ராஜஸ்தானில் 68% இட ஒதுக்கீடு

ராஜஸ்தானில் 68% இட ஒதுக்கீடு

நேற்று ராஜஸ்தான் சட்டப்பேரவை ஒருமனதாக ஒரு சட்டத்தினை நிறைவேற்றியுள்ளது. அதன்படி குஜ்ஜார்களுக்கு 5% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள வகுப்புகளில் உள்ள ஏழைகளுக்கு சேர்ந்தவர்களுக்கு 14%. இதன்படி இட ஒதுக்கீடு 68% ஆகிறது.

அட்டவணை சாதியினர் (தலித்) 16%
பழங்குடியினர் 12%
பிற பிற்பட்ட வகுப்பினர் 21%
குஜ்ஜார்கள் 5%
பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள வகுப்பாரில் ஏழைகட்கு 14%

இதில் 19% இட ஒதுக்கீடு (5+14) இந்தச் சட்டம் மூலம் சேர்க்கப்படுகிறது.50% உச்சவரம்பினை மீறி இட ஒதுக்கீடு இருப்பதுடன், பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு என்று 14% ஒதுக்கப்படுகிறது. பிராமணர்கள், மாத்தூர்கள், ராஜ்புத், வைசியா உட்பட சில சாதிகளில் உள்ள ஏழைகள் 14% இடஒதுக்கீட்டினால் பலன் பெறுகிறார்கள். இந்த 14% இட ஒதுக்கீடும், இத்தகைய வகைப்படுத்தலும் செல்லுமா என்ற கேள்வி எழுகிறது. அனைத்து கட்சிகளும் இந்தச் சட்டத்தினை ஆதரித்துள்ளன. இன்னும் சில மாதங்களில் அங்கு சட்டசபைச் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே எந்தக் கட்சியும் இந்த 68% இட ஒதுக்கீட்டினை எதிர்த்து நீதிமன்றத்தினை அணுகாது என்றே நினைக்கிறேன். அப்படியே அணுகினாலும் குஜ்ஜார்களுக்கான இட ஒதுக்கீட்டினை கேள்வி கேட்க எந்தக் கட்சியும் முன்வராது. மேலும் ராஜஸ்தானில் உள்ள ‘முற்பட்ட' ஜாதிகளின் ஒட்டும் தேவை என்பதால் அந்த 14% இட ஒதுக்கீட்டினையும் எதிர்க்கும் தைரியும் எந்தக் கட்சிக்கும் கிடையாது. ராஜஸ்தானில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள்தான் மிக வலுவாக உள்ளன. இந்த இரண்டிற்கும் வரும் தேர்தலும், 2009ல் அல்லது அதற்கு முன் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலும் மிக முக்கியம் என்பதால்
இட ஒதுக்கீட்டினை கேள்வி கேட்டு நீதிமன்றத்தினை காங்கிரஸ் நாடாது. பாஜக இந்த இட ஒதுக்கீட்டினை சாதனையாக காட்டி ஒட்டுப் பெற முயலும். 14% இட ஒதுக்கீடு என்பதை முன் வைத்து ‘முற்பட்ட' சாதிகளில் உள்ள காங்கிரஸ் ஒட்டு வங்கிக்கு குறி வைக்கும். மத்திய அரசும் இதில் தலையிடாது. ஆகவே நீதிமன்றம் தடை தராத வரை இந்த 68% இட ஒதுக்கீடு தொடரும்.

பிராமணர் எதிர்ப்பினையே உயிர் மூச்சாக கொண்டுள்ள திராவிடர் கழகம் , ம.க.இ.க, பெரியார் தி.க வேண்டுமானால் இந்த 14% இட ஒதுக்கீட்டினை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். இப்படி பொருளாதார ரீதியாக பின் தங்கியோர் என்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர முடியுமா என்ற கேள்விக்கு, என் பதில், முடியும். எப்படி என்பதையும், இதை ஆராய ஒரு கமிஷன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருப்பதையும் இன்னொரு இடுகையில் விளக்குகிறேன். இந்த 14% இட ஒதுக்கீடு ராஜஸ்தானுடன் நின்றுவிடாது. இதே போன்ற இட ஒதுக்கீடு இதே சதவிகிதத்தில் இல்லையென்றாலும் பிற மாநிலங்களில் காலப் போக்கில் தரப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

Labels: , ,

1 மறுமொழிகள்:

Blogger புருனோ Bruno மொழிந்தது...

50 சதவிதத்திற்கு மேல் இடப்பங்கீடு வழங்கினால் “மெரிட்” பாதிக்கபடுவதாக கூறியவர்கள் இப்பொழுது என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவேண்டும் :) :)

//ஆகவே நீதிமன்றம் தடை தராத வரை இந்த 68% இட ஒதுக்கீடு தொடரும்.//
அது சரி, வக்கீல் விஜயன் ஏன் இதை எதிர்த்து வழக்கு போட மாட்டார் :) :)

9:59 AM  

Post a Comment

<< முகப்பு