மக்கள்சட்டம் வலைப்பதிவு-ஒர் எச்சரிக்கை

மக்கள் சட்டம் என்ற பெயரில் ஒரு வலைப்பதிவினைப் பாருங்கள். அதில் சட்டம்,நீதித் துறை, அறிவுசார் சொத்துரிமை குறித்து எழுதி வருகிறார்கள் என்று வலைப்பதிவர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினார். அண்மையில்தான் அந்த வலைப்பதிவினைப் பார்த்தேன், பல இடுகைகளைப் படித்தேன். தவறான தகவல்கள், பொய்கள், அரைப் பொய்களுடன் இடுகைகளில் தேவையற்ற அச்சம்/பீதியை உருவாக்கும் போக்கு இருந்தது. மேலும் தனி நபர் குறித்த தாக்குதல்கள், அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்றிருந்தன. நான் படித்த அளவில் அதில் உள்ள தகவல்களின் நம்பத்தன்மை சந்தேகத்துரியதாக இருந்தது. மலினமான பிரச்சாரம், வெறுப்பினைப் பரப்புதல் பல இடுகைகளில் காணப்பட்டது.சட்டம் குறித்த விவாதங்களில் முதலில் உண்மையைச் சொல்ல வேண்டும், தகவல்களை திரிக்கக் கூடாது. பொய்களை அள்ளி வீசக் கூடாது. சட்ட அறிவில்லதோருக்கு அறிவு பெற வழிவகுக்க வேண்டும்,
சட்டப் பிரிவுகளை உரிய வகையில் தெளிவாக்க வேண்டும். ஆனால் இந்தப் பதிவில் உள்ள இடுகைகள், நான் படித்த அளவில், இதற்கு எதிர்மறையாக உள்ளன. பொதுமைப்படுத்தி தனி நபர் தாக்குதலை தவிர்க்க வேண்டும். இந்தப் பதிவில் அப்துல் கலாம், அறிவியலாளர் மஷேல்கர் குறித்து அவதூறுகள் உள்ளன. நடுநிலையான பார்வையும் இல்லை, அறிவார்ந்த நேர்மையும் இல்லை.

நான் அந்த வலைப்பதிவினை பார்த்த போது இருந்த கடைசி இடுகையில் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதை அடுத்தும் ஒரு பின்னூட்டம் இட்டேன். முதலில் இட்ட பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்திருந்தார்கள். இரண்டு பின்னூட்டங்களில் இரண்டாவதை அவர்கள் வெளியிடவில்லை. ஒருவேளை பிளாக்கர் விழுங்கியிருக்கலாம்.ஆனால் அவர்கள் பதிலுக்கு நான் இட்டதன் பிரதி என் மின்னஞ்சலுக்கு வந்ததால், அதை பிளாக்கர் விழுங்கியிருக்க வாய்ப்பில்லை. என் பின்னூட்டம் அவர் கொடுத்த மறுமொழிக்கு பதிலாக எழுதப்பட்டது இது வரை பிரசுரமாகவில்லை. நான் அதை இட்ட பின் அவர்கள் இரு இடுகைகளை இட்டுள்ளனர்.

அந்த இடுகையப் பற்றி விரிவாக எழுதி, அதில் உள்ள பொய்களை, திரித்தல் வேலைகளை அம்பலப்படுத்தலாம் என்றிருக்கிரேன்.நேரம் கிடைக்கும் போது எழுதுவேன். அதே போல் இந்த மலட்டு விதைகள் என்ற கட்டுக்கதை குறித்தும் எழுதலாமென்றிருக்கிறேன்.அந்த வலைப்பதிவினை இரண்டு வழக்கறிஞர்கள் நடத்துவதாகவும், அதில் ஒருவர் M.L(IPR) என்றும் தெரிகிறது. ஆனால் இடுகைகளில் அறிவு சார் சொத்துரிமை குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லை. இரண்டாம் கை, மூன்றாம் கையாகப் பெறப்பட்ட தகவல்கள் இடம் பெறுகின்றன. எனவே அந்த வலைப்பதிவில் உள்ளவற்றை நம்பாதீர்கள், அதில் உள்ள தகவல்கள் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதை மேற்கோள் காட்டினால் இப்படி உறுதிப்படுத்திய பின் செய்யுங்கள்.

அறிவுசார் சொத்துரிமைகள், உயிரியல் தொழில் நுட்பம், உலக வர்த்தக அமைப்பு போன்றவை குறித்து இன்று தமிழில் பொய்கள் பரப்படுகின்றன, ஆதாரமற்ற தகவல்கள் பீதியை உருவாக்கும் வகையில் எழுதப்படுகின்றன.இதை ‘இடதுசாரி' ‘முற்போக்கு' என்ற பெயரில் முன்வைப்பது அதிகரித்துள்ளது. இதனால் இவை குறித்து முற்றிலும் எதிர்மறையாகவே நோக்கும் போக்கு வலுப்பெறும் அபாயம் உள்ளது. இது புரிதலுக்கோ, உரையாடலுக்கோ உதவாது. . இந்த பிரச்சார இயந்திரத்தினை நான் ஒருவனாக எதிர் கொண்டு ஒவ்வொன்றிற்கும் பதில் எழுத முடியாது என்பதால் அந்த இடுகை குறித்தும், மலட்டு விதைகள் என்றக் கட்டுக்கதை குறித்தும் எழுதவிருக்கிறேன். இவ்வாறு எழுதினால் ஏகாதிபத்திய அடிவருடி, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதரவாளன் என்று என் மேல் முத்திரைக் குத்தப்படலாம் என்பதை அறிந்தே இதை எழுதுகிறேன். ஏனெனில் விமர்சனமும், எதிர்ப்பும் அறிவார்ந்த புரிதலுடன் செய்யப்பட வேண்டும். பின்னூட்டங்களை வெளியிட மறுப்பவர்கள், அது தங்கள் உரிமை என்று வாதிடலாம். அது போல் உண்மைகளைச் சொல்லுவதும்,அவர்கள் எழுதியுள்ள பொய்களை முன் வைப்பதும் என் உரிமை.

