சுஜாதா - விமர்சனமும்,அற்பர்களும்

சுஜாதா விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் அல்லர். ஆனால் அதற்காக அவர் மீது வீண்பழி சுமத்துவதை கண்டிக்கிறேன். சுஜாதவை விமர்சிப்பது வேறு, அவர் மரணத்தினை கொண்டாடுவது வேறு. சுஜாதாவை மதிப்பிடுங்கள். அவர் மீது குற்றம் சாட்டுங்கள்.
அதையெல்லாம் செய்யும் முன் நீங்கள் செய்தது, செய்யாதது, செய்யத்தவறியதையும்
ஒரு முறை யோசியுங்கள். அவர் அதை எதிர்க்கவில்லை, இதை எதிர்க்கவில்லை
என்று கேட்பவர்கள் ஒன்றினை மறந்துவிடுகிறார்கள். எல்லோரும் எல்லாவற்றிற்காகவும்
குரல் கொடுப்பதில்லை, ஆதரவு தெரிவிப்பதில்லை. தமிழ்ச்செல்வன் கொலைச் செய்யப்பட்டது குறித்து இரங்கல் பதிவு போடாதவர்கள் எல்லாம் அவர் மரணமடைந்தது
குறித்து மகிழ்ந்தார்கள் என்று அர்த்தமில்லை.
சுஜாதாவும் ஒரு மனிதர்தான். அவரது அறிவிற்கும், புரிதலுக்கும் ஒரு அளவிற்கிறது, அதில் நிறையும் இருக்கும், குறையும்
இருக்கும். அதைப் புரிந்து கொண்டு விமர்சியுங்கள். சுந்தரவடிவேல் என்ற பதிவரின்
பதிவையும், பின்னூட்டத்தையும் படித்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் அதில்
சுஜாதா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். சுஜாதா எங்கும்
மனுதர்மம் சரியானது, இன்றும் பொருந்தும் என்றோ பிறப்பு அடிப்படையிலான
ஏற்றதாழ்வுகள், அதன் அடிப்படையிலான பாகுபாடுகள் சரி என்றோ வாதிடவில்லை.
அவர் ஒரு லிபரல், இறை நம்பிக்கை உள்ள ஒரு லிபரல். சிலவற்றை அவர் தவறாக
அணுகியிருக்கலாம், புரிந்து கொண்டிருக்கலாம். அதை விமர்சிக்கலாம். ஆனால்
ஒட்டுமொத்தமாக சுந்தரவடிவேல் ஒரு முத்திரை குத்துகிறார். நீங்களுமா சுந்தரவடிவேல்
என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பார்பன சங்க விழாவில் கலந்து கொண்டதை விமர்சியுங்கள். அவர் அதை தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர் ஜாதி வெறி பிடித்தவரோ அல்லது குறுகிய மனம் கொண்டவரோ அல்ல. தனிப்பட்ட வாழ்வில் அவர் மீது யாரும் அப்படி குறை சொன்னதில்லை.

மார்க்சுக்கும், எங்கெல்சுக்கும், லெனினுக்கும் கலை இலக்கியம் குறித்து இருந்த பார்வை
அவர்களை தங்கள் ஆசான்களாகக் கொள்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் வலைப்பதிவு ‘புரட்சி வீரர்' களிடம் இல்லை. இருப்பது வறட்டு மார்க்ஸியமும்,
வெறுப்பும். இவர்கல் இப்படி இருக்கும் வரை ஏகாதிப்பத்தியம் கவலைப்பட வேண்டாம்.
ஏனெனில் இவர்களது ‘மார்க்ஸியம்' போகாத ஊருக்கு வழியைப் போன்றது. அதால்
எந்த ஒரு நீண்டகாலத் தாக்கத்தினையும் ஏற்படுத்த இயலாது. அந்த அற்பர்களின் அர்ப்ப
மகிழ்ச்சியே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் காட்டி விட்டது.

5 மறுமொழிகள்:

Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

உங்கள் பதிவுடன் முழுதும் உடன்படுகிறேன்.

3:55 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

தேவையான பதிவு, ரவி !

சம்பந்தப்பட்டவர்கள் நீங்கள் கூறியிருப்பதை நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

எ.அ.பாலா

12:09 AM  
Anonymous விடாது கருப்பு மொழிந்தது...

சூப்பர் பதிவு.

12:15 AM  
Blogger வால்பையன் மொழிந்தது...

லிங்க் உங்களுக்கே கொடுதிருக்கிங்க!!
அதை மாத்துங்க

வால்பையன்

11:11 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

3:54 AM  

Post a Comment

<< முகப்பு