400 - என் நானூறு

400 - என் நானூறு

இந்த இடுகையுடன் இந்த வலைப்பதிவில் 400 இடுகைகள் இடப்பட்டுள்ளன என்று பிளாகர் தெரிவிக்கிறது. இந்த வலைப்பதிவில் முதல் இடுகை ஜுன் 25, 2004ல் இடப்பட்டது. அதற்கு முன் rediffblogsல் வலைப்பதிந்து வந்தேன்(நவம்பர் 2003 முதல் ஜூன் 2004 வரை). வாசகர்கள்,திரட்டிகள், மற்றும் பிளாக்கருக்கு என் நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வலைப்பதிவு குறித்து சில ஆலோசனைகள் முன்பு கூறப்பட்டன. சிலர் wordpress க்கு மாறிவிடுங்கள், தமிழில் பதிய அது நல்ல தெரிவு என்று தெரிவித்துள்ளனர். இப்போதுள்ள நிலையில்

1) இதில் அப்படியே தொடரலாம் 2) பிளாக்கரில் இன்னொரு வலைப்பதிவு துவங்கலாம், அதில் கூடுதல் வசதிகள் இருக்கலாம் 3) Wordpressக்கு மாறலாம்.

மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்று நடக்கலாம், ஒன்றிற்கு மேற்பட்டது நடக்கலாம். எது நடக்கும் என்று இப்போது கூற இயலாது.இந்த வலைப்பதிவில் எத்தனை பேர் இதை படிக்கிறார்கள், எங்கிருந்து ‘வருகிறார்கள்' போன்ற தகவல்களை திரட்டுவதில்லை. மேலும் எதிர்காலத்திலும் திரட்டத் தேவையிராது என்று நினைக்கிறேன்.அதே போல் அனானியாக கருத்து தெரிவிக்கும் வழியையும் நீக்குவதாக இல்லை.சில பின்னூட்டங்களைத் தவிர்த்து இதுவரை எந்தப் பின்னூட்டத்தையும் வெளியிட மறுத்ததில்லை. உள்ளடகத்தைப் பொறுத்தவரை எழுத நினைத்ததில் 50% கூட வலைப்பதிவில் இடம் பெறவில்லை.இட ஒதுக்கீடு குறித்து அதிகமாக எழுதியிருப்பதாக தோன்றினாலும் அதிலும் எழுத நினைத்து எழுதாமல் விட்டதே அதிகம். எழுதவதற்கான விஷயங்கள் பல இருந்தும் தொடர்ச்சியாக எழுதவில்லை என்பதுதான் உண்மை. பல பதிவுகளை எழுதி, பின்னர் இடலாம் என நினைத்து, இடாமல் விட்டிருக்கிறேன்.

அச்சு ஊடகத்தில் எழுதாத, திண்ணையில் அவ்வப்போது எழுதிவரும் நான் வலைப்பதிவினையே தமிழில் என் கருத்துகளை வெளிப்படுத்த அதிகம் பயன்படுத்துகிறேன். இந்த வலைப்பதிவு துவங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இவ்வலைப்பதிவு, வலைப்பதிவில் எழுதுவது குறித்து ஒரு மறுபரீசலனை செய்ய விரும்புகிறேன்.

எனவே இவ்வலைப்பதிவு, என் எழுத்து, வலைப்பதிவின் உள்ளடக்கம், வடிவம் இன்ன பிற தொடர்புடையவை குறித்த உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன.

Labels: ,

8 மறுமொழிகள்:

Blogger Prakash மொழிந்தது...

வாழ்த்துகள்

வேர்ட்பிரஸுக்கு மாறிடுங்க. அதிலே, தினமும் எத்தனை பேர் படிக்கிறாங்க, எதை படிக்கிறாங்க், யார் ரெஃபர் பண்ணி வராங்க, எதைத் தேடப் போய் உங்க பதிவுக்கு வராங்க உள்ளிட்ட பல புள்ளி விவரங்களைத் தெரிஞ்சுக்க முடியும்.

