கேயோஸ் கோட்பாடும், கேரளாவும்: சாரு நிவேதிதாவின் ஜல்லியடி

கேயோஸ் கோட்பாடும், கேரளாவும்: சாரு நிவேதிதாவின் ஜல்லியடி

கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் துவக்கத்தில் ரேய் பிராட்பரியின் A Sound of Thunder லிருந்து ஒரு பகுதியைக் கொடுத்திருக்கும் சாரு நிவேதிதா கடிதத்தின் முடிவில் எழுதுகிறார்

”கேயாஸ் தியரி என்பது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? புகழ் பெற்ற ஜுராஸிக் பார்க் படம் கூட அந்தத் தியரியின் அடிப்படையில் எடுக்கப் பட்டதுதான். அந்தத் தியரியின் படி ஆ · ப்ரிக்கக் காடு ஒன்றில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி தன் றெக்கையை அளவுக்கு அதிகமாகப் படபடத்தால் கேரளத்துக் கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாகும் போது அந்தப் பேரலைகளுக்கு அச்சுதானந்தன் யார் , சாரு நிவேதிதா யார் என்று வித்தியாசம் தெரியாது. எனவே நிலத்தையும் , நீரையும் , காற்றையும் , கடலையும் மாசு படுத்தாதீர்கள். விழித்துக் கொள்ளுங்கள் இப்போதாவது... ”

என்ன இழவு இது. ஆப்பிரிக்க காட்டில் இருக்கும் வண்ணத்து பூச்சி இறக்கையை அதிகமாக படபதற்கும், கேரளத்தில் நீர் மாசுபடுவதற்கும் என்ன தொடர்பு. கேயாஸ் கோட்பாட்டினை விளக்குவதற்காக சொல்லப்படும் ஒரு உதாரணத்தை அரையும் குறையுமாகப் புரிந்து கொண்டு இப்படி உளறியிருக்கிறார் சாரு. இவர் மேற்கோள் காட்டும் கதை ஒரு அறிவியல் புனைகதை, அதில் ஒரு உதாரணமாக சொல்லப்படுவது கோட்பாடாகாது. மேலும் இயற்கையில் மனித இனம் தோன்றும் முன் எத்தனையோ உயிரின வகைகள் முற்றிலுமாக அழிந்துள்ளன.மனித இனம் தோன்றிய பின் இயற்கைக் காரணிகளால் மனித செயல்களாலன்றி எத்தனை உயிரினங்கள் அழிந்துள்ளன என்பது நமக்குத் தெரியாது. பரிணாமத்தின் போக்கில் எத்தனையோ காரணங்களால் உயிரினங்கள் அழிவதும், பூமியில் மாறுதல் தோன்றுவதும், அது உயிரினங்களைப் பாதிப்பதும் ‘இயற்கை'. பரிணாம வளர்ச்சி என்பது சீரான ஒன்றல்ல. மேலும் டைனோசர்களின் அழிவும் அந்த நீண்ட பரிணாம நாடகத்தில் ஒரு சிறு காட்சிதான். டைனோசர்களின் அழிவு வேறு சிலவற்றை சாத்தியப்படுத்தியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். அது போல் மானுடத்தின் அழிவும் சிலவற்றிற்கும் அடிகோலக் கூடும். பரிணாமத்தின் இறுதி இலட்சியம்/குறிக்கோள் என்னவென நமக்குத் தெரியுமா? அப்படி ஒன்று இருக்கத்தான் வேண்டுமா? நாளை மானுட இனமே பூண்டற்று முற்றிலுமாக அழிந்தாலும் அத்துடன் பரிணாமம் முற்றுப் பெற்றது என்று முடிவு கட்ட முடியாது.

கதை (A sound of Thunder)சில சாத்தியப்பாடுகளை குறிப்பிடுகிறது. ஆனால் ஒற்றை எலி - ஒற்றை நரி என்று இருப்பதில்லை. உலகில் ஒரு எலியை அழித்தால் எலிகளின் இனங்களே அழிந்து விடும் என்றில்லை. நரிக்கு வேறு ஏதேனும் ஒன்று இரையாக இருக்கலாம். அது போல் பரிணாம வளர்ச்சியில் எப்படி உயிரினங்கள் தோன்றி மறைகின்றன என்பதை ஒரு உயிரினத்தில் உள்ள ஒரு உயிரியைக் கொண்டு விளக்க/அளவிட முடியாது. ஒரு வலை எலிகள் முற்றிலுமாக அழிந்தாலும் கூட அதனால் பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டது என்று அர்த்தமில்லை. அதற்காக உயிரினங்களை, வகை வகையாக அழியுங்கள் என்று நான் சொல்லவில்லை. மாறாக உயிரினங்களை பாதுகாக்க, சுற்றுச்சூழல் மாசுபடுதலை தவிர்க்க கேயோஸ் கோட்பாடு சரியான, பொருத்தமான ஒன்றாக இங்கே இல்லை என்றுதான் சொல்கிறோம். ஆனால் இந்த எழுத்தாளருக்கு தனக்கு சில பெயர்கள் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி உளறிக் கொட்டியிருக்கிறார்.

