தெரிவு

தெரிவு

1990களின் பிற்பகுதியில் ஒரு கட்டத்தில் தமிழில் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். பின்னர் 2003ல் தான் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுதத் துவங்கினேன். அதற்கு ஒரு காரணம் இணையம் என்ற ஊடகம் தந்த சில வசதிகள், இன்னொரு காரணம் சில நண்பர்களின் வற்புறுத்தல். இணையம் மூலம் புதிய வாசகர்களை, உலகின் பல பகுதிகளில் உள்ள தமிழர்களை என் எழுத்துக்கள் சென்றடையும் என்ற நம்பிக்கை.

கடந்த (கிட்டதட்ட) நான்கு ஆண்டுகளில் நான் ஒரளவேனும் எழுதியிருக்கிறேன் என்று கருதுகிறேன். போதுமான அளவிற்கு விவாதங்களில் ஈடுபட்டு கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். சரியோ,தவறோ என் கருத்து இதுதான் என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன். யார் ஏற்காவிட்டாலும், இதை சொல்லுகிற ஒரே நபர் நான் மட்டுமே என்றாலும் என் கருத்து இதுதான் என்று சொல்லத் தயங்காதவன் நான். இட ஒதுக்கீடு உட்பட சிலவற்றில் என் கருத்துக்கள், பலருக்கு உவப்பாக இல்லை என்று தெரிந்திருந்தும், என் கருத்தினை வெளிப்படுத்த நான் தயங்கியதில்லை. பிறர் திருப்திக்காவோ அல்லது ஒப்புதலை எதிர்பார்த்தோ நான் கருத்து சொல்லுவதில்லை/எழுதுவதில்லை. தமிழில் இந்த நான்கு ஆண்டுகளில் எழுதியது மன நிறைவினைத் தருகிறது.வாசகர்களுக்கு சிலவற்றையேனும் புதிதாகக் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று என்னால் துணிந்து கூற முடியும்.

முன்பு தமிழில் எழுதுவதை நிறுத்தியதைப் பற்றி குறிப்பிட்டேன். இப்போது சில காரணங்களால் தமிழ்ச் சூழலிலிருந்து விலகி நிற்கும் மன நிலையில் இருக்கிறேன். கடுமையான நேரப் பற்றாக்குறை உட்பட சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் முக்கியமான காரணம் தமிழில் எழுதுவதிலும், விவாதிப்பதிலும் எனக்கு ஒரு சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் தமிழில் எழுதப்படும் எழுத்துக்களின் தரமும், அறிவார்ந்த நேர்மையின்மையும் தரும் எரிச்சல்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இடதுசாரி, முற்போக்கு, பெரியாரிய இன்ன பிற வாதிகளின் எழுத்துக்களில் காணப்படும் அறிவார்ந்த நேர்மையின்மை. தங்கள் தரப்பு வாதத்திற்காக தகவல்களை திரிப்பதில் துவங்கி, முழுப் பொய்களை கூச்சமின்றி எழுதுவது என்று பல விதங்களில் இது செய்யப்படுகிறது. பல அரை,முக்கால்,முழுப் பொய்களை சிறுபத்திரிகைகள், இயக்க பத்திரிகைகள், லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகைகளிலும், நூல்களிலும், வலைப்பதிவுகளிலும் படிக்க நேரிடுகிறது.

இவற்றிற்கு பதில்/மறுப்புகளை ஒருவர் எழுதிக் கொண்டேயிருக்க முடியாது. தமிழில் வெளியாகின்றவற்றை தொடர்ந்து படித்தால் 21ம் நூற்றாண்டு சீத்தலை சாத்தானாராகி விடுவேனோ என்ற 'அச்சம்' எழுகிறது -:).

எனவே தமிழில் எழுதுவது, வலைப்பதிவில் எழுதுவது, பின்னூட்டங்கள் இடுவது, ஆகியவற்றை நிறுத்தி விட முடிவு செய்துவிட்டேன். தமிழில் நான் படிப்பது குறைவு, இப்போது அதை இன்னும் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். ஏற்கனவே எழுதி அரைகுறையாக இருக்கும் சில கட்டுரைகள் முடிக்கப்பட்டு வெளியாகலாம் அல்லது கணினியில் உள்ள குப்பைத் தொட்டியில் உயிரிழக்கலாம். சில பிரச்சினைகளில் நான் கருத்துச் சொல்லித்தானாக வேண்டும் என்று கருதினால் எழுதக்கூடும்.

