S.N. நாகராஜன் - கீழை மார்க்ஸியம்- ஆங்கில நூல்

S.N. நாகராஜன் - கீழை மார்க்ஸியம்- ஆங்கில நூல்

S.N.நாகராஜனின் ஆங்கில கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன என்று அண்மையில் கேள்விப்பட்டேன், முழு விபரங்கள் தெரியவில்லை. இன்றைய ஹிந்துவில் வரப் பெற்ற நூல்கள் என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள குறீபிலிருந்து அதை ஊட்டியிலுள்ள ஒரு அமைப்பு/பதிப்பகம(?) வெளியிட்டிருப்பதை அறிய முடிகிறது.

Eastern Marxism and Other Essays: S. N. Nagarajan; Odyssey, Harrington House, Peyton Road, Ootacamund-643001. Rs. 325

இணையத்தில் தேடியதில் பெங்களுரில் அனந்தமூர்த்தி இதை ஒரு நிகழச்சியில் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. நாகராஜனின் கட்டுரைகள் ஆங்கிலத்தில் நூல் வடிவில் வெளியாவது மகிழ்ச்சி தருகிறது. ஒரு காலத்தில் அவருடன் பழகியிருக்கிறேன், தொடர்பும் இருந்தது. இப்போது தொடர்பில்லை. தமிழில் அவர் கட்டுரைகள் நூற்களாக வெளியாகியுள்ளன. ஆங்கில நூலை நான் பார்க்க வாய்ப்பில்லை. நாகராஜனின் நூலுக்கு எத்தகைய மதிப்புரைகள் வெளியாகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அகில இந்திய அளவில் நாகராஜன் அறியப்பட்டவர் என்பதால் இந்நூல் நல்ல கவனம் பெற
வாய்ப்பிருக்கிறது. ஆங்கிலத்தில் நூல் வெளியாகியிருப்பதால் அஷிஸ் நந்தி, சைலேன் கோஷ் போன்ற நண்பர்கள் தங்கள் எழுத்துக்களில் அவர் கருத்துக்களை மேற்கோள் காட்ட/சுட்ட முடியும். கோவை ஞானிதான் நாகராஜனின் கட்டுரைகளை தமிழில் முதலில் வெளியிட்டார். இன்னும் சொல்லப் போனால் அவர் முயற்சி செய்திராவிட்டால் அவை வெளியாவது சில பத்தாண்டுகளேனும் தள்ளிப் போயிருக்கும். நாகராஜனை எழுத வைத்து கட்டுரை வாங்குவது என்பது எளிதல்ல. அதைச் செய்யும் திறனுள்ளவர்கள் வெகு சிலரே, அதில் ஞானி முதன்மையானவர். ஒரு காலத்தில் நாகராஜன், ராஜதுரை,ஞானி மூவரும் பரிமாணம் என்ற இதழில் எழுதி வந்தனர். இன்று ராஜதுரை வேறு திசையில் பயணித்து விட்டார். வரட்டு ஸ்டாலினியத்தை அன்று தீவிரமாக எதிர்த்தவர் பின்னர் வரட்டு பெரியாரியவாதியானது ஒரு பெரிய முரண்பாடுதான்.

நாகராஜனின் கட்டுரைகள் கிட்டதட்ட பத்தாண்டுகள் முன்பு ஒரு தொகுப்பாக எனக்கு கிடைத்தன. ஆங்கிலத்தில் நூலாக கொண்டு வரும் திட்டம் அப்போதே இருந்தது.
அவற்றைப் படித்து விட்டு பல மாற்றங்களை பரிந்துரைத்தேன். மூல நூல்களில் நாகராஜன் மேற்கோள் காட்டுபவை எங்கு இடம் பெற்றுள்ளன என்பதை தர வேண்டும், பல கருத்துக்களை விரிவாக எழுத வேண்டும், ஆங்கில வாசகர்களை மனதில் கொண்டு நடையிலும், உள்ளடகத்தில் மாற்றம் வேண்டும் என்பவை அவற்றுள் முக்கியமானவை. நாகராஜன் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. லெனின் எந்த நூலில் இதை
எழுதியிருக்கிறார் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும், பக்கம், பதிப்பு விபரங்கள் வேண்டும். ஆனால் நாகராஜனுக்கு இதையெல்லாம் தரும் பொறுமை இல்லை. ஒரு சில நாட்கள் தங்கினால் விவாதித்து கட்டுரைகளை செம்மைப்படுத்தலாம் என்று சொன்னாலும் ஒன்றும் நடக்கவில்லை.அவர் எப்போது எங்கிருப்பார், எங்கே பயணம் மேற்கொள்வார் என்பது அவருக்கே தெரியாது :). பின்னர் அத்தொகுப்பு என் கையை விட்டு சென்றுவிட்டது.
எப்படியோ அது இப்போதாவது நூல் வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

இப்போது வெளியாகியுள்ள நூலில் இந்தப் பிரச்சினைகளை எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எனக்கு நாகராஜனின் கருத்துக்கள் ஆர்வமூட்டக் கூடியவையாக இருந்தன, இன்று இல்லை. ஒரு கட்டத்தில் அவற்றின் போதாமைகள் எனக்கு தெளிவான பின் அவற்றின் மீதான ஆர்வம் குறைந்து விட்டது. நாகராஜனிடம் இப்போது புதிய கருத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த நூலில் அவர் முன்வைத்துள்ள
கருத்துகள் மீதான விவாதம் நடைபெறவும், அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டு மாற்றமும், கவனமும் பெறவும் வாய்ப்புக்கள் உள்ளன.

நேற்றுதான் ' Marx/Engels, the Heat Death of the Universe Hypothesis, and the Origins of Ecological Economics' John Bellamy Foster & Paul Burkett என்ற கட்டுரையை, மார்ச் 2008ல் வெளியானது, தரவிறக்கினேன். இது போன்ற கட்டுரைகளை நான் இன்று தேடிப் பிடித்து படிக்க ஒரு முக்கியமான காரணம் நாகராஜன். நன்றி S.N.நாகராஜன்.

Labels: , , ,

1 மறுமொழிகள்:

Blogger Baraka மொழிந்தது...

தமிழில் இவரது நூல்கல் கிடைக்குமா? எந்த பதிப்பகத்தில்?

3:55 AM  

Post a Comment

<< முகப்பு