பூங்கா

பூங்கா

இந்த வாரப் பூங்காவில் நந்திகிராமில் பூனூல் திருவிழா நடத்தி சாதித் திமிரைக் காட்டும் காம்ரேட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திகிராமில் நடந்தது அரசு வன்முறை இதைபூனூலுடன் தொடர்பு படுத்துவானேன். மாஞ்சோலைத் தொழிலாளர் பிரச்சினை குறித்து ஊர்வலம் சென்றவர்களில் 19ம் பேர் காவல் துறையின் தாக்குதலில் கொலைச் செய்யப்பட்ட்து என்ன பெரியாரிய திராவிட திருவிழா என்று எழுதலாமா. பூங்கா ஆசிரியர் குழுவினருக்கு கீழ்வெண்மணி படுகொலைகள்குறித்து பெரியார் விட்ட அறிக்கையைப் பற்றி ஏதாவது தெரியுமா. அவர் அந்தப் படுகொலைகளைகண்டித்து ஒரு வார்த்தை கூட அதில் எழுதவில்லை. நிலப்பிரபுக்களை கண்டித்து அதில் ஏதாவது எழுதினாரா. ஏன் இல்லை.

அந்தப் பெரியார் காங்கிரஸ்கட்சியின் ஆட்சியை, பூங்கா ஆசிரியர் குழவினர் சொற்களில் கூற வேண்டுமென்றால்பார்ப்பனியத்தின் கங்கிரஸ் தேசிய முகத்தினை ஏன்ஆதரித்தார். தேசியவாதியான, இறுதிவரை காங்கிரஸ்காராக இருந்த காமராஜின் பச்சைத் தமிழர் ஆட்சியை ஏன் ஆதரித்தார். பெரியார்தமிழ் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது இந்திக்கு ஆதரவு அளித்தார். 1967 தேர்தலில்காங்கிரஸைத்தான் ஆதரித்தார். எனவே பிறரை நோக்கி விரல் நீட்டும் முன் பெரியாரை நோக்கியல்லவா அவர்கள் விரல்கள் நீள வேண்டும். பார்பனியத்திற்கும் , நந்திகிராமில் நடந்ததெற்கும் என்ன தொடர்பு. திமுக ஆட்சிகளில் துப்பாக்கி சூடுகளே நடந்ததில்லையா,அவையெல்லாம் திராவிட பாசிசத்தின் வெளிப்பாடுகள், தமிழ் நாட்டில் பெரியார் ஆட்சியிலிருக்கும்பாசிஸ்ட்களை ஆதரித்தார் என்று எழுத யாராலும் முடியும். கூலி உயர்வு கேட்ட அத்தான்,குண்டடிபட்டுச் செத்தான் என்று திமுகவினர் 1960களில் விமர்சித்தனர் - பெரியாரின் ஆதரவினைப் பெற்ற காங்கிரஸ் ஆட்சியை.

பூங்கா பார்பனியம், பூனூல் என்பதை வைத்து ஜல்லியடிக்கிறது. பார்பனீய விமர்சனம் என்ற பெயரில் செய்யப்படும் விஷமத்தனம் இது. ஏனெனில் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடும், வன்முறைக்கும், பார்பனியத்திற்கும், பூனூலிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேற்கு வங்கத்தில் நில சீர்த்திருத்தம்நிறைவேற்றப்பட்ட அளவிற்கு தமிழ் நாட்டில் நிறைவேற்றப்படவில்லை. இதெல்லாம் ஒருவர் நெஞ்சில் முள்ளாக உறுத்தியதில்லை. தலித் கண்ணோட்டத்தில் இடதுசாரிகளின் நிலச்சீர்த்திருத்தம் மீதும்,தமிழ்நாட்டில் செய்யப்பட்ட நிலசீர்திருத்தம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன.பெரியார் நிலச் சீர்த்திருத்தம் குறித்து ஒரளவே அக்கறைக் காட்டினார். அது அவரது செயல்திட்டங்களில் முன்னுரிமை பெறவில்லை. ஏனெனில் நில உடைமையாளர்களில் பெரும்பான்மையானோர் பார்ப்பனர் அல்லாத, தலித் அல்லாத பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகஇருந்ததே காரணம் என்று ஒரு கருதுகோளினை முன் வைக்கலாம். எனவே பூங்கா ஆசிரியர்குழு யாருக்காகவும் போலிக் கண்ணீர் விட வேண்டாம்.