இப்படி விலகி நிற்பதை பின் வாங்கல் என்றோ, பதுங்கல் என்றோ, அல்லது ஒரு பாய்ச்சலுக்கான ஆயத்தம் என்றோ புரிந்து கொள்ள வேண்டாம். இப்படி விலகி இருப்பது என் தெரிவு, அவ்வளவுதான்.

நேற்று இரவு என் கனவில் வந்து என் முடிவுகளுக்கு முழு ஒப்புதல் அளித்து, தமிழில் எழுதுவதை நிறுத்துவது எனக்கும், தமிழுக்கும் நல்லது என்பதை உறுதி செய்த மிஸ்.தமிழ்த்தாய்க்கு என் நன்றிகள். :)

Labels: ,

21 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

good news

10:35 AM  
Blogger Muse (# 5279076) மொழிந்தது...

ரவி,

உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துவந்தவன் என்கின்ற அனுபவத்தின் அனுமானத்தில் இதை சொல்லுகிறேன்.


தரமற்ற கருத்துக்களை ஆதரிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக மட்டுமே இந்த முடிவு முடியும்.

உங்களைப்போன்ற படிப்பாளிகளால் படிக்காமல் இருக்க முடியாது. குப்பைகளை ஒதுக்கி நல்ல விஷயங்களைப்பற்றி தாங்கள் தேர்ந்தெடுத்துப் படிப்பது பற்றியாவது நீங்கள் எழுத வேண்டும்.

உங்களது எழுத்து வெறுமே சண்டைபோடுகின்ற ஒன்றாக மட்டுமே இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு பிரச்சினையின் மற்றொரு கோணத்தை அது காட்டும். அந்தக் கோணம் சரியா தவறா உவப்பானதா இல்லையா என்கின்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டு அது வேறுவகையான கோணத்தில் இருந்து யோசிக்கப்படுகின்றது என்பது கருத்து வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்று.

ஒற்றைபோக்கு மனநிலை உள்ளவர்களால் தமிழ் ப்ளாக்கர்கள் உலகம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும்போது, வேறுபட்ட கருத்துக்களை எழுதுகின்ற நீங்கள் இதை நிறுத்துவது தரமற்ற போக்கிற்கு மட்டுமே வழி வகுக்கும்.

இதற்குமேல் சொல்ல எனக்கு தகுதியோ, உரிமையோ இல்லை.

11:04 AM  
Blogger Voice on Wings மொழிந்தது...

04/01?

3:21 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

Sorry to see you leave. Yours was a voice of sanity in the world of Tamil blogs. The Dravidian movement has had a devastating effect on Tamil literary and intellectual capabilities. People will rather believe certain myths rather than analyze and confront the truth. That is what "pseudo-rationalism" has done.

12:35 AM  
Blogger ஜடாயு மொழிந்தது...

ரவி,

// பல அரை,முக்கால்,முழுப் பொய்களை சிறுபத்திரிகைகள், இயக்க பத்திரிகைகள், லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகைகளிலும், நூல்களிலும், வலைப்பதிவுகளிலும் படிக்க நேரிடுகிறது. //

உண்மை, மிகவும் வேதனையான விஷயம்.

எனவே இத்தகைய சூழலில் உங்களைப் போன்றவர் எழுத வேண்டியது இன்னும் அவசியமாகிறது என்று நான் கருதுகிறேன்.

உங்கள் எழுத்துக்களைத் திண்ணையில் தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் ஜெயமோகன், அரவிந்தன் உடன் நிகழ்த்திய விவாதங்கள் அவை எப்படி நடத்தப் படவேண்டும் என்பதற்கான சரியான எடுத்துக் காட்டுகள்.

உரத்த சிந்தனை, மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தல், விவாத நேர்மை இத்தகைய பண்புகள் இன்னும் தமிழ்ச் சூழலில் உயிருடன் இருக்கின்றன என்பதை நிரூபிப்பதற்கு உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது.

