பிரமிள் - இரண்டு கடிதங்களும் இன்னும் சில குறிப்புகளும்

பிரமிள் - இரண்டு கடிதங்களும் இன்னும் சில குறிப்புகளும்

பிரமிளின் இரண்டு கடிதங்கள் கீற்று தளத்தில் இடப்பட்டுள்ளன.பிரமிள் அவ்வாறு எழுதியிருப்பதில் வியப்பில்லை. தன்னுடைய பெயர்களை பல முறை பலவிதமாக எழுதியிருக்கிறார். கண்ணாடியுள்ளிருந்து அக் வெளியீடாக வந்த போது பிரமிள் பாநுசந்த்ரன் என்ற பெயரில் வெளிவந்ததாக நினைவு. தருமு சிவராமு என்றுதான் துவக்க காலத்தில் அறியப்பட்டார். கைப்பிடியளவு கடலில் உள்ள அவரது பெயர் வேறு, மேல் நோக்கிய பயணத்தில் உள்ள அவரது பெயர் வேறு. கைப்பிடியளவு கடல் அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மேல் நோக்கிய பயணம் அவர் எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் துவக்கத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. இது தவிர அவரது பெயர் மாற்றங்களை கட்டுரைகள், முன்னுரைகள், கடிதங்கள் என பலவற்றில் அடையாளம் காண முடியும். இவற்றையெல்லாம் பட்டியலிட்டால் ஒரே சொல்லை பலவிதமாக அவர் மாற்றி மாற்றி எழுதியிருப்பது தெரியும். அருப், பானு என்ற சொற்கள் அவர் பெயர்களில் இருந்த காலமும் உண்டு, இல்லாதிருந்த காலமும் உண்டு. நண்பர்கள் பலருக்கு பெயர் மாற்றம் பரிந்துரைத்தார். என் பெயரில் கடைசியில் S என்ற எழுத்தினை சேர்க்கலாம அது நன்மை தரும் என்று பரிந்துரைத்தார். நான் மாற்றிக் கொள்ளவில்லை. பிரமிள் குறித்து ஏற்கனவே எழுதியிருப்பதால் அதில் உள்ளதை இங்கும் எழுதத் தேவையில்லை. பிரமிள் எழுதிய கடிதங்களை தொகுப்பாக கொண்டு வரலாம். அப்படியொரு தொகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

Labels: , ,

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ஜோதிடம் ஒரு கலை. இறை அருள் இருந்தாலே மட்டுமே அதன் பொருள் சித்திக்கும்.ஜோதிடம் கற்றவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. அதனால், ஆரம்பகால ஆர்வத்தின் காரணமாக பிரமிள் போல ஏராளமானவர்கள் சுற்றித்திரிந்தார்கள். இப்போது அதனை வைத்து வியாபாரமே நடக்கிறது.


அதிகாரப்பூர்வமான இணையதளமான tamilnet.com இல் தற்போது பிரபாகரனின் பெயர் Velupillai Pirapaharan என்று எழுதப்படுகிறது. முன்பு PIRABHAKARAN என்றுதான் எழுதிகொண்டிருந்தார்கள். தற்போது உள்ள பிரபாகரன் என்ற பெயரில் உள்ள வினோதமான ஸ்பெல்லிங்கை கவனியுங்கள். இது எண் ஜோதிடர்கள் பெயர் மாற்றும் விதங்கள் b ஐ, p ஆக்குவதும், k ஐ h ஆக்குவதும் எண் ஜோதிடர்கள் செய்வதுதான். இது ஒரு மூட நம்பிக்கை என்றால், நிச்சயம் பிரபாகரன் இந்த மூட நம்பிக்கையை பின்பற்றுகிறார் என்பதுதான் உண்மை. ஆகையால் தாஜ் சொல்வதில் நியாயம் இருக்கிறது.

velupillai என்பதன் எண் 37
6536813311 =
Pirapaharan என்பதன் எண் 35
81218151215


இரண்டு எண்களும் சேர்த்தால், வரும் எண் 18 ஒன்பது எண்.
எட்டு எண் உள்ளவர்களுக்கு ஒன்பது எண் ஆகவே ஆகாது. ஒன்பதும் எட்டும் சேர்வது மாபெரும் அழிவையே குறிக்கும்.

எட்டு எண் விதியை குறிக்கிறது. இப்படிப்பட்ட எண் உள்ளவர்கள் விதியின் கைப்பாவைகள்.

இவரது முந்தைய எண்
PIRABHAKARAN
இதன் எண்
812125121215 = 31

4 எண் அரசனுக்குரிய எண். சூதின் எண். சூதும் விதியும் ஒன்றை ஒன்று தழுவி நிற்பன.
இந்த பெயரை மாற்றச்சொன்னவர் யார் என்று தெரியவில்லை.


LTTE
கூட்டுத்தொகை 16.

16 இன் விளக்கம் மலையுச்சியிலிருந்து தலைகுப்புற விழும் மனிதன்.

மிகுந்த உயரங்களுக்கு சென்றும் இலக்கை எட்ட முடியாமல் பெரும் வீழ்ச்சி அடையும் இந்த இயக்கம்.

3:36 PM  

Post a Comment

<< முகப்பு