பூங்கா தன் நம்பத்தன்மையை இழந்துவிட்டது. சமஸ்கிருத வெறுப்பு, இந்திய தேசியம் மீதான வெறுப்பு போன்றவற்றை பரப்பும் இதழாக அது உள்ளது. உண்மையில் ஏற்கனவே வெளியானகட்டுரைகளை மீள் பிரசுரம் செய்யும். ஆனால் ஏற்கனவே வெளியானவற்றை வெளியிடமாட்டோம் என்று விதி இருப்பதாகக் கூறிக் கொள்ளும். மக்கள் கலைவிழா குறித்து ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளை தரும், ஆனால் வேறு சில விஷயங்களில் சில பதிவுகளை வேண்டுமென்றே புறக்கணிக்கும்.வித்யாவின் பதிவினை, அதையொட்டி நடந்த விவாதங்களுக்கு இடம் தராது, தருமியின் பதிவினை மட்டும் வெளியிடும். மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கு குறித்த பதிவிற்கு இடம் தரும்,அந்த வழக்கினையும், சென்னை மாநகராட்சித் தேர்தல் குறித்த மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பினையும் சேர்த்து குறிப்பிட்டு எழுதியுள்ள பதிவினை பிரசுரிக்காது. ம.க.இ.க விற்கு ஆதரவாகபதிவுகளை வெளியிடும், ம.க.இ.கவையும், இந்திய கம்யுன்ஸிட் கட்சி (மா) இரண்டையும் விமர்சிக்கும் பதிவினை வெளியிடாது. இது போல் பல உதாரணங்கள் தரலாம். மேலும் பேட்டிகள் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட கருத்துத் சார்நிலை உடையவர்களின் கருத்துக்களையே முன்னிறுத்தும். சுருக்கமாகச் சொன்னால் பூங்காவின் தலையங்கங்கள், உள்ளடக்கம் ஒரு பக்கசார்பை, குறிப்பிட்ட கருத்துக்களையே முன்னிறுத்துகின்றன. இதை மறுக்க பூங்கா ஆசிரியர்குழ பாருங்கள், நாங்கள் வேறு பல வலைப்பதிவுகளிலிருந்து பல்வேறு தரப்பட்ட கருத்துக்களைதொகுத்து தருகிறோம் என்று கூறலாம். ஆனால் பூங்கா இதை ஒரு உத்தியாகக் கையாள்கிறதுஎன்றே கருதுகிறேன். இதன் மூலம் பிரச்சாரம் மட்டுமே செய்கிறோம் என்ற உணர்வு உருவாகவண்ணம் வேறு சிலவற்றிற்கும் இடம் தரும் உத்திதான் இது.

பூங்கா குறித்து அதிருப்தி கொண்டிருப்போர் ஒரு மாற்று வலைப்பூவிதழ் குறித்து யோசிக்க வேண்டும்.ஒன்றிற்கு மேற்பட்ட திரட்டிகள் இருக்கும் போது ஏன் இன்னொரு வலைப்பூவிதழ் இருக்கக் கூடாது. இனி என் வலைப்பதிவில் இடம் பெற்றவற்றை பூங்காவில் வெளியிட நான்அனுமதித் தரப்போவதில்லை. நான் அனுமதி தந்தாலும் அவை பூங்காவில் இடம் பெறும் சாத்தியக்கூறு குறைவுதான் என்பது என் அனுபவம். காவிரிப் பிரச்சினையில் பூங்காவில் இடம் பெற்ற ஆசிரியர்குழு குறிப்பினை நான் விமர்சித்திருக்கிறேன். பூங்காவின் இடதுசாரி சார்பு என்பது உண்மையிலேயே இடதுசாரி சார்பு அல்ல. அது குறுகிய திராவிட தேசிய பெரியாரிய நிலைப்பாடு குறித்த சார்பு. இந்த திராவிட தேசியம் குறித்து வெறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்

சுருக்கமாக்ச் சொன்னால் பூங்காவின் நம்பத்தன்மை போய்விட்டது. அதற்கான மாற்றினை உருவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆயிரம் பூக்கள் மலரட்டும், பல பூங்காக்கள் உருவாகக்கட்டும்.