நேரமின்மை காரணமாக ப்ரோலிஃபிக் ஆக எழுத முடியாவிட்டாலும், நீங்கள் தமிழில் எழுதுவதை நிறுத்தவோ, மிகவும் குறைத்து விடவோ வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

3:03 AM  
Anonymous கலர் கம்பித் தலையன் மொழிந்தது...

//
எனவே தமிழில் எழுதுவது, வலைப்பதிவில் எழுதுவது, பின்னூட்டங்கள் இடுவது, ஆகியவற்றை நிறுத்தி விட முடிவு செய்துவிட்டேன்.
//

உங்களை இனி தமிழின விரோதி, பார்ப்பானன், ஆரியப் பாம்பு, என்றெல்லாம் வசவு பாட ஏதுவாக எடுத்துக் கொடுத்து விடுகிறீர்களா..?

adios.

//
இவற்றிற்கு பதில்/மறுப்புகளை ஒருவர் எழுதிக் கொண்டேயிருக்க முடியாது. தமிழில் வெளியாகின்றவற்றை தொடர்ந்து படித்தால் 21ம் நூற்றாண்டு சீத்தலை சாத்தானாராகி விடுவேனோ என்ற 'அச்சம்' எழுகிறது -:).
//

இவர்கள் இல்லை என்று ஒதுக்கிவிட்டு போகவேண்டியது தானே...இவர்களிடம் விவாதம் எல்லாம் செய்ய ஏன் முடிவு செய்து பின்னர் சீள் தலைச் சாத்தனார் ஆகிவிடுவோமோ என்று பயப்படவேண்டும்.

Why dont you consider them as non-existing entities ?

3:11 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

:(

---04/01?---

Oh... ;))

1:17 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

நீர் எப்பய்யா தமிழ்ல பின்னூட்டம் போட்டிருக்கீரு?

எரிச்சல் என்பது உமக்குமட்டுமா வரும்? உமது நான் பிடிச்ச முயலுக்கு மூணுகால் எழுத்துக்களைக் கண்டால் எல்லோருக்கும் தான் வரும்.

எனிவே, நல்ல முடிவு! :) ஏப்ரல் 1ன்னு சொல்லி ஏமாத்திடாதீங்க.

2:53 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ரவி

உங்களுடைய ஆரம்ப கால திண்ணை கட்டுரைகள் பலவற்றுடன் இன்றும் நான் கடுமையாக வேறு படுகிறேன். ஆனால் பல விஷயங்களில் உங்களைப் போன்ற இடது சாரிகள் வந்து சொல்லும் பொழுது உண்மை கசப்பாக இருந்தாலும், அதில் உள்ள நியாயங்கள் நீங்கள் சொல்வதால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. மேலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உங்களது பல கட்டுரைகள் ஆராய்ச்சி பூர்வமானவை. விஷயம் உள்ளவை. அதையெல்லாம் நாங்கள் இழக்க நேரிடும். இங்குதான் எழுதப் போவதில்லை, திண்ணையில் தொடரப் போகிறேன் என்று சொன்னால் மகிழ்ச்சியே. தயவு செய்து எல்லா இடங்களிலும் எழுதுவதை நிறுத்த வேண்டாம். ஏதாவது ஒரு இடத்தில் தொடருங்கள்.

அன்புடன்
ச.திருமலை

7:01 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

வருத்தத்துடன்,

சுவாமி

4:52 AM  
Blogger தங்கவேல் மொழிந்தது...

:-( :-( :-( :-(

3:50 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

I don't think you will continue with this decision. In case you keep your word, thanks a lot ayya!

2:11 PM  
Anonymous Reason மொழிந்தது...

In case this is not a april 1 trick :-) -

What you are saying today, even if the absolute truth, may be getting ignored today. Nobody might even read it. But 5 years from now or 10 years from now if someone fires up a search engine and starts looking for something, and he finds what you said today in the midst of all other crap floating around - that probability is a good enough reason to write.

4:04 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

chumma poochchaanti kaattaamal chonnathai cheyyungkal, nandri

4:31 AM  
Blogger We The People மொழிந்தது...

உங்க உணர்வுகள் சரி, ஆனால் உங்க முடிவு தவறு என்று நினைக்கிறேன்.

