பிரமிள் - இரண்டு கடிதங்களும் இன்னும் சில குறிப்புகளும்

பிரமிள் - இரண்டு கடிதங்களும் இன்னும் சில குறிப்புகளும்

பிரமிளின் இரண்டு கடிதங்கள் கீற்று தளத்தில் இடப்பட்டுள்ளன.பிரமிள் அவ்வாறு எழுதியிருப்பதில் வியப்பில்லை. தன்னுடைய பெயர்களை பல முறை பலவிதமாக எழுதியிருக்கிறார். கண்ணாடியுள்ளிருந்து அக் வெளியீடாக வந்த போது பிரமிள் பாநுசந்த்ரன் என்ற பெயரில் வெளிவந்ததாக நினைவு. தருமு சிவராமு என்றுதான் துவக்க காலத்தில் அறியப்பட்டார். கைப்பிடியளவு கடலில் உள்ள அவரது பெயர் வேறு, மேல் நோக்கிய பயணத்தில் உள்ள அவரது பெயர் வேறு. கைப்பிடியளவு கடல் அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மேல் நோக்கிய பயணம் அவர் எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் துவக்கத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. இது தவிர அவரது பெயர் மாற்றங்களை கட்டுரைகள், முன்னுரைகள், கடிதங்கள் என பலவற்றில் அடையாளம் காண முடியும். இவற்றையெல்லாம் பட்டியலிட்டால் ஒரே சொல்லை பலவிதமாக அவர் மாற்றி மாற்றி எழுதியிருப்பது தெரியும். அருப், பானு என்ற சொற்கள் அவர் பெயர்களில் இருந்த காலமும் உண்டு, இல்லாதிருந்த காலமும் உண்டு. நண்பர்கள் பலருக்கு பெயர் மாற்றம் பரிந்துரைத்தார். என் பெயரில் கடைசியில் S என்ற எழுத்தினை சேர்க்கலாம அது நன்மை தரும் என்று பரிந்துரைத்தார். நான் மாற்றிக் கொள்ளவில்லை. பிரமிள் குறித்து ஏற்கனவே எழுதியிருப்பதால் அதில் உள்ளதை இங்கும் எழுதத் தேவையில்லை. பிரமிள் எழுதிய கடிதங்களை தொகுப்பாக கொண்டு வரலாம். அப்படியொரு தொகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

Labels: , ,

மேய்ச்சல்- Read At Your Own Risk !

மேய்ச்சல்

Read At Your Own Risk !

திருப்பூர் தண்ணீர் தண்ணீர்
www.ielrc.org/content/w0801.pdf

பிளாச்சிமடா- வழக்கும்,சட்டமும்
www.ielrc.org/content/w0705.pdf

தாதுப் பொருட்கள், சுரங்கம், எதிர்ப்பு
http://www.panossouthasia.org/pdf/Caterpillar%20and%20the%20Mahua%20Flower.pdf

நக்சலிசம் ஏன்?தீர்வு என்ன? - திட்டக்குழுவிற்காக ஒரு அறிக்கை
http://planningcommission.nic.in/reports/publications/rep_dce.pdf

அரசு செவி சாய்க்குமா? - EPW தலையங்கம்
http://www.epw.org.in/epw//uploads/articles/12222.pdf

ராம் குஹா எழுதிய கட்டுரை- ஆதிவாசிகள், நக்சல்கள், இந்திய ஜனநாயகம்
http://www.karainet.org/files/Adivasi,%20naxalites%20and%20indian%20Democracy-16-08-2007.pdf

சல்வாஜூடும் குறித்த நந்தினி சுந்தர் கட்டுரை
http://www.yale.edu/agrarianstudies/papers/05sundarpub.pdf

(நந்தினி சுந்தர், ராம் குஹா, மற்றும் ஈ.எஸ்.ஷர்மா உச்சநீதி மன்றத்தில்
சல்வா ஜூடுமிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.)

அரசும், வன்முறையும்
http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1020010

மாஒயிஸ்ட்கள் சார்பாக கணபதியின் பதில் (இது முதலில் EPWவில்
வெளியானது).
http://parisar.wordpress.com/2006/11/30/maoist-reply-to-independent-citizen-initiative-on-dantewada/

உணவு, தலித், பசு இறைச்சி
http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1030973

