அண்ணா பல்கலை.யில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு சலுகை

அண்ணா பல்கலை.யில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு சலுகை!: வருகைப் பதிவு குறைவுக்கு விதிகளை தளர்த்தியது அம்பலம்

சென்னை, ஏப். 23: அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிக்கும் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு "செமஸ்டர் தேர்வு' எழுதுவதில் சலுகை காட்டியது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு வருகைப் பதிவு விழுக்காட்டில் "சலுகை' காட்டியது தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர். இதில், அவர்கள் கல்லூரி வகுப்புகளில் சரியாக கலந்து கொள்ளவில்லை. இதனால், அவர்களின் வருகைப் பதிவு விழுக்காடு மற்றும் ஒட்டு மொத்த விழுக்காடு மிகவும் குறைவாகவே இருந்தது. தேர்வு எழுத எவ்வளவு விழுக்காடு தேவை? வருகைப்பதிவு விழுக்காடு 50 சதம் உள்பட மொத்தம் ஒட்டுமொத்த விழுக்காடு 75 சதவீதமாக இருந்தால் மட்டுமே ஒரு மாணவர் செமஸ்டர் தேர்வு எழுத தகுதி பெற முடியும்.

வருகைப் பதிவு விழுக்காடு குறைவாக இருந்தால் செமஸ்டர் தேர்வு எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளில் சிலர் மிகவும் குறைவாகவே வருகைப் பதிவு விழுக்காடு வைத்திருந்தனர். இத்துடன் ஒட்டுமொத்த விழுக்காடும் குறைவாகவே பெற்றிருந்தனர். அரசியல் வாரிசுகள் எவ்வித பிரச்சினையின்றி செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக விதிகள் தளர்த்தப்பட்டு, அனைத்து துறைகளுக்கு ஓர் அறிக்கை விடுக்கப்பட்டது. அதில் ஒட்டுமொத்தமாக 40 சதவீத விழுக்காடு வைத்திருக்கும் அனைவரும் தேர்வு எழுத தகுதி பெறுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் வாரிசுகளுக்கு வருகைப் பதிவு விழுக்காடில் சலுகை காட்டியிருப்பது கல்வித் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Labels: ,

8 மறுமொழிகள்:

Blogger Hari மொழிந்தது...

ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகளின் இந்த செயலுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

"திராவிட கூத்து"

:)

7:18 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

அதில் ஒட்டுமொத்தமாக 40 சதவீத விழுக்காடு வைத்திருக்கும் அனைவரும் தேர்வு எழுத தகுதி பெறுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

suuppper :(

7:22 AM  
Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

மோசமான செயற்பாடு.

7:49 AM  
Anonymous பனித்துளி மொழிந்தது...

"அண்ணா" பல்கலைக்கழகம் வேறு எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

10:02 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

தம்பீ...
காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று
அதை
நானுனக்கு சொல்லட்டுமா இன்று

10:02 PM  
Blogger OSAI Chella மொழிந்தது...

// Not related to this post//
http://www.keetru.com/dalithmurasu/apr06/periyar.html

is not there. do you have anyother link related to Periyars arikkai on Keez Venmani"? If you have one on web.. kindly mail me at webmediaconsultant AT yahoo.com

thanks.

With regards
OSAI CHELLA
http://osaichella.blogspot.com

4:09 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

8:07 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

3:55 AM  

Post a Comment

<< முகப்பு