முடிவை மாற்ற முயற்சிக்கலாமே! Hope your the best judge for your decisions. Just a note :)

இங்கு உள்ள எதிர் கருத்தே இல்லாமல் உலவ நினைக்கும் அனானிகளுக்கு உங்க முடிவு ஒரு சந்தோஷத்தை கொடுத்து இருக்கலாம். ஏன் இது போன்ற அனானி பின்னூட்டங்களை வெளியிடுகிறீர்கள்!!??

அன்புடன்,

நா ஜெயசங்கர்

1:15 PM  
Blogger வெற்றி மொழிந்தது...

ரவி,
(::

வருத்தமான செய்தி. உங்களின் பல கருத்துக்களோடு எனக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும், உங்களின் பல பதிவுகள்/பின்னூட்டங்களைப் படித்திருக்கிறேன்.

2:06 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

பரந்த வாசிப்பு, ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதும் திறன், கருத்து மோதல்களில் நாகரிகம்- ரவி சீனிவாசன் உட்பட ஒரு சில பதிவர்களிடமே நாம் இவற்றைக் காண முடிகிறது.அவர்களும் அதிகம் எழுதுவதில்லை.ரவி சீனிவாசன் வலைப்பதிவுலகிலிருந்து விலகிச் செல்வது வருத்தம் தரும் செய்தி.அவரிடம் கருத்து மாறுபாடு கொண்டவர்கள் அவர் எழுதியதைப் படிக்கும் போது பலவற்றை அறிந்து கொள்ள முடியும். சட்டம், இட ஒதுக்கீடு குறித்து விரிவாக எழுதியவர் இப்போது விலகிப் போவது சரிதானா ?. மீண்டும் எழுத வருவார் என்று நம்பும் ஒரு வலைப்பதிவர்

1:51 PM  
Blogger Thangamani மொழிந்தது...

ரவி:

இடஒதுக்கீடு போன்ற சில விதயங்களில் உங்களோடு கருத்து வேறுபாடு இருந்தாலும், உங்களது தேவை அல்லது பங்களிப்பு பல தளங்களில் பலருக்கும் (உங்களுக்கும்)தேவையாகவே உள்ளது.

//இடதுசாரி, முற்போக்கு, பெரியாரிய இன்ன பிற வாதிகளின் எழுத்துக்களில் காணப்படும் அறிவார்ந்த நேர்மையின்மை. //

இப்படியான அளவுகோல்கள் எல்லோரிடமும் இருக்கின்றன. நீங்கள் எழுதாமல் இருக்க முடிவு செய்வது, உண்மையில் உங்கள் தெரிவாக (மட்டும்) இருந்தால் புரிந்துகொள்ள முடியும்.

6:57 PM  
Anonymous கரு.மூர்த்தி மொழிந்தது...

அசுரனில் பதிவில் போட்ட பின்னூட்டம் ,மட்டுறுத்த காத்துள்ளது .

அட வெண்ணை , அவர் உண்மையைதானே சொல்லியிருக்கிறார் ,

ஈராக் போர் ஆரம்பித்த போது பு.ஜவா ,பு.க வா என்று ஞாபகம் இல்லை , ஈராக் பெண்களை கற்பழிக்கும் அமரிக்க ராணுவம் என்று ஒரு கட்டுரை , அதற்க்கு அட்டை படம் எது தெரியுமோ ?

இணையத்தில் மில்டரி செக்ஸ்.காமில்ருந்து எடுத்த படங்கள் .பொதுவாக இந்த சாரிகள் தங்கள் கருத்தை வலியுருத்த எந்த பொய்யையும் சொல்ல தயங்கமாட்டார்கள் .

9:54 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

உங்கள் கட்டுரைகளை திண்ணை இணையத்திலிருந்து படித்து வருகிறேன். தமிழிலில் எழுதுவதை நிறுத்த நினைத்திருப்பது, தமிழர்களுக்கும் தமிழுக்கும் நல்லது. தங்கள் முடிவுக்கு நன்றி

குறிப்பு : ஆடத்தெரியாதவர்க்கு மேடை எப்போதுமே கோணல்தான்.

5:03 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

8:08 PM  

Post a Comment

<< முகப்பு