Labels: , , , , ,

27% இட ஒதுக்கீடும் உச்சநீதிமன்றமும்- மண்டல் 3 மண்டல் 4

27% இட ஒதுக்கீடும் உச்சநீதிமன்றமும்- மண்டல் 3 மண்டல் 4

கொல்கத்தா உயர்நீதிமன்றம் கொடுத்திருந்த இடைக்காலத் தடையை,எதிர்பார்த்தது போல், உச்சநீதிமன்றம் நீக்கியிருக்கிறது. மேலும் மும்பை,கொல்கத்தா, புது தில்லி உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதி மன்றத்திற்கு ஏன் மாற்றக் கூடாது என்று அந்தந்த நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த மனுதாரார்களுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றே தோன்றுகிறது. இங்கு சர்ச்சை எழுந்திருப்பது உச்சநீதி மன்றத் தீர்ப்பினை எப்படி புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது குறித்தது. இந்த வழக்குகளை உச்சநீதி மன்றம் விசாரிப்பதே முறையாகும்.கடந்த மாதம் 10ம் தேதி அசோகா தாக்கர் வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து இன்னும் யாரும் மேல் முறையீடு செய்யப்படவில்லை. அவ்வாறு செய்யப்பட்டாலும் இடைக்காலத் தடை வழங்கப்பட வாய்ப்பில்லை. அந்த மேல்முறையீட்டினை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வாய்ப்பிருக்கிறது. இப்போது தீர்ப்பினை எப்படி பொருள் கொள்வது, பட்டதாரிகள் கிரிமி லேயரில் வருவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 5 நீதிபதிகள் 4 தீர்ப்புகளை தந்துள்ளனர். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஒரு தீர்ப்பு, நீதிபதி ரவீந்தரன் ஒரு தீர்ப்பு, நீதிபதி தல்வீர் பண்டாரி ஒரு தீர்ப்பு, நீதிபதிகள் அர்ஜித் பசாயத், தாக்கர் ஒரு தீர்ப்பு என நான்கு தீர்ப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றை எப்படி பொருள் கொள்வது என்பதுதான் பிரச்சினை. சட்டதிருத்தம் செல்லும், இட ஒதுக்கீடு தர முடியும் என்று ஒருமித்து தீர்ப்பு தந்தாலும் கிரிமி லேயர் குறித்து இந்த தீர்ப்புகள் கூறுவதை எப்படிப் பொருள் கொள்வது, இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் உத்தரவு செல்லுமா என்பதுதான் உயர்நீதி மன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளின் முக்கியமான கேள்விகள். மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல் செய்ய வகை செய்யும் ஆணை செல்லுமா என்ற வழக்கு மண்டல் 1 (இந்த்ரா சஹானி Vs. Union of India) எனவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்/ நிதி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு குறித்த வழக்கு மண்டல் 2 என்றும் அழைக்கப்படுகின்றன. இப்போது தொடரபட்டுள்ள வழக்குகளை மண்டல் 3 என்று அழைக்கலாம். இது இத்துடன் நின்றுவிடாது. தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு நிதி உதவி பெறாவிட்டாலும் அவையும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வழக்குகள் தொடரப்படும். அது மண்டல் 4 என்று அழைக்கப்படலாம்.

இட ஒதுக்கீட்டு சிக்கல் எளிதில் தீர்கிற சிக்கல் இல்லை. சமத்துவத்தை நிராகரிக்கும் சக்திகள் எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கு இட ஒதுக்கீட்டினை விரிவாக்கவே விரும்புவர். எனவே இந்த வழக்குகளை சமத்துவம், சம வாய்ப்பு, பாரபட்சமின்மை குறித்த வழக்குகளாக கருதலாம்.

Labels: , , , ,

S.N. நாகராஜன் - கீழை மார்க்ஸியம்- ஆங்கில நூல்

S.N. நாகராஜன் - கீழை மார்க்ஸியம்- ஆங்கில நூல்

S.N.நாகராஜனின் ஆங்கில கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன என்று அண்மையில் கேள்விப்பட்டேன், முழு விபரங்கள் தெரியவில்லை. இன்றைய ஹிந்துவில் வரப் பெற்ற நூல்கள் என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள குறீபிலிருந்து அதை ஊட்டியிலுள்ள ஒரு அமைப்பு/பதிப்பகம(?) வெளியிட்டிருப்பதை அறிய முடிகிறது.

Eastern Marxism and Other Essays: S. N. Nagarajan; Odyssey, Harrington House, Peyton Road, Ootacamund-643001. Rs. 325

இணையத்தில் தேடியதில் பெங்களுரில் அனந்தமூர்த்தி இதை ஒரு நிகழச்சியில் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. நாகராஜனின் கட்டுரைகள் ஆங்கிலத்தில் நூல் வடிவில் வெளியாவது மகிழ்ச்சி தருகிறது. ஒரு காலத்தில் அவருடன் பழகியிருக்கிறேன், தொடர்பும் இருந்தது. இப்போது தொடர்பில்லை. தமிழில் அவர் கட்டுரைகள் நூற்களாக வெளியாகியுள்ளன. ஆங்கில நூலை நான் பார்க்க வாய்ப்பில்லை. நாகராஜனின் நூலுக்கு எத்தகைய மதிப்புரைகள் வெளியாகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அகில இந்திய அளவில் நாகராஜன் அறியப்பட்டவர் என்பதால் இந்நூல் நல்ல கவனம் பெற
வாய்ப்பிருக்கிறது. ஆங்கிலத்தில் நூல் வெளியாகியிருப்பதால் அஷிஸ் நந்தி, சைலேன் கோஷ் போன்ற நண்பர்கள் தங்கள் எழுத்துக்களில் அவர் கருத்துக்களை மேற்கோள் காட்ட/சுட்ட முடியும். கோவை ஞானிதான் நாகராஜனின் கட்டுரைகளை தமிழில் முதலில் வெளியிட்டார். இன்னும் சொல்லப் போனால் அவர் முயற்சி செய்திராவிட்டால் அவை வெளியாவது சில பத்தாண்டுகளேனும் தள்ளிப் போயிருக்கும். நாகராஜனை எழுத வைத்து கட்டுரை வாங்குவது என்பது எளிதல்ல. அதைச் செய்யும் திறனுள்ளவர்கள் வெகு சிலரே, அதில் ஞானி முதன்மையானவர். ஒரு காலத்தில் நாகராஜன், ராஜதுரை,ஞானி மூவரும் பரிமாணம் என்ற இதழில் எழுதி வந்தனர். இன்று ராஜதுரை வேறு திசையில் பயணித்து விட்டார். வரட்டு ஸ்டாலினியத்தை அன்று தீவிரமாக எதிர்த்தவர் பின்னர் வரட்டு பெரியாரியவாதியானது ஒரு பெரிய முரண்பாடுதான்.