நேவிகேஷனும் சுளுவாக இருக்கும்.இப்ப உங்க வலைப்பதிவிலே ஒரு குறிப்பிட்ட விஷயத்தைத் தேடறது ரொம்ப சிரமம். ( தேடிய அனுபவத்துல சொல்றேன்)

வேர்ட்பிரஸுக்கு மாறது ரொம்ப எளிது. வேர்ட்பிரஸ்ல வலைப்பதிவு தொடங்கினபிறகு, அதிலே இருக்கும் import என்ற வசதியைக் கொண்டு ப்ளாகர்ல இருக்கும் மொத்த இடுகைகளையும் இடம் பெயர்த்துடலாம்.
பின்னூட்டங்களையும் சேர்த்து.

தமிழ்ல வலைப்பதிவுக்கு அதிகமான அளவிலே வாசகர்கள் வர ஆரம்பிச்சுருக்காங்க.. இது தினம் தினம் அதிகரிச்சுகிட்டே இருக்கு. புதுசா ஒருத்தர் ஒரு இடுகையைப் படிச்ச பின்னாலே, இந்தாள் வேற என்ன எழுதியிருக்கான்னு முந்தைய இடுகைகளைத் தேடுவது இயல்புதானே.. அவங்களுக்கு இந்த ப்ளாகரோட நேவிகேஷன் ஸ்டரக்சர் பயன்படாது. சைடுபாரிலே இருப்பது, மொண்ணையான தேதி எண்கள் மட்டுமே. இதே வேர்ட்பிரஸிலே, கடைசியாக எழுதப்பட்ட பதிவுகள், அதிகம் பின்னூட்டம் செய்யப்பட்ட பதிவுகள், அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகள் என்று வகை வகையாக விட்ஜெட்டுகளை சைட் பாரில் வைத்துக்கொள்ளலாம். இதை நார்சிஸ்ட்டிக் என்று நினைக்காமல், வாசகர்களுக்கு உதவி செய்கிறோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

அதிக அளவு பதிவு வெச்சிருங்கவங்க,பதியாட்டாலும், வேர்ட்பிரஸ்ல ஒரு ஒரு காபி யாச்சும் வெச்சிருக்கிறது நல்லது, அதாவது படிக்கிறவங்களுக்கு

10:33 AM  
Anonymous venkatramanan மொழிந்தது...

ரவி!
வாழ்த்துக்கள்!

உங்கள் பதிவுகளை ஓரளவு (40-50%) வாசித்திருக்கிறேன். உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிற விஷயம் உங்களிடம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் நான் 2004ல் ரவியை வாசித்ததற்கும் தற்போதைய ரவிக்கும் மாற்றங்கள் நிறைய இருக்குன்னே நினைக்கிறேன்! ஆரம்பத்தில் நான் படித்தது - எக்ஸிஸ்டென்ஷியலிசம் குறித்த சுஜாதாவின் எழுத்துக்கு வந்த கறாரான விமர்சனம். அப்போது எனக்கு உங்களை ஒத்துக் கொள்ளமுடியவில்லை ("என்னனாலும் தலைவர் சரியாத்தான் சொல்லியிருப்பார்") ஆனால் போகப்போக உங்கள் இடுகைகள் குறைந்தபட்ச நேர்மையுடன்(எதையும் உண்மை என்று தெரிந்த பின்னும் எழுதாமல் விடுவது, அரை உண்மைகளைக் கூறுவது போன்று இல்லாமல்) எழுதப்பட்டதைக் கண்டிருக்கிறேன். மேலும் பார்ப்பனீயம் குறித்தான தங்களின் கருத்துக்கள் 2004ற்கும் 2008ற்கும் மாற்றம் அடைந்திருப்பதாகவே கருதுகிறேன். இன்னும் சில் கருத்துக்கள்:

1. கைமண் அளவில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எழுதும் அனாமதேயம் தாங்கள்தான்(என்றுதான் நினைக்கிறேன்) என்று ஜெகத் குற்றம் சாட்டினதுக்கு நீங்கள் மறுமொழியளித்தீர்களா எனத் தெரியவில்லை!
2. அதே போல் ஜெயமோகனும் தங்களை குற்றம் சாட்டினார் என்ற ஞாபகம் (திண்ணையில்).