Labels: ,

7 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

நன்கு சொன்னீர்கள். உணர்ந்தால் சரி. இதையும் ஒரு சாதிச்சச்சரவாக்கி .... என்ன ஒரு மன விகாரம்...

8:42 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஈ வெ ரா கீழ்வெண்மணி படுகொலைகளை கண்டிக்காததில் வியப்பேதும் இல்லை, ஈவெராவும் அந்த படுகொலையை செய்ய தூண்டியவனும் ஒரே ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் (பேசிய மொழி மட்டும் வேறு) , ஈவெரா வின் சாதி வெறிக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே . பலர் நினைப்பது போல் ஈவெரா ஒன்றும் சாதியத்துக்கு அப்பாற்ப்பட்டவர் அல்ல.

8:59 AM  
Blogger Rajan மொழிந்தது...

சபாஷ் ரவி சரியான முடிவு. உங்கள் துணிவுக்குப் பாராட்டுக்கள். எங்கே பூங்காவை விமர்சித்தால் நம்மைத் தமிழ் மணத்தில் இருந்து தூக்கி விடுவார்களோ என்று அஞ்சி, நீ இந்தியாவை எப்படி வேண்டுமானாலு அசிங்கமாகத் திட்டு ஆனால் என் வலைப்பதிவில் கை வைத்து விடாதே என்று எண்ணுகிற கோழைகள் மத்தியில் ஒரு வீரமுள்ள மனிதராக நிற்கிறீர்கள்.

அன்புடன்
ச.திருமலை

1:28 AM  
Blogger Muse (# 5279076) மொழிந்தது...

பூங்கா இங்கனம் செய்ததை ஜடாயுவும் கண்டித்திருந்தார். அதற்குப் பதிலாக அவரை தமிழ்மணத்திலிருந்தும் வெளியே போகுமாறு ஃபத்வா விதித்திருக்கிறார்கள்.

அவர் சொல்லியிருப்பதெல்லாம், பூங்கா இங்கனம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்பதுதான். அவர் தமிழ்மணம் பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. ஆனால், தமிழ்மணத்திலிருந்து அவரும், அரவிந்தன் நீலகண்டனும் வெளியேறவேண்டும் என்று தங்கமணியின் பெயரில் அனானி பின்னூட்டம் போட்டுள்ளார்கள்.எனக்குத் தெரிந்த தங்கமணி இங்கனம் செய்பவர் இல்லை என்று நம்புகிறேன். அதையே என் கருத்தாய் பின்னூட்ட ஃபத்வா உள்ள ஜடாயுவின் பதிவிலும் இட்டுள்ளேன்.

மறுப்போ, ஆதரவோ சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இதுவரை வரவில்லை என்பது அவசரப்பட்டு எடுக்கும் முடிவாக இருக்கும். எதற்கும் இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்கலாம்.

மாற்றுக் கருத்துக்கள் வெளிப்படும்போதுதான் ஒரு விஷயத்தின் பல முகங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பது என் கோட்பாடு. பார்ப்பனீயத்தை பழித்தலுக்கும் இடம் வேண்டும். பார்ப்பனீயம் தவறானதில்லை என்று சொல்லுவதற்கும் இடம் வேண்டும். இந்தியா ஏன் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதற்கும், ஏன் தனிநாடு வேண்டும் என்பதற்கும் சம வாய்ப்பு வேண்டும். பாரதத்தை புகழ்தலுக்கும் இடம் வேண்டும்.

இந்த விஷயத்தில்கூட சுதந்திரம் தராமல் இருப்பவர்கள் பயப்படுவது மாற்றுக்கருத்துக்களின்பக்கம் இருக்கும் உண்மையை கண்டு பயந்தா, அல்லது அதை எதிர்கொள்ள சரியான நேர்மை இல்லாததாலா என்று தெரியவில்லை.

வாய்மையைவிட வலிமைதான் இதுபோன்ற சூழலில் வெல்லும். பூங்கா ஆசிரியர்குழு தங்கள் எதேச்சதிகாரத்தின் வெற்றியை ஷாம்பெய்ன் பாட்டில்கள் திறந்து கொண்டாடிக்கொள்ளட்டும்.