நாகராஜனின் கட்டுரைகள் கிட்டதட்ட பத்தாண்டுகள் முன்பு ஒரு தொகுப்பாக எனக்கு கிடைத்தன. ஆங்கிலத்தில் நூலாக கொண்டு வரும் திட்டம் அப்போதே இருந்தது.
அவற்றைப் படித்து விட்டு பல மாற்றங்களை பரிந்துரைத்தேன். மூல நூல்களில் நாகராஜன் மேற்கோள் காட்டுபவை எங்கு இடம் பெற்றுள்ளன என்பதை தர வேண்டும், பல கருத்துக்களை விரிவாக எழுத வேண்டும், ஆங்கில வாசகர்களை மனதில் கொண்டு நடையிலும், உள்ளடகத்தில் மாற்றம் வேண்டும் என்பவை அவற்றுள் முக்கியமானவை. நாகராஜன் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. லெனின் எந்த நூலில் இதை
எழுதியிருக்கிறார் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும், பக்கம், பதிப்பு விபரங்கள் வேண்டும். ஆனால் நாகராஜனுக்கு இதையெல்லாம் தரும் பொறுமை இல்லை. ஒரு சில நாட்கள் தங்கினால் விவாதித்து கட்டுரைகளை செம்மைப்படுத்தலாம் என்று சொன்னாலும் ஒன்றும் நடக்கவில்லை.அவர் எப்போது எங்கிருப்பார், எங்கே பயணம் மேற்கொள்வார் என்பது அவருக்கே தெரியாது :). பின்னர் அத்தொகுப்பு என் கையை விட்டு சென்றுவிட்டது.
எப்படியோ அது இப்போதாவது நூல் வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

இப்போது வெளியாகியுள்ள நூலில் இந்தப் பிரச்சினைகளை எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எனக்கு நாகராஜனின் கருத்துக்கள் ஆர்வமூட்டக் கூடியவையாக இருந்தன, இன்று இல்லை. ஒரு கட்டத்தில் அவற்றின் போதாமைகள் எனக்கு தெளிவான பின் அவற்றின் மீதான ஆர்வம் குறைந்து விட்டது. நாகராஜனிடம் இப்போது புதிய கருத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த நூலில் அவர் முன்வைத்துள்ள
கருத்துகள் மீதான விவாதம் நடைபெறவும், அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டு மாற்றமும், கவனமும் பெறவும் வாய்ப்புக்கள் உள்ளன.

நேற்றுதான் ' Marx/Engels, the Heat Death of the Universe Hypothesis, and the Origins of Ecological Economics' John Bellamy Foster & Paul Burkett என்ற கட்டுரையை, மார்ச் 2008ல் வெளியானது, தரவிறக்கினேன். இது போன்ற கட்டுரைகளை நான் இன்று தேடிப் பிடித்து படிக்க ஒரு முக்கியமான காரணம் நாகராஜன். நன்றி S.N.நாகராஜன்.

Labels: , , ,

அரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு

அரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு

மருத்துவர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக் கோரி மனி உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர். நோபல் பரிசு பெற்றவர்கள் பலர் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து அவர் விடுதலைச் செய்யப் பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. பினாயக் சென் வன்முறைக்கு ஆதரவாக இருந்தவர் அல்ல. அவர் மருத்துவர், மனித உரிமை ஆர்வலர் என்ற முறையில் செயல்பட்டவை அனைத்தும் நியாயமானவை. உச்சநீதி மன்றம் டிசம்பர் 10ம் தேதி அவரது பிணை மனுவை நிராகரித்தது ஒரு துரதிருஷ்டம். இப்போது அஜய் என்பவரையும் கைது செய்துள்ளார், சல்வா ஜுடும் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது குறித்த வழக்கொன்றும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

மே மாத தீராநதியில் அ.மார்க்ஸ் தன் கட்டுரையில் சிலவற்றை முன் வைத்துள்ளார். பினாயக் சென்னின் கைது, வழக்கு குறித்து எழுதியுள்ள அவர் இந்தியாவில் அரசியல் கைதிகள் என்பது குறித்தும் எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் தமிழ் நாட்டில் 166 பேர் அரசியல் கைதிகளாக உள்ளதாக குறிப்பிடுகிறார்.

“தமிழகத்தில் இன்று கிட்டத்தட்ட 166 அரசியல்-கைதிகள் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கிலுள்ளவர்கள் தவிர, மாவோயிஸ்டுகள் சுமார் 10 பேர், பொழிலன் உள்பட்ட தேசிய இன விடுதலை இயக்கத்தினர் சுமார் 10, மீதமுள்ள சுமார் 136 பேர் முஸ்லிம்கள். பத்தாண்டுகள் கழித்த ஆயுள் கைதிகள் சுமார் 500 பேர் வரை அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல்-கைதிகளுக்கு மட்டும் இந்தச்சலுகை வழங்கப்படவில்லை.”

அவர்களில் எத்தனை பேர் தண்டனைக் கைதிகள், எத்தனை பேர் விசாரணை கைதிகள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.அரசியல் கைதிகள் என்று வகைப்படுத்தியிருக்கும் முஸ்லீம்களில் எத்தனை பேர் என்னென்ன குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையிலிருக்கிறார்கள், எத்தனை பேர் நீதிமன்றங்களால் தண்டனை தரப்பட்டவர்கள், எத்தனை பேர் விசாரணைக் கைதிகள் என்பதை அவர் குறிப்பிடவில்லை. அரசியல் கைதிகள் குறித்த அவர் வரையரை என்ன என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.கட்டுரையில் எழுதியிருப்பதில் பல சர்ச்சைக்குரியவை. எனினும் இந்தக் குறிப்பில் நான் ஒரு சிலவற்றையே விவாதிக்க விரும்புகிறேன்.

