்லெட் பண்ணது, அடுத்து ஷாட்டல மச்சு பிச்சுல டூயட் சீன் வருதாம், பின்னாடி நெருடா முகமூடி போட்டுட்டு ஆயிரம் பேர் ஆடறாங்களாம்,
சுஜாதா ஐடியாவாம், சுஜாதான்னா சும்மாவா, கிளாஸ், மாஸ் ரெண்டையும் லிங்க் பண்ணறதில்ல அந்த ஆளை அடிச்சுக்க ஆளே கிடையாதய்யா

ஏழைக்கும் டிப்ரஷன் வரும் தாஸ் காப்பிடல் மூணாவது வால்யும்ல் மார்க்ஸ் பால்ஸாக் நாவலை கோட் பண்ணி இதை அனலிஸ் பண்ணியிருக்கார், அதை இன்னிக்கு படிச்சாலும் பிரெஷ்ஷா இருக்கு டாக்டர், நானும் அத மாதிரி எஜுகேடட் ஏழைதான்னு சொன்ன நம்ப மாட்டங்கராங்க சார்.

என்னது இராம.கியும், ரவிசங்கரரும் லூஸ் டாக்க்கு தமிழ்ல புதுசா வார்த்தை கண்டுபிடிக்கிறாங்களா, டாக்டர் என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க

Labels: , ,

7 மறுமொழிகள்:

Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

அருமை அருமை :)

6:40 AM  
Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

உங்களுக்கு இப்படி கூட எழுத வருமா? விபத்து போல அபூர்வமாய் சிரிப்பவர் என்றல்லவா நினைத்திருந்தேன். :-)

7:49 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

'உங்களுக்கு இப்படி கூட எழுத வருமா? விபத்து போல அபூர்வமாய் சிரிப்பவர் என்றல்லவா நினைத்திருந்தேன். :-)'

நிஜத்தில் நான் நகைச்சுவை ரசிகன்.கிண்டலும், கேலியும் இல்லாமல் நானில்லை.இந்த
கிண்டலும்,கேலியும் எனக்கு
நெருக்கமானவர்களுக்குத்தான்
தெரியும்.

8:19 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

'விபத்து போல அபூர்வமாய் சிரிப்பவர் என்றல்லவா நினைத்திருந்தேன். :-)'

இப்போதெல்லாம் விபத்து
அபூர்வமானாதாக இல்லை :(.
அதற்காக விபத்து வருங்கால் சிரிக்க என்று நான் வள்ளுவர்தனமாக எழுத முடியாது :).

8:22 AM  
Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) மொழிந்தது...

ரவி ஸார்..

நானும் உண்மையாக உங்களிடமிருந்து இப்படியொரு மனதை எதிர்பார்க்கவில்லை..

நன்று..

9:42 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

லூஸ் டாக் - இலகு பேச்சு

இளகிய பேச்சு வேறு :)

4:51 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

நதியா கால்ஷீட் கிடைக்கல, சாரா பாலின்ட்ட கால்ஷீட் கேட்கலாமா, ஒரு பாட்டு,, இரண்டு பைட்டை அலாஸ்கால்ல எடுத்துறலாம்.

-:)

10:17 AM  

Post a Comment

<< முகப்பு