கேட்கக் கூடாத கேள்விகள் -:)

கேட்கக் கூடாத கேள்விகள் -:)


ரவி ஸ்ரீநிவாஸிடம்- 1,அவ்வப்போது தமிழில் எழுதுவதை நிறுத்துவேன் என்று உதார் விடுகிறீர்களே, உண்மையாக எப்போது நிறுத்துவீர்கள் (உதார் விடுவதையல்ல, தமிழில் எழுதுவதை)

2,அடிக்கடி ஏன் தலைமறைவாகிவிடுகிறீர்கள் என்று உங்களை கேட்கும் நண்பர்களுக்கு பதில் ஏன் தருவதில்லை

தமிழ்மணம் நிர்வாகத்திடம் - புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பு என்றால் என்ன? புரிதல் இருந்தோ அல்லது இல்லாமலோ தரப்படும் தொந்தரவு என்பதன் நாசூக்கான சொற்றொடரா இது

லக்கிலுக்கிடம் -1, யாருடைய போதைக்கோ நான் ஊறுகாயாகிறேன் என்று உங்கள் வாழ்க்கையில் இதுவரை எத்தனை முறை கூறியிருக்கிறீர்கள், எழுதியிருக்கிறீர்கள்

2, ஒரு அமைப்பின் முரட்டுத் தொண்டனாக இருப்பதற்கும், ஒரு பெண்ணின் முரட்டுத் தொண்டனாக இருப்பதற்கும் உள்ள ஒற்றுமைகள், வேறுபாடுகள் என்ன ?

ஜெயமோகனிடம் - 1, தொப்பி, திலகம் கட்டுரைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ள உங்கள் நூற்களில் ஏதேனும் ஒன்றில் இடம் பெறுமா ?

2, தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தின் ஆலோசகராக இருப்பீர்களா?

இட்லிவடையிடம் - விஜயகாந்த் ஆதரவு வலைப்பதிவினை ஆரம்பிக்கப் போகிறீர்களாமே, எந்தப் பெயரில்

பத்ரியிடம் - தசாவதாரத்தை எத்தனை மொழிகளில், எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள், பார்க்கப் போகிறீர்கள்

பாஸ்டன் பாலாவிடம் -1, நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா

2, இணைய மற்றும் கணினி addictionனுக்கு பாஸ்டனில் நல்ல சிகிச்சை கிடைக்கிறதா ?

சிரில் அலெக்ஸிடம் - அறிபுனை கதைப் போட்டி அறிவிதத்தலிருந்து உங்கள் கணினி அடிக்கடி
படுத்துக் கொள்வது உண்மையா

பெயரிலியிடம் (ரமணீதரன் கந்தையா)-1, உங்கள் நடையில் சடுதியில் எழுதுவதற்கு ஒரு நிரலி வைத்திருக்கிறீர்களா

2, தமிழ் இணைய அக்கப்போர்கள் குறித்த நூல் எப்போது வெளியாகும்

சாரு நிவேதிதாவிடம் - இரண்டு லட்சம் ஹிட்ஸ் வந்தாலும் கூட உங்கள் ஈபுக் ஏன் இருபது கூட உங்கள் தளம் மூலம் விற்கவில்லை

பா.ராகவனிடம் - 1, ஒரு கிலோ இளைக்க எத்தனைப் பக்கங்கள் எழுத வேண்டும் அல்லது எத்தனை கி.மீ நடக்க வேண்டும்

2, புதிதாக திறக்கப்பட உள்ள சைவ உணவங்கள் சிலவறிற்கு நீங்கள்தான் அதிகாரபூர்வமற்ற taste consultant என்கிறார்களே, உண்மையா

ஞாநியிடம் - அப்துல் கலாமை குமுதததிற்காக சந்தித்து உரையாடுவீர்களா

(யார் மனத்தையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. அப்படி புண்பட்டிருப்போர் தொடர்பு கொண்டால் அவர்கள் செலவில் மனப்புண்ணுக்கான சுத்த சைதன்ய களிம்பு ஒரு குப்பி அனுப்பிவைக்கப்படும். அதனை ஒரு மண்டலம், இரவில் படுக்கும் முன் யூகலிப்படஸ் எண்ணையில் குழைத்து தலையில் தடவிக் கொள்ளவும். அதற்குப் பின்னும் மனப்புண் இருந்தால் மனதை அறிவு சிகிச்சை மூலம் எடுத்து விடவும். தேவைப்படும் இடங்களில் சிர்ப்பானை, அதாவது smileyஐ போட்டுக் கொள்ளவும்)

Labels: , ,

10 மறுமொழிகள்:

Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

:-))

4:37 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

வலைப்பதிவர் ரவி சீனிவாசன் தமிழில் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து
online petition தயாரித்திருக்கிறோம்.
கைச்சாத்திடுவீர்கள்தானே ?

6:22 AM  
Blogger SQL The Great மொழிந்தது...A video about S/w Engineers LifeEnjoy

TamilNenjam

9:27 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

VERY NICE :)

1:01 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

'வலைப்பதிவர் ரவி சீனிவாசன் தமிழில் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து
online petition தயாரித்திருக்கிறோம்.
கைச்சாத்திடுவீர்கள்தானே ?'

நிச்சயமாக, இரண்டு கைகளாலும் கைச்சாத்திடுவோம் :)

8:49 AM  
Blogger Badri மொழிந்தது...

//பத்ரியிடம் - தசாவதாரத்தை எத்தனை மொழிகளில், எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள், பார்க்கப் போகிறீர்கள்//

இதுவரை மூன்றுமுறை தமிழில். தெலுங்கிலும் ஹிந்தியிலும் ஒவ்வொரு முறை பார்க்க உத்தேசித்துள்ளேன். எப்பொது வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.

9:44 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

ஈ - தமிழ்: ரவி ஸ்ரீனிவாசிற்கு மனம் திறந்த மடல்

11:52 PM  
Blogger Thangamani மொழிந்தது...

:)

12:52 AM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/1, உங்கள் நடையில் சடுதியில் எழுதுவதற்கு ஒரு நிரலி வைத்திருக்கிறீர்களா/

யோவ்! இதெல்லாம் ஒரு கேள்வி!! அந்த வான்கோழி_மீற்ஸ்_வாத்துநடைக்கு சடுதியா எழுதுறதுதான் சிம்பிளான நிரலியே... உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
;-)))

2:41 PM  
Blogger லக்கிலுக் மொழிந்தது...

//1, யாருடைய போதைக்கோ நான் ஊறுகாயாகிறேன் என்று உங்கள் வாழ்க்கையில் இதுவரை எத்தனை முறை கூறியிருக்கிறீர்கள், எழுதியிருக்கிறீர்கள்//

நான் போதையில் இருந்தபோதெல்லாம் கூறியிருக்கிறேன். கணக்கு வழக்கு ஏதுமில்லை.

//2, ஒரு அமைப்பின் முரட்டுத் தொண்டனாக இருப்பதற்கும், ஒரு பெண்ணின் முரட்டுத் தொண்டனாக இருப்பதற்கும் உள்ள ஒற்றுமைகள், வேறுபாடுகள் என்ன ?//

முன்னது நிர்ப்பந்தம்
பின்னது தன்னார்வம்

4:19 AM  

Post a Comment

<< முகப்பு