சர்வதேச மன்னிப்பு இயக்கம் வன்முறையை ஆதரிப்போர் அல்லது வன்முறையில் ஈடுபட்டோரை அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையின் கீழ் கொண்டு வருவதில்லை. பொதுவாக தங்கள் அரசியல்/கோட்பாடு/நிலைப்பாடுகளுக்காக, மத நம்பிக்கைகளுக்காக சிறையிலிடப்பட்டோரை அரசியல் கைதிகள் என்று கொள்ளலாம். இயக்கங்களும், அரசுகளும் எப்படி யாரை அரசியல் கைதிகளாக வகைப்படுத்துகின்றன என்பதையும் பார்க்க வேண்டும். இயக்கங்களை பொறுத்த வரை ‘விடுதலைப் போருக்காக' செயல்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக இருக்கலாம், ஆனால் சட்டத்தின் முன் அவர்கள் செய்தது குற்றமாக அறிவிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம்.

தன்னுடைய வரையரை என்ன என்பதை அ.மார்கஸ் கூறாவிட்டாலும் அவர் குறிப்பிடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மாநாட்டுக் குழு தன்னுடைய பார்வையில் யார் யார் அரசியல் கைதிகள் என்பதைத் தெரிவித்துள்ளது. அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் கடைசி பத்தி கூறுகிறது

“The inaugural conference on political prisoners is a historic and definite step in this direction. Memories of the days of emergency revisit us as a cold reminder. This brings back memories of the days of the anti-colonial struggle, of the valiant resistance of Bahadur Shah against the East India Company and the attendant hanging to death of thousands of Muslims belonging to the slaughter community. It enlivens the spirit of the heroic martyrdom of Bhagat Singh, Rajguru, Sukhdev and Ashfaqullah; of Bhoomaiah and Kishta Goud in Telangana in the 1960s; the memory of Maqbool Bhat being shown the gallows in the 1980s. ”

http://sabrang.com/cc/archive/2008/april08/campaign.html

அந்த முழு அறிக்கையையும் படித்தால் அவர்கள் யார் யாருக்காக குரல் கொடுக்கிறார்கள், யார் யாரை, எந்தெந்த போராட்டங்களை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகும். இந்தியாவில் லட்சக்கணக்கில் அரசியல் கைதிகள் இருப்பதாக கூறுபவர்கள் பினாயக் சென்னையும், குணங்குடி ஹனீபாவையும்,முகமது அப்சலையும் ஒரே பட்டியலில் சேர்க்கிறார்கள். இதில் உள்ள அரசியல் என்ன? எந்த அடிப்படையில் பினாயக் சென்னும், பொழிலனும், பேரறிவாளனும், முகமது அப்சலும் அரசியல் கைதிகள் எனற ஒரே வகையில் அடங்குவர்.

பகத் சிங்கையும், மக்பூல் பட்டையும் எப்படி ஒரே மாதிரியானவர்கள் என்று கருத முடியும். மக்பூல் பட் தூக்கிலிடப்பட்டார். அவர் செய்தவையும், பகத்சிங் செய்தவையும் ஒரே போன்றவையா இல்லை ஒரே மாதிரியான குறிக்கோள்களுக்காக அவர்கள் செயல்பட்டார்களா. நிச்சயமாக இல்லை. மக்பூல் பட்களை ஆதரிப்பதும், புகழ்வதும் பகத் சிங்கின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும்.

சுருக்கமாகச் சொன்னால் அரசியல் கைதிகளை ஆதரிப்பது என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக உள்ள இயக்கங்களை ஆதரிப்பது, அவற்றின் தலைவர்கள், ஆதரவாளர்களை விடுதலைச் செய்யக் கோருவது இந்த மாநாட்டின் நோக்கம். அதில் தொடர்புடையவர்கள் எழுத்தாளர்களாக இருக்கலாம். அதனாலேயே அதன் நோக்கங்கள் ஏற்கத்தக்கவையாகிவிடமாட்டா. இந்த 'உயரிய' நோக்கங்களை அ.,மார்க்ஸ் நேரடியாகவே எழுதி அதையெல்லாம் ஆதரிக்கிறேன் என்று எழுதியிருக்கலாம். ஆனால் அ.மார்கஸ் எதைச் சொல்லவேண்டுமா அதைச் சொல்வதில்லை. எதை ஆதரிப்பதாகச் சொன்னால் வாசகர்கள் ஏமாந்து போவார்களோ அதைச் சொல்கிறார். பினாயக் சென்னை முன்வைத்து அ.மார்கஸ் யார் சார்பாக வாதாடுகிறார் என்பது இப்போது தெளிவாகிறதா?.

அந்த அறிக்கையில் இந்த இயக்கங்கள் நடத்திய/நடத்தும் வன்முறைகளைக் கண்டித்து ஒரு
வார்த்தைக் கூட இல்லை. மக்பூல் பட்டின் இயக்கம் வன்முறை செயல்களில் ஈடுபட்ட
இயக்கம். பட் தண்டிக்கப்பட்டது அவர் செய்த வன்முறை குற்றங்களுக்காக, அரசியல்
நம்பிக்கைகளுக்காக அல்ல. இவர்கள் உதாரணம் காட்டும் மக்பூல் பட் ஒருவர் போதும், இவர்களின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள.

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு, அரசியல் கைதிகள் விடுதலை கோரிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்ட மக்பூல் பட்களை முன்னிறுத்துவோருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு. கருத்து சுதந்திரத்திற்கு இன்று எதிராக இருப்பது அரசு மட்டும்தானா. இந்தியாவிற்குள் ருஷ்டி வரக்கூடாது, தஸ்லீமா இந்தியாவிற்குள் இருக்கக்கூடாது என்று கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடா. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கையற்ற தமுமுக என்ற அமைப்பினை ஆதரித்துக் கொண்டு, அதனுடன் கூட்டாக செயல்படும் அ.மார்க்ஸ் யாருடைய கருத்து சுதந்திரத்திற்காக யாரை குரல் கொடுக்கச் சொல்கிறார் ?. அவரது வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்திய
அரசை விமர்சிப்பது என்பது வேறு, மனித உரிமைக்கு ஆதரவு என்ற பெயரில்
வன்முறை இயக்கங்களுக்கும், தேச விரோத அமைப்புகளுக்கும் ஆதரவு தருவது
என்பது வேறு. அ.மார்க்ஸ் செய்வது பின்னது.

