தமிழ்வழிக் கல்வி - ஒரு இடுகை, ஒரு தலையங்கம்

தமிழ்வழிக் கல்வி - ஒரு இடுகை, ஒரு தலையங்கம்

பத்ரி தன் இடுகையில் தமிழ்வழிக் கல்வியில் கல்லூரிகளில் தமிழில் பாட நூல்கள் இல்லை, ஆங்கிலத்தில் படித்து தமிழில் எழுதுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இந்த தீக்கதிர் தலையங்கம் திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 6 ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் முதுநிலை (M.Tech) தமிழ் வழியில் தொடங்க உள்ளதாக குறிப்பிடுகிறது. யானறிந்தவரையில் தமிழில் B.E/B.Tech படிக்க இயலாது. இப்பொழுது 6 ஆண்டு முதுநிலை பொறியியல் படிப்பு துவங்கும் முன் AICTE அனுமதி பெற்றுள்ளார்களா இல்லை பல்கலை அவ்வாறு அனுமதி பெற வேண்டாம் என்று விதி இருக்கிறதா?. மேலும் தமிழ் மொழியில் பாட நூல்கள் தயாராக உள்ளனவா? முதுநிலை படிப்பில் அறிவியல்/தொழில்னுட்பத் துறைகளில் கல்வி ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது. அதற்கு உரிய மொழியாக தமிழ் இன்று இல்லை.இரண்டையும் படித்தபின் எனக்கு பல கேள்விகள் எழுகின்றன. அதையெல்லாம் பின்னர் எழுதுகிறேன்.தீக்கதிர் தளம் சமயங்களில் பார்க்க கிடைப்பதில்லை என்பதால் தலையங்கத்தினை முழுதாக இட்டுள்ளேன்.


பத்ரியின் இடுகையிலிருந்து

”சென்ற வாரம் உயர்கல்விக்கான பாடப்புத்தகங்களைப் பதிப்பிக்கும் நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பயமூட்டும் ஒரு தகவல் கிடைத்தது. தமிழகத்தில் 70% மேலான (கலை, அறிவியல், நிர்வாகவியல்) கல்லூரிகளில் பாடங்கள் ஒன்று தமிழில் நடைபெறுகின்றன, அல்லது ஆங்கில மீடியமாக இருந்தாலும் பரீட்சையில் எழுதும்போது மாணவர்கள் தமிழிலேயே எழுதுகிறார்கள்.

பயம் அதைப்பற்றியல்ல. இந்த மாணவர்களுக்கு தமிழில் பாடப்புத்தகங்களே கிடையாது என்பதுதான் பயமூட்டும் விஷயம். பல்கலைக்கழகங்கள் பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதில்லை. எப்போதோ தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிப்பித்த சில புத்தகங்களும் இன்று அச்சில் இல்லை. தனியார் பாடப்புத்தக பதிப்பகங்களோ ஆங்கிலத்தில்மட்டுமே புத்தகங்கள் போடுகின்றனர்.

அப்படியென்றால் தமிழ் மாணவர்கள் எதைப் படிக்கிறார்கள்? எப்படி பரீட்சை எழுதுகிறார்கள்? எதைப் புரிந்துகொள்கிறார்கள்? எப்படி பட்டம் வாங்கியதும் வெளியே வந்து உருப்படுகிறார்கள்?

இந்த விஷயம் உண்மைதானா என்பதை அறிய சமீபத்தில் தமிழகக் கல்லூரிகளுடன் பரிச்சயம்கொண்ட சிலரைக் கேட்டேன். அவர்கள் உண்மைதான் என்கிறார்கள்.

தமிழ், தமிழ் என்று நாளுக்கு முந்நூறுமுறை மூச்சுவிடும் கட்சிகள் பதவியில் இருக்கும் தமிழகத்துக்கு இதுதான் கதியா? பொருளாதாரம், சமூகவியல், சூழலியல், இலக்கியக் கோட்பாடுகள், இயல்பியல், வேதியியல், கணிதம், புள்ளிவிவரவியல், விலங்கியல், தாவரவியல், மரபியல், நிர்வாகவியல் என எதற்கும் இளநிலை, முதுநிலைப் பாடங்களுக்கு தமிழில் உருப்படியான பாடப்புத்தகங்கள் இல்லை என்றால் மாணவர்களின் படிப்பு என்னாவது?

பேசாமல் அனைவரும் ஆங்கிலம் கற்று, அதிலேயே பாடங்களைப் படித்துவிடலாமா?”

தீக்கதிர் தலையங்கம்
http://theekkathir.in

தமிழ்வழிக் கல்விக்கான தடைகள் தகரட்டும்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆறாண்டு ஒருங்கிணைந்த எம்.டெக். படிப் புகள் தமிழ் வழியில் துவங்கப்பட்டுள்ளன. பயோ இன்பர்மேட்டிக்ஸ், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், உயிரி தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகள் இந்த கல்வியாண்டு முதல் துவங்கப்பட்டுள்ளன.