5:35 AM  
Blogger Muse (# 5279076) மொழிந்தது...

Posted in https://www2.blogger.com/comment.g?blogID=30966295&postID=8844670252676451926

பூங்காவில் வேறுபட்ட கருத்துக்கள் வெளிவருவது எதிர்க்கப்படவேண்டியதில்லை. ஆனால், ஒரே ஒரு குறிப்பிட்ட கருத்து மட்டுமே தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றதே. அது ஏன்?

இவர்களுடைய டாக்டிக்ஸாக இருப்பது இதுதான்:
ஒரு குறிப்பிட்ட தரமற்ற கீழ்த்தரத்தோடு தொடர்புடைய ஒன்றை மட்டும் முழுப்பொறுப்பாளியாக்குவது. உதாரணமாக, ஜாதி வெறி. இதற்கு பார்ப்பனர்களை மட்டும் பலிகடா ஆக்குவது. பின்னர், இவர்கள் எதையெல்லாம் அழிக்க விரும்புகிறார்களோ அதை எல்லாம் இதனோடு தொடர்புபடுத்திவிடுவது. இந்தியா பார்ப்பனர்களின் தேசம். எனவே, இந்தியாவை எதிர்ப்போம் என்று கும்பலாய் குலைக்க வேண்டியது. எதிர் கருத்துக்களை ஒட்டுமொத்தமாய் அடக்க வேண்டியது. அவர்களது கருத்துக்களை தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துறைகளில் வெளிப்படாமல் இருக்கச் செய்ய வேண்டியது.

திராவிட கட்சி என்று தங்களை சொல்லிக்கொள்ளுபவர்கள் ஆட்சிக்குவந்தவுடன் அரசாங்கத்தில் வெறுமே வேலையை மட்டும் பார்த்துவந்தவர்களானாலும், பார்ப்பனர்கள் என்றால் அழிக்கும்படி உத்தரவு வந்ததும் எதேச்சதிகாரம்தான். பார்ப்பனர்கள் மட்டுமல்லாது உயர்ஜாதி என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் அத்தனைபேரும் தங்களின் மேன்மையை நிலைநிறுத்த தலித்துக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதும் இந்த எதேச்சதிகாரத்தின் ஒரு வடிவம்தான். கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் சேராவிட்டால் தொழிற்சாலையில் வேலை கிடைக்காது என்கின்ற ஒரு நிதர்ஸனமும் ஒரு எதேச்சதிகாரம்தான்.

அனானி போல யாரோ வந்து உங்களையெல்லாம் யார் எழுதச் சொன்னார்கள் போய்த் தொலை என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இது மீடியா எதேச்சதிகாரம். குண்டாயிஸம்.

இருக்கின்ற மீடியாக்கள், கல்விநிலையங்கள், பொதுஜன தொடர்பைத் தருகின்ற அத்தனை அமைப்புக்களையும் இந்த ஒற்றைச் சிந்தனைப் போக்குள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதும், மற்றவர்களது கருத்துக்களை ஓரம் கட்டுவதும், ஏனென்று கேட்டால் "வெளியே போ" என்று சொல்லுவதும் பச்சை சர்வதிகாரப்போக்கு. ஆனால், இந்தச் சர்வதிகாரத்தின் சுவையைத்தானே பூங்காவின் ஆசிரியர் குழு தேடிக்கொண்டிருக்கிறது. எனவே, மாற்றுக்கருத்துக்கள் அனைத்தும் தவறானவை என்கின்ற திம்மித்தனத்திற்கு மற்றவர்கள் தயார் செய்துகொள்ளவேண்டும். அல்லது, பரவிவரும் இந்த எதேச்சதிகாரத்தைக்கண்டு எதுவும் செய்ய முடியாமல், வாய்க்கட்டு அவிழ்க்கமுடியாமல் சாகவேண்டியதுதான்.

இந்த எதேச்சதிகாரம் இந்தியாவிற்குப் புதிதில்லை. இந்த எதேச்சதிகாரத்தை எதிர்த்து விட்டிலாய் செத்துப்போகிறவர்களும் இந்தியாவிற்குப் புதிதில்லை. ஐயன் காளி, வெண்ணிக்காலடி என ஆயிரம்பேர் உண்டு. இவர்களைப் பற்றிய தகவல்களை மறைப்பதால் இவர்களது வீரம் மறைந்துபோகும் என்று நினைக்கிறார்கள்.

