தசாவதாரம் - என்னுடைய 2 செண்ட்கள்

தசாவதாரம் - என்னுடைய 2 செண்ட்கள்

1) தொழில்னுட்ப ரீதியாக தமிழ் திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி, ஆனால் கதையில் உள்ள கோளாறுகளால், கதையை சொல்லும் முறையில் உள்ள சொதப்பல்களால் இதில் முழுப்பலன் கிட்டவில்லை. இருப்பினும்
தொழில் நுட்பம்தான் திரைக்கதையின் குறைகளை மீறி படத்தைக் காப்பாறுகிறது.
2) கமலஹாசன் படத்திற்க்காக ஒப்பனைக்கு எடுத்து கொண்ட நேரத்தினைக் கூட ஒரு செறிவான திரைக்கதையை உருவாக்க செலவிட்டு முயற்சி செய்யவில்லை என்று தோன்றுகிறது.
3) இறை நம்பிக்கையா, மறுப்பா, பொலிட்டிக்கலி கரெக்கட்டாக எதையெல்லாம் எப்படி சொல்வது என்பதில் படத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள், விளைவு chaos theory ஐ பொருத்தமன்றி சுட்டிக்காட்டுவது போன்றவற்றில் முடிகிறது.,
4) கமல் சில வேடங்களில் அசத்துகிறார், சிலவற்றில் மேக்கப் பொருந்தவில்லை, அந்த கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையே இல்லாமல் திணிக்கப்பட்டுள்ளன என்றே கருதலாம். உ-ம் கலிபுல்லான கான்,அவதார் சிங்
5) ஒரு அறிவியல் புனைவுகதையை மையமாகக் கொண்டு அதை வளர்த்தெடுத்து வித்தியசமான திரைக்கதை மூலம், தொழில் நுட்ப உதவியுடன் புதிய உயரங்களை எட்டியிருக்கலாம். அதை செய்யத்தவறியிருக்கிறார்கள்.
6) படத்தில் ஏகப்பட்ட ஒட்டைகள், காதில் மாலைகளாக சுற்றுகிறார்கள், கால, இடக்குழப்பங்கள் ஏராளம்.திரைக்கதையில் வலுவில்லாததால் இவை தெளிவாக தெரிகின்றன. கமலும் அசினும் ஒடி கொண்டே இருக்கிறார்கள், வில்லன் துரத்திக் கொண்டேயிருக்கிறார், இந்த துரத்தல்-ஒட்டம் எரிச்சலூட்டும் வகையில் பல இடங்களில் இருக்கிறது.
7) படத்தில் கமல் நடிக்கும் பாத்திரங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால், பிற பாத்திரங்கள் ஏதோ போனால் போகட்டும் என்று சேர்க்கப்பட்டுள்ளவை போல் இருக்கின்றன. அப்படியிருந்தும் நம்பி என்கிற பாத்திரம் எதிலும் ஒட்டவில்லை, படத்தில் அதன்
பொருத்தப்பாடு என்ன என்றே தெரியவில்லை.
8) வசனம் பல இடங்களில் மைக்கேல், மதன, காமராசனை நினைவுபடுத்துக்கிறது.அசின் கதாபாத்திரமும், வசனமும் பொருந்தவே இல்லை. ஒரு விபத்திற்கு அந்த கதாபாத்திரம் காரணமாகிறது, ஆனால் அது குறித்த வருத்தம் அந்தப் பாத்திரத்தின் நடத்தை, வசனத்தில்
வெளிப்படவே இல்லை.சில இடங்களில் அரை லூஸா என்று சந்தேகப்படும் வகையில் அந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.சுனாமியையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
9) அதிபுத்திசாலித்தனமாக, பிரம்மாண்டமாக செய்கிறோம் என்று நினைத்து அரைவேக்காடாக முடிந்து விட்ட முயற்சி இது.
10) ஒருமுறை பார்க்கலாம், இரண்டாவது முறை சில காட்சிகளை (கலைஞர் டிவியில்?)

Labels: ,

1 மறுமொழிகள்:

Blogger Sridhar Narayanan மொழிந்தது...

என்னுடைய ஓரணா,

//கால, இடக்குழப்பங்கள் ஏராளம்.திரைக்கதையில் வலுவில்லாததால் இவை தெளிவாக தெரிகின்றன. //

ஒரு முறை பார்த்ததில் நீங்கள் நிறைய தவறவிட வாய்ப்பிருக்கிறது. எல்லாவற்றுக்கும் பதில் இருக்கத்தான் செய்கிறது. காலம், இடம் எல்லாவற்றையும் சரியாகவே இணைத்து இருக்கிறார்கள்.

கேன்சரை எப்படி துப்பாக்கி புல்லட் நிவர்த்தி செய்கிறது போன்ற உட்டாலக்கடி மேட்டரைக் கூட பக்கதிலேயே கோவிந்தராஜப் பெருமாளின் உற்சவ மூர்த்தியை வைத்து பேலன்ஸ் செய்கிறார்கள்.

கபிபுல்லா கான் எதற்காக எட்டடி உயரம் என்று நாம் குழம்பும்போது ஒரிஜினல் தசாவதாரதத்தில் வரும் 3 அடி வாமனர் ஞாபகம் வந்து போகிறார். அவர் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். இவர் நிலம் கொடை தருகிறார். இப்படி சிற்ச்சில சங்கிலி தொடர்புகள் நிறைய காணக் கிடைக்கின்றன.

ரங்கராஜ நம்பி தசாவதாரதத்தின் முதல் அவதாரமான மீன் போல கடலுக்கடியில் போகிறார். அது உலகைக் காக்கு செயல் என்று இறுதிக் காட்சியில் ஒரு வசனத்தில் மறைமுகமாக காட்டப்படுகிறது.

கதையமைப்பில் நிறைய சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளது தெரிகிறது. ஆனால் இந்த பெரிய கேன்வாஸை பெரும்பாண்மையான ரசிகர்கள் பார்க்க தவறிவிட்டதாகத்தான் தெரிகிறது. அந்த வகையில் திரைக்கதையில் சறுக்கல்தான்.

6:29 PM  

Post a Comment

<< முகப்பு