இவர் கூறுவதன் அடிப்படையில் பார்த்தால் பிரச்சினைக்கு மூல காரணம் ஆப்பிரிக்க காட்டில் உள்ள வண்ணத்து பூச்சி இறக்கையை அளவுக்கு அதிகமாக படபடப்பது, அதற்கு அச்சுதானந்தன் என்ன செய்ய முடியும். தன் நண்பர்கள் மூலம் சாரு வேண்டுமானால் ஏதாவது செய்யலாம் :). தன்னை 'மிகவும் reclusive- ஆன இயல்பு கொண்ட நான்' என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் சாரு 'நான் எழுதிக் கொண்டிருக்கும் பட்டறையை விட்டு வெளியே வருவது எனக்கு அத்தனையொன்றும் உவப்பானதல்ல' என்று எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு முதலமைச்சர் அப்படிச் சொல்லிவிட முடியாது. சாருவுக்கு கேரளத்தில் தன் ‘புகழை' பரப்ப மக்களுக்காக குரல் கொடுத்தேன் என்று காட்டிக் கொள்வது உதவும். அதற்காக அவர் செய்த ஸ்டண்ட்தான் இந்தக் கடிதம். நேரில் பார்த்து ஏதோ நாலு பேரிடம் கேட்டு எழுதியிருப்பதால் அவருக்கு கொஞ்ச விபரங்கள் இந்தப் பிரச்சினைகள் பற்றித் தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான்.

Labels: , , ,

3 மறுமொழிகள்:

Blogger சுகுணாதிவாகர் மொழிந்தது...

((-

10:07 AM  
Blogger கோவி.கண்ணன் மொழிந்தது...

சாரு சார் ஒரு ஸ்ப்லிட் பர்சனாலிட்டி ?
:)

10:42 AM  
Blogger Baraka மொழிந்தது...

”கேயாஸ் தியரி என்பது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? புகழ் பெற்ற ஜுராஸிக் பார்க் படம் கூட அந்தத் தியரியின் அடிப்படையில் எடுக்கப் பட்டதுதான். அந்தத் தியரியின் படி ஆ · ப்ரிக்கக் காடு ஒன்றில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி தன் றெக்கையை அளவுக்கு அதிகமாகப் படபடத்தால் கேரளத்துக் கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாகும் போது அந்தப் பேரலைகளுக்கு அச்சுதானந்தன் யார் , சாரு நிவேதிதா யார் என்று வித்தியாசம் தெரியாது. எனவே நிலத்தையும் , நீரையும் , காற்றையும் , கடலையும் மாசு படுத்தாதீர்கள். விழித்துக் கொள்ளுங்கள் இப்போதாவது... ”


இது சாரு எழுதினார் என்பதை எல்லாம் விட்டு விட்டு இதை வெறும் ஒரு பத்தியாக படித்ததில் என் புரிதல் இதுதான் - ஒரு சிறு, innocent நிகழ்வான வண்ணத்துப் பூச்சியின் றெக்கை படபடப்பதால் கூட அதன் விளைவுகள், repurcussions விபரீதமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

அதே போல், விளைவுகளைப் பற்றிய அறியாமயினால் (அல்லது அறிந்தும் அதையே மீண்டும் செய்யும் கொழுப்பினால்)நாம் சுற்றச்சூழலை மாசுபடுத்திக் கொண்டு இருக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகள் நம்மையே மீண்டும் பாதிக்கும்.

பத்தியின் முதல் பாதியும் இரண்டாம் பாதியும் வெவ்வேறு தளங்களில் உள்ளன. கியாஸ் தியரியை சுற்றுச்சூழல் மாசுக்கு causation போல பயன்படுத்தப்படவில்லை என்பது என் புரிதல். நம் செயல்களின் விளைவுகளைப் பற்றிய ஒரு correlation போல பயன்படுத்தப்பட்டதாகத் தான் எனக்குப் பட்டது.

12:20 PM  

Post a Comment

<< முகப்பு