மீடியா ஆக்கிரமிப்பால் விட்டில் பூச்சிகளாகிவிட்ட வீரர்கள் இந்த மண்ணில்தான் மக்கியுள்ளார்கள். இந்த மண்ணில் விளைந்த உணவிற்கு உரமானவர்களாக இந்த நேர்மையாளர்கள்தான் இருக்கிறார்கள். எனவே இந்த மண்ணில் விளைகின்ற உணவை உண்கின்ற ஒவ்வொருவனுக்குள்ளும் இவர்களின் உணர்வு இருக்கிறது.

"விட்டு விடுதலையாகி நிற்க" ஆசை கொள்ளுவது ஹிந்துத்துவம். "முக்தி" பெறுவது மனித வாழ்வின் தலையான குறிக்கோள் என்று சொல்லுவது ஹிந்துத்துவம். அந்த தனிமனித விடுதலையை, சமூக விடுதலையைத் தரமறுக்கின்ற எதேச்சதிகார கும்பலுக்குள்ளும் இந்த சுதந்திர தாகம் பீறிட்டு எழும்போது ஆபிரகாமிய முதலாளிகளுக்காக தங்களை காவுகொள்ளுகின்ற இவர்கள் திருந்தலாம் என்கின்ற நப்பாசையும் எனக்கிருக்கிறது.

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களுக்கு பாரம்தாங்கியாக இருப்பதாக இவர்கள் உண்மையில் நினைத்தால், பாரம் தாங்கியாக இருப்பதைவிட பாரத்தையே இல்லாமல் செய்வதுதான் ஹிந்துத்துவம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இவர்களுடைய கொள்கைகளைத் தவிர மற்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இவர்களுக்கு இல்லாததால், இவர்களுடைய கருத்தை எதிர்ப்பவர்களுக்கும், மாற்றுக்கருத்தை வெளியிடுபவர்களுக்கும் ஹிந்துத்துவவாதிகள் என்று இவர்கள்தான் முத்திரை குத்திவிடுகிறார்கள்.

ஆபிரகாமிய மலத்தை எங்கள் சகோதரர்கள் மேல் சுமத்திவிட்டு அவர்களது பாரத்திற்கு சுமைதாங்கியாக இருப்பதைவிட இந்தப் பாரத்திற்குக் காரணம் யார் என்று சொல்லுபவர்களை பூணூல் போட்டவர்கள் என்று முத்திரை குத்திக்கொண்டிருக்கும் தொழிலை விடுங்கள். உங்கள் முத்திரையின் மையான ஆபிரகாமிய மலம் உங்களையும் நாறடிக்கிறது.

5:41 AM  
Blogger ஜடாயு மொழிந்தது...

// பூங்கா தன் நம்பத்தன்மையை இழந்துவிட்டது. சமஸ்கிருத வெறுப்பு, இந்திய தேசியம் மீதான வெறுப்பு போன்றவற்றை பரப்பும் இதழாக அது உள்ளது. //

ரவி, பூங்கா பற்றிய உங்கள் மதிப்பீட்டை தெளிவாகவும், உறிதியாகவும் கூறியதற்கு நன்றி.

// இனி என் வலைப்பதிவில் இடம் பெற்றவற்றை பூங்காவில் வெளியிட நான்அனுமதித் தரப்போவதில்லை. நான் அனுமதி தந்தாலும் அவை பூங்காவில் இடம் பெறும் சாத்தியக்கூறு குறைவுதான் என்பது என் அனுபவம். //

நன்றி. இதே முடிவை நானும் எடுத்திருக்கிறேன்.

// ஆயிரம் பூக்கள் மலரட்டும், பல பூங்காக்கள் உருவாகக்கட்டும். //

அருமையான முத்தாய்ப்பு. பள்ளியில் கற்றுக்கொண்ட பாரத நாடு பற்றிய பாட்டு ஒன்று நினைவு வருகிறது -

பலமலர் பூத்துக் குலுங்கிடும் சோலை
பாச மலர்களாய் சேர்ந்தொரு மாலை..

6:01 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

8:08 PM  

Post a Comment

<< முகப்பு