அ.மார்க்ஸின் எழுத்துக்களை, செயல்பாடுகளை பற்றி இங்கு விரிவாக விமர்சிக்கப்ப் போவதில்லை. அவரது எழுத்துக்களை படித்து ஏமாற வேண்டாம். அ.மார்க்ஸ் மனித உரிமை, கருத்து சுதந்திரம் போன்றவை குறித்து பேசினாலும், எழுதினாலும் அதில் உள்ள (அறிவிக்கப்படாத) உள்நோக்கங்களை புரிந்து கொள்ள வேண்டும். இன்று இந்திய விரோத சக்திகள் பல்வேறு பெயர்களில், பல்வேறு நோக்கங்களை முன் வைத்து செயல்படுகின்றன. அவை முன் வைப்பது ஒன்று, ஆனால் உண்மையான நோக்கங்கள் வேறு. அதே போல்தான் அ.மார்க்ஸின் எழுத்துக்களும்,செயல்பாடுகளும்.

இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அரசியல் அப்பாவிகளாக இருப்பார்கள் அல்லது ‘எல்லாம் தெரிந்த' மூடர்களாக இருப்பார்கள். மூடத்தனத்தில் நவீன/பின்நவீன மூடத்தனம் என்ற பாகுபாடு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது -:).

Labels: , , ,

காந்தி

இங்கே செல்லவும்
http://ravisrinivasreads.blogspot.com/2008/05/blog-post_14.html

ஆம், ஒரு புதிய வலைப்பதிவு துவங்கியிருக்கிறேன். முன்பு மேய்ச்சல் என்ற பெயரில்
இந்த வலைப்பதிவில் எழுதி வந்தது போல் அங்கு எழுதவிருக்கிறேன். அனைவரும்
வாரீர் ஆதரவு தாரீர் !

Labels: , ,

இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்

இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்

இந்த மாத தீராநதியில் நம்மாழ்வாருடன் ஒரு விரிவான பேட்டி வெளியாகியிருக்கிறது. அதில் தரப்பட்டுள்ள இரண்டு தகவல்கள் சரியல்ல என்பது என் கருத்து. பேட்டி காண்பவர் எழுதியிருக்கிறார் “நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர்.” . வேப்பிலை மீது யாரும் காப்புரிமை பெறவில்லை, பெறவும் முடியாது. இந்த காப்புரிமை குறித்த வழக்கு ஐரோப்பிய காப்புரிமை அமைப்பின் மேல்முறையீட்டு அமைப்பின்(Technical Board of Appeals of EPO) முன் நடந்த வழக்கு, அது சர்வதேச நீதிமன்றம் அல்ல.மேலும் அந்த வழக்கில் நம்மாழ்வார் என்ன வாதாடினார் என்று எனக்குத் தெரியாது. நானறிந்த வரையில் அதில் வாதிட்டவர்களில் முக்கியமானவர் பிரிட்ஸ் டோல்டர், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர். இதில் நம்மாழ்வார் எந்த அடிப்படையில் வாதிட்டார் என்பதை நானறியேன். இந்தியாவிலிருந்து ஒரு விவசாயி இதில் பங்கேற்றார், தன் அனுபவத்தைச் கூறினார். வேம்பிலிருந்து பெறப்பட்டவற்றை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துவது குறித்த ஒரு கட்டுரை, ஆஸ்தேரலியாவிலிருந்து வெளியான ஒரு ஜர்னலில் வெளியானது சான்றாக காட்டப்பட்டது. இக்கட்டுரை முக்கியமான ஆதாரமாகக் கொள்ளப்பட்டு காப்புரிமை நிராகரிக்கப்பட்டது. (இது ஒரு சுருக்கமான விளக்கம், முழு விபரங்களை இங்கு தரவில்லை). IFOAM (International Federation of Organic Agricultural Movements) என்ற அமைப்பும் இந்த வழக்கில் ஒரு மனுதாரார்.அதன் சார்பில் அல்லது வந்தனா சிவாவுடன் சேர்ந்து நம்மாழ்வார் பங்கு பெற்றிருக்ககூடும். வேம்பு, மஞ்சள், காப்புரிமை குறித்த மிகவும் தவறான புரிதல் நிலவுகிறது. ஏதோ வேம்பு, மஞ்சள் ஆகியவை மீது காப்புரிமைகள் வழங்கப்பட்டுவிட்டன என்கிற ரீதியில் எழுதுகிறார்கள். உண்மை இதிலிருந்து வேறானது. புரிந்துக கொள்ளக் கடினமானது அல்ல. இருப்பினும் இந்த தவறான புரிதல் தொடர்கிறது. நம்மாழ்வாரின் கருத்துக்களை அறிந்தவர்களுக்கு பேட்டியில் புதிதாக ஒன்றுமில்லை. 1990களின் துவக்கத்தில் நம்மாழ்வாரின் நூல்களை வெளியிட்டு கோவை ஞானி அவர் கருத்துக்களை சிறு பத்திரிகை, இடதுசாரி வட்டாரங்களுக்கு அறிமுகம் செய்தார். இன்று நம்மாழ்வாரில் பெயர் விகடன், குமுதம் வாசகர்களுக்கு பரிச்சயமான ஒன்றுதான். அது போலவே இன்று இயற்கை சார் வேளாண்மை குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வும் இருக்கிறது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்கள். இந்த வார தெகல்காவில் வந்துள்ள கட்டுரையையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

