தெகல்கா, சிமி, மறைக்கப்பட்ட உண்மைகள்

தெகல்கா, சிமி, மறைக்கப்பட்ட உண்மைகள்

இந்த வார தெகல்கா சிமி(SIMI) ஆதரவு சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. தடை செய்யப்பட்ட சிமிக்கு ஆதரவாக தெஹல்கா எழுதுவதுடன், சிமி குறித்த உண்மையான தகவல்களையும் மறைக்கிறது. சிமி ஒரு மதத்தீவிரவாத அமைப்பு. அதன் குறிக்கோள் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது. தெகல்காவிற்கு கொடுத்துள்ள பேட்டியில் அதன் முன்னாள் தலைவர் கூறுகிறார்.

It is said that SIMI’s ideology does not believe in the Indian Constitution, that it is pan-Islamic, that it rejects India’s nationalism?

These are only allegations. We have given our detailed written explanations to the courts. Please read them if you can. I believe that in a land where everybody is allowed to follow his religion and principles and popularise those ideals, we also want that all those who live on this planet should live like Allah’s people, and live their lives as per the teachings of Allah and Prophet Mohammad. This is our desire. But we do not use any force for this, because Allah Himself has rejected force. But is it wrong to make one’s ideologies public and propagate it in a decent manner? No.

There are 80 crore Hindus in India. What does SIMI think of them?

This is a very good question. Allah has set some rules for his kingdom. They say that you should call the people on the earth towards the religion of god with service, advice, in a decent way, with politeness, with logic. All of us are sons and daughters of Adam and Eve. We love all human beings and want to save them all from the fires of hell. We want them to live in a just world and, after death, live peacefully in heaven.

அதாவது இஸ்லாமியர் அல்லாதோரை இஸ்லாத்தின் பாதைக்கு திருப்புவது தங்கள் குறிக்கோள் என்கிறார்.இந்திய அரசியல் சட்டத்தை வேறு குறிப்பிடுகிறார். அரசியல்
சட்டம் மத உரிமை என்ற பெயரில் மத மாற்றம் செய்வதை அடிப்படை உரிமையாக
கருதவில்லை என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புகளில் கூறியிருக்கிறது. மேலும் மத
உரிமை என்பது கட்டற்ற உரிமை அல்ல.மகாத்மா காந்தியும் மத மாற்ற நடவடிக்கைகளை
ஆதரிக்கவில்லை. எம்மதமும் சம்மதம் என்ற நம்பிக்கை இல்லாத சிமிக்கு ஆதரவாக
இருப்பவர்கள் பிற மதங்களின் விரோதிகள்தான். அவர்கள் மதச்சார்பின்மை என்பதை
நம்பவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே இதழில் தருண் தெஜ்பால் எழுதுகிறார்

While extreme viewpoints have a right to exist in a free society, it goes without saying that no one ought to have any sympathy for the positions of bigoted groups and individuals. The kind who base their existence on perilous ideas of divine rights, exclusion of unbelievers, intolerance, violence, and a preferred way of life to which everyone else must conform. If SIMI is one such organisation, it deserves our criticism and scorn.

அவர் மேற்கூறிய பேட்டியைப் படித்தாரா, படித்த பின்னும் இப்படித்தான் எழுதுகிறாரா. தெகல்கா இதழில் சிமி மீது அதன் அடிப்படை கோட்பாடு குறித்து எந்த விமர்சனம் இல்லை, அனுதாபமும், ஆதரவும்தான் தெரிவிக்கப்படுகிறது. தெகல்காவின் மதச்சார்பின்மை என்பது
இந்த்துவ எதிர்ப்பு என்பதுடன் நின்றுவிடுகிறது போலும்.

அது மட்டுமின்றி தெகல்கா சிமி குறித்த முக்கியமான உண்மைகளை மறைத்து விட்டு எழுதுகிறது. உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சிமி ஒருபிரிவினைவாத அமைப்பு என்று கூறியிருக்கிறார்கள்.சிமி ஒரு மாணவர் அமைப்பாக அல்லது முஸ்லீம்களின் கல்விக்காக பாடுபடும் அமைப்பாக இருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக அது மாணவர் அமைப்பு என்ற பெயரில் தேச விரோத,சமூக விரோத அமைப்பாக இருந்ததுதான் அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் காரணம். தெகல்காவின் முழு நோக்கம் என்ன, அது எந்தெந்த காலகட்டங்களில் எதையெல்லாம் முன்வைத்து இயங்கியது என்பதை தெகல்கா எழுதவில்லை.

இது குறித்து அடுத்த இதழ் தெகல்கா வெளியான பின் விரிவாக எழுதுவோம்.தெகல்காவின் இந்தப் போக்கு கண்டிக்கதக்கது. தெகல்கா தெரிந்தோ, தெரியாமலோ இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் அனுதாபம் காட்டுகிறது. அது தெகல்காவிற்கும் நல்லதல்ல, சமூகத்திற்கும் நல்லதல்ல.

Labels: , ,

5 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

நான் உண்மையென்று நம்பும் ஒரு கருத்தை மக்கள் முன் எடுத்து வைப்பது எப்படி தீவிரவாதமாகும். அந்த உண்மைக் கொள்கையை மற்றவர்களும் ஏற்று நடந்து அவர்களும் நன்மையைப் பெறும் நல்ல சமுதாயமாக மாற வேண்டும் என நினைப்பது எவ்வாறு தவறாகும்.

ஒரு கொள்கை சிறந்ததென்றால் அது எவ்வாறு சிறந்தது அதனால் விளையும் பயன்கள் என்ன என்று மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது கடமையல்லவா? யாரையும் எந்த வகையிலும் நிர்ப்பந்தப் படுத்தினால் - அதுதான் தவறு.

ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளதல்லவா?

எம்மதமும் சம்மதம் என்ற நம்பிக்கைக்கும் மதச்சார்பின்மைக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்.

சிமி பயங்கரவாத அமைப்பென்றால் அது எங்கெல்லாம் தன் பயங்கரவாதத்தின் மூலம் நாட்டின் சட்ட ஒழுங்கை கெடுத்தது என்று சொல்ல வேண்டும். அவ்வாறு அதைத் தெளிவாக நீங்கள் எடுத்துச் சொன்னால் முஸ்லீம்களும் அவர்களை தவறானவர்களென்று மற்றவர்களுக்கு குறைந்த பட்சம் மற்ற முஸ்லீம்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

11:05 AM  
Blogger கால்கரி சிவா மொழிந்தது...

பதிவிற்கு நன்றி.

சிமி தலைவரின் பதிலில் அப்பட்டமான மதவெறி தெரிகிறது.

இந்திய ஊடகங்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

இவர்களை புறகணிப்போம்

9:13 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

கோவை ஞானி பற்றி ஜெயமோகன் எழுதியுள்ளதை படித்தீர்களா?ஞானி
கிறித்துவ அடிப்படைவாதிகளின் ஆதரவாளரா? தோமையாரை முன்வைத்து நடக்கும் முயற்சிகளை
ஞானி ஆதரிக்கிறாரா?

7:43 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

1)கோவை ஞானி பற்றி ஜெயமோகன் எழுதியுள்ளதை படித்தீர்களா?

இல்லை

ஞானி கிறித்துவ அடிப்படைவாதிகளின் ஆதரவாளரா?

இல்லை என்றுதான் கருதுகிறேன்

தோமையாரை முன்வைத்து நடக்கும் முயற்சிகளை ஞானி ஆதரிக்கிறாரா?

அவை என்ன என்பது எனக்குத் தெரியாது, ஞானி ஆதரிக்கிறாரா
என்பதும் எனக்குத் தெரியாது.
ஞானியுடன் நான் தொடர்பில் இல்லை. அவர் என்ன எழுதுகிறார்,எதில் எழுதுகிறார்
என்பதும் எனக்குத் தெரியாது.முன்பு
தமிழ்நேயம் என்ற இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
அது வருகிறதா அல்லது நின்றுவிட்டதா என்பது எனக்கு தெரியாது.

ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார்
என்பதை நான் அறியேன்.

2)'நான் உண்மையென்று நம்பும் ஒரு கருத்தை மக்கள் முன் எடுத்து வைப்பது எப்படி தீவிரவாதமாகும். அந்த உண்மைக் கொள்கையை மற்றவர்களும் ஏற்று நடந்து அவர்களும் நன்மையைப் பெறும் நல்ல சமுதாயமாக மாற வேண்டும் என நினைப்பது எவ்வாறு தவறாகும்'

நீங்கள் பிறர் உங்களுக்கு சமமானவர்கள் அல்ல, அவர்களின்
மதக் கொள்கையை மாற்ற வேண்டும்
என்று நினைப்பதே பிரச்சினை.மத
மாற்றம் செய்வது அடிப்படை உரிமை
அல்ல.

'ஒரு கொள்கை சிறந்ததென்றால் அது எவ்வாறு சிறந்தது அதனால் விளையும் பயன்கள் என்ன என்று மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது கடமையல்லவா? யாரையும் எந்த வகையிலும் நிர்ப்பந்தப் படுத்தினால் - அதுதான் தவறு.'

இஸ்லாத்தின் பெயரில் எந்த
நிர்ப்பந்தமும் செய்யப்படவில்லை
என்றால் ரசூல் ஏன் ஊர்விலக்கு
செய்யப்பட்டார்.பிறரின் சுதந்திரத்தை
மதிப்பவர்கள் ஏன் தஸ்லீமா,ருஷ்டிக்கு
கொலை மிரட்டல் விட வேண்டும்.
பத்வா என்ற பெயரில் செய்யப்படுபவை என்ன?
இஸ்லாம்தான் சிறந்தது என்பதால் இஸ்லாமியர் அல்லாதோரை மதமாற்றம் செய்ய
முயல்வோம் என்ற அணுகுமுறையே
தவறு.
'ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளதல்லவா?
'
ஆம், ஆனால் அதன் பொருள் பிற
மத நிந்தனை,மதமாற்ற பிரச்சாரம்
என்பதுதான் என்று நீங்கள் புரிந்து
கொண்டால் அது தவறு.அதே
பேச்சுரிமை,எழுத்துரிமை இஸ்லாத்தினை,இஸ்லாமியரை
விமர்சிக்க பிறருக்கு இருக்கிறது
என்பதை ஏற்பீர்களா? அப்படி
என்றால் முகமது நபி குறித்த
கேலிச் சித்திரங்கள் முதல்
ஒளரங்கசீப் குறித்த ஒவியக்
கண்காட்சி வரை பலவற்றில்
முஸ்லீம்கள் நடந்து கொண்ட
முறை சரியா?

எத்தனை இஸ்லாமிய நாடுகளில்
மதப்பிரச்சார,மத மாற்ற உரிமை
பிற மதத்தினருக்கு உள்ளது?

8:25 AM  
Blogger Desine மொழிந்தது...

ரவி,
வினவு, வினை செய் தளத்தில்
உங்களுக்காகவே ஒரு கட்டுரை
- நாங்கள் அவர்கள் நீங்கள் -
எழுதியிருக்கிறார்களே அதற்கு உங்கள் பதில்....

உங்கள் வசதிக்காக
http://vinavu.wordpress.com

1:10 PM  

Post a Comment

<< முகப்பு