சுஜாதா: அப்படியென்ன அவசரம் அரங்கா? :(

சுஜாதா: அப்படியென்ன அவசரம் அரங்கா? :(

சுஜாதாவின் மறைவினால் துயருற்றள அவரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும், கலை, இலக்கிய உலகினருக்கும் என் அனுதாபங்கள். அவர் மறைவிற்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எழுத்து நடை லட்சக்கணக்கான வாசகர்களை அவர் எழுத்துக்களைத் தேடித் தேடி படிக்க வைத்தது. அவரது அபுனைவு எழுத்துக்கள் முலம் அவர்கள் பலவற்றை அறியவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது. தொழிநுட்பவியலாளராக
மின்னணு ஒட்டு பதிவு இயந்திரத்தினை உருவாக்குவதில் பொரும் பங்காற்றியவர். அறிவியலை பரப்பியதற்காக தேசிய பரிசு பெற்றவர். இப்படிப்பட்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுஜாதா இன்னுமொரு நூற்றாண்டு இரும் என்று வாசகர்கள் விரும்பிய போதும் அரங்கனுக்கு அப்படி என்ன அவசரமோ, தெரியவில்லை, அவரை தன் வசம் அழைத்துக் கொண்டிருக்கிறான்.

இதை நான் எழுதும் போது எங்கோ ஒரு வாசகர்/ரசிகர் பிறந்த தன் குழந்தைக்கு மதுமிதா என்று பெயர் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கலாம், சுஜாதாவை நினைத்துக் கொண்டு சுரக்கும் கண்ணீரை விரல்களால் துடைத்த படி, யாராவது ஒருவர் இணையத்தில் அவர் எழுத்துக்களைத் தேடிப் பிடித்து படித்து, இனி யார் இது போலெல்லாம் எழுதுவார் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கலாம். யாரோ ஒருவர் இரவெல்லாம் விழித்து அவர் படைப்பினுள் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்கலாம். யாருக்குத் தெரியும், சுஜாதா அரங்கனுக்கு வைகுண்டத்தில் கணினியில் லினக்ஸைத்தான் நிறுவ வேண்டும், விண்டோஸ் வேண்டாம் என்று ஆலோசனைச் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ என்னமோ.

சுஜாதவின் பெயர் தமிழ் உள்ள வரை நிலைத்திருக்கும்.

பி.கு சுஜாதா மரணமடைந்த செய்தியை நான் தாமதமாகவே தெரிந்து கொண்டேன். சில காரணங்களால் உடனே பதிவிட முடியவில்லை.

Labels: , ,

3 மறுமொழிகள்:

Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

//
இதை நான் எழுதும் போது எங்கோ ஒரு வாசகர்/ரசிகர் பிறந்த தன் குழந்தைக்கு மதுமிதா என்று பெயர் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கலாம்,
//
Ravi, My first daughter's name is Madhumita !!!

Pl. read:

http://balaji_ammu.blogspot.com/2005/05/colossus-by-name-of-sujatha.html

http://balaji_ammu.blogspot.com/2008/02/420.html

12:04 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பாலா,
யாம் அதை அறிவோம். அதையும் மனதில் கொண்டே அவ்வரிகளை எழுதினோம். எழுத்து என்பது இன்று படித்து விட்டு நாளை மறந்துவிடக்கூடியதாக இல்லை என்பது அவரது பல படைப்புகளுக்கு
பொருந்தும். ஒரு எழுத்தாளர் பல
நேரங்களில் நம்முடைய மனதின்
ரகசிய அறைகளை காட்டிவிட்டு மர்மப் புன்னகையுடன்
போவது சாத்தியமே. கற்பனைக்கு
இருக்கும் அபார சக்தியை நாம்
குறைவாக மதிப்பிட முடியாது.
அது புதிய யதார்த்ததினை ஆக்க
உதவும்.

9:52 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

3:55 AM  

Post a Comment

<< முகப்பு