காலச்சுவட்டில் சங்கீத ஸ்ரீராம் ஒரு தொடர் கட்டுரை எழுதிவருகிறார். சுற்றுச்சூழல்- வேளாண்மை குறித்த தொடர் அது. தொடர் முடிந்த பின் அதைப் பற்றிய என் கருத்துக்களை எழுதலாமென்றிருக்கிறேன். திண்ணையில் முன்பு ஒரு தொடர் எழுதியிருக்கிறேன். Political Ecology, Environmental History இரண்டையும் தொட்டுச் செல்லும் தொடர் அது. 1990களின் துவக்கத்தில் Finacial Expressல் ரசாயண உரங்களுக்கான மானியத்தை குறைக்க வேண்டும், இயற்கை சார் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எழுதினேன். க்யுபாவில் இயற்கை சார் வேளாண்மைக்கு அரசு ஊக்கம் கொடுத்து பரப்பிய போது அதையும் தமிழில் எழுதியிருக்கிறேன். இது போல் இயற்கை சார் வேளாண்மை, உயிரியல் தொழில் நுட்பமும் வேளாண்மையும் குறித்து ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருக்கிறேன். இதில் என் கருத்துக்களில் காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் வேளாண்மையில் உயிரியல் தொழில் நுட்பத்தின் பங்கினை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. அதற்காக அதை கண்மூடித்தனமாக ஆதரிக்கவுமில்லை. தொழில் நுட்ப நிர்ண்யவாதத்திலிருந்து நான் நகர்ந்து விட்டேன். தொழில் நுட்பம்-சமூகம் குறித்து ஒருவித constructivist புரிதலே எனக்கு சரியாகப் படுகிறது. எதிர்காலத்தில் இதிலும் மாற்றம் வரலாம். அந்த மாற்றம் இன்னும் நுட்பமான புரிதலை நோக்கியதாக
இருக்கும். பாரம்பரிய தொழில்னுட்பம், இயற்கை வேளாண்மை குறித்து எனக்கு மிகவும் நேர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், அவற்றின் அடிப்படையில் அதீத நிலைப்பாடுகளை எடுக்க முடியவில்லை. பசுமைப் புரட்சி குறித்து எனக்கும் விமர்சனங்கள் இருந்தாலும், அது குறிப்பிட்ட காலத்தில் முன் வைக்கப்பட்ட தொழில்னுட்ப தீர்வு என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. மேலும் அதை ஒரு சதியாக குறுக்குவது சரியல்ல என்றே கருதுகிறேன். இவற்றையெல்லாம் இப்படி எழுதுவதை விட விரிவாக எழுத வேண்டும்தான். எப்போது முடிகிறதோ அப்போது அதைப் பார்க்கலாம்.

Labels: , , ,

யமுனா ராஜேந்திரன் -பின் நவீனத்துவம்-தேசம் நெற்

யமுனா ராஜேந்திரன் -பின் நவீனத்துவம்-தேசம் நெற்

தேசம் நெற்றில் இடப்பட்ட குறிப்பு இது பதிவிடப்படுகிறது, தகவலுக்காகவும், ஆவணப்படுத்தவும்.
http://thesamnet.co.uk/?p=539

ஒரு தன்னிலை விளக்கம்

நான் முன்பொரு முறை திண்ணையில் எழுதியதிலிருந்து ஒரு பகுதியை இங்கு எடுத்துப் போட என்ன தேவை என்று தெரியவில்லை. நான் எழுதியுள்ளதை முழுமையாக படித்தால்தான் என எதிர்வினை புரியும். இங்கு அதன் சில பகுதிகள் இடப்பட்டுள்ளன.ஆனால் எப்போது எங்கு நான் அதை எழுதினேன் போன்ற தகவல் தரப்படவில்லை. இது வாசகர்களுக்கு பிழையான புரிதலை தரும்.இப்படி என் எழுத்தை இன்றைய சூழலில் யமுனா ராஜேந்திரனுக்கு எதிராக நிறுத்துவது முறையன்று. இதில் எனக்கு உடன்பாடில்லை. என் முழு எதிர்வினையும் கீழே உள்ள இணையமுகவரியில் காணலாம்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60312253&format=html
தேசம் தளம் குறித்தோ,இங்கு நடக்கும் விவாதங்கள் குறித்தோ நான் அறிந்திருக்கவில்லை. ஒரு நண்பர் உங்கள் கருத்து தேசம் தளத்தில் வெளியாகியிருக்கிறது என்று தகவல் தந்தார், இந்த இணையமுகவரியையும் தந்தார்.தன்னிலை விளக்கமாக இங்கு இதை இடுகிறேன். இங்கு நடக்கும் விவாதங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை. நான் இவற்றை படிப்பதுமில்லை, பங்குபெறுவதுமில்லை. அதில் ஆர்வமுமில்லை. வாசகர்கள் திண்ணையில் நடந்த முழு விவாதத்தினையும் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.அப்போதுதான் என் கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சூழலில் நடந்த விவாதம் அது. அதை நான் வேறெங்கும் தொடரவில்லை. தொடரப்போவதுமில்லை.
மற்றப்படி எனக்கும் யமுனா ராஜேந்திரனுக்கும் தேசம் இணையதளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.நான் தமிழில் அதிகம் எழுதுவதில்லை. யார் என்ன எழுதுகிறார்கள் போன்றவற்றையும் உன்னிப்பாக கவனிப்பதில்லை. இது போன்ற சர்ச்சைகளில் என் எழுத்தினை முறைகேடாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Labels: , , ,