இந்த தமிழ் வழிப்படிப்புகளில் மாணவர் கள் ஆர்வத்துடன் சேர்வதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்து முதுநிலை பட்டப்படிப்புகளும் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கற்றுத்தர நடவடிக்கை எடுக் கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. “தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்” என்று பாடிய பாவேந்தர் பாரதி தாசனின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி யில் பொறியியல் படிப்பு வழங்குவதற்கான முயற்சி துவங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பும் இருந்தது. எனினும் இடையில் ஏற்பட்ட இடையூறுகளால் அந்த முயற்சி தடைப்பட்டது. தற்போது தமிழ்வழியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பை பயிற்றுவிப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு கூடி ஆலோ சனை நடத்தியுள்ளது.

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளதால் கிராமப்புற மாணவர்களும், இந்தப் படிப்புகளில் சேர நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழ் வழியில் பயின்றுவிட்டு உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி என்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அண்மையில் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்த ஒரு மாணவர், ஆங்கில வழிப் பாடங்களை புரிந்துகொள்ள முடியாமல் ஏற்பட்ட மன உளைச்சலால் தற் கொலை செய்து கொண்ட கொடுமை நிகழ்ந் தது. சில மாணவர்கள் உயர் படிப்புகளில் சேர்ந்தும் கூட தொடர முடியாமல் இடை யிலேயே நின்றுவிடுவதும் நிகழ்கிறது.

பொறியியல், மருத்துவம் போன்ற உயர் படிப்புகளை தாய்மொழியில் பயில்வது முற்றிலும் சாத்தியமான ஒன்றே. ஆங்கிலத்தில் மட்டுமே உயர்கல்வி பயில முடியும் என்பது ஒரு மாயை. அதை மாற்ற சிறந்த அறிஞர் களைக் கொண்டு தயாரிக்கப்படும் பாடநூல் கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகிறது.

தமிழ்வழியில் பயின்றோருக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டால் மாணவர்கள் தமிழ் வழி படிப்புகளில் ஆர்வத்தோடு சேர்வார்கள். அவர்களுக்கு ஆங்கிலமொழியில் நல்ல பயிற்சியும் அளிக்கப்பட்டால் பிற மாநிலங் கள் அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல முடியாது என்ற பிரச்சாரத்தையும் தகர்க்க முடியும்.

மொழி என்பது அறிவைச் சுமந்து வரும் வாகனமே அன்றி அதுவே அறிவல்ல. தமிழ கத்தில் கல்வி வியாபாரிகளால் ஆங்கிலம் தெரிந்திருப்பதே அறிவு என்ற மாயத்தோற் றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் எப்படியோ அதுபோன்றுதான் கல்விக்குத் தாய்மொழி என்பதும். துவக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழில் படிக்கத் தடையில்லை என்ற நிலை ஏற்படுத்துவதே தாய்மொழி வளர்ச்சிக்கு உரிய வழியாகும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை பிறகு எந்த உணவையும் எளிதாகச் செரித்து விடும். தாய்மொழி வழிக் கல்விக்கும் இது பொருந்தும்.

Labels: , , ,

1 மறுமொழிகள்:

Blogger Badri மொழிந்தது...

மேலும் மேலும் தமிழ் மீடியம் தேவை என்பவர்கள் சற்று யோசிக்கவேண்டும். எனக்கும் தமிழில் பாடம் நடத்துவது ஏற்புடையதுதான். ஆனால் உயர்கல்வியில் இத்தனை ஆண்டுகளாக தமிழ் மீடியம் இருக்கும்போதுகூட தமிழில் உருப்படியான பாடப் புத்தகங்கள் இல்லை என்ற நிலையில் இன்று பொறியியலையும் தமிழில் கற்றுத்தருவதாகச் சொல்வது ஜோக்கானது.

முதலில் ஏற்கெனவே தமிழ் மீடியம் இருக்கும் அறிவியல், கணிதம், பொருளாதாரம் போன்ற துறைகளுக்கு நல்ல தரமான பாடப் புத்தகங்களை உருவாக்க தமிழக அரசு பணம் செலவு செய்யட்டும். இது ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டால் நல்லது. அதற்குமேல், தமிழ்நாட்டு கல்லூரி ஆசிரியர்களைக் கொண்டு மேலும் பல புத்தகங்களை எழுதவைப்பதும் தேவை.

இதில் கவனத்தையும் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்காமல் பொறியியலை தமிழ் மீடியத்தில் கொடுப்பது முட்டாள்தனமாக இருக்கும். மாணவர்களின் திண்டாட்டத்தைப் பற்றி அரசியல்வாதிகளும் ஏட்டுச் சுரைக்காய் தமிழ் வெறியர்களும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

12:48 AM  

Post a Comment

<< முகப்பு