இரண்டு தீர்ப்புகள்

இரண்டு தீர்ப்புகள்

மூன்று மாணவிகளை எரித்து கொன்ற வழக்கில் மூவருக்கு மரண தண்டனை, சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் 99 வார்டுகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்,மாநில தேர்தல் ஆணையர் மீது கண்டனம் - இந்த தீர்ப்புகள் நீதி என்பது இன்னும்இருக்கிறது என்பதற்கு அறிகுறிகள். அரிதினும் அரிதாக வழங்கப்பட வேண்டிய மரணதண்டனையை வழங்கியதற்கான காரணத்தினையும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, பொது மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும்தீங்கு விளைவிப்பது, எதிர்ப்பினைத் தெரிவிப்பது என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது-இவை யாரால் செய்யப்பட்டாலும் கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டியகுற்றங்கள். இத்தீர்ப்பின் மூலம் இத்தகைய செயல்களை செய்வோர் மனதில் சிறிதேனும்அச்சம் தோன்றினால் கூட அது நல்லதுதான். இத்தகைய செயல்களை கண்டிக்காத,கண்டு கொள்ளாதாக அரசியல் கட்சிகளுக்கும் பயம் ஏற்படுமானால் அது மிக நல்லது.இந்த வழக்கில் முந்தைய அரசு செய்த முயற்சிகள், செய்யத் தவறியவற்றையும் மீறிநீதி கிடைத்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணமான, கொல்லப்பட்ட கோகிலவாணியின்தந்தை வீராசாமி பாரட்டப்பட வேண்டியவர். இந்தக் கொலைகள் ஏதோ உணர்ச்சி வேகத்தில்செய்யப்பட்டவை அல்லது இதற்கு இத்தகைய தண்டனை தேவையில்லை என்றோ சிலர்வாதிடக் கூடும். உணர்ச்சி வேகத்தில் செய்யப்பட்டவை என்ற வாதம் பொருந்தாது. உணர்ச்சிவேகத்தில் ஏதோ துப்பாக்கியின் விசையை அழுத்தியது போலவோ அல்லது தன்னைக் காத்துக்கொள்ள செய்யப்பட்ட கொலைகள் அல்ல. அவர்கள் மூவரும் பேருந்தில் இருக்கிறார்கள் என்றுபிறர் சொல்லியும், பின்னர் கூட தயங்காமல் செய்யப்பட்ட கொலைகள் இவை. இந்த தண்டனைதேவையில்லை என்பதும் பொருத்தமல்ல.இத்தகைய கொடூரச் செயல்களை செய்தவர்களுக்குஇதுதான் பொருத்தமான தண்டனை.எதிர்காலத்தில் இப்படி செய்தால் மரணதண்டனை உறுதிஎன்ற நினைப்பே இத்தகைய குற்றங்களை தடுக்க உதவலாம்.

சென்னை மாநகராட்சித் தேர்தல் குறித்த வழக்கில் ஒரு நீதிபதியின் தீர்ப்பினை உறுதிபடுத்தும்வகையில் வெளியாகியுள்ள தீர்ப்பு , ஆட்சி தங்கள் வசம் இருக்கிறது என்பதற்காக வன்முறையைஅவிழ்த்து விட்டு, வெற்றி காணத்துடித்தவர்களுக்கு தக்க பாடமாக அமையட்டும். மாநில தேர்தல்ஆணையர் இனியும் அப்பதவில் இருப்பது சரியல்ல. அவர் பதவி விலகுவதே முறையாகும். மாநிலஅரசு அவரை பதவி விலக்க கோராது. எதிர்காலத்தில் மாநில தேர்தல் ஆணையர்கள்எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருப்பார்.

உள்ளாட்சி, நகர்மன்ற,மாநகராட்சி தேர்தல்களை நடத்தும் முறை குறித்து ஒரு மறுபரீசலனை தேவை. இவற்றிற்கும் மேற்பார்வையாளர்கள், பாதுகாப்பிற்கு துணை ராணுவம், தேர்தல் ஆணையம் சட்டமன்ற,நாடாளுமன்ற தேர்தலின் போது அமுல் செய்யும் கடுமையான விதிகள் போன்றவை தேவை என்று கருதும் நிலை இன்று உள்ளது. இந்த இரண்டு தீர்ப்புகளிலிருந்தும் அரசியல் கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டியவை பல. அவை அவற்றை கற்றுக் கொண்டனவா என்பதை எதிர்காலம் காட்டும்.

மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், குறிப்பாக அப்சலுக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கூட்டங்கள் நடத்தியவர்கள், பேசியவர்கள், எழுதியவர்கள் இந்த மூவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்களா. இல்லை பெயரளவிற்கு தூக்குதண்டனை விதித்தத்ற்கு கண்டனம் தெரிவித்துவிட்டு ஒதுங்கிவிடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Labels: , ,

2 மறுமொழிகள்:

Blogger Vajra மொழிந்தது...

இரண்டு தீர்ப்பும் வரவேற்கவேண்டிய தீர்ப்பு.

மரண தண்டனை பற்றி அதுவும் அப்சலுக்கு வால் பிடித்தவர்கள் முக்கியமாக இந்த தூக்கு தண்டனைக்கு நிச்சயம் களத்தில் குதித்து எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் கூட இருக்கவேண்டும். வேண்டுமென்றால் சாப்பிடாமல் 30 நாட்களுக்கு மேல் இருந்து கோமா ஸ்டேஜுக்குக்கூட போகலாம். இல்லை வெக்கங்கெட்டவர்கள் என்ற முத்திரை குத்திக் கொண்டு அவர்களே தூக்கு மாட்டிக் கொள்ளலாம்.

11:20 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

3 scapegoats!

6:10 AM  

Post a Comment

<< முகப்பு