நான் இட்ட அவர்கள் வெளியிடாத பின்னூட்டம்

என்னுடைய பின்னூட்டத்தினை வெளியிடாமல் உங்கள் பதிலை வெளியிடுகிறீர்கள், ஏன்.

உங்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என்ப்தை மீண்டும் தெளிவாக்கிவிட்டீர்கள்.
1, பி.டி. பருத்தி விதைகளை இந்தியாவில் மறுபடியும் பயிரிட முடியும், பயிரிட்டுள்ளனர்.
2, காப்புரிமை வேறு, Plant Breeders' Rights வேறு. எனவே பயிரின வகை மீதான உரிமையை
காப்புரிமையாக கருத முடியாது.
3, அமெரிக்காவின் சட்டம் உலக வங்கியில் கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்த முடியாது. அந்த 301
பிரிவின் படி அமெரிக்கா சில நடவடிக்கைகளை எடுக்க முடியும், அவ்வளவுதான். அதற்கும் உலக வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அது இருதரப்பு ஒப்பந்தம் அல்ல.அது இந்தியாவை கட்டுப்படுத்தாது.
4,Process-by-Product Patent மூலம் இந்தியாவில் காப்புரிமை வழங்கப்பட்டுள்ள விதை/பயிரின வகைக்கு ஒரு உதாராணம் காட்டுங்கள். உங்களுக்கு பெயர்களை எழுதத் தெரிந்திருக்கிறது, அர்த்தம் புரியாமல் எதையாவது எழுதி பூச்சாண்டி காட்டத் தெரிந்திருக்கிறது.
5, யாரும் வேம்பு, மஞ்சள் என்ற இயற்கைப் பொருட்களின் மீது அமெரிக்காவில் காப்புரிமை பெற்று விடவில்லை. உங்களுக்கு prior art என்றால் என்னவென்று தெரியாமல் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்ப முயற்சிக்கிறீர்கள்.
35 U.S.C. 102
Conditions for patentability; novelty and loss of right to patent.
A person shall be entitled to a patent unless -


(a) the invention was known or used by others in this country, or patented or described in a printed publication in this or a foreign country, before the invention thereof by the applicant for patent, or

(b) the invention was patented or described in a printed publication in this or a foreign country or in public use or on sale in this country, more than one year prior to the date of the application for patent in the United States, or

(c) he has abandoned the invention, or

பிரச்சினை அமெரிக்கா prior art ஐ தீர்மானிக்க பயன்படுத்தும் சான்றுகள்,அளவுகோல்களில் இருக்கிறது. இருந்த போதும், மஞ்சளை அடிப்படையாகக் கொண்ட உரிமங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. அது எப்படி சாத்தியமானது என்பது தெரியுமா உங்களுக்கு ?. அதைப் பற்றி எழுதுவீர்களா?. TRIPS ஒப்பந்தப் பிரிவுகளை நீங்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுடை பதில்களில் அபத்தங்கள் ஏராளமாக உள்ளன.அறிவுசார் சொத்துரிமையே கூடாது என்பது உங்கள் கருத்தா?சுருக்கமாக சொன்னால் உங்களுக்கு உடனடித் தேவை அறிவுசார் சொத்துரிமை குறித்த அடிப்படை அறிவு. அதாவது ஒரு விரிவான அறிமுகமும், தெளிவான புரிதலும். அதற்கான 101 பாடம் நடத்த நான தயாராக இல்லை :).

மக்கள் எதிரிகளை அடையாளம் காட்ட முதலில் நீங்கள் எழுதுபவை குறித்த அறிவினை பெறுங்கள்.அப்புறம் அடையாளம் காட்டலாம்.இந்தப் பதிலை நீங்கள் வெளியிடாவிட்டால் என் பதிவில் இட்டு என்னால் விமர்சிக்க முடியும்.இந்த இடுகையில் பல பொய்கள், தவறான தகவல்கள் உள்ளன என்பதை ஒத்துக் கொண்டால் நான் விரிவாக பதில் எழுதுவதை தவிர்த்து விடுவேன். வலைப்பதிவர்கள்/வாசகர்கள் முட்டாள்கள், என்ன எழுதினாலும் நம்பி விடுவார்கள் என்று நினைத்தால் அது உங்கள் பிழை.

Labels: , ,

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

8:07 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

3:55 AM  

Post a Comment

<< முகப்பு