மற்றபடி தற்போது நினைவில்லை!
& தளம் தொடர்பாக - வோர்ட்பிரசில் சுயதளம் அமைப்பதே சிறந்தது என்று கருதுகிறேன்.

நன்றி.

அன்புடன்
வெங்கட்ரமணன்!

11:35 AM  
Blogger ஸ்ரீதர் நாராயணன் மொழிந்தது...

400-க்கு வாழ்த்துகள்.

blogger, wordpress, blog போன்ற இலவச சேவைகள் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன என் கணிப்பில். இன்றைக்கு ஒரு சேவையில் இருக்கும் ஒரு தனித்துவம் உடனே மற்ற சேவைகளில் அமைந்துவிடுகிறது. போட்டி அப்படி.

ப்ளாக்கருக்கு கூகுளின் பின்புலம் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது என்று நான் நினைக்கிறேன். :-)

மேலும் தொடர்ந்து பல வருடம் பதிய வாழ்த்துகள்.

7:50 PM  
Blogger பைத்தியக்காரன் மொழிந்தது...

ரவி,

400க்கு வாழ்த்துகள்...

'நிகழ்' காலத்தில் செய்ததுபோல் மொழிபெயர்ப்பு கட்டுரைகளை அதிகமாக எழுத வேண்டும் என்பது விருப்பம்.

தொடருங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

3:09 AM  
Blogger செல்வன் மொழிந்தது...

Congrats for 400 posts Ravi.

3:15 AM  
Blogger ஸ்ரீதர் நாராயணன் மொழிந்தது...

//இந்த ப்ளாகரோட நேவிகேஷன் ஸ்டரக்சர் பயன்படாது. சைடுபாரிலே இருப்பது, மொண்ணையான தேதி எண்கள் மட்டுமே. இதே வேர்ட்பிரஸிலே, கடைசியாக எழுதப்பட்ட பதிவுகள், அதிகம் பின்னூட்டம் செய்யப்பட்ட பதிவுகள், அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகள் என்று வகை வகையாக விட்ஜெட்டுகளை சைட் பாரில் வைத்துக்கொள்ளலாம். //

பிரகாஷ்,

ப்ளாக்கரில் இதெல்லாம் எப்பொழுதோ வந்தாகிவிட்டது. :-)

மொண்ணையா எல்லாம் இருந்துகிட்டு community based service கொடுக்க முடியாது இல்லையா.

3:47 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Hello Mr. Ravi:

I have read several of your articles/comments in the past (15 years back, I guess). Where do you live and work, right now?

SK

2:54 AM  
Blogger வளர்மதி மொழிந்தது...

வாழ்த்துக்கள்.

தங்களுடைய எழுத்துக்களை ”நிகழ்” - லிருந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களது எழுத்துக்களை வாசிப்பதற்கு முன்பாகவே உங்கள் பரிச்சயமும் உண்டு. கேடயம் குழுவில் முழுநேர ஊழியனாக இருந்த மிக இளவயதில் “லெவி” வாங்குவதற்காக உங்களை இரண்டு மூன்று முறை வந்து சந்தித்திருக்கிறேன் :)

மற்றது, இங்கு பதிவுலகின் நுட்பங்களை இன்னும் அறியவில்லை என்ற வகையில் தங்களுக்கு ஆலோசனைகள் சொல்லும் வாய்ப்பெல்லாம் ஏதும் இல்லை.

தொடர்ந்து எழுதுங்கள்.

வாசிக்கக் காத்திருக்கிறேன்.

அன்புடன்
வளர் ...

1:47 AM  

Post a Comment

<< முகப்பு