இரண்டு தீர்ப்புகள் - ஒரு வழக்கு- ஒரு கேள்வி

இரண்டு தீர்ப்புகள் - ஒரு வழக்கு- ஒரு கேள்வி

எம்.எப்.ஹீசைன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டாக்டர் வேணுகோபாலை AIIMS இயக்குனர் பதவியிலிருந்து நீக்க வழி செய்த சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டும் வரவேற்கப்பட வேண்டியவை. முன்னது கருத்துரிமைக்கு ஆதரவானது. பின்னது அநீதி இழைக்கப்பட்ட வேணுகோபாலுக்கு ஆதரவானது. இது அரசின் அதிகாரம் வரம்பற்றது என்ற கருத்திற்கு
எதிரானது. வேணுகோபாலை நீக்குவதற்கு வழி செய்த சட்டத்தினை இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்தன. எது எப்படியோ இறுதியில் நீதி வென்றிருக்கிறது. ஹுசைனைப் பொருத்தவரை இந்த தீர்ப்பு முக்கியமானது, பல இடங்களில் வழக்குகளை தொடுத்து தொல்லைக் டுப்பதற்கு இது ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இத்தீர்ப்பின் மூலம் குறிப்பிட்ட சட்டப் பிரிவினை முறைகேடாக பயன்படுத்தப்படுவது குறைய வாய்ப்பிருக்கிறது. அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. குஷ்பு மீதான வழக்கில் இத்தீர்ப்பு குஷ்புவிற்கு உதவியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இரு தீர்ப்புகளையும் குறித்த செய்திகளின் அடிப்படையில் இதை எழுதுகிறேன். முழுத் தீர்ப்புகளையும் படித்தால் செய்திகள் தெரிவிக்காத வேறு சில புரியக்கூடும்.

ராமர் சேது வழக்கில் பராசரன், சி.எஸ்.வைத்தியனாதன்,சோலி சொராப்ஜி, சுப்ரமண்யன் சுவாமியின் வாதங்களை தி இந்து மூலம் அறிந்து கொண்டேன். மத நம்பிக்கை குறித்த, அரசியல் சட்டத்தின் 25வது விதியை அவர்கள் வாதிடுவது போல் இப்படி புரிந்து கொள்ள முடியுமா என்பதில் எனக்கு ஐயங்கள் உள்ளன. மத உரிமை, வழிபாட்டு உரிமை என்பவை முழு முற்றான, நிபந்தனைகளற்ற அடிப்படை உரிமைகளல்ல. நீதிமன்றம் அவற்றைக் கேள்விக்குட்படுத்தக் கூடாது என்பது வேறு, அவற்றை அப்படியே ஏற்று அதன் அடிப்படையில்தான் ஒரு பிரச்சினையை அணுக வேண்டும் என்பது வேறு. நர்மதை திட்டத்தில் பல வழிப்பாட்டுத் தலங்கள் மூழ்கின. இருப்பினும் அங்கு முக்கிய பிரச்சினையாக எழுந்தவை,பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வு, நட்ட ஈடு, நிலத்திற்கு பதிலாக நிலம், அவர்களின் வாழ்வுரிமை. இந்த ராமர் சேது வழக்கில் சுற்றுச்சூழல் தாக்கம், திட்டம் அதில் செலவளிக்கப்படும் தொகைக்கு தக்க பயனைத் தருமா என்பவை முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆசி பெர்னாண்டஸ் சார்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு சுற்றுச்சூழல் பாதிப்பினை முதன்மையாக முன்வைத்து வாதிடுவார் என்று நினைக்கிறேன்.
இந்த வழக்கில் இந்துக்களின் நம்பிக்கைக்கு மதிப்புத் தர வேண்டும் என்பதே என் கருத்து. போலி மதச்சார்பின்மைவாதிகள் இத்திட்டத்தினை தீவிரமாக ஆதரிக்கக் காரணமே இது இந்துக்கள் நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பதுதான் என்று கருதுகிறேன். கம்யுனிஸ்ட் கட்சிகளைப் பொருத்தவரை இதை பாஜக, இந்த்துவ அமைப்புகள் ராமர் சேதுவிற்கு பாதிப்பில்லா வகையில் நிறைவேற்றக் கோருவதால், இதை தீவிரமாக ஆதரிப்பது, ராமர் சேது பாதிப்புற்றாலும் பரவாயில்லை என்று வாதிடுவது என்ற நிலைப்பாட்டினை
எடுத்திருக்கிறார்கள். இதில் வெளிப்படுவது இந்து வெறுப்பே, அதை மூடிமறைக்க இந்த்துவ எதிர்ப்பு, மதசார்ப்பின்மை போன்ற காரணங்கள். இதில் நான் அவர்களை எதிர்க்கிறேன். சுப்பிரமண்யன் சுவாமி எடுக்கும் நிலைப்பாடுகள் அனைத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அவர் நர்மதை திட்டத்தினை தீவிரமாக ஆதரித்தவர். இந்த வழக்கினைப் பொருத்தவரை நான் அவரது முயற்சியைப் பாராட்டுகிறேன். போலி மதச்சார்ப்பின்மைவாதிகளும், இந்து-இந்திய விரோதிகளும் எப்படியாவது இந்த திட்டத்தினைக் கொண்டு ராமர் சேதுவின் ஒரு பகுதியையேனும் சிதைத்துவிட துடிக்கையில் அதைக் காக்கும் முயற்சிகளை எடுப்பவர்கள் மிக முக்கியமான பணியைச் செய்கிறார்கள். மத நம்பிக்கைகள் எப்படி இருப்பினும், அது மனித முயற்சியால் உருவானதோ இல்லை இயற்கையாக அமைந்த ஒன்றோ - அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புராதன சின்னம். அதை அப்படி அறிவித்து பாதுகாக்க வேண்டும். இதற்கு உதவும் என்பதால் நான் அவர்களை, (அதாவது திட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோரை, ஆசி பெர்ண்டாசையும் சேர்த்தே இங்கு குறிப்பிடுகிறேன்) ஆதரிக்கிறேன். அதற்காக அவர்களின் அனைத்து நிலைப்பாடுகளையும் நான் ஏற்கிறேன் என்று அர்த்தமில்லை. அறிவு ஜீவிகள் என்று சொல்லப்படுபவர்கள் பலர் இந்தப் பிரச்சினையில் எடுத்த நிலைப்பாடுகளில் வெளிப்பட்டது அவர்களது இந்து எதிர்ப்பு மனோபாவமே. இதில் ரோமிலாத் தாப்பரின் கட்டுரையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்த கட்டுரை அது. மேற்கில் இருப்பது வரலாறு, கிழக்கில் இருப்பது புராணம் என்ற கண்ணோட்டத்தின் இன்னொரு வடிவம்தான் அதன் மையக்கருத்து. தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம். எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு தங்களது இந்து,பார்பன விரோதத்தினை வெளிக்காட்ட இது இன்னொரு வாய்ப்பாக அமைந்தது. பாதிப்புறுவது இந்து அல்லாதோரின் வழிபாட்டிற்குரியதாக/மரியாதைக்குரியதாக இருந்திருந்தால் அவர்கள் கருத்து வேறுவிதமாக இருந்திருக்கும். அப்போது அதை சிதைப்பது
மதச்சார்ப்பின்மைக்கு விரோதமான ஒன்றாக, சிறுபான்மையினர்க்கு எதிரான ஒன்றாக எதிர்க்கப்பட்டிருக்கும். நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வாதங்களையும் கருத்தில் கொண்டு வேறொரு தருணத்தில் விரிவாக எழுதுவோம். திண்ணையில் அரசியல் சட்டமும், மத நம்பிக்கை/உரிமை குறித்து நான் எழுதியிருப்பவற்றை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

விடுதலையில் வெளியாகியுள்ள குறிப்பு இது:
”75 விழுக்காடு உள்ளூர் மக்களுக்கே!
3. தமிழ்நாட்டில் தொடங்கப்படும் புதிய தொழிற்சாலைகளில் 75 விழுக்காடு உள்ளூர் - தமிழ்நாட்டு மக்களுக்கே தரவேண்டும் என்ற அரசின் நிபந்தனை தொழில் அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியமான ஒன்றாகும்! நமது இளைஞர்கள், இனி வேலை தேடி பல ஊர்களுக்கு அலைய வேண்டிய அவசியமின்றி, தமிழ்நாட்டுக் குள்ளேயே வேலை வாய்ப்பைப் பெற்று நிம்மதியான வாழ்வு வாழ வழிவகை செய்யும். இதுவும் மிகவும் பாராட்டத்தகுந்த ஒன்றாகும்.
வீட்டு மனைகள், புதிய கட்டடங்கள், கட்டுமானங்களில் இந்த 75 சதவீத விதி, தமிழ்நாட்டவர்தான் செய்யவேண்டும் என்றும் வற்புறுத் தினால், மற்றவர் தம் சுரண்டல் ஆதிக்கத்தினை தடுத்திட வாய்ப்பு ஏற்படுமே! “

தமிழக அரசு இப்படி 75% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறதா இல்லை இது பரிந்துரையா. நிபந்தனை என்றால் அது ஆணை வடிவில் விதிக்கப்பட்டிருக்கிறதா அல்லது அரசு உதவி/மான்யத்தினைப் பெற நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளதா. விபரம் தெரிந்தவர்கள் மேலதிக தகவல்கள் தரலாம்.
”வீட்டு மனைகள், புதிய கட்டடங்கள், கட்டுமானங்களில் இந்த 75 சதவீத விதி, தமிழ்நாட்டவர்தான் செய்யவேண்டும்” என்பதை வீரமணி விரும்பினாலும் அரசு கட்டாயமாக்க முடியாது. அவ்வாறு கட்டாயமாக்குவது அரசியல் சட்டத்திற்கு முரணானது. இந்த 75% இட ஒதுக்கீட்டினைக் கூட அரசு வேண்டுகோளாக வைக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இப்படி வேலைகள், வீட்டு மனைகள் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வருவதை நான் ஆதரிக்கவில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா.

Labels: , , , ,

காப்ரா-சுஜாதா-பிரமீள்-நிகழ்

காப்ரா-சுஜாதா-பிரமீள்-நிகழ்

காலச்சுவடு 100வது இதழில் (ஏப்ரல் 08) கோவை ஞானி தன்னுடைய கட்டுரையில் http://kalachuvadu.com/issue-100/page82.asp
சுஜாதா எழுதிய நூலினை விமர்சித்து பிரமீள் எழுதியதைக் குறிப்பிடுகிறார் :
“நவீன கால இயற்பியலும் இந்திய ஆன்மிகமும் இணைய முடியும் என்ற முறையில் ப்ரிட்ஜ் ஆப் காப்ரா எழுதியதை மேற்கோள்காட்டி சுஜாதா எழுதினார். விஞ்ஞானமும் விபூதிப் பட்டையும் என்று பெயரிட்டு சுஜாதாவைச் சாடி பிரமிள் எழுதினார்.”

அதற்கு எதிர்வினையாக நான் ஒரு கட்டுரை எழுதினேன்.ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியதாக நினைவு. இவை ஞானி தொகுத்த “அறிவியல், அதிகாரம், ஆன்மீகம்” என்ற நூலில் இடம் பெற்றன என்று நினைக்கிறேன். தொடர்புடைய நிகழ் இதழ்கள், அந்த நூல் என்னிடம் இப்போது இல்லை. எனினும் நான் எழுதிய கட்டுரையை விரைவில் இப்பதிவில் முன்னுரை, குறிப்புகளுடன் இடுகிறேன